-
10th May 2013, 09:59 AM
#3411
Junior Member
Devoted Hubber
Originally Posted by
Sowrirajann Sri
Hi,
I think they have not listed based on 1st, 2nd, 3rd ....They have mentioned 20 Actors who made the difference in 100 years of Cinema. and they cannot bring it in the following manner isnt it
123456789101112....20...it is not 1 to 20 it is 20
Yes I know that..
This is a insipid list and hence a great insult to Thalaivar.
Being an ardent fan yourself,I don't know how you are unable to see it!
-
10th May 2013 09:59 AM
# ADS
Circuit advertisement
-
10th May 2013, 10:16 AM
#3412
Senior Member
Senior Hubber
Originally Posted by
Gopal,S.
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-25
அதற்கு பிறகு வரும் பதினோரு காட்சிகள் அதற்கு முன்னும் பின்னும் இந்திய திரையுலகமே கண்டிராத miracle .நான் குறிப்பிட்ட படி emotional roller coaster ride . நடிகர்திலகம் போன்ற நடிகர் ஒருவரால் மட்டுமே முடித்து காட்ட முடிந்த அதிசயம். விறு விறுப்பு,பரபரப்பு, sentiments ,Technical excellence ,புதுமை எதற்கும் பஞ்சம் வைக்கா விட்டாலும் நடிப்பு என்ற விஸ்வரூப தரிசன ஜோதியில் மற்றதெல்லாம் கரைந்து போகும் ,அதியற்புத உன்னதம் தொடும் psychedelic ecstasy பார்வையாளர்களுக்கு.
-----To be continued .
அற்புதம் திரு. கோபால்.
தொடர்ந்தாற்போல் வரும் சுவாரஸ்யமும் திருப்பங்களும் நிறைந்த காட்சிகள்... அப்படியே எதிர்பாராத திருப்பத்துடன் முடியும் உச்சக்கட்டம்!
படத்திற்குத் தேவைப்படும் துள்ளல்/உற்சாகப் பாடல்கள் அனைத்தும் முதல் பாதியிலேயே முடிந்து விடும். இடைவேளைக்குப் பின்னர் "பார்த்த ஞாபகம் இல்லையோ" பேதாஸ் வடிவம் (நடிகர் திலகத்தின் ஒப்புயர்வற்ற நடிப்பில் - அதிர்ச்சி, நம்ப முடியாத தன்மை, கோபம், இயலாமை அனைத்தும் கொட்டும் கொப்பளிக்கும் கண்கள்!) மற்றும் "எங்கே நிம்மதி" பாடல்கள் மட்டும் - படத்தின் டெம்போவை அசாத்திய வேகத்தைக் குறையாமல் பார்த்துக் கொள்ள!
பின் பாதி முழுவதும், நடிகர் திலகத்தை மையமாக வைத்து சுழலும். வாவ்!
ஒரு த்ரில்லர் படத்தை சண்டைக் காட்சிகள் இல்லாமல் சுவாரஸ்யத்துடன் தந்த ஒப்பற்ற படம்!
தொடருங்கள் திரு. கோபால்...
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
10th May 2013, 10:22 AM
#3413
Senior Member
Senior Hubber
Originally Posted by
Ganpat
Yes I know that..
This is a insipid list and hence a great insult to Thalaivar.
Being an ardent fan yourself,I don't know how you are unable to see it!
I don't know whether others saw it! When I saw it last week (in fact I shared it with Mr. Gopal over phone) in 100 great films in Tamil, "Deiva Magan" was covered and the photograph was of M.N. Nambiar's!
They included only 2-3 films (Deiva Magan, Nayagan, etc.)... Great people, Great Country calling itself as Linguistic Pride country... still lopsided one...
R. Parthasarathy
-
10th May 2013, 01:51 PM
#3414
Senior Member
Diamond Hubber
வருக ரவிச்சந்திரன் சார்.
"NT க்குப் பிறகு வந்தவர்களுள், மெனக்கெடல், தரமான நடிப்பு, தொழில்நுட்பத்திறன், பன்மொழி ஆற்றல் கொண்ட versatile கலைஞர் நம் திரையுலகில் உண்டு."
என்று கூறியிருக்கிறீர்கள். நீங்கள் எதை மனதில் வைத்துக் கொண்டு இக்கருத்தைக் கூறியுள்ளீர்கள் என்று புரியவில்லை.
ஆனால்....
மெனக்கெடல் : பாபு, தெய்வமகன், தங்கமலை ரகசியம், திருவருட்செல்வர் 'அப்பர், (அப்பருக்கு நான்கு மணிநேர ஒப்பனை சற்றும் செயற்கைத்தனங்கள் இல்லாத இயற்கையான வயதான ஒப்பனை) 'பாபு'வில் வயதான வேடத்திற்காக ஒப்பனைக்குப் பட்ட நரகவேதனை.(எந்த வசதிகளும் இல்லாத காலகட்டத்தில். ஸ்பெஷல் டாக்டர்கள் முன்னிலையில் ஊசிகள் மூலமாக முகத்தில் தைத்து ரண வேதனைகளுடன் சுருக்கங்களை வரவைத்ததாக அப்போதைய ஒரு பத்திரிகையில் படித்திருக்கிறேன்) 'சவாலே சமாளி'யில் தந்தையாக நடித்த வி.எஸ்.ராகவனிடம் காட்சியின் தத்ரூபத்திற்காக வேண்டி நிஜமாகவே சாட்டையடிபட்டு ஒருநாள் முழுக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிஜ அர்ப்பணிப்பு...
(வெளிவராத உண்மைகள்) என்று எவ்வளவோ அடுக்கிக்கொண்டே போகலாம்.
தரமான நடிப்பு: இதற்கு விளக்கம். தேவையா?
தொழில்நுட்பத் திறன்: காமெராவைக் கையில் தூக்கிக்கொண்டு, டைரக்டர் விசிலை வாயில் வைத்துக் கொண்டு, 'டிராலி பேக்' என்று கத்திக் கொண்டு முதன் முதல் அந்தக் காமிராவினால் எடுக்கப்பட்டது. இந்தக் காமிராவினால் எடுக்கப்பட்டது... இதுவரையில் வராத புதுமை சவுண்ட் டிராக்.... ஒரிஜினலாக புதுக்கார்கள் ரெண்டை வாங்கி வெடிக்க வைத்து ஆகாயத்தில் தூக்கி வீசப்பட்டது.... என்பதெல்லாம் இல்லாமல் காமெராவுக்கு முன்னால் (எது தேவையோ அது) எப்படி அற்புதமாகச் செயல்படுவது என்பது நடிகர் திலகத்திற்கு தெரிந்த அளவிற்கு வேறு யாருக்காவது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்று பழுத்துக் கொட்டை போட்ட பல காமெரா மேதைகள் கூறியிருக்கிறார்கள். தான் நடிப்பது மட்டுமல்லாமல் தன்னுடன் நடிக்கும் மற்றவர்களையும் காமிராவுக்கு தக்கபடி வளைத்துக் கொண்டு வந்து நிற்க, குறிப்பாக நடிக்க வைப்பதில் அவர் பலே கில்லாடி! அதே போல நிறைய பிலிம் ரோல்களை விழுங்கியவர் நடிகர் திலகம். என்ன ஆச்சர்யமாக உள்ளதா? மற்றவர்களைப் போல நடிக்கத் தெரியாமல் அல்ல. தன்னுடைய நடிப்பில் மெய்மறந்து காமிராவை நிறுத்தாமல் ஓடவிட்டு தன்னையே, தன் நடிப்பையே வாய்பிளந்து பார்க்கும் காமெராமேனை சத்தம் கொடுத்து, "ஷாட் முடிந்து விட்டது. என்ன தூங்கி விட்டாயா? காமிராவை முதலில் அணை" என்று நடிகர் திலகம் கூக்குரலிட்ட பிறகே பல ஒளிப்பதிவாளர்கள் சுயநினைவுக்கு வந்தது நாடறிந்ததே! உலகில் வேறு யாருக்கும் இந்தப் பெருமை இருந்ததாக இருப்பதாகத் தெரியவில்லை
அதே போல 'புதிய பறவை'யின் "எங்கே நிம்மதி?' பாடலில் அவர் காட்டிய அசாத்திய திறமை. நான் சொல்வது நடிப்பில் அல்ல. தொழில் நுட்பத்தில். காமிராக் கோணங்கள்... லைட்டிங் அரேஞ்ச்மென்ட்ஸ், காட்சிகளின் பின்னணியில் தெரியும் அந்த இலைகளற்ற பட்ட மரங்கள், சப்பாத்தி,கள்ளிச் செடிகள் அனைத்தும் நடிகர் திலகத்தின் கற்பனை வளத்தில் உருவானதுதான். ஆனால் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. அதை அவர் விரும்புவதும் இல்லை. ஆனால் பின்னாட்களில் அவருடன் பழகியவர்கள் இந்தக் கருத்துக்களையெல்லாம் தொலைக்காட்சிகளின் வாயிலாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் தாங்களே மனமுவந்து மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்கள்.
பன்மொழி ஆற்றல்: மிக அழகாக ராகவேந்திரன் சார் இதற்கு விளக்கமளித்திருக்கிறார். மனோகரா இந்தியில் 'மனோகர்' என்று நேரிடையாக எடுக்கப்பட்டபோது அவர் இந்தியில் மிக அற்புதமாகப் பேசி ஆச்சர்ய அலைகளை உருவாக்கினார். (இயக்குனர் திரு எல்வி. பிரசாத் இதை ஒருமுறை பத்திரிகை பேட்டி ஒன்றில் சிலாகித்துக் கூறியிருந்தார்) ஆனால் என்ன காரணத்தினாலோ படத்தில் அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்கப்பட்டது. 'ஸ்கூல் மாஸ்டர்" கன்னடத்தில் அருமையாக கன்னடம் பேசியும் அசத்தியிருப்பார். அதே படம் இந்தியில் வந்த போது சொந்தக் குரலில் அசத்தியிருப்பார்.
நடிகர் திலகத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றிலும் அவர் ஒரு பிறவி மேதை. நல்லதொரு குடும்பத்திற்குக் கூட அவர் குடும்பத்தைத்தான் அனைவரும் உதாரணமாகக் கூறுவார்கள்.
இறுதியாக ஒன்றை குறிப்பிடுகிறேன்.
உலகத்தின் சிறந்த ஒரு அரசியல்வாதியை விடவும் வேறு ஒருவர் உருவாகி விட முடியும் .
ஒரு கிரிக்கெட் வீரரின் சாதனையை இன்னொரு கிரிக்கெட் வீரர் முறியடித்து விட முடியும்.
ஒரு இலக்கியவாதியை விட வேறொரு இலக்கியவாதி வந்து ஜொலிக்க முடியும்.
ஒரு எழுத்தாளனை பீட் செய்ய பல எழுத்தாளர்கள் வருவார்கள். வந்திருக்கிறார்கள்.
ஒரு விஞ்ஞானியின் சாதனைகளை பின்னுக்குத் தள்ளி அடுத்த விஞ்ஞானி அவதாரம் எடுக்கக் கூடும்.
ஒரு நல்ல தலைவரை விடவும் வேறு சிறந்த தலைவன் உருவாகி உலகை வழிநடத்தவும் முடியும்.
ஒரு இசை மேதையின் புகழை விடவும் வேறொரு இசை மேதை புகழ் பெறக்கூடும்
இவ்வளவு ஏன்?... உலகில் எவரை மாதிரியும், எவரும் உருவாக முடியும். எவரையும் உருவாக்கவும் முடியும்...ஒருவரின் சாதனையை ஒருவர் விஞ்ச முடியும்.... வெல்ல முடியும். ஆனால் ஒரே ஒரு சாதனையாளரைத் தவிர....
'சிவாஜி' என்ற அந்த மகா கலைஞனை கடந்த காலங்களிலும் சரி! அவருடைய சம காலங்களிலும் சரி! நடந்து கொண்டிருக்கும் காலங்களிலும் சரி! நடக்கப் போகும் காலங்களிலும் சரி!
இனி ஒருவர் விஞ்சவோ, மிஞ்சவோ, முந்தவோ முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
அந்தப் பெருமை நடிகர் திலகத்துக்கு மட்டுமே!
அதனால் பெருமை சிவாஜி ரசிகனுக்கு மட்டுமே!
கமல் சொன்னது போல அந்த chair இனி நிரந்தரமாக காலி chair தான். அதன் காலடியைத் தொட்டு வணங்கி, அதன் கீழே அமர்ந்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்பதே மற்ற கலைஞர்களுக்கு என்றும் மாறாத பெருமை.
உலகில் யாருக்குமே வாய்க்காத பெருமையை எங்களுக்கு தேடித்தந்த நடிகர் திலகமே! நல்லவர்க்குத் திலகமே!
உன்னைத் தவிர எங்களுக்கு வேறு கடவுள் உண்டோ!
கோபால் சார் மிக அழகாகக் கூறியிருந்தார்.
"இன்னொரு கடவுளோ, தேவ தூதனோ உலகில் மீண்டும் தோன்ற வாய்ப்புண்டு. இன்னொரு நடிகர்திலகம், தோன்ற வாய்ப்பே இல்லை"
(பொன்னெழுத்துக்களில் பொறித்து ஒவ்வொரு நடிகனும் தங்கள் கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டிய டாலர்)
ஒவ்வொரு வினாடியும் உன் திறமையில் பிரமித்துப் போய் நிற்கும் கோடானு கோடி ரசிகர்களில் ஒருவனான
நெய்வேலி வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 10th May 2013 at 01:58 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
10th May 2013, 01:57 PM
#3415
Junior Member
Regular Hubber
Originally Posted by
Ganpat
Yes I know that..
This is a insipid list and hence a great insult to Thalaivar.
Being an ardent fan yourself,I don't know how you are unable to see it!
I don't see any insult there !
NDTV is an organization and they focus on 100 years of Indian Cinema and not Southern Cinema or more specifically Tamil Cinema. Had they mentioned Tamil Cinema, then there can be only two names one is our man and second is other man.
Out of the whole lot of actors, they have chosen 20 across India and hence the title "Actors who made the difference". While am not here to see why 20, why not 25 or 30, they have provided 20 actors in 100 years..., in which our Thalaivar is also one ( we cannot bring in an argument in their context of their topic actors who made the difference that our man is the only one even though, that is the truth talentwise, contributionwise etc., when you compare.)
It is definitely not a Insult. Let's look at things in a different perspective too !
Regards
SRS
-
10th May 2013, 02:13 PM
#3416
Junior Member
Regular Hubber
Originally Posted by
vasudevan31355
வருக ரவிச்சந்திரன் சார்.
"nt க்குப் பிறகு வந்தவர்களுள், மெனக்கெடல், தரமான நடிப்பு, தொழில்நுட்பத்திறன், பன்மொழி ஆற்றல் கொண்ட versatile கலைஞர் நம் திரையுலகில் உண்டு."
என்று கூறியிருக்கிறீர்கள். நீங்கள் எதை மனதில் வைத்துக் கொண்டு இக்கருத்தைக் கூறியுள்ளீர்கள் என்று புரியவில்லை.
ஆனால்....
மெனக்கெடல் : பாபு, தெய்வமகன், தங்கமலை ரகசியம், திருவருட்செல்வர் 'அப்பர், (அப்பருக்கு நான்கு மணிநேர ஒப்பனை சற்றும் செயற்கைத்தனங்கள் இல்லாத இயற்கையான வயதான ஒப்பனை) 'பாபு'வில் வயதான வேடத்திற்காக ஒப்பனைக்குப் பட்ட நரகவேதனை.(எந்த வசதிகளும் இல்லாத காலகட்டத்தில். ஸ்பெஷல் டாக்டர்கள் முன்னிலையில் ஊசிகள் மூலமாக முகத்தில் தைத்து ரண வேதனைகளுடன் சுருக்கங்களை வரவைத்ததாக அப்போதைய ஒரு பத்திரிகையில் படித்திருக்கிறேன்) 'சவாலே சமாளி'யில் தந்தையாக நடித்த வி.எஸ்.ராகவனிடம் காட்சியின் தத்ரூபத்திற்காக வேண்டி நிஜமாகவே சாட்டையடிபட்டு ஒருநாள் முழுக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிஜ அர்ப்பணிப்பு...
(வெளிவராத உண்மைகள்) என்று எவ்வளவோ அடுக்கிக்கொண்டே போகலாம்.
தரமான நடிப்பு: இதற்கு விளக்கம். தேவையா?
தொழில்நுட்பத் திறன்: காமெராவைக் கையில் தூக்கிக்கொண்டு, டைரக்டர் விசிலை வாயில் வைத்துக் கொண்டு, 'டிராலி பேக்' என்று கத்திக் கொண்டு முதன் முதல் அந்தக் காமிராவினால் எடுக்கப்பட்டது. இந்தக் காமிராவினால் எடுக்கப்பட்டது... இதுவரையில் வராத புதுமை சவுண்ட் டிராக்.... ஒரிஜினலாக புதுக்கார்கள் ரெண்டை வாங்கி வெடிக்க வைத்து ஆகாயத்தில் தூக்கி வீசப்பட்டது.... என்பதெல்லாம் இல்லாமல் காமெராவுக்கு முன்னால் (எது தேவையோ அது) எப்படி அற்புதமாகச் செயல்படுவது என்பது நடிகர் திலகத்திற்கு தெரிந்த அளவிற்கு வேறு யாருக்காவது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்று பழுத்துக் கொட்டை போட்ட பல காமெரா மேதைகள் கூறியிருக்கிறார்கள். தான் நடிப்பது மட்டுமல்லாமல் தன்னுடன் நடிக்கும் மற்றவர்களையும் காமிராவுக்கு தக்கபடி வளைத்துக் கொண்டு வந்து நிற்க, குறிப்பாக நடிக்க வைப்பதில் அவர் பலே கில்லாடி! அதே போல நிறைய பிலிம் ரோல்களை விழுங்கியவர் நடிகர் திலகம். என்ன ஆச்சர்யமாக உள்ளதா? மற்றவர்களைப் போல நடிக்கத் தெரியாமல் அல்ல. தன்னுடைய நடிப்பில் மெய்மறந்து காமிராவை நிறுத்தாமல் ஓடவிட்டு தன்னையே, தன் நடிப்பையே வாய்பிளந்து பார்க்கும் காமெராமேனை சத்தம் கொடுத்து, "ஷாட் முடிந்து விட்டது. என்ன தூங்கி விட்டாயா? காமிராவை முதலில் அணை" என்று நடிகர் திலகம் கூக்குரலிட்ட பிறகே பல ஒளிப்பதிவாளர்கள் சுயநினைவுக்கு வந்தது நாடறிந்ததே! உலகில் வேறு யாருக்கும் இந்தப் பெருமை இருந்ததாக இருப்பதாகத் தெரியவில்லை
அதே போல 'புதிய பறவை'யின் "எங்கே நிம்மதி?' பாடலில் அவர் காட்டிய அசாத்திய திறமை. நான் சொல்வது நடிப்பில் அல்ல. தொழில் நுட்பத்தில். காமிராக் கோணங்கள்... லைட்டிங் அரேஞ்ச்மென்ட்ஸ், காட்சிகளின் பின்னணியில் தெரியும் அந்த இலைகளற்ற பட்ட மரங்கள், சப்பாத்தி,கள்ளிச் செடிகள் அனைத்தும் நடிகர் திலகத்தின் கற்பனை வளத்தில் உருவானதுதான். ஆனால் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. அதை அவர் விரும்புவதும் இல்லை. ஆனால் பின்னாட்களில் அவருடன் பழகியவர்கள் இந்தக் கருத்துக்களையெல்லாம் தொலைக்காட்சிகளின் வாயிலாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் தாங்களே மனமுவந்து மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்கள்.
பன்மொழி ஆற்றல்: மிக அழகாக ராகவேந்திரன் சார் இதற்கு விளக்கமளித்திருக்கிறார். மனோகரா இந்தியில் 'மனோகர்' என்று நேரிடையாக எடுக்கப்பட்டபோது அவர் இந்தியில் மிக அற்புதமாகப் பேசி ஆச்சர்ய அலைகளை உருவாக்கினார். (இயக்குனர் திரு எல்வி. பிரசாத் இதை ஒருமுறை பத்திரிகை பேட்டி ஒன்றில் சிலாகித்துக் கூறியிருந்தார்) ஆனால் என்ன காரணத்தினாலோ படத்தில் அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்கப்பட்டது. 'ஸ்கூல் மாஸ்டர்" கன்னடத்தில் அருமையாக கன்னடம் பேசியும் அசத்தியிருப்பார். அதே படம் இந்தியில் வந்த போது சொந்தக் குரலில் அசத்தியிருப்பார்.
நடிகர் திலகத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றிலும் அவர் ஒரு பிறவி மேதை. நல்லதொரு குடும்பத்திற்குக் கூட அவர் குடும்பத்தைத்தான் அனைவரும் உதாரணமாகக் கூறுவார்கள்.
இறுதியாக ஒன்றை குறிப்பிடுகிறேன்.
உலகத்தின் சிறந்த ஒரு அரசியல்வாதியை விடவும் வேறு ஒருவர் உருவாகி விட முடியும் .
ஒரு கிரிக்கெட் வீரரின் சாதனையை இன்னொரு கிரிக்கெட் வீரர் முறியடித்து விட முடியும்.
ஒரு இலக்கியவாதியை விட வேறொரு இலக்கியவாதி வந்து ஜொலிக்க முடியும்.
ஒரு எழுத்தாளனை பீட் செய்ய பல எழுத்தாளர்கள் வருவார்கள். வந்திருக்கிறார்கள்.
ஒரு விஞ்ஞானியின் சாதனைகளை பின்னுக்குத் தள்ளி அடுத்த விஞ்ஞானி அவதாரம் எடுக்கக் கூடும்.
ஒரு நல்ல தலைவரை விடவும் வேறு சிறந்த தலைவன் உருவாகி உலகை வழிநடத்தவும் முடியும்.
ஒரு இசை மேதையின் புகழை விடவும் வேறொரு இசை மேதை புகழ் பெறக்கூடும்
இவ்வளவு ஏன்?... உலகில் எவரை மாதிரியும், எவரும் உருவாக முடியும். எவரையும் உருவாக்கவும் முடியும்...ஒருவரின் சாதனையை ஒருவர் விஞ்ச முடியும்.... வெல்ல முடியும். ஆனால் ஒரே ஒரு சாதனையாளரைத் தவிர....
'சிவாஜி' என்ற அந்த மகா கலைஞனை கடந்த காலங்களிலும் சரி! அவருடைய சம காலங்களிலும் சரி! நடந்து கொண்டிருக்கும் காலங்களிலும் சரி! நடக்கப் போகும் காலங்களிலும் சரி!
இனி ஒருவர் விஞ்சவோ, மிஞ்சவோ, முந்தவோ முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
அந்தப் பெருமை நடிகர் திலகத்துக்கு மட்டுமே!
அதனால் பெருமை சிவாஜி ரசிகனுக்கு மட்டுமே!
கமல் சொன்னது போல அந்த chair இனி நிரந்தரமாக காலி chair தான். அதன் காலடியைத் தொட்டு வணங்கி, அதன் கீழே அமர்ந்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்பதே மற்ற கலைஞர்களுக்கு என்றும் மாறாத பெருமை.
உலகில் யாருக்குமே வாய்க்காத பெருமையை எங்களுக்கு தேடித்தந்த நடிகர் திலகமே! நல்லவர்க்குத் திலகமே!
உன்னைத் தவிர எங்களுக்கு வேறு கடவுள் உண்டோ!
கோபால் சார் மிக அழகாகக் கூறியிருந்தார்.
"இன்னொரு கடவுளோ, தேவ தூதனோ உலகில் மீண்டும் தோன்ற வாய்ப்புண்டு. இன்னொரு நடிகர்திலகம், தோன்ற வாய்ப்பே இல்லை"
(பொன்னெழுத்துக்களில் பொறித்து ஒவ்வொரு நடிகனும் தங்கள் கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டிய டாலர்)
ஒவ்வொரு வினாடியும் உன் திறமையில் பிரமித்துப் போய் நிற்கும் கோடானு கோடி ரசிகர்களில் ஒருவனான
நெய்வேலி வாசுதேவன்.
வாசுதேவன் சார்
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை...
திரு.ரவிச்சந்திரன் எதை /யாரை மனதில் வைத்து கேள்வி எழுப்பினார் என்று தெரியவில்லை...இருந்தாலும் அவரை சொல்லி குற்றமில்லை. காரணம், அவர் நினைத்துகொண்டுஇருப்பது அவராக புரிந்துகொண்டு அறிந்ததல்ல. பலர் தொன்று தொட்டு பரப்பி வரும் செய்திகளின் தாக்கம் என்றே நான் கருதுகிறேன். இப்பொழுது நாம் உரைத்துவிடோம் இனி அவர் நாம் உரைத்த கண்ணோட்டத்தில் நடிகர் திலகத்தை பற்றி நினைப்பாராயின் உண்மையை புரிந்து...ஒருநாள் அவரே இத்திரியில்...ஆம்...நானும் ஒத்துகொள்கிறேன்...நடிகர் திலகத்தின் காலத்திலயே எந்த நடிகரும் தொடர்ச்சியாக இவ்வளவு சாதனைகளை செய்யவில்லை....ஆகையால் தாழ்புனற்சியால் அவர்களை சேர்ந்தவர்கள் இது போன்ற தவறான வதந்திகளையும் உண்மைக்கு புறம்பான செய்திகளையும் பரப்பியதர்க்கான வாயிபுக்கள் தான் அதிகம் என்று ஒத்துகொள்வார். காலம் கனியும்...ஒரு கர்ணன் சென்ற வருடம் வெளிவந்து தென் இந்திய திரை உலகையே கலங்கடிக்க வில்லையா...? மற்ற நடிகர்களை மிமிக்ரி செய்யும் மிமிக்ரி கலைஞர்களால் தான் நம் நடிகர் திலகத்தின் அருமை பெருமை மிகவும் தரக்குறைவாக சித்தரிக்கப்பட்டது என்று இக்கால இளைஞர்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் உறைகின்றனர்..நாங்கள் அவற்றையெல்லாம் இனி நம்பபோவதில்லை என்பது வரை கூறிவிட்டனர்...பிறகென்ன ! இவரையும் அந்த குழந்தைகளில் ஒருவராக கருதுவோம்..
Srs
-
10th May 2013, 02:29 PM
#3417
Junior Member
Newbie Hubber
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-26
லதாவின் அவநம்பிக்கை நிறைந்த சோகத்தால் வெறி கொண்டு, ரங்கனையும் சித்ராவையும் சுட வரும் போது ,மற்றவர்கள் தடுத்தவுடன் விரக்தி, கோபம் கொண்டு, தன்னிச்சையாக பார்த்த ஞாபகம் இசைப்பார் பியானோவில்.இந்த காட்சியில் பாடல் முழுதும் meloncholic serenity with puzzled look உடன்,நிலைகுத்திய விழிகளுடன், முடிவில் சித்ரா அந்த பாடல் எப்படி தெரியும் என்பதற்கு பதில் கூறியவுடன் ஏமாற்றத்துடன் திரும்பும் லதாவை பார்த்து திரும்ப violent ஆகி சித்ரா கழுத்தை பிடித்து வெறி பிடித்து கத்தி கொண்டு தோட்டத்திற்கு செல்லும் இடம்......
அங்கு தோட்டத்தில் லதாவுடன் ,நம்பிக்கை இழந்து அவரை போக சொல்லி விட்டு, அப்படியாவது பழைய நாட்களை அசை போட்டு வாழ்ந்து விட நினைக்கும் கோபால்,பதட்டத்துடன் சிகரெட் பற்ற வைப்பதிலேயே depressed hope less state வெளிப்பட்டு விடும்.போலீஸ் நண்பன் வரும் போது detached silent agony யில் கொடுக்கும் indifferent உடல் மொழி மற்றும் கை அசைவுகள் ....(அவசியமில்லை). நண்பன் கைரேகை எடுக்க சொன்னதும் அவன் குற்றவாளிகள் தப்பி விடும் சாத்யகூற்றை சொன்னதும் போய்தான் தொலயுட்டுமே என்ற அங்கலாய்ப்பு.
சித்ராவை வலையில் சிக்க வைக்க கடுகடுவென்ற பாவனையில் இருந்து போலீஸ் நண்பன் voice over க்கு தக்க படி gradual ஆக forced pleasantness கொண்டு வருவது. ரங்கன் வருவதை பார்த்து லதாவிடம் மனமில்லாமல் கடுமையாய் பேசி அனுப்பி விட்டு ரங்கன் ரேகை இருக்கும் பால் கிண்ணத்தை உடைத்தவுடன், அதை பார்த்து கோபம் நிறைத்த help less ness கையை கொண்டே காட்டுவார்.
இந்த படத்தின் முக்கியமான மூன்று சிறப்புகள் - முதல் முதல் sur realistic முறையில் எடுக்க பட்ட எங்கே நிம்மதி பாடல். படம் முழுதும் voice over என்ற முறையில் நடிகர்திலகத்தின் உணர்ச்சி மிகு nerration உடன் perfect ஆக sink ஆகும் அவரின் நடிப்பு.ஆச்சர்ய பட வைக்கும்.கையை பயன் படுத்தி அவர் அதீத மனநிலையை வெளிபடுத்தும் இடங்கள். ஒன்றை ஏற்கெனெவே பார்த்தோம். எங்கே நிம்மதி பாட்டில் எனது கைகள் மீட்டும் போது வரிகளில் புறங் கைகளால் action காட்டி கண்களால் follow thru பண்ணும் போது கைகளே அந்நியமான உணர்வை கொடுப்பார். சித்ரா அவர் அடித்த அடியில் இறந்து விட்டதும் இந்த கைதானே அவளை அடித்தது என்று தண்டிப்பது போல் .....
climax காட்சி இந்திய படங்களில் வந்ததிலேயே சிறந்த காட்சிகளில் ஒன்று.
stylised நடிப்பில், மனோதத்துவ முறையில் உச்சம் தொடுவார். அப்படியே ஒவ்வொரு நொடியும் மனதில் தைக்கும். பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்து சொல்லும் எதுவும் காதில் ஏறாத மனநிலையில் ராஜு வந்ததை கேள்வி பட்டதும் அவர் துன்பமெல்லாம் நீங்கி விட்டதான நினைப்பில் காட்டும் அதீத stress relieved happiness ... இந்த காட்சி முழுவதும் hope -despair ஊசலாட் டமே. ராஜூவை கட்டி தேம்பி விட்டு, ஆட்டி வைக்கிராண்டா என்ற ஆத்திரத்தை கொட்டி ரங்கனை சித்ராவை பரபரப்பாய் வெற்றி களிப்பு விடுதலை உணர்வில் அழைக்கும் தோரணை ,சித்ரா வந்ததும் பேயை பார்த்த மாதிரி பின் வாங்கும் அவசரம்.ராஜு அவளை தங்கை என்றும், ரங்கனை சித்தப்பா என்றும் ஒப்பு கொண்டவுடன்,தன்னையே நம்ப முடியாமல் மீண்டும் கெஞ்சி விட்டு, மச்சத்தையும் பார்த்தவுடன் விரக்தியில் வீழும் இடம்... நண்பன் கைரேகையுடன் வந்ததும்,ஒவ்வொருவரிடமும் களிப்புடன் ரேகை...ரேகை என்று பிரச்சினையே முடிவு பெற்றது போல் கொண்டாட்ட மனநிலை சென்று, ரேகையும் ஒரே மாதிரி என்று சொன்னதும்,நம்பலியா,நீயும் நம்பலியா என்று லதாவிடம் புலம்பி கொண்டே confess பண்ணும் காட்சி.... நான் அசைவே இல்லாமல் லயித்து ஒன்றிய அதிசயம்.
confess பண்ணி முடித்ததும், அந்த train உடலை சிதைத்ததை விவரித்து விட்டு அதிர்ச்சி கலந்த பய உணர்வுடன் அலறி, ஒண்ணு மட்டும் உறுதி என்று சொல்லி விட்டு மூக்கை கைகுட்டையால் சிந்தும் improvisation (humanising the celluloid image ).குழந்தை போல் தன் conclusion சொல்லி விட்டு, பந்தாவாக எழுந்து வந்து எல்லோரிடமும் இல்லை என்ற பதிலை கேட்டு பெற்று ,லதா தன்னை கைது செய்ய சொன்னதும்,நம்பவோ,ஜீரணிக்கவோ முடியாமல் உண்மை உணர்ந்து என்ன அழகான நடிப்பு என்று சித்ராவிடம் சொல்லி(அப்போது கூட லதா நடிக்கவில்லை என்ற நம்பிக்கை)
அதை வைச்சா என்னை வீழ்த்திட்டே, அத்தனையும் நடிப்பா என்று குழந்தையின் ஏமாற்றம் நிறைந்த தேம்பலுடன் கேட்டு, லதா தன்னை உண்மையாய் நேசிப்பதை அறிந்து கொள்ளும் நெகிழ்வு..(தாடையை தடவி)
இப்போது சொல்லுங்கள். இந்த மாதிரி ஒரு அதிசயம் உலகத்தில் உண்டா?கண்டதுண்டா?
----To be continued
Last edited by Gopal.s; 10th May 2013 at 03:40 PM.
-
10th May 2013, 02:31 PM
#3418
Junior Member
Seasoned Hubber
Mr Vasudevan Sir,
Simply Superb Sir. Your article on NT makes us flying on the earth.
What to do we have to write umpteen articles on NT to showcase
his various talents to others.
As Mr Gopal rightly said on NT. NO can in this earth can reach the milestone
of our NT.
Thanks.
-
10th May 2013, 02:39 PM
#3419
Junior Member
Regular Hubber
NADIGAR THILAGAM - THE ONLY TRUE GLOBAL ACTOR WHO MADE EVEN THE CIGAR & SMOKE TO PERFORM ON SCREEN AMIDST FEW ACTORS WHO BY HABIT, CHOOSE TO EDIT GOOD ACTORS PERFORMANCE IN THEIR FILMS !!!
-
10th May 2013, 03:08 PM
#3420
Senior Member
Senior Hubber
ரவிச்சந்திரன் சார்,
திரியில் நெருப்பை பத்த வச்சிட்டு இப்படி ஓடி போயிட்டீங்களே!!! இம்புட்டு பேரு என்னமா விளக்கம் கொடுத்திருக்காங்க. வாசுதேவன் சார் எவ்வளவு அற்புதமாக நடிகர் திலகத்தின் பெருமையை சொல்லியிருக்காரு. உங்களோட கருத்துக்கு நீங்களும் முன்னால வந்து விளக்கம் தரணும்-னு அன்போட கேட்டுக்கறேன்.
Last edited by kalnayak; 10th May 2013 at 03:11 PM.
Bookmarks