Page 118 of 150 FirstFirst ... 1868108116117118119120128 ... LastLast
Results 1,171 to 1,180 of 1500

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6

  1. #1171
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 67

    கே: சிவாஜி கணேசனைப் போல் யாராலும் நடிக்க முடியாது என்கிறேன்? (எஸ்.கருப்பையா, திருச்சி)

    ப: நானும் உங்கள் ஆதரவாளன் தான். நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் சிவாஜி கணேசன். அவரைப் போல் பலவிதமான பாத்திரங்களை ஏற்று சிறப்பாக இதுவரை யாரும் நடித்ததில்லை.

    (ஆதாரம் : மதி ஒளி, 10.9.1961)


    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1172
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 68

    கே: இனியும் சிவாஜி கணேசன் நடித்துத் தான் ஆக வேண்டுமா? (இரணியல் கலை, குமரி மாவட்டம்)

    ப: ஆமாம். இன்றும் நடிப்பில் அவரால் புதிய பரிமாணங்களைக் காட்ட முடியும்.

    (ஆதாரம் : பொம்மை, ஜூலை 1994)


    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  4. #1173
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் சந்திரசேகரன் சார்,

    பாராட்டுக்கு நன்றி!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  5. #1174
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 69

    கே: சிவாஜி கணேசன் ஒரு படத்தில் நடிக்க என்ன வாங்குகிறார்? (எம்.எம்.அபூபக்கர், மன்னார்)

    ப: நல்ல கதையை - தன் திறமைக்கு ஏற்ற பாத்திரமாக உள்ளதை - வாங்குகிறார்.

    (ஆதாரம் : பேசும் படம், ஜூலை 1965)


    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  6. #1175
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like

    Vilayaattu Pillai

    விளையாட்டுப் பிள்ளை - I

    தயாரிப்பு: ஜெமினி

    இயக்கம்: ஏ.பி.நாகராஜன்.

    வெளியான நாள்: 06.02.1970


    ஒரு கிராமம். அங்கே ஒரு பண்ணையார். அவரின் ஒரே மகள் மரகதம். தாய் தந்தையின் செல்லம். ஒரு காளையை அன்புடன் வளர்த்து வருகிறாள். அதே ஊரில் விளையாட்டுப் பிள்ளையாக சுற்றிக் கொண்டிருப்பவன் முத்தையன். முரடன். யாருக்கும் அடங்காமல் வீர விளையாட்டுகளில் காலத்தை ஓட்டும் அவனை நினைத்து அவன் தாய் மிகுந்த கவலையோடு இருக்கிறாள். முத்தையனின் சித்தப்பா அந்த ஊரில் வட்டிக்கு விட்டு தொழில் நடத்துபவர். பல பேரின் சொத்துகளை தன் வசமாக்கி கொள்பவர். அவருக்கு ஒரே மகன் நகரத்தில் கல்லூரியில் படிக்கிறான். முத்தையனுக்கும் அவனது சித்தப்பாவிற்கும் எப்போதும் ஆகாது.

    கல்லூரியில் படிக்கும் சித்தப்பா மகன் படிப்பில் கவனம் செலுத்தாமல் நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறான். கூட நடிக்கும் பெண்ணை கல்யாணம் செய்துக் கொள்வதாக வாக்கு கொடுக்கிறான்.

    மரகதத்திற்கும் முத்தையனுக்கும் நடக்கும் மோதலில் ரேக்ளா பந்தயத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டி போடுகின்றனர். அதில் வெற்றி பெறும் முத்தையன் மரகதத்திடம் காதல் வயப்படுகின்றான். அவளுக்கும் அதே உணர்வுகள் அரும்புகின்றன. பந்தயத்தை பார்க்க வரும் பக்கத்து ஊர் சமஸ்தானத்து சிறு வயது இளவரசி முத்தையனுக்கு பரிசளித்துப் போகிறாள்.

    பண்ணையாரின் மகளான மரகதத்தை தான் கல்யாணம் செய்துக் கொள்ள விரும்புவதாக தாயாரிடம் சொல்ல அவர் சித்தப்பாவை அனுப்பி பெண் கேட்க சொல்லலாம் என்று சொல்லுகிறார். முத்தையனுக்கு அதில் விருப்பமில்லை என்றாலும் கூட சித்தப்பாவிடம் சென்று தனக்காக பெண் கேட்க சொல்லுகிறான்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் சித்தப்பா முத்தையனை பற்றி தவறாக சொல்லி பண்ணையாரின் மனதில் வெறுப்பை உருவாக்குகிறார். பட்டணத்தில் படிக்கும் தன் மகனை பற்றி புகழ்ந்து பேசி மரகதத்தை தன் மகனுக்கே நிச்சயம் செய்து விடுகிறார். மிகுந்த கோவம் அடையும் முத்தையன் கல்யாணத்தை தடுத்தி நிறுத்த ஏற்பாடு செய்கிறான். முதல் நாள் இரவு பின் பக்க வழியாக சென்று மரகதத்தை கூட்டிக் கொண்டு வந்து கல்யாணம் செய்துக் கொள்கிறான். விவரம் தெரிந்து வரும் பண்ணையார் தனக்கும் தன் மகளுக்கும் இனி ஓட்டும் உறவும் இல்லை என்று சொல்லி விடுகிறார். அது மட்டுமல்ல வேறொருவருக்கு நிச்சயம் செய்த பெண்ணை கடத்திக் கொண்டு போய் கல்யாணம் செய்த குற்றத்திற்காக முதையனையும் அவன் குடும்பத்தையும் ஊரை விட்டே விலக்கி வைக்கிறார்கள். அதை தவிர ஏற்கனவே முத்தையன் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்ததை சொத்தின் மேல் கடன் வாங்கியதற்காக எடுத்துக் கொள்வதாக சித்தப்பா சொல்ல வீடும் பறி போகிறது.

    அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு ஊருக்கு வெளியே ஒரு குடிசை கட்டிக் கொண்டு முத்தையன் அதுவரை தன் வாழ்ந்து வந்த விளையாட்டுத்தனமான வாழ்க்கையை மாற்றிக் கொண்டு வயலில் உழைக்க ஆரம்பிக்கிறான். அவனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.

    இதற்கிடையில் கல்யாணத்திற்காக ஊருக்கு வந்த சித்தப்பா மகன் வீட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு திரும்ப பட்டணத்திற்கு போய் விடுகிறான். அங்கே அந்த பெண்ணோடு வாழும் அவனுக்கு ஒரு குழந்தையும் பிறந்து விடுகிறது.

    மரகதத்தின்தந்தை பிடிவாதமாக இருக்க தாய் மட்டும் பாசத்தில் தவிக்கிறாள். பெண் கர்ப்பமாக இருக்கும் போது மீண்டும் உறவாட ஆரம்பிக்கும் தாய் பேரன் பிறந்ததும் அவனை சீராட்டுகிறாள். இதற்கிடையில் முத்தையனின் தாய் காலமாகி விடுகிறார்.

    மழை இல்லாததால் ஊரில் பஞ்சம் வர முத்தையனும் பாதிக்கப்படுகின்றான். அந்நிலையில் ஊரில் பண்ணையார் வீட்டில் தானியம் திருடியதாக தன் பேரனை தவறுதலாக அடித்து விடும் பண்ணையாரிடம் அவர் மனைவி உண்மையை சொல்ல தன் தவறை உணரும் அவர் மகள் வீட்டிற்கு சென்று மகளையும், மாப்பிள்ளையையும் பேரனையும் கூட்டிக் கொண்டு தன் வீட்டிற்கு வருகிறார்.

    சில வருடங்கள் உருண்டோடுகின்றன. முத்தையனின் மகன் இப்போது நகரத்தில் கல்லூரியில் படிக்கிறான். கல்லூரி விழாவிற்கு தந்தையை கூட்டி செல்கிறான். அங்கே சிறப்பு விருந்தினர் முத்தையனின் பக்கத்து ஊர் சமஸ்தானத்து ராஜா. பல வருடங்களுக்கு முன்பு ரேக்ளா பந்தயத்தில் பரிசளித்த சிறு வயது பெண் இப்போது பருவப் பெண் இளவரசியாக விழாவிற்கு வந்திருக்கிறாள். விழாவிற்கு அழைத்து வரப்பட்டிருக்கும் யானை பட்டாஸ் சத்தத்தில் மிரண்டு ஆட்களை தாக்க ஆரம்பிக்க முத்தையன் யானையை அடக்கி ராஜாவை காப்பாற்றுகிறான்.

    நன்றி சொல்லும் விதமாக தங்கள் சமஸ்தானத்து விருந்தாளிகளாக முத்தையனையும் அவனது மனைவி, மற்றும் மகனை அழைக்கிறார்கள். அங்கே செல்லும் அவர்களுக்கு தடபுடல் வரவேற்பு. குறிப்பாக வீர விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட இளவரசி முத்தையனிடம் நெருங்கி பழகுகிறாள். மரகதத்திற்கு இது தர்மசங்கடமாக இருக்கவே மகனை கூட்டிக் கொண்டு தங்கள் ஊருக்கு வந்து விடுகிறாள்.
    முத்தையனின் சித்தப்பா மகன் இப்போது அரண்மனையில் வேலைக்காரனாக இருக்கிறான். நீ இந்த வேலையை செய்யலாமா என்று முத்தையன் கேட்க அதை தன்மானப் பிரச்சனையாக எடுத்துக் கொள்ளும் அவன் முத்தையனை எதிரியாக நினைத்து பழி வாங்க நினைக்கிறான். விருந்தின் போது முத்தையனும் இளவரசியும் சேர்ந்து இருக்கும் போது எடுக்கப்பட்ட ஒரு போட்டோவை மரகதத்திற்கு அனுப்பி வைக்க அவள் பெரிதும் கலக்கமுறுகிறாள்.

    இந்நிலையில் ஊரில் திருவிழா நடக்க அதற்கு வருமாறு முத்தையனை சென்று மகன் அழைக்க இளவரசியுடன் சேர்ந்து வருகிறான் முத்தையன், இது மேலும் நிலைமையை சிக்கலாக்க தன் சொத்தை பிரித்து தருமாறு மகன் கேட்க முத்தையன் இடிந்து போய் விடுகிறான். மீண்டும் அரண்மனைக்கு வந்து விடும் அவனை பழி தீர்க்க ஒரு காளையை அடக்கும் பந்தயத்திற்கு அவனை அழைக்க வைக்கிறான் அவனது தம்பி.

    காளையின் கொம்பில் விஷம் தடவி அவனை கொள்ளும் திட்டம் இருப்பதை தெரிந்துக் கொள்ளும் மகன் தானே காளையை அடக்க முற்படுகின்றான். ஆனால் அவனால் முடியாமல் போகவே முத்தையனே அடக்க அனைத்து உண்மைகளும் வெளி வர எல்லாம் நலம்.

    அன்புடன்

  7. #1176
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    விளையாட்டுப் பிள்ளை - II

    தில்லானா மோகனாம்பாள் படத்தை, தானே தயாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தாராம் ஜெமினி எஸ்.எஸ்.வாசன். ஆனால் ஏ.பி.என். வந்து கேட்டவுடன் உரிமையை கொடுத்து விட்டார். தில்லானாவின் வெற்றியைப் பார்த்துவிட்டு ஜெமினி பானரில் தில்லானா வெற்றிக் கூட்டணியை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து உடனே அதற்கான வேலையே ஆரம்பித்தார். அதுதான் விளையாட்டுப் பிள்ளை. கதை அவர் வசம் ரெடியாக இருந்தது. ஆனந்த விகடனில் வெளியான ராவ் பகதூர் சிங்காரம். இதையும் தில்லானா எழுதிய கொத்தமங்கலம் சுப்பு தான் எழுதியிருந்தார், ஒரு சிலரை தவிர அதே நடிகர் நடிகையர் கூட்டம்.

    இந்தப் படத்தை பொறுத்தவரை நடிகர் திலகத்திற்கு ஒரு வித்தியாசமான ரோல் என்றே சொல்லலாம். அதாவது பல வகைப்பட்ட வீர விளையாட்டுகள் இதில் இடம் பெற்றன. சிலம்பாட்டம், ரேக்ளா, காளை அடக்குதல், மத யானையை அடக்குவது என்று வெரைட்டி வீர பிரதாபங்கள். இந்தப் படத்தை ஒரு சவாலாகவே அவர் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இவரால் இதையெல்லாம் செய்ய முடியாது என்று ஒரு தரப்பினர் பல காலமாக கிண்டல் செய்திருந்ததும் இந்த பாத்திரத்தை ஏற்க ஒரு காரணமாக இருந்திருக்கலாம். சவாலை திறம்படவே சமாளித்திருக்கிறார். முதலில் ஆடும் கபடியாகட்டும், சிலம்பு சுற்றும் போது ஒரு கால் ஊன்றி ஒரு கால் முட்டி போட்டு கழுத்தை மட்டும் பின் பக்கம் திருப்பி வலது கையை மட்டும் பயன்படுத்தி சிலம்பை பின்னால் கொண்டு வந்து தடுப்பதோடு மட்டுமல்லாமல் தாக்கவும் செய்யும் அந்த ஸ்டெப், டூப் போடாமல் அதி வேகத்தில் ரேக்ளா வண்டி ஒட்டி வரும் அந்த க்ளோசப் காட்சிகள், கல்லூரி விழாவில் யானையின் தந்தைகளை பிடித்து அடக்குவதோடு இல்லாமல் இதிலும் டூப் இல்லாமல் அந்த தந்தங்களை பிடித்தே யானையின் முதுகின் மேல் ஏறுவது, அதே காட்சியின் தொடக்கத்தில் யானையின் சீற்றம் கண்டதும் தாவி எழுந்து வேட்டியை மடித்துக் கட்டுவது, இறுதிக் காட்சியில் மாட்டை அடக்கும் காட்சிகள் என்று காட்சிக்கு காட்சிக்கு பிரமாதப்படுத்தியிருகிறார். ஆக்க்ஷனே இப்படியென்றால் ஆக்டிங் பற்றி சொல்லவும் வேண்டுமோ?

    முதலில் வரும் அந்த முன்கோபக்காரன், யாரையும் எதிர்க்கும் தைரியம், மனைவியின் மேல் வைத்திருக்கும் பாசம், துரோகம் செய்த சித்தப்பாவின் மேல் வரும் ஆத்திரம், பணம் வந்தவுடன் வரும் அந்த மிடுக்கு, அரண்மனையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வகுப்பு எடுக்கும் மகனிடம் நடந்து காட்டும் ஸ்டைல்,அரண்மனையில் வரும் அந்த பவ்யம், இளவரசியின் நெருக்கம் தரும் சங்கடம், பார்ட்டியில் தவிர்க்க முடியாமல் குடித்து விட்டு முதன் முதலாக குடிக்கும் ஒருவனின் உடல் மொழியை வெளிப்படுத்தும் பாங்கு, அந்த தவறை நினைத்து மனைவியிடம் வந்து குற்ற உணர்வில் பேசும் பேச்சு[ 8 மாதங்களுக்கு பிறகு அதே 1970-ல் இதையே ஒரு 5 நிமிடக் காட்சியாக சொர்க்கத்தில் கலக்கியிருப்பார்], மனைவியே தன்னைப் பற்றி தவறாக பேசி விடும் போது வரும் கோபம் [கன்னத்தில் விழும் ஒரே அறையில் காது தோடு பறந்து போய் விழும்], மகன் சொத்தை தன் பெயருக்கு எழுதி வைக்க சொல்ல தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் கோவமாக வெளிப்பட்டு சுயபச்சதாபமாக மாறும் அந்த கணங்கள், இதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணம் என்று வெகு இலகுவாக செய்திருப்பார் நடிகர் திலகம்.

    மோகனாம்பாளாக கொடிக் கட்டி பறந்த நாட்டியப் பேரொளி இந்த படத்தில் also ran -தான். இளைய வயது மரகதமாக வரும் போது உடலும் ஒத்துழைக்க மறுக்கிறது. படத்தின் பின்பகுதியில் முக பாவங்களை வைத்தே சமாளிக்கிறார்.

    சிவந்த மண்ணிற்கு பிறகு சிவாஜியோடு காஞ்சனா இணைந்த படம். இன்னும் சொல்லப் போனால் சிவந்த மண் ஓடிக் கொண்டிருக்கும் போதே இந்த படம் வெளியாகி விட்டது. [நான் படம் பார்த்த இரண்டாவது நாள் இரவுக் காட்சியில் காஞ்சனாவிற்கு கைதட்டல்கள் இருந்தன].பெரிதாக அவருக்கும் வாய்ப்பு இல்லை.

    சிவகுமார் உயர்ந்த மனிதன் படத்தில் விட்ட இடத்திலிருந்து தொடர்வது போல இருக்கும். காரணம் பாத்திரப் படைப்பு அப்படி. சோ- மனோரமா ஜோடி. ஆனாலும் நகைச்சுவை பஞ்சம். சோ-வை வில்லன் ரோலில் [கடைசி அரை மணி நேரம்தான் என்றாலும் கூட] ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    தில்லானாவின் ஒரு பெரிய தூணான பாலையா இதில் வில்லன். ஆனால் ஒரு சில காட்சிகளை தவிர அந்த ஸ்பார்க் மிஸ்ஸிங். பத்மினியின் அப்பாவாக வி.எஸ்.ராகவன் அதீதமாக உணர்ச்சி வசப்படுகிறார். டி.ஆர். ராமச்சந்திரன் படத்தில் இருக்கிறார்.

    பாடல்கள் கவியரசர். இசை திரை இசைத் திலகம்.

    1.ஆணை முகன் நம்பியே - நடிகர் திலகத்தின் intro இந்தப் பாடலுடன்தான் ஆரம்பிக்கும். இதில் கபடி சிலம்பாட்டம், கயிறு இழுத்தல் எல்லாம் வந்து விடும். இதில் சரணத்தில் ஒரு வரி வரும் "வீரனுக்கும் வீரன் உண்டு வீரையா" இப்போதும் நினைவிருக்கிறது. தியேட்டரில் அப்படி ஒரு சவுண்ட்.

    2. ஏரு பெருசா இந்த ஊரு பெருசா - படத்தின் மிக பிரபலமான பாடல். ஊரை எதிர்த்து நின்று வெற்றி கண்ட பின் வரும் பாடல். பத்மினியும் பாடுவார். இதிலும் சரணத்தில் இரு வரிகள். நெற்கதிர்களின் குவியல் மேல் நின்று ஒரு கையை மேலே உயர்த்தி நடிகர் திலகம் பாடும்

    ஊரு பார்க்க ஒசந்து விட்டேன்

    உலகம் பார்க்க ஒசந்து விட்டேன்


    வரிகளின் போது அரங்கத்தின் ஆர்ப்பரிப்பு அடங்கவே நேரமாகும்.

    3. ஆசைக்கு ஒரு பிள்ளை - சுசீலா. பத்மினி குழந்தையை தூளியில் வைத்துப் பாடும் தாலாட்டு பாடல். அவ்வளவாக பிரபலமாகவில்லை. ஆனால் இனிமைக்கு குறைவில்லை.

    4.சொல்லாமல் தெரிய வேண்டுமே - அரண்மனையில் காஞ்சனா பாடும் பாடல். இதுவும் பிரபலமான பாடலே.நாங்கள் இங்கே அடிக்கடி குறிப்பிடுவது போல பாடல் காட்சியில் பாடுபவரின் ஆக்க்ஷன் மட்டுமல்லாது உடன் நடிப்பவரின் ரியாக்க்ஷனும் முக்கியம். அதை சிறப்பாக செய்வதில் நடிகர் திலகத்தை மிஞ்ச ஆளில்லை. அந்த நேர்த்தியை இந்த பாடல் காட்சியிலும் பார்க்கலாம். காஞ்சனா பியானோ வாசித்துக் கொண்டே பாட, நடிகர் திலகம் போதையில் தன்னை மறந்து செய்யும் செய்கைகள் [காமிரா டிராலியில் பயணிக்கும் லாங் ஷாட்களில் கூட இதை பார்க்கலாம்] இதற்கு மேலும் ஒரு உதாரணம்.

    ஏ.பி.என். இந்த படத்தை பொறுத்தவரை வசனம் இயக்கம் மட்டும்தான். எஸ்.எஸ்.வாசன் முன்கூட்டியே இந்த கதைக்கு திரைக் கதை எழுதி வைத்து விட்டார். ஆகவே அதுவே அப்படியே பயன்படுத்தப்பட்டது. சமஸ்தானம், ராஜா, இளவரசி, ஜமீந்தார் போன்ற அமைப்புகள் இருந்த போது அதை கதைக் களமாக பயன்படுத்தி எழுதப்பட்ட தொடர்கதை. அவையெல்லாம் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போன சூழ்நிலையில் இந்த படம் வெளியானது. [தில்லானாவும் இதே அமைப்புகளின் ஊடே நடக்கும் கதையாக இருந்த போதிலும் இசையும் பரதமும் அந்த உயிர்த்துடிப்பான கலைஞர்களின் உணர்வும் சேர்ந்து தில்லானாவை என்றும் சிரஞ்சீவி தன்மை வாய்ந்த படமாக மாற்றியது].

    முதல் பகுதியில் சரளமாக செல்லும் படம் இடைவேளைக்கு பிறகு அந்த சரளத்தை இழந்ததால் சற்று தொய்வு ஏற்படுகிறது. மேலும் தொடர்கதையாய் வந்த போது இரண்டு பாகங்களை கொண்டதாக வந்தது. அதை மூன்று மணி நேரமாக சுருக்கும் போது வரும் நடைமுறை சிக்கல்கள் வேறு இருந்தன.

    திரைக்கதை எழுதிய வாசன் படத்தின் படப்பிடிப்பின் இடையில் காலமாகி விடவே திரைக்கதை அப்படியே கையாளப்பட்டது.

    இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிகழ்வுகளை பார்த்தோம் என்றால் சென்னைக்கு தெற்கே இந்த படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. திருச்சியிலும், மதுரை - நியூசினிமாவிலும் 84 நாட்கள் ஓடிய படம் ஷிப்டிங்கில் [மதுரை வெள்ளைக்கண்ணு/மிட்லண்ட் தியேட்டர் என்று நினைவு] 100 நாட்களை கடந்தது. படம் வீர விளையாட்டுகளை கொண்டிருந்ததாலும், மேற் சொன்ன சமூக அமைப்புகள் தென் தமிழகத்தில் அப்போதும் நிலைப் பெற்றிருந்ததும் இதன் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஓடின நாட்களை மட்டும் வைத்து இதை சொல்லவில்லை. இந்த படம் வெளியான போது சிவந்த மண் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. எங்க மாமா வெளியாகி 3 வாரங்களே ஆயிருந்தது. அது மட்டுமா? விளையாட்டுப் பிள்ளை வெளியான 60 நாட்களிலே வியட்நாம் வீடு ரிலீசானது. முன்னால் வெளி வந்த படங்கள் பொழுதுபோக்கு அம்சங்களோடு மக்களை கவர்ந்தது என்றால் பின்னால் வந்தது கதையம்சத்திலும் நடிப்பிலும் மக்களை ஈர்த்தது. அப்படியிருந்தும் விளையாட்டுப் பிள்ளை 100 நாட்களை கடந்தது என்று சொல்லும் போது அதன் வெற்றியின் வீச்சை புரிந்துக் கொள்ளலாம். மதுரை ராமநாதபுரம் நெல்லை குமரி மாவட்டங்களில் B, C சென்டர்களிலும் நன்றாக வசூல் செய்தது.

    சுருக்கமாக சொன்னால் இவையெல்லாம்தானே என்னால் முடியாது என்று சொன்னீர்கள். இதோ பார்த்துக் கொள்ளுங்கள் என்று நடிகர் திலகம் சில பேருக்கு பதில் சொன்ன படம்.

    அன்புடன்

  8. #1177
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    Dear Pammalar,

    Each question and answers of our NT is a diamond. I cannot imagine your dedicated and hardwork to publish of all kind of new informations about our NT. There is no word to express my happies to know about our NT and appreciate your efforts.

    Murali sir,

    Your VillayattuPillai writing is excellent as I felt watching this movie in Madurai Alankar theatre (only at Alankar I had watched this movie in my childwood).

    Whole of last month I was in Madurai, only "Viduthalai" released in Madurai Meenatchi theatre. So I could not able to have some Sunday evening theatre experience. I have missed it.

    If "Thanga Surangam" and "Sivakameeyin Selvan" released this week in Madurai then it would be festival atmosphere in the theatres.

    Madurai guys, please post your experience, photos and videos of these two movies experience by coming Sunday.

    Cheers,
    Sathish

  9. #1178
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Quote Originally Posted by Mahesh_K
    Quote Originally Posted by abkhlabhi
    NT மறைந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. மேலும் அவர் ஒரு இந்தி படத்தில் தோன்றி (தர்த்தி) 40 ஆண்டுகள் ஆகி விட்டன. இத்தனை காலம் கழிந்தும் திரு. ஷம்மி கபூர் NT நடிப்பை நினைவு கூர்ந்து புகழ்கிறார்.

    இதைப் படிக்கும் போது தமிழகத்தின் "அறிவு"ஜீவி எழுத்தாளர்களில் ஒருவர் ( அதுவும் உலக சினிமாவை கரைத்துக் குடித்ததாக தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் ஒருவர்) - "சிவாஜி கணேசனை நடிகர் திலகம் என்றார்கள். அவரைப் போன்ற நடிகர் உலகத்திலேயே இல்லை என்றார்கள். சொன்னதெல்லாம் தமிழர்கள். ஆனால் இந்தி சினிமாவில் அவர் பெயரே தெரியாது. " என்று blogல் பிதற்றியது நினைவுக்கு வருகிறது. இந்த லின்கை அவருக்கு மின்னஞ்சல் செய்கிறேன்.
    Good job, Mahesh. May I know who that blogger is? Venumna, PM pannungga
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  10. #1179
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Wonderful write-up, Murali-sar. Considering that it was the same team as Tillana Mohanambal, I suppose it is a bit of a disappointment. But as a standalone, I am sure NT made the film work (as did APN and the story itself).
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  11. #1180
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    முரளி சார்,
    வழக்கம் போல் தங்களின் விமர்சன கட்டுரை அருமை.நீன்ட இடைவெளிக்கு பிறகு படத்தை நேரில் பார்த்த அனுபவம்.

    பம்மல் சார்,
    கேள்வி பதில் பகுதி பாதுகாக்கபட வேன்டிய பொக்கிஷம்.தொடரட்டும் தங்கள் அரும்பணி,வாழ்த்துக்கள்.
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •