கோபால் சார்,

நான் பாசமலர் படத்தை பற்றி சீரியசாக எழுதினால் அழுது விடுவேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பார்த்து அழுது கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் படத்தை பார்க்கின்ற போதும் பார்த்து முடித்த பின்பும் கிடைக்கின்ற உணர்வுகள் இருக்கின்றதே... என்னத்தை சொல்ல? சுருக்கமாக சொன்னால் ... நாமெல்லாம் இம்மானிட பிறவி எடுக்க கொடுத்து வைத்தவர்கள்.

உங்களுடைய வித்தியாசமான பார்வையில் இத்திரைப்படத்தை நன்றாக அலசியுள்ளீர்கள். நடிகர் திலகத்தின் ரசிகராய் நீங்கள் இருப்பதால், இந்த கட்டுரைகள் மூலம் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம். உங்களை போன்றவர்களை ரசிகர்களாக பெற்றதானாலும் நடிகர் திலகத்தின் புகழ் ஓங்கி இருக்கிறது. நீங்கள் ஆற்றிய இந்த சேவைக்கு நன்றி என்ற சொல்லன்றி யாதொன்று சொல்ல?

மற்றபடி உங்க கிட்ட இதை நான் எதிர் பார்க்கவில்லை --- திடீர்னு முற்றும் போட்டு கொண்டதை. சும்மா விளையாட்டுக்குதான்னு உண்மையை தெளிவாக சொல்லிவிடுங்கள்.