Page 340 of 401 FirstFirst ... 240290330338339340341342350390 ... LastLast
Results 3,391 to 3,400 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #3391
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ravi Chandran View Post
    நடிகர் திலகத்தின் சம கால நடிகர்களைக் குறிப்பிடுகிறீர்களா...
    இலலை அடுத்த தலைமுறை கலைஞர்களைச் சொல்கிறீர்களா?
    நடிகர் திலகத்தின் நடிப்பு ஈடு இணையற்றது என்பது ஊரறிந்த உண்மை.
    NT க்குப் பிறகு வந்தவர்களுள், மெனக்கெடல், தரமான நடிப்பு, தொழில்நுட்பத்திறன், பன்மொழி ஆற்றல் கொண்ட versatile கலைஞர் நம் திரையுலகில் உண்டு.
    ரவிச்சந்திரன் ,
    நான் வெவ்வேறு கால கட்டங்களில் வாழ்ந்து திரை படங்களை தொடர்ந்து பார்வையிட்டு வரும் திரைப்பட ரசிகன். நாங்கள் நடிப்பு என்று ஒற்றை அம்சத்தை கொண்டு, இப்போது ஒரு ஆய்வு தொடரை தொடர்ந்து உரையாடல் நடை பெற்று வருகிறது. பன்முகம் கொண்ட புத்திசாலி கலைஞர்கள் இக்காலத்தில் உண்டு. தங்கள் வருகைக்கு நன்றி.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3392
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வருக ரவிச்சந்திரன் அவர்களே...

    தங்கள் முதல் பதிவே தமிழ் சினிமா மீது தங்களுக்குள்ள பிடிமானத்தையும் நம்பிக்கையும் உணர்த்துவதாயுள்ளது. அது மேலும் வலுப்பெற வேண்டும் என்று நானும் விரும்புகிறேன். வாழ்த்துகிறேன்.

    ... நடிகர் திலகத்தைப் பொறுத்த வரையில் சமகாலம் என்பதெல்லாம் இல்லை... அவருடைய நடிப்பினைப் பற்றி இங்கு இடம் பெறும் கருத்துக்கள் அவருடைய திறமையைப் பாராட்டுவதோடு நின்று விடவில்லை. சினிமா வரலாற்றிலேயே ... உலகத்தின் பல்வேறு மொழிகளிலையும் சேர்த்து .. அவருக்கு ஈடு இணை யாரும் இல்லை என்பதை ஆணித்தரமாக எழுதியும் வருகிறோம். திரு கோபாலின் கட்டுரையை முழுவதுாக .. அனைத்துப் பாகங்களையும் படித்து முடித்து பின்னர் தாங்கள் ஒரு முடிவுக்கு வரலாம்... சொல்லப் போனால் அந்த முடிவு, எங்களோடு தங்களையும் சேர்த்து விடும் என்பதே உண்மை.

    மெனக்கெடல், தரமான நடிப்பு, தொழில்நுட்பத்திறன், பன்மொழி ஆற்றல் கொண்ட versatile கலைஞர் நம் திரையுலகில் உண்டு.
    நீங்கள் சொல்கிற மற்றும் இன்னும் பலர் சொல்ல நினைக்கிற அத்தனை தகுதிகளுக்கும் அதற்கும் மேலே கூட நடிகர் திலகம் தான் முன்னோடி. தங்கள் மனதில் தாங்கள் எந்த நடிகரை வரித்திருந்தாலும் அவர்கள் அனைவருக்குமே அனைத்து துறைகளிலுமே நடிகர் திலகம் முன்னோடி. தன்னுடைய தொழில் நுட்ப அறிவினைப் பற்றி வெளியில் தெரியும் அளவிற்கு அவர் பறை சாற்றிக் கொள்ளாதது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறதே தவிர அவருக்கு ஒன்றும் தெரியாது என்பதாக பொருள் அல்ல. ஒரு திரைப்படத்தினை உருவாக்க தேவைப்படும் அனைத்துத் துறை நுட்பங்களையும் அறிந்தவர் நடிகர் திலகம். தன்னுடன் பணியாற்றும் சக கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுத்து ஒரு இயக்குநரின் நடிகராய் விளங்கியதால் தான் இன்று வரை அவருடைய சிறப்பு நிலைத்து நிற்கிறது.

    1962ல் தாங்கள் நிச்சயம் பிறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். அப்படிப் பிறந்திருந்தாலும் நிச்சயம் குழந்தையாகத் தான் இருந்திருக்க முடியும். அந்தக் காலத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் அதிகார பூர்வமான அழைப்பில் அமெரிக்கா சென்று நயாகரா நகர மேயராக கௌரவிக்கப் பட்டதையெல்லாம் தாங்கள் அறிந்திருக்கலாம். இதை விட அவருடைய சிறப்பிற்கு வேறேது வேண்டும் என தாங்கள் எண்ணுகிறீர்கள்.

    இவற்றையெல்லாம் இம் மய்ய இணைய தளத்தில் நடிகர் திலகத்தப் பற்றி அனைத்துத் திரிகளையும் படித்துப் பார்த்த பின் தாங்கள் புரிந்து கொள்வீர்கள்.
    Last edited by RAGHAVENDRA; 9th May 2013 at 03:27 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #3393
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    வருக ரவிச்சந்திரன் அவர்களே...
    1962ல் தாங்கள் நிச்சயம் பிறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். .
    ராகவேந்தர் சார்..

    sherlock holmes தோற்றார்,போங்கள்!

    எந்த தடயத்தை வைத்து நீங்கள் இதை முடிவு செய்தீர்கள் எனத்தெரியவில்லை.
    ஆனால் ரவிச்சந்திரன் என்ற பெயரை கூகுள் செய்தபோது,1945 இல் கூட இந்த பெயர்
    வைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

    திருவாளர்கள் பம்மலாரும்,ஸ்ரீநிவாசும்,சாரதாவும்,நீங்களும்,வாசுவு ம் கட்டிக்கா த்த/க்கும் இந்த தமிழ்சபையில் ஒரு தவறும் வந்துவிடக்கூடாதே என்ற ஆதங்கத்தில் எழுதுகிறேன்.

    மற்றபடி சகோ.ரவிசந்திரனுக்கு என் அன்பான வரவேற்பு.

  5. #3394
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ravi Chandran View Post
    நடிகர் திலகத்தின் சம கால நடிகர்களைக் குறிப்பிடுகிறீர்களா...
    இலலை அடுத்த தலைமுறை கலைஞர்களைச் சொல்கிறீர்களா?
    நடிகர் திலகத்தின் நடிப்பு ஈடு இணையற்றது என்பது ஊரறிந்த உண்மை.
    NT க்குப் பிறகு வந்தவர்களுள், மெனக்கெடல், தரமான நடிப்பு, தொழில்நுட்பத்திறன், பன்மொழி ஆற்றல் கொண்ட versatile கலைஞர் நம் திரையுலகில் உண்டு.

    அன்புள்ள நண்பர் ரவிச்சந்திரன் அவர்களே


    திறமையாளர்கள் பன்முகத்திறமை கொண்டவர்கள் நிச்சயம் உண்டு..இல்லை என்று ஒருபோதும் கூறவில்லை..

    ஆனால் அந்த பன்முகங்களின் முன்னோடி ? அது நடிகர் திலகம் ஒருவரே என்று கூறினால் மிகையாகாது. திரு.ராகவேந்தர் அவர்கள் கூறியது போல.!
    உதாரணம்...Technic என்ற ஒரு விஷயத்தை எடுத்துகொள்வோம் - அதில் பல வகைப்படும்..

    1)அதில் ஒன்று மேக்கப் -
    குழந்தைகள் கண்ட குடியரசு, தங்கமலை ரகசியத்தில் வயோதிகவேடம், திருவருட்செல்வர் அப்பர், இப்படி பல வேடங்களில் அவருடைய மேக்கப் திறனை சொல்லலாம்...

    2)அடுத்தது..குதிரைசவாரி - நடிகர் திலகத்தை விஞ்சிய குதிரை சவாரி இதுவரை யாரும் திரைபடத்தில் 90% க்கும் அதிகமாக டூப் போடாமல் செய்த்ததில்லை, உதாரணம் - உத்தமபுத்திரன், நாம்பிறந்த மண், மருதநாட்டு வீரன், படித்தால் மட்டும் போதுமா...மற்றும் பல படங்கள்...Back projection முறையில் Stoolai மட்டுமே நம்பி அவர் குதிரைசவாரி காட்சிகளை செய்ததில்லை

    3)பின்பு- மியூசிக் Sense - புதிய பறவை திரைப்படம் எங்கே நிம்மதி பாடல்...ஒரு உதாரணம் போதும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

    4) Homework for Historical & Mythology - ராஜ ராஜ சோழன், ஜூலியஸ் சீசர், VOC , கட்டபொம்மன் மற்றும் பல படங்கள்....இதுவும் ஒரு பன்முகம் காட்டும் திறன் தான்..

    5) Direction : அதற்க்கு அவர் போனதில்லை காரணம்...He was always a producer friendly actor and therefore, he did not yet he did complete a film where Director K.Vijayan left in the middle and it was Nadigar Thilagam - who completed it, Film Name : Raththapaasam and this film was shot in Eurpeon Countries and not in any local or Asian Country.

    6) பன்மொழி ஆற்றல் கொண்ட Versatality - இதை ஆரம்பித்தவரே தமிழ் திரைஉலகில் நடிகர் திலகம் தான் - உதாரணம் - பல, தெலுங்கு, மலையாள, கன்னட மற்றும் ஹிந்தி திரைப்படங்கள் - சாணக்ய சந்திரகுப்தா, பக்த துக்காரம், நாகம்ம நாயக்கடு, Schoolmaster , தசொளி அம்பு, யாத்ராமொழி, தர்தி மற்றும் பல படங்கள்...

    ஆகவே தாங்கள் தங்களுக்கு நடிகர் திலகத்தை ஒரு நடிகராக மட்டுமே தெரியும் என்ற பட்சத்தில், மற்ற திறமை அவருக்கு இல்லை என்று எண்ணிவிட கூடாது...

    இதில் மிக பெரிய இமாலய சாதனை என்ன தெரியுமா?
    நீங்கள் மேற்கூறிய அனைத்தும் நடிகர் திலகம் ஒரு வருடத்தில் 8 to 9 திரைப்படங்களில் நடிக்கும்போது அவரிடம் உள்ள திறன்கள், திறமைகள். அனால்

    இன்று..ஒரு பன்முக திறமை உள்ளதாக பறைசாற்றிகொள்ளும் நடிகர்கள் வித்தியாசமாக ஒரு படம் செய்வதற்கு குறைந்தது 2 அல்லது 3 வருடங்கள் செலவு செய்கிறார்கள். இது தான் உண்மை..!


    இனி தமிழ்நாட்டில் நடிகர் திலகத்தை போல விளம்பரபடுத்திகொள்லாத ஒரு திறமையாளன் பிறப்பதே கடினம். அப்படி பிறந்தாலும் இவர் அளவிற்கு திறமை உள்ளத என்று பார்த்தல் இல்லை என்பதே உலகறிந்த உண்மையாகும். !

    மேற்கூறியவை ஒரு பக்கம் இருக்கட்டும் - உங்களிடம் சில விஷயங்கள் -

    வழக்கமாக திரிக்கு புதிதாக வருபவர்கள் தங்களை இன்னார் என்று அறிமுக படுத்திகொள்ள்வார்கள். நீங்கள் ஏன் அதை செய்யவில்லை? எழுத்தின் சுவாரஸ்யத்தில் அதை மறந்துவிடீர்கள் என்று நினைகிறேன் !

    உங்கள் முதல் பதிவே இந்த திரிக்கு பரிச்சயமான எங்கள் திரியின் நண்பர் ஒருவரின் நடை போல உள்ளது ! நிச்சயமாக நீங்கள் அவர் இல்லை என்று நினைகிறேன். காரணம் ஒரே நபர் பல பெயரில் வந்து ஏற்படுத்திய குழப்பங்கள் தான். எங்களுக்கு சிறிது துப்பறியும் ஆர்வம் அதிகம் என்பதால் இந்த கேள்வி.

    அதுவும் அல்லாமல், திரிக்கு முதல் முதலாக வருபவர்கள், நடிகர் திலகத்தின் புகழை பற்றியோ அல்லது ஒரு தகவலை பற்றியோ பதிவிடிருகலாம்.

  6. #3395
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-24


    மற்ற தொழிலாளர்களுடன் சாதாரணமாக நடந்து கொள்ளும் கோபால், ராஜு தாத்தாவிடம் வாஞ்சையுடன் நடந்து கொள்ளும் முறையிலேயே , கோபாலின் fixation tendencies establish ஆக தொடங்கும். பிறகு தோட்டத்தை தனியாக பார்வையிடுவது, தனியாக picnic சூழ்நிலையில் படித்து கொண்டிருப்பது என்று தனிமை ,boredom சொல்ல பட்டு விடும். தூங்காமல் முழித்திருக்கும் இரவில் வரும் லதாவுடன், இதமான உரையாடலில் தன் ஏக்கம் கலந்த தனிமை, தூக்கமில்லா இரவுகளை குறிப்பிடும் அந்த husky ஆன குரல், ஏக்கமும் சோர்வும் சோர்வும் தோய்ந்த விழிகள், லதாவிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வெளியிட முடியாமல், குறியீடாக பாட்டு என்று ஒற்றை வார்த்தையில், தன் அமைதிக்கு லதாவால் துணை நிற்க முடியும் என்று உணர்த்தும் கண்ணியமான இதம்.அந்த உன்னை ஒன்று கேட்பேன் இரவு காட்சி தமிழ் பட உலகின் அழகுணர்ச்சிக்கு ஒரு மைல் கல் காட்சி.

    பார்த்த ஞாபகம் பாடலில், எதோ ஒன்றை தொலைத்து பறி கொடுத்த ஏக்கத்துடன், நிலைத்த சூன்ய பார்வை, அவ்வப்போது பாட்டில் சூழலில் அடையும் பரவசம், இதையெல்லாம் மீறாமல் நம்மை இன்றளவும் கவரும் அந்த sophisticated புகை பிடிக்கும் ஸ்டைல்(நாக்கில் இருந்து சின்ன புகையிலை தூளை விரலால் துடைக்கும் லாவகம்,wine glass ஏந்தும் தோரணை. பாடகி சித்ராவிடம் உடனே காட்டும் impulsive ஈடுபாடு.கல்யாண காட்சி உடனே வரும் போதும் பழகிய உணர்வு தெரியும் அந்த ஒரே பாடல் காட்சியில் .

    அந்த ரயில்வே கேட் காத்திருப்பு காட்சியில், tremor என்றவொரு, வலிப்பு -அதிர்ச்சி இடைப்பட்ட நிலையை அவ்வளவு தத்ரூபமாக எந்த நடிகனும் காட்டியதில்லை.

    நிச்சய தார்த்தம் அன்று வந்து சேரும் தன் மனைவி போன்ற உருவம் கொண்ட, மனைவியாக சித்தப்பா என்றவொருவனுடன் வந்து நிற்கும் காட்சியில்... முதலில் அதிர்வு என்ற நிலையில் தொடங்கி denial mode க்குள் செல்வார். இருக்காது,இருக்க முடியாது என்று. பிறகு சிறிதே seriousness உணர்ந்து, தன் police நண்பன் துணையுடன் மிரட்ட தலை படுவார். ஆனால் நடக்காது என்றவுடன் புலம்பும் ,குழம்பும் நிலை.(என்ன,என்ன,என்னை கேட்டால் எனக்கு என்ன)death certificate தேடி எடுத்து(அப்படியே போட்டது போட்டபடி விரையும் ஆர்வம் கலந்த வேகம்), அதை ரங்கன் தூளாக்கியதும், போலீஸ் நண்பனுடன் சிறு அதிகார தொனியிலேயே கடைசி பலவீன முயற்சியை அதிகாரமாய் தொடுப்பதும், வழியில்லை என்று அடங்குவதும்-இந்த காட்சி ஒரு roller -coaster ride .

    தொடரும் காட்சிகள், இந்திய பட உலகம் இது வர பார்க்க இயலா புதுமை கலந்த marvel ...நடிப்பின் உச்ச பட்ச சாத்தியங்கள்.

    -----To be continued .

  7. #3396
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நம்முடைய திரி நண்பர்களுக்கு ஒரு இனிய செய்தி - NDTV நிறுவனம் நூறு வருட இந்திய சினிமாவில் 20 நடிகர்களை தேர்ந்தெடுத்து உள்ளது Indian cinema@100: 20 actors who made a difference என்ற தலைப்பில்.

    இதில் யார் முதலாமவர் யார் இரண்டாமவர் என்றமுறயில்லாமல், மொத்தம் 20 நடிகர்களை தேர்வு செய்துள்ளது.
    அதில் நடிகர் திலகம் அவர்களை பற்றியும் இந்தியாவில் உள்ள அனைத்து நடிகர்களில் "வெளிநாட்டில் சிறந்த நடிகர் பட்டம் " பெற்ற முதல் இந்திய நடிகர், நடிகர் திலகம் என்றும் நடிகர் திலகத்தை பல தென்னிந்திய (அனைத்திந்திய என்று கூறியிருக்க வேண்டும்..ஹ்ம்ம் இங்கும் அரசியல் நம்முடைய நடிகர் திலகதிருக்கு எதிராக ) நடிகர்கள் இவரது பாதிப்பு தங்களுக்கு உண்டு என்றும் குறிப்பிட்டிருபதாகவும் நடிகர் திலகத்தின் மற்ற திரை உலக புகழையும் மிக அழகாக உரைத்திருக்கிறார்கள். NDTV க்கு நமது நன்றி..!

    அதன் இணைப்பை இந்த தளத்தில் காணலாம்

    http://www.ndtv.com/photos/entertain...15052/slide/17

  8. #3397
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    nd tv தன வழக்கமான அரைவேக்காடு தனத்தை இதிலும் காட்டி உள்ளது..
    இதோ அந்த வரிசை..1 முதல் 20 வரை.

    Dilip Kumar
    Rajesh Khanna
    Amitabh Bachchan
    Rajinikanth
    Pran Sikand

    N T Rama Rao
    Uttam Kumar
    M G Ramachandran
    Mohanlal
    Naseeruddin Shah

    Raj Kapoor:
    Kamal Haasan
    Balraj Sahni:
    Utpal Dutt
    Chiranjeevi:

    Rajkumar
    Sivaji Ganesan
    Mammootty
    Shah Rukh Khan
    Aamir Khan:

    இப்படி ஒரு வரிசை அமைக்க ஒரே வழிதான் உள்ளது.எல்லார் பெயரையும் தனி தனி சீட்டுக்களில் எழுதி ஒரு குழந்தையை விட்டு ஒவ்வொன்றாக எடுப்பது.

    மேலும் 20 என்பதும் எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை.Why not 25 or 50?

    இந்த மாதிரி ஒரு அசட்டுத்தனத்தில் தலைவர் பெயர் இல்லாமல் இருந்திருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன்.

    சுருக்கமாக சொலவதென்றால்.nd tv இன் இந்த பட்டியல், "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் ,நாகேஷ், தலைவர் உட்பட்ட நாதஸ்வர குழுவைப்பார்த்து,"எல்லாரும் அவாவா வாத்தியத்தை எடுத்துண்டு அரண்மனைக்கு வாங்க!"என்று சொலவதற்கு ஒப்பாகும்.

  9. #3398
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by ganpat View Post
    nd tv தன வழக்கமான அரைவேக்காடு தனத்தை இதிலும் காட்டி உள்ளது..
    இதோ அந்த வரிசை..1 முதல் 20 வரை.

    Dilip kumar
    rajesh khanna
    amitabh bachchan
    rajinikanth
    pran sikand

    n t rama rao
    uttam kumar
    m g ramachandran
    mohanlal
    naseeruddin shah

    raj kapoor:
    Kamal haasan
    balraj sahni:
    Utpal dutt
    chiranjeevi:

    Rajkumar
    sivaji ganesan
    mammootty
    shah rukh khan
    aamir khan:

    இப்படி ஒரு வரிசை அமைக்க ஒரே வழிதான் உள்ளது.எல்லார் பெயரையும் தனி தனி சீட்டுக்களில் எழுதி ஒரு குழந்தையை விட்டு ஒவ்வொன்றாக எடுப்பது.

    மேலும் 20 என்பதும் எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை.why not 25 or 50?

    இந்த மாதிரி ஒரு அசட்டுத்தனத்தில் தலைவர் பெயர் இல்லாமல் இருந்திருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன்.

    சுருக்கமாக சொலவதென்றால்.nd tv இன் இந்த பட்டியல், "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் ,நாகேஷ், தலைவர் உட்பட்ட நாதஸ்வர குழுவைப்பார்த்து,"எல்லாரும் அவாவா வாத்தியத்தை எடுத்துண்டு அரண்மனைக்கு வாங்க!"என்று சொலவதற்கு ஒப்பாகும்.
    exactly.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #3399
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Welcome Ravichandran sir , ur starting atricle is awesome

  11. #3400
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Ponunjal

    One among the under rated movies of NT released in the year 1973 after Raja Raja Chozan. The movie is set in backdrop of village is essentially a family feud . It primarily discusses about Devar ‘s caste life style and their characterstics , could have very well inspired Kamal sir while deciding the cast and story line of Devar Magan.
    To begin with the movie revolves around 3 characters primarily
    Muthu( NT), Ponnan( MN Nambiyar), Valli ( Usha Nandhini) . Both Muthu and Valli love each other whereas MN also loves her . Muthu’s father( TK Bagavathy) and Valli’s father( Subbaiah) are in laws(Mama-Machan) who decides to conduct the marriage. In between MN nambiyar tries to rope in Muthuraman( Manickam) as village chief but fails but as fate would have its call the engagement is cancelled due to verbal duel of both the fathers. TK Bagavathy realizes his folly and decides to make amends . NT returns back the jewels as pudhayal which further irks Subbaiah . In fist of anger he marries her to Muthuraman, What happens thereafter is the climax?
    Story dialogue by Sakthi Krishnasamy and directed by CVR.
    There is not much acting scope for NT and he does it effortlessy. To expect NT act in every movie is like demanding Sachin scoring a ton in every match, here NT is at his usual best natural role but the highlight is Sivan- Kali Dance and Kannagi kovalan Drama the highlight of which Cho garlanding MN Nambiyar who does not act and revealing that he likes MN Nambiyar acting . The subsequent dialogues making fun of an actor who gets reward and praise for his acting ( though he does not act may be direct attack on----?)
    Muthuraman is as usual plays second foil to NT once again and proves his mettle in climax.
    But I guess ample screen time has been given to CHO who makes good use of it be it political satire dialogues, swimming scene, loving Manorama, pleading with his father that he is not a ghost he brings the roof down sad that the has been under utilized always.
    Songs are too good especially Agaya Pandalile stands out
    On the whole good movie , wonder why it did not celebrate its desired result. But I guess it must have been a profiatable venture for producers as they worked again with NT in Grahapravesam.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •