Page 33 of 150 FirstFirst ... 2331323334354383133 ... LastLast
Results 321 to 330 of 1491

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5

  1. #321
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Interesting post groucho.
    That could perhaps be the first writing ever on comparing Brando and Sivaji which was written by someone sufficiently familiar with both their works.

    I had mentioned the Olivier-Hoffman incident once before, quite interesting. Nagesh was from the Olivier school I guess, if at all he was in any school.


    Mr.Murali, enjoying the series. You are right in that it reminds me of Madurai and is thus of additional appeal.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #322
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dear friends,
    Those of you who are interested in complete list of films of NT can download it from our site.
    Thank you,
    Raghavendran.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #323
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Thanks Senthil. Will do it as and when the time permits.

    Prabhu, thanks.

    Regards

  5. #324
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    NT's Grandson (Son of NT's daughter ThenMozhi) and NT's granddaughter (Daughter of Prabhu) are getting married on 7th Feb.

    Marriage invitation carries Rare photo of NT-kamalammal and exclusive poem written by Vairamuthu ,wording written as if NT couple wishing the new couple from heaven.

    http://tamilcinema.com/CINENEWS/Hotn...ary/030209.asp
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  6. #325
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    UNITED AMATEUR ARTISTS,
    in its 57th Year, is coming out with its 60th Production - reinvention of the classical play from the 60s -

    VIETNAM VEEDU

    - originally performed by the Legendary Immortal Sivaji Ganesan and written by K. Sundaram. This is a tribute FROM the U.A.A. and Y.Gee.Mahendra, to the acting Legend in his 80th Birth Anniversary Year. Y.Gee.Mahendra dons the role of Prestige Padmanabha Iyer, with Mrs. Nithya Raveendran, noted Television and Screen actor, in the role of his wife Savithri (done by G. Sakunthala on Stage and Padmini on the Silver Screen). Other artistes of the U.A.A. will form the supporting cast. This play will be U.A.A.'s humble attempt to bring back memories of the Golden Years of Tamil Theatre with special emphasis on Nadigar Thilagam Sivaji Ganesan's contribution to the Stage, according to Y.Gee.Mahendra, Director, U.A.A. Golden Jubilee Celebrations Committee.

    The Inauguration of the Play will be held at 6.30 p.m. on Saturday, 7th March, 2009. Venue: Rani Seethai Hail (A/C), Anna Salai, Chennai.

    .Special concession

    Entry tickets at concessional rate for Sivaji Fans, for the Play to be held on Sunday, 8th March, 2009, 3.00 p.m. at Rani Seethai Hall (A/C). Register immediately to confirm your seat. Contact
    044 28343045
    to register.

    Raghavendran.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #326
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Murali sir,

    Fantastic writing about the 'release mELA' of the evergreen movie "RAJA".

    When we are reading your post, you take us to 26th January 1972 and made us to sit in the centre hall of Madurai Central theatre.

    (Actually on the same day, same time, I was sitting in Chennai Devi Paradise theatre and enjoying the opening cermony of the same great movie)

    But opening cermony in Chennai DP was not that much of Madurai, because that theatre managaement will not allow to stand on chairs etc, because at that time Devi & DP two among the most prestigious theatres in Chennai, new theatre just one and half years old that time. Raja was the fourth Tamil film there (after Sorkam, Rikshawkaran, Neerum Neruppum).

    Neerum Neruppum was screened there on Deepavali day. After 50 days run it was lifted and a Hindi movie 'Sharmilee' was released in DP. At that time we, NT fans heared that, during intervel of Sharmilee, Raja slides were shown with the soundtrack of NT in back ground starting with 'nAnthAn Raja' and introduce all main actors with their dialogues in the movie. So we rushed to DP to watch Sharmilee and enjoyed. Big stills were displayed for Raja, inside theatre complex. (during Raja release, Sharmilee was shifted to Devi Bala).

    But as usual clapings, shoutings, paper throwing were all there without crossing the restrictions. Same strictness was in Agasthiya theatrea also (because both Devi complex and Agasthiya are same owners and management).

    But in the evening we heared there were more 'alapparai' in Roxy theatre, comparing this two, but we missed it. Fans were more happy, because we never expect such an entertainment movie Raja after a serious movie Babu.

    In all stunt scenes and song scenes there was more applause and wistles and dances too. Same like Manohar's dialogue (Indiavin thenpaguthi koormaiyA irukku) Balaji's dialogue with Jayalalitha (before temple robbery) "enna Radha ippadi solRE. ellAr manasulayum avanthAnE irukkAn?. ennamO en manasila irundhukittu 'edudA nagaiya'ngirAn. edukkiREn" dialogue also got more applause.

    Yes, as you said it is a wonderful climax, NT with attractive costume of Yellow & Yellow with black scarf in neck. This dress from the stunt with Balaji till the end. (the scene with this dress and spreaded hands, was the main pose of Raja in most of the advertisements, and there was a huge cut out with this pose in Anna Salai Govt estate, behind Anna statue. Raghavendhar sir must have remember all these). Scene by scene were enjoyed by fans, except very few scenes like Nagaiah and V.S.Raghavan participated.

    Very good write up Murali sir....

    We expect more and more from you....

  8. #327
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    ஜெயா தொலைக்காட்சியில் 'திருடன்' படம் ஒளிபரப்பினர். இப்போது பார்க்கும்போது மேலும் மெருகு ஏற்றப்பட்டதுபோல தோற்றமளிக்கிறது. மிக இயல்பான நடிப்பு. ஆம், இன்றைய கதாநாயகர்கள் (சிலர்), வில்லனைப்பார்த்து... 'டேய்' என்று ஆரம்பித்து தொடர்ந்து காட்டுக்கத்தல் போடுவதைப்பார்க்கும்போது (இவற்றையெல்லாம் 'ஓவர் ஆக்டிங்' என்று அழைக்க பலருக்கு வாய் வலிக்கும்), திருடன் படத்தில் நடிகர்திலகத்தின் நடிப்பு ரொம்பவே இயல்பாக இருக்கிறது.

    குளக்கரையில் அமர்ந்து கே.ஆர்.விஜயாவிடம், தான் சிறைக்குச்செல்ல நேர்ந்த காரணத்தைச்சொல்லும்போது, நாம் எங்கே எங்கே என்று ஏங்கும் அந்த ஃப்ளாஷ்பேக் வந்து விடுகிறது...

    தனது பாஸ் பாலாஜி தூக்கியெறியும் தொப்பியை கீழே விழ விடாமல் குண்டுகளால் துளைத்து அதை ராமதாஸ் தலையில் விழவைக்கும்போது, அவரது ஸ்டைல் அப்பப்பா. முந்தைய பக்கத்தில் தங்கசுரங்கம் பற்றிப்படித்த நமக்கு, திருடனில் அவரது துப்பாக்கி சுடும் ஸ்டைல் ரொம்பவே மனதை அள்ளுகிறது. அதேபோல, சினிமா ஷூட்டிங் நடத்துவது போல, பட்டப்பகலில் கூடியிருக்கும் மக்களின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு, சேட் இடமிருந்து பணப்பெட்டியை கொள்ளையடிக்கும் காட்சியில் தொப்பியும் குளிர்க்கண்ணாடியுமாக காட்சியளிக்கும் ஸ்டைல், மற்றும் சசிகுமார் தம்பதியிடமிருந்து வைர நெக்லஸைக் கொள்ளையடிக்கச் சென்ற இடத்தில் யுவராஜா மற்றும் யுவராணியாக அவரும் விஜயலலிதாவும் ஆடும் 'கோட்டைமதில் மேலே ஒரு வெள்ளைப்பூனை' பாடலின்போது அவர் காட்டும் ஸ்டைல்.... இப்படி எதிலும் செயற்கைத்தனம் தெரியவில்லை.

    பிளாக் மெயில் பண்ணி பணம் பறிப்பதற்காக ஒருகுழந்தையைத் திருடிவரச்சென்ற இடத்தில், குழந்தையைக்காணாமல் அதன் தாய் கதறி மூர்ச்சையாகி விழ, இறந்துபோன தன் தாய் மனக்கண்முன் வந்து சாபமிட, மீண்டும் குழந்தையை அவளிடம் ஒப்படைப்பதற்காக குழந்தையைக்கேட்டு, ஸ்டண்ட் மாஸ்ட்டர் திருவாரூர் தாஸுடன் அவர் போடும் சண்டைக்காட்சி அற்புதம். ஒல்லியான உடம்பாதலால் நல்ல சுறுசுறுப்பு, ரசிகர்களுக்கு நல்ல விருந்து.

    சிறையிலிருந்து விடுதலையான பின் திருந்தி வாழும் தன்மீது எப்போதும் சந்தேகப்பாரவையை வீசும் போலீஸ் இண்ஸ்பெக்டர் (முன்னர் இவரைக்கைது செய்த) மேஜரிடம், ராஜு (சிவாஜி)யின் மகள் குதிரைப்படம் வரைந்து கேட்க, மேஜர் வரைந்து தரும் படத்தைப்பார்த்து குழந்தை ராணி,... 'அய்யோ இன்ஸ்பெக்டர் அங்கிள். இது குதிரையில்லே கழுதை' என்று சொல்ல...

    'என்னப்பா ராஜு, நான் குதிரைப்படம் வரைந்து கொடுத்தால் உன் மகள் கழுதைன்னு சொல்றாளே'

    'உங்களைப்பத்தி என்னைவிட என் மகள் நல்லா புரிஞ்சு வச்சிருக்கா'

    'என்ன சொல்றே நீ..?'

    'உங்களுக்குத்தான் குதிரைக்கும் கழுதைக்கும் வித்தியாசம் தெரியாதே'. (வசனம்: ஏ.எல்.நாராயணன்)

    சிறையிலிருந்து ரிலீஸானதும் தான் எவ்வளவு முயற்சித்தும் தன்னுடைய கொள்ளைக்கும்பல் பக்கம் திரும்பாத சிவாஜியைப்பழி வாங்க, இறுதியில் பாலாஜியால் கடத்தப்பட்ட தன் மகள் ராணியை மீட்டு வரச்செல்லும்போது, மனைவி கே.ஆர்.விஜயாவிடம், விரக்தியான முகபாவத்துடன் அவர் பேசும் வசனங்கள் ரொம்பவே யதார்த்தம், 'திரும்பினால் நம்ம பொண்ணோடுதான் திரும்புவேன். இல்லேன்னா'..... கொஞ்சம் நிறுத்தியவர் 'எதுக்கும் எனக்கு இப்பவே வாய்க்கரிசி போட்டு அனுப்பிடு' என்னுமிடத்தில் அவருடைய முகபாவம் அபாரம்.

    இப்படி ஒவ்வொன்றையும் பார்க்கும்போதும். 1980-க்கு முன் வந்த படங்கள் ஒவ்வொன்றும் அமோகமாக ஓடியிருக்க வேண்டிய படங்களாகவே எண்ணத்தோன்றுகிறது.

  9. #328
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    இரத்த திலகம் - Part I

    தயாரிப்பு : நேஷனல் பிலிம்ஸ்

    இயக்கம்: தாதா மிராசி

    வெளியான நாள்: 14.09.1963


    கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் குமார், கமலா மற்றும் மதுரை. மதுரையின் தங்கை கமலா. கமலாவின் பெற்றோர் சிறு வயதிலேயே சைனாவின் தலைநகரமாம் பீகிங் (அன்றைய பேர்) நகரத்தில் செட்டிலாகி விட்டவர்கள். படிப்பிற்காக கமலா தமிழகத்திற்கு வந்திருக்கிறாள். குமாரும் கமலாவும் எப்போதும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் இவர்கள் சூழ்நிலை காரணமாக கல்லூரி கலை விழாவில் ஒதெல்லோ நாடகத்தில் இணைந்து நடிக்க நேர்கிறது. அந்த இணைதல் அவர்கள் அடி மனதில் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த ஆசையை வெளிக் கொண்டுவருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பும் செய்தியை சொல்லும் போது கமலாவின் தந்தை ஆபத்தான நிலைமையில் இருப்பதால் உடன் சைனாவிற்கு கிளம்பி வருமாறு அழைப்பு வர அவள் கிளம்பி செல்கிறாள். சிறிது காலத்திற்குள்ளாகவே அவள் தந்தை காலமாகி விடுகிறார், அங்கே இருக்கும் ஒரு தமிழ் குடும்பம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. அந்த குடும்பத்தின் ஒரே மகன் டாக்டராக இருக்கிறான்.

    குமாருக்கு தாய் தந்தை இல்லை. தந்தை சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகி. தாத்தா பாட்டி மட்டுமே உள்ளனர். பம்பாயில் ஒரு வானொலி நிலையத்தில் வேலைக்கு சேரும்படி குமாருக்கு கடிதம் வருகிறது. அந்த நேரத்தில் சைனா அத்து மீறி நமது எல்லைப் பகுதிக்குள் நுழைந்து சில பகுதிகளை கைப்பற்றிய செய்தி வருகிறது. பஞ்சசீல கொள்கையில் உறுதியாக நின்ற இந்தியா, சைனாவை நண்பனாக நினைக்க, சைனாவோ நம்மை ஆக்ரமித்தது. நமது நாட்டை காப்பாற்ற வீட்டிற்கு ஒருவர் முன் வரவேண்டும் என்று (அன்றைய) பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு வானொலியில் உரையாற்றுவதை கேட்கும் குமார் ராணுவத்தில் சேர முடிவு செய்கிறான். வானொலியில் இருந்து வந்த ஆர்டரை கிழித்து எறிகிறான். ராணுவத்தில் சேர கூடாது என்று தாத்தா மன்றாட, அவரை சம்மதிக்க வைக்கிறான்.

    அடுத்து போர் முனையில் குமார். ராணுவத்தில் ஒரு மேஜராக பொறுப்பேற்கும் குமார் இழந்த இடங்களை மீட்க வியூகம் வகுக்கிறான். சீனர்கள் நமது இடங்களை பிடிப்பதற்கே பணம் பெற்றுக் கொண்டு நமது நாட்டினரே துரோகிகளாக மாறி உளவு சொன்னதுதான் காரணம் என்பதை தெரிந்து கொள்ளும் குமார் அவர்களில் ஒருவனை சுட்டு கொல்கிறான். துரத்தும் சீன ராணுவத்திடமிருந்து தப்பித்து ஓடும் குமார் ஒரு வீட்டில் தஞ்சம் புகுகிறான். அந்த வீட்டில் இருக்கும் வயதான தாய் அவனை காப்பாற்ற, தனியறையில் தன் திருமணமாகாத மகளுடன் சேர்ந்திருக்க சொல்லிவிட்டு அவனை தேடி வரும் ராணுவத்திடம் தன் மகளும் மருமகனும் உறங்குவதாக சொல்லி காப்பாற்றுகிறாள். அவனுக்கு உணவு கொடுத்து உபசரிக்கிறாள். மகன் என்ன வேலை செய்கிறான் என்று அவளுக்கு தெரியவில்லை. அந்த நேரத்தில் அவளது மகனின் சடலம் கொண்டு வரப்படுகிறது. தான் கொன்றது அந்த தாயின் மகனைத்தான் என்று அறியும் குமார் துடித்து போக, அந்த தாயோ விஷயத்தை புரிந்துக் கொண்டு நான் பெற்ற மகன் தேச துரோகியானான். உன்னை போன்ற ஒரு வீரனை என் மகனாக நினைக்கிறேன் என்கிறாள். மிகுந்த கனத்த மனதோடு குமார் அந்த இடத்தை விட்டு விலகி வருகிறான்.

    இதே நேரத்தில் போர் ஏற்பட்டதால் சைனாவில் உள்ள இந்தியர்கள் திருப்பி அனுப்படுகின்றனர். போகாதவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்படுகின்றனர். இந்தியாவிற்கு போய் விடுவோம் என்று தாய் சொல்ல கமலா மறுக்கிறாள். சைனாவிற்கு விசுவாசமாக அங்கேயே தங்கி விடப் போவதாக சொல்லும் கமலாவை தாய் சபிக்கிறாள். என்ன சொல்லியும் கமலா வர மறுப்பதால் தாய் மட்டும் கிளம்பி இந்தியா செல்கிறாள். இவ்வளவு செய்தும் சீன அதிகாரிகளுக்கு அவள் மேல் நம்பிக்கை வராமல் ஒரு சீன குடிமகனை அவள் திருமணம் செய்து கொள்ள தயாரா என்று கேட்க கமலா சம்மதிக்கிறாள். குடும்ப நண்பரின் டாக்டர் மகனையே திருமணம் செய்து கொள்கிறாள். ஆனால் முதலிரவன்று தன்னை நெருங்கும் கணவனிடம் நாடு இன்றுள்ள நிலையில் நாம் மகிழ்வாக இருப்பது சரியாக இருக்காது என்று கூறி விலகுகிறாள். அவனும் அதை அதை ஒப்புக் கொள்கிறான். டாக்டர் என்ற முறையில் காயம்பட்ட வீரர்களுக்கு மருத்துவம் செய்ய அவனை போர் முனைக்கு சீன அரசாங்கம் அனுப்பி வைக்க, அவனுடன் செவிலயராக சேவை செய்ய கமலாவும் புறப்படுகிறாள்.

    போர் முனையிலிருக்கும் குமாருக்கு கமலா நினைவு வருகிறது. அந்நேரம் அங்கே அவனுக்கு கிடைக்கும் ஒரு தமிழ் பத்திரிகையில் இந்திய- சைனா போர் நடக்கும் போது ஒரு சைனாக்காரனை ஒரு தமிழ் பெண் திருமணம் செய்துக் கொண்டாள் என்ற சேதியுடன் கமலாவின் புகைப்படமும் வெளியாகியிருக்க மனம் உடைந்து போகிறான் குமார். அவளை அந்த நிமிடம் முதல் அடியோடு வெறுக்க தொடங்குகிறான்.


    ஆக்ரமித்துள்ள பகுதிகளில் கமலாவும் அவளது கணவனும் சென்று சீன ராணுவத்தோடு சேர்ந்து தங்குகிறார்கள். அவர்கள் வகுக்கும் போர் திட்டங்களை எல்லாம் கமலா குறிப்பெடுத்து இந்திய படைகளின் கைகளில் கிடைக்குமாறு செய்கிறாள். அவை எல்லாமே தற்செயலாய் குமார் கையிலே கிடைக்கிறது. அதை வைத்து படை நடத்தும் குமார் எதிரிகளை பல இடங்களில் வீழ்த்துகிறான். தாங்கள் போடும் திட்டங்கள் எல்லாம் எப்படி இந்திய படைகளுக்கு தெரிகின்றன என்று சந்தேகப்படும் சீன இராணுவம் ஒரு நாள் கமலாவை பிடித்து விடுகிறது. விசாரணையில் கமலா குற்றவாளி என்று தீர்ப்பாகி மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனையை நிறைவேற்றும் நேரம் இந்திய படைகள் அங்கே தாக்குதல் நடத்த கமலா தப்பி விடுகிறாள்.

    இதனிடையே போர் முனையில் ஒரு இடத்தை கைப்பற்றும் முயற்சியில் தன் படையிடமிருந்து பிரிந்து விடும் குமார் எதிரிகள் கையில் அகப்பட்டுக் கொள்கிறான்.அவனை விசாரித்து ஒரு இடத்தில் அடைத்து வைக்க அங்கிருந்து தப்பி ஓடி வரும் அவன் ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஒளிந்து கொள்ளும் நேரத்தில் அங்கே கமலாவும் இருப்பதை பார்க்கிறான். அவளை தேச துரோகி என்று குற்றம் சாற்றும் குமார் அவளை கொல்ல முற்படுகிறான். அந்நேரம் எல்லா உண்மைகளையும் கமலா சொல்ல அவனுக்கு நிலைமை புரிகிறது. அவளை ஏற்று கொள்ள நினைக்கும் குமாரிடம் தனக்கு திருமணமாகி விட்டதால் அவனை ஏற்று கொள்ள முடியாது என்று மறுப்பு தெரிவிக்கிறாள். இருவரும் அங்கிருந்து தப்பி வரும் நேரம் அவள் கணவன் ஒரு சாமியார் வேடத்தில் வந்து அவளை சுட்டு விடுகிறான். அவனை கொன்று விட்டு அந்த பகுதியில் சீன ஆக்ரமிப்பை முறியடிக்கும் விதமாக சீன் கொடியை இறக்கி விட்டு மூவர்ண இந்திய கொடியை ஏற்றி வைக்கும் குமாரை எதிரிகள் நெற்றியிலே சுட அந்த ரத்த திலகத்துடன் இழந்த இடத்தை மீட்டு விட்டோம் என்ற நிறைவுடன் உயிர் துறக்கிறான்.

    அன்புடன்

  10. #329
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    இரத்த திலகம் - Part II

    இந்த படம் ஒரு உயரிய நோக்கத்திற்காக எடுக்கப்பட்டது. தி.மு.கவிலிருந்து விலகி தமிழ் தேசிய கட்சி கண்ட கண்ணதாசன் தன் தேசப்பற்றை இந்த படம் தயாரித்ததன் மூலமாக வெளிப்படுத்தினார். சுதந்திர பாரதம் நான்கு போர்களை சந்தித்திருக்கிறது. [கார்கிலையும் சேர்த்தால் ஐந்து] ஆனால் சீனப் படையெடுப்பு ஏற்படுத்திய கோவம் மிக பெரியது. காரணம் பாகிஸ்தான் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் சைனா நண்பனை போல் நடித்து நம்மை ஏமாற்றியது அதனால் மக்கள் கோபம் அதிகமாக இருந்தது.

    இப்படிப்பட்ட நேரத்தில் மக்களின் பூரண ஆதரவு அரசுக்கு இருக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தது. ஆகவே பிரிவினை கோரிக்கைக்களை முன் வைக்கும் எந்த ஒரு அமைப்பும் தடை செய்யப்படும், அதன் தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்தது [நமது மாநிலத்தின் வீராதி வீரர்கள் எல்லாம் பெட்டிப் பாம்பாக அடங்கி போனது தனிக் கதை]. இந்த சூழ்நிலையில் கண்ணதாசன் இந்த படம் எடுத்தார். குறை சொல்ல முடியாத முயற்சி. ஆனால் கதை மற்றும் திரைக் கதையமைப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது உண்மை

    இந்திய சீன போரைப் பற்றி படம் எடுக்க வேண்டும். அதற்காக நாயகியை சைனாவில் பிறந்து தமிழ்நாட்டில் படிக்கும் பெண்ணாக கதை எழுதியாகி விட்டது. போர் நடக்கும் போது அவள் சைனாவில் இருப்பது போலவும் சந்தர்ப்பத்தை அமைத்தாகி விட்டது. இந்தியர்கள் அனைவரும் நாடு திரும்பலாம் என்று சொன்ன பிறகும் நாயகி அங்கேயே இருப்பது ஏன் என்று ஒரு முடிச்சு விழுகிறது. ஆனால் முடிவில் நாயகி சொல்லும் காரணம் [எப்படி சைனா வெளியில் நட்பு பாராட்டி தீடீரென்று இந்தியா மீது படையெடுத்ததோ அது போல நானும் அவர்கள் பக்கம் இருப்பது போல நடித்து அவர்களை கவிழ்க்க முயற்சி எடுத்தேன்] வலுவாக இல்லை. ஏன் என்றால் அவர் நாடு திரும்ப வேண்டாம் என்று முடிவெடுக்கும் போது குடும்ப நண்பரின் மகனை திருமணம் செய்து கொள்ள போகும் எண்ணமே அவருக்கு இல்லை. அப்படியிருக்க இப்படி திருமணம் செய்து கொண்டு போர் முனைக்கு போய் உளவு சொல்வோம் என்று எப்படி திட்டம் போட முடியும்?

    அது போல நாயகன் எடுத்தவுடன் மேஜர் பதவிக்கு வருவதும் அப்படியே. ஆனால் கதையை நகர்த்தி செல்ல இவை தேவை என்பதால் லாஜிக்கை மறந்து விடலாம். தந்தைக்கு உடம்பு சரியில்லை என்றவுடன் நாயகி மட்டுமே போகிறாள். அவள் அண்ணன் அதைப் பற்றி கவலைப்படவே இல்லை.

    மற்றொரு குறை. சைனா நம் மீது போர் தொடுத்தது 1962 அக்டோபர் 20ந் தேதி. அப்போது நாயகன் படிப்பை முடித்து விட்டு ராணுவத்தில் சேருகிறான். ஆனால் அதற்கு முந்தைய காட்சி ஒன்றில் நாகேஷ் பேப்பர் கடையில் புத்தகம் வாங்கும் போது அங்கே தொங்கும் தினத்தந்தி போஸ்டரில் காமராஜர் ராஜினமா பற்றி ---- கருத்து என்று போட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டி மூத்த தலைவர்கள் அரசு பதவிகளை விட்டு விலகி கட்சி பணியாற்ற வேண்டும் என்ற கே பிளான் அதாவது காமராஜ் பிளான் அறிவிக்கப்பட்டது 1963 வருடம் ஜூலை/ஆகஸ்ட் மாதம். அதன்படி பெருந்தலைவர் பதவி விலகியது 1963 வருடம் அக்டோபர் 2 அன்று. இதை கவனித்திருக்கலாம். 2008-களிலே கூட இது போன்ற தவறுகள் நடக்கும் போது 45 வருடங்களுக்கு முன் வந்த படத்தில் இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்றாலும் திரைகதையமைப்பு இன்னும் சுவையாக பின்னப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட நெருடல்கள் மறந்திருக்கும்.

    நடிகர்களை பொருத்த வரை நடிகர் திலகம் நிறைந்து நிற்கும் கதை. மறுபடியும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஓவர் என்ற எண்ணமே மனதில் தோன்றாது. படம் முழுக்க இயல்பு.

    முதல் பாதியில் படு காஷுவலாக வருவார். சாவித்திரியை கிண்டல் செய்வது எல்லாம் ரொம்ப இயல்பாக பண்ணியிருப்பார். இரண்டாம் பகுதியில் சீரியஸ். ஆனால் தேவையறிந்து பரிமாறியிருப்பார். ஷேக்ஸ்பியரின் மிக பிரபலமான ஒதெல்லோ நாடகம் தமிழ் சினிமாவில் இரண்டு முறை வந்திருக்கிறது. இரண்டுமே நடிகர் திலகத்தின் படத்தில் தான். அன்பு திரைப்படத்தில் தமிழில் வந்தது [அந்த விளக்கு அணைந்தால் இந்த விளக்கு அணையும்]. இந்த திரைப்படத்தில் ஷேக்ஸ்பியரின் ஆங்கில வரிகளே கையாளப்பட்டது. நடிகர் திலகம் ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதற்கு இந்த காட்சியை பார்த்தாலே போதும். அதே ஸ்டைலில் பண்ணியிருப்பார். ஒரே குறை, ராஜபார்ட் ரங்கதுரை போல இந்த படத்திலும் வேறு ஒருவரை பேச வைத்திருப்பார்கள். ஆனால் அதில் இவர் பேசவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்தது போல் இல்லாமல் இதில் ஓரளவிற்கு பொருத்தமான குரல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இறுதியில் சாவித்திரி தன் நிலையை விளக்கி சொன்னவுடன் பொங்கி வரும் அந்த ஏமாற்றத்தை தாங்கி கொண்டு, தான் உண்பதற்காக வைத்திருந்த ரொட்டி துண்டை சாவித்திரிக்கு சாப்பிட கொடுத்து விட்டு பக்கத்தில் உட்கார்ந்து நகத்தை கடித்தபடியே பார்க்கும் பார்வை இருக்கிறதே, நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும். இந்த படத்திலும் இமேஜ் பார்க்காமல் தன் உடல் பருமனை கிண்டல் செய்யும் வசனங்களை பேசியிருக்கிறார். "உங்கண்ணனை வேற தேசத்துக்காரன் பார்த்தான்னா, பஞ்சத்திலே அடிப்பட்ட நாடுன்னு நம்ம நாட்டை பத்தி நினைப்பான்" என்று நாகேஷை குறிப்பிட்டு சாவித்திரியிடம் சொல்ல, அதற்கு சாவித்திரி "உங்களை பார்த்தா அந்த பஞ்சத்திற்கே நீங்கதான் காரணம்னு நினைப்பான்" . அது போல ஊரிலிருந்து வரும் பாட்டி சிவாஜியை பார்த்து "என்னப்பா இப்படி இளைச்சு போயிட்டே"? என்று கேட்க "யாரு நானா?" என்று கேட்பார்.

    நடிகையர் திலகத்திற்கு அவ்வளவாக வேலை இல்லை. முதலில் வரும் கோபம் குறும்பு மட்டுமே அவருக்கு ஸ்கோர் செய்ய கிடைத்த சந்தர்ப்பங்கள். நாகேஷ் நடிகர் திலகத்தோடு இணைந்த மூன்றாவது படம். அவர் மனோரமாவை திருமணம் செய்ய எடுக்கும் முயற்சியெல்லாம் ஏற்கனவே அது போல பார்த்து விட்டதால் நகைச்சுவை பஞ்சம். மேலும் அது கதையில் ஒட்டாமல் தனியாக இருக்கிறது. கல்லூரி பேஃர்வல் விருந்தின் போது அடுத்தவனிடம் மணி கேட்டு காபியை தன் கப்பில் மாற்றிகொள்வது மட்டும் புத்திசாலித்தனமான நாகேஷ். மற்றவர்கள் எல்லாம் இரண்டு மூன்று சீன் மட்டுமே.

    இந்த படத்தின் மிகப் பெரிய பலம் பாடல்கள். கவியரசுவின் சொந்தப் படம் வேறு. மாமா மஹாதேவன் போட்ட அருமையான பாடல்கள்.

    கவிஞர் நேரிடையாக திரையில் தோன்றி தன்னை பற்றிய சுய விமர்சனம் செய்த பாடல் [படத்தில் பழைய மாணவன் முத்தையா பாடுவதாக அறிவிப்பு]. அதிலும்

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த
    நிலையிலும் எனக்கு மரணமில்லை.

    என்ற வரிகள் என்றும் சாகாவரம் பெற்றவை.

    அடுத்த பாடல் பசுமை நிறைந்த நினைவுகளே. தமிழக கல்லூரிகளில் பேஃர்வல் பார்ட்டி நடக்கின்ற காலம் இருக்கும் வரை இந்த பாடலும் சிரஞ்சீவியாக இருக்கும்.

    எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ? என்ற வரியும்

    இந்த நாளை வந்த நாளில் மறந்து போவமோ என்ற வரியும்

    எப்போது கேட்டாலும் ஒரு காலத்தில் மாணவனாக இருந்த எல்லோருக்கும் அவர்களின் பசுமையான நினைவுகள் திரும்பி வரும்.

    புத்தன் வந்த திசையிலே போர்
    புனிதர் காந்தி மண்ணிலே போர்

    என்ற வரிகள் கேட்பவர்கெல்லாம் உணர்வு ஊட்டக்கூடிய பாடல்.

    பனி படர்ந்த மலையின் மீது
    படுத்திருந்தேன் சிலையை போல

    நட்பு பாராட்டிய நம் மீது அநியாயமாக போர் தொடுத்த சைனா மீது கோபம் கொண்ட ஒவ்வொரு இந்தியனின் மனக் குமுறல். இந்த படத்தில் தான் இந்த பாட்டின் மூலமாக தான் முதலில் காங்கிரஸ் பேரியக்கத்தையும் பெருந்தலைவர் மற்றும் நேரு போன்றவர்களை திரையில் நடிகர் திலகம் காண்பித்தார். இந்த பாடலின் இறுதி வரிகள்

    வீரம் உண்டு தோள்கள் உண்டு
    வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு
    ஞானமிக்க தர்மம் உண்டு
    தர்மமிக்க தலைவன் உண்டு,

    என்ற வரிகளின் போது பிரதமர் நேரு அவர்களை காண்பித்து மக்களுக்கு ஒரு தைரியம் கொடுத்து பயப்பட வேண்டாம் என்று சொன்ன பாடல்.

    இதை தவிர இசைத்தட்டுகளில் இடம் பெற்று படத்தில் இடம் பெறாமல் போன ஒரு அருமையான பாடல் தாழம்பூவே தங்கநிலாவே தலை ஏன் குனிகிறது. டி.எம்.எஸ் மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி பாடியது. இது இடம் பெறாததன் காரணம் தெரியவில்லை. எனக்கு தெரிந்த வரை அல்லது யூகிப்பது, இந்த பாடல் நடிகர் திலகம் மற்றும் புஷ்பலதா பாடுவதாக அமைக்கப்பட இருந்தது. தங்கள் வீட்டில் அடைக்கலம் புகும் நாயகனின் மனைவியாக நடிக்க வேண்டிய சூழ்நிலை புஷ்பலதா ஏற்ற கதாபாத்திரத்திற்கு. அந்த நேரத்தில் நடிகர் திலகத்தை ஒரு வித காதலுடன் புஷ்பலதா பார்ப்பதாக ஒரு ஷாட் வரும். அதன் தொடர்ச்சியாக இந்த பாடல் காட்சி அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கதையோட்டத்திற்கு தடை செய்யும் என்றோ, பார்த்தவுடன் ஒரு பெண் காதல் வயப்பட்டு கனவு காண்பதை மக்கள் ஏற்பார்களா என்ற தயக்கமோ அல்லது நடிகர் திலகத்தின் மகளாக அந்த நேரத்தில்தான் புஷ்பலதா பார் மகளே பார் படத்தில் நடித்திருந்தார். ஆகவே இந்த நேரத்தில் இந்த பாடல் வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டதா என்பதும் தெரியவில்லை. ஆனால் பாடல் அருமையான ஒன்று.

    14.09.1963 அன்று வெளியானது இரத்த திலகம். பெரிய வெற்றியை பெறவில்லை. வழக்கம் போல் பார் மகளே பார் வெளியாகி 60 நாட்களே ஆகியிருந்த நிலையிலும் குங்குமம் வெளியாகி 30 நாட்களே ஆன நிலையில் இது வெளியானது. இந்த படம் வெளியாகி 6 நாட்களில் [20.09.1963] நடிகர் திலகத்தின் கல்யாணியின் கணவன் வெளியானது. 60 நாட்களில் தீபாவளி - அன்னை இல்லம் ரிலீஸ். ஆகவே படத்தின் குறைகளும் போட்டி படங்களும் சேர்ந்து வெற்றியின் அளவை குறைத்து விட்டது.

    ஆனால் ஒன்று. படத்தின் பின்னில் இருந்த உயரிய நோக்கம் மற்றும் காலத்தால் அழியாத பாடல்களுக்காவும் இந்த படம் என்றும் பேசப்படும்.

    அன்புடன்

    PS: This review dedicated to dear friend Senthil [Harish] who wanted me to write about this film.

  11. #330
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    திரு முரளி அவர்களுக்கு,
    என்னுடைய கோரிக்கையை ஏற்று இந்த படத்தை பற்றி எழுதிய தங்களின் பெருந்தன்மைக்கு நான் தலைவணங்குகிறேன்.
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •