Results 2,041 to 2,050 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

Threaded View

  1. #11
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    திரு. கண்பத் அவர்களே,

    ஒன்ஸ் மோர் - தலைமுறை கடந்த நடிகராக ஜொலிக்கமுடியும் என மீண்டும் நிரூபித்த படம். தஙகள் பதிவு அருமை.
    அன்பின் சந்திரசேகர் அவர்களுக்கு,

    வணக்கம்.தலைவர் அவர்களுடன் இருந்து, உரையாடி,அவர் அன்பை பெற்ற பாக்கியசாலி நீங்கள்.

    என்னை பொறுத்தவரை மற்ற நடிகர்கள் Bore well (அதிலும் சிலர் வெறும் bore மட்டுமே) என்றால் அவர் கங்கை நதி.ஒவ்வொரு முறை அவர் நடிப்பை பார்க்கும் போதும் எனக்கு புதுப் புது அர்த்தங்கள் தெரிகின்றன.
    இது எங்கும் கற்று வரும் அறிவல்ல..
    இறைவனால் பிறவியிலேயே கொடுக்கப்படுவது.

    ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன்.நவராத்திரி படத்தில் அந்த வியாதியஸ்தர் வேடம்.நன்றாக வாழ்ந்து கெட்ட பாத்திரம்.கோபாலகிருஷ்ணன் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து புகழ்ந்து தள்ளும் பொழுது,அவரிடம் ஒரு detached mindset இருக்கும் காரணம் வயிற்று பசி.அதனால் பழைய கதை கேட்கும் mood அவருக்கு சற்றும் இருக்காது.அவருடைய முன்னாள் படத்தை கோபாலகிருஷ்ணன் காண்பிக்கும் போது, அதையே சற்று அசிரத்தைதையாகத்தான் பார்ப்பார்..போலீஸ் வந்திருப்பதாக சொல்லி கோபாலகிருஷ்ணன் போக, கூட வந்த சாவித்திரியும் மெல்ல நழுவி விடுவார்.தனியே இருக்கும் இவரோ எதிலும் சிரத்தை இன்றி அங்கும் இங்கும் பார்த்து விட்டு பிறகு தற்செயலாக அந்த படத்தைப்பார்த்து மெல்ல புன்னகைப்பார்.
    இது ஒருbrilliant exposition of focus.

    என் சிறு வயதில் ஒரு முதியவர் (என் தந்தையின் ஆசான் என ஞாபகம்) வீட்டிற்கு சாப்பிட வருவார்.அவரை என் தந்தை புகழோ புகழ் என புகழும்போது அவர் சற்று அசட்டையாகத்தான் இருப்பார்."இலை போட்டாச்சு சாப்பிட வரலாம்!" என என் அன்னை கூப்பிடும்போது அவர் முகத்தில் ஒரு ஒளி வரும்.இதையே வெகு explicit ஆக தருமி (நாகேஷ்) செய்திருப்பார்.கையில் பணமுடிப்பை வைத்துக்கொண்டு, முத்துராமன் "தமிழ் சங்கமே தீர்த்துவைக்க முடியாத என் சந்தேகத்தை.."என்று வசனம் பேசும் போது அதெல்லாம் சற்றும் லட்சியம் செய்யாத நாகேஷின் பார்வை, முழுக்க முழுக்க அந்த பணமுடிப்பின் மீதுதான் இருக்கும்.அது செல்லும் திசையெல்லாம் அவர் கண்ணும் செல்லும்..

    அவர் நடிகர் அல்லர்..நடிப்பின் மனித வடிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •