-
28th March 2013, 12:28 PM
#2341
Originally Posted by
sivajisenthil
Mr Vivek never had any originality since he started his acting career. He just imitated KA Thangavelu and MR Radha and of course Surulirajan in one film. Should we give importance to this lesser known 'comedian'? Ignore him. He is now totally out of market and he has to do something to retain his stand in films. No other go except to imitate NT!
indha latchanaththil ivarukku 'Padmashree' virudhu veru. Additionalaaga 'chinna kalaivaanar' .Andha virudhugalukke avamaanam.
He imitated NT in many films. I dont know the movi name, he comes in oldman get up and catch a 'illegal relation pair' and talking to her husband, "Ramanathan, neenga illaatha neraththula rendu perum fridge repair kaththukkuraanga" in the same pattern, how NT will speak.
-
28th March 2013 12:28 PM
# ADS
Circuit advertisement
-
28th March 2013, 01:53 PM
#2342
Junior Member
Devoted Hubber
தங்க சுரங்கம்
நான் எஸ் எல் சி பரீட்சை எழுதிய ஆண்டு (நாங்கள் அந்த காலத்தில் SSLC ஐ SLC என்றுதான் சுருக்கமாக சொல்லுவோம்).இன்னும் ஒரு வாரத்தில் பொதுத்தேர்வு என்ற நிலையில் என் கசின்,ஒரு extra ticket premier show விற்கு இருக்கு வரையா? என்று காதை கடித்தான்.எனக்கும் ஆசைதான்.அப்பாவிடம் permission கேட்டேன்.அவர் சொன்னார்ர்..
"போகலாம் ஆனால் ஒரு கண்டிஷன்.!"
"என்னப்பா அது?" என்று பயந்து கேட்டேன்.
"SSLC தேர்வில் நீ STATE FIRST வரணும்!" என சொல்ல,
"ப்பூ இவ்வளவுதானா ! நீ என்னமோ இன்னொரு டிக்கெட் உனக்கும் வேண்டும் என கேட்கப்போகிறாயோ என பயந்துவிட்டேன் "
என்று அவருக்கு சத்தியம் செய்து கொடுத்து விட்டு படத்திற்கு சென்றேன்.
படம் படு ஜாலி
இரண்டு மாதங்கள் கழித்து முடிவுகள் வெளியான பின்,
"என்னடா! செய்த சபதம் என்ன ஆச்சு?" என அவர் வினவ ,நானும்
" அப்பா அன்று நான் தங்க சுரங்கம் பார்க்க போகவில்லை என்றால் first rank வாங்கியிருப்பேன் என நீ நினைக்கிறாயா?" என கேட்க,
அவரும் "ச்சீ சீ அந்த மாதிரி மூட நம்பிக்கையெல்லாம் எனக்கு கிடையாது.நீ பாஸ் செய்ததே பெரிசு " என்றார்.
"அப்போ ஏன் அன்று அப்படி?" என்று வினவ,
"ஒன்றும் சொல்லாமல் அனுப்பியிருந்தால் உன் அம்மாவிடம் மூணு மணி நேரம் அர்ச்சனை யார் வாங்குவது? அதனால்தான் " என்றார்.
தங்க சுரங்கம் என்னால் மறக்க முடியாத படமான் கதை இதுதான்.
-
28th March 2013, 02:13 PM
#2343
Junior Member
Newbie Hubber
வசந்த மாளிகை- 25 வது நாள் கொண்டாட்டங்களுக்கு தயாராகுங்கள்.
-
28th March 2013, 02:14 PM
#2344
If a candidate want to write SSLC exam, he should complete 16 years age, was the Govt rule at that time.
So, if Mr. Ganpat was 16 in 1969, now his age is 60 (or more). ok?.
(naanga CBI officer Rajan sir fansaakkum).
-
28th March 2013, 02:16 PM
#2345
Junior Member
Devoted Hubber
அந்த கால கல்யாணங்களில் ஒரு அன்னியோனியம் இருக்கும்.கல கலப்பிறகோ பஞ்சமே யில்லை
சண்டை இருந்தாலும் துவேஷம் இராமல் சுவாரசியமாக இருக்கும்
ஆனால் தற்காலத்தில் எல்லாம் எந்திர மயம்!!.
வருவது,மொய் எழுதுவது ,விருந்து சாப்பிட்டு விடை பெறுவது எல்லாம் ஒரு கடமை....
நண்பர்களே ! கர்ணனின் ஆதித்ய பூஜை அளவிற்கு ஜொலிக்கவேண்டாம்
குறைந்தபட்சம், சாருஹாசனின் சந்தியாவந்தனம் அளவிற்காவது ஜீவன் இருக்கட்டுமே.
கொஞ்சம் வெட்டியோ ஒட்டியோ தான் எழுதலாமே!!
-
28th March 2013, 02:32 PM
#2346
Junior Member
Devoted Hubber
Originally Posted by
adiram
If a candidate want to write SSLC exam, he should complete 16 years age, was the Govt rule at that time.
So, if Mr. Ganpat was 16 in 1969, now his age is 60 (or more). ok?.
(naanga CBI officer Rajan sir fansaakkum).
அடடா!! குறிப்பிட மறந்துட்டேன்,ஆதி ராம் சார்.!
நான் எங்க அப்பா,என் தாத்தா எல்லாருமே தலைவர் ரசிகர்கள் தான்
எங்க குடும்பத்தையே மூன்று தலைமுறை ரசிகர் குடும்பம் என்றுதான் சொல்வார்கள்.
மேற்கண்ட நிகழ்வு என் அப்பாவிற்கும் என் தாத்தாவிற்கும் இடையில் நடந்ததாக என் தந்தை சொல்லி மகிழ்வது வழக்கம்.
அதை அவரே சொல்வது போல நான் எழுதியிருந்தேன், அம்புட்டுதான்!
(naanga sabash meena mohan sir fansaakkum).
-
28th March 2013, 06:04 PM
#2347
Junior Member
Seasoned Hubber
Good Friday Special Mr Antony in Murasu TV at 7.30 pm tomorrow.
Don't forget to watch.
Mr Vasu Sir your special tomorrow.Enjoy.
-
28th March 2013, 06:41 PM
#2348
Junior Member
Newbie Hubber
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-1
நடிகர்திலகம் Stanislavski ,Straberg ஸ்கூல் பாணியில் sense memory அடிப்படையில் கதை கருவின் objectiveபடி,கண்டு,கேட்டு,உயிர்த்து,உணர்ந்து,உணர்த ்தி,காத்து,அழித்து,தூண்டி,மறைந்து,மறைத்து ,அனைத்தையும் திரையில் Meisner பாணியில் instinctive improvisations செய்து,
Stella Adler பாணியில் largeness in action and voice கொண்டு,
Chekhov பாணியில் வாழ்கையை imitate செய்யாமல் interpret செய்து,
Oscar wilde பாணியில் தன் பாத்திரங்களின் முகமூடியில் உணர்வுகளை சுமந்து,
Spolin &Suzuki ஸ்கூல் படி தனக்கிருந்த பாய்ஸ்' கம்பெனி பயிற்சி அனுபவங்களின் மூலம் உடலின் அனைத்து அங்கங்களையும் தன்னிச்சை படி ஆட்டுவித்து ,
Focus reach முறையில் கதாபாத்திரங்களின் ஆத்மாவிற்குள் நுழையும் விந்தையில்,
உலகிலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லா பெருந்தகையாய் ,திகழ்ந்த ஒரே உலக பெரு நடிகன்.இதனாலேயே உலகத்தில் ,எந்த நல்ல நடிகன், எந்த ஸ்கூல் படி நடித்தாலும் ,எல்லாமே அவருடைய நடிப்பின் ஒரு அங்கமாகவே நம் புலனுக்கு தெரிந்தார்கள்.(அத்தனை school யும் integrate செய்த சுயம்பு நடிகன் அந்த பிறவி மேதை).அதனாலேயே,அனைத்து இயக்குனர்களின் கனவு நாயகனாகி,நல்ல படம் தர விரும்பும் அனைவருக்கும் ஒரே நம்பிக்கை ஒளியாகி,அந்த படங்களை வேறு தளத்திற்கே உயர்த்தினார்.
இந்த அளவு எனக்கு விரிவான பார்வை வர உதவிய அஜீத் ஹரி இதை கேட்டதும் துள்ளி குதித்து குழந்தை போல் குதூகலித்தது,எனக்கு முதல் inspiration .அடுத்து, இந்த குறிப்பை முன்னெடுத்து செல்ல பணித்த தகப்பன் சாமி பிரபு ராம்.என்னை தொடர்ந்து தூண்டி கொண்டிருக்கும் முன்னாள் நண்பர் ganpat .
marlon brando (அண்ணா இவருடன் ஒப்பிட்டு நடிகர்திலகத்தை புகழ்ந்தார்)- அவர் என்னை போல் நடிப்பார் ,நான் அவரை போல் நடிக்க முடியாது என்று சொன்னதின் உள்ளர்த்தம் தேடி பயணித்ததன் விளைவே இந்த தொடர்.(நம்மை போல உபசாரத்திற்கு ஒருவரை புகழும் மரபு Hollywood இல் கிடையாது.
உலக பட பரிச்சயம் உள்ள சுஜாதா (எழுத்தாளர்) NT ஐ Marlon Brando ,Rex Harrison ,Alpacino ,Robert De Niro ,Paul Neuman வரிசையிலும் ,முதல்வர் ஜெயலலிதா இவரை Marlon Brando ,Richard Burton ,Laurence Olivier வரிசையிலும், உலக பட ரசிகரான சோ அவர்கள் சமீபத்திய பதிவு ஒன்றில், Laurence Olivier ,Charles Laughton ,Gilgit ,David Niven ,Danny Kaye ,Clark Gable ,Humphrey Bogart ,Norman Wisdom ,Charles Heston ஆகியோருடனும்,Randor Guy இவரை paul Muni ,Spencer Tracy போன்றோருடனும் ஒப்பிட்டு பேசியுள்ளனர் எனக்கும், Kurosawa நடிகரான takashi Shimura , Nesferatu பட நடிகர் Klauskinski, Lincoln பட oscar நாயகன் Daniel Day Louis போன்றவர்களின் நடிப்பிலும் அவர் பிம்பமே தெரிகிறது.
அவரின் ரசிகர்களின் பட்டியலில் சத்யஜித் ரே,பிரிதிவி ராஜ் கபூர்,ராஜ் கபூர்,திலிப் குமார்,தேவ் ஆனந்த்,சஞ்சீவ் குமார்,அமிதாப் பச்சன்,லதா மங்கேஷ்கர்,ராஜ்குமார்,விஷ்ணுவர்தன் A .N R ,NTR ,கமல்,ரஜினி,பாரதி ராஜா,மகேந்திரன்,ஷங்கர்,பாலு மகேந்திரா ,மது,சத்யன்,பிரேம் நசிர்,மமூட்டி,மோகன் லால்,கோபி,திலகன், இன்னும் எண்ணிலங்கா இந்த பட்டியல் ரசிகர்கள் மட்டுமல்ல. பலர் அவரை role model ஆக,குருவாக பாவிப்பவர்கள்.
இத்தனை பேரின் மதிப்பை யும் சுமந்து artists ' artist ஆக அமரத்துவம் பெற்ற அந்த நடிப்பு கடவுளை விஞ்ஞான தொழுகை நடத்தும் சிறு முயற்சியே இது.
---To be continued.
Last edited by Gopal.s; 5th May 2013 at 12:36 PM.
-
28th March 2013, 07:21 PM
#2349
Junior Member
Newbie Hubber
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-2
பொருளாதாரம் படித்தவர்களுக்கு புரியும். ஒரு உண்மையை நிரூபிக்க அனைத்து புற காரணிகளையும் constant என்ற நிலையில் வைத்து, அவற்றை பொருட்படுத்தாது, நாம் எடுத்து கொண்ட பொருளை மட்டும் ஆராயும் variable என்ற உயிர் பொருளாக்க வேண்டும்.
நான் உதாசீனம் செய்யும் புற காரணிகள்- star என்பவன் இந்தியாவில்(cine field) நிலைக்க செய்ய வேண்டிய நீர்மைகள்(Dilution )&compromises, நமது அழகுணர்ச்சி(அதுவும் தமிழக மக்களின் விபரீத அழகுணர்ச்சி),கூத்து மரபாகவே தொடர்ந்த நமது திரைப்பட கலையாக்கம்(பாடல்களுடன்), நமது talkie என்ற காரண பெயர் கொண்ட படங்கள், அவியல் ஆன அவற்றின் ஆக்க முறைகள்,உலகபார்வையில் tribalised ஆக தெரியும் நமது விரிந்த கலாச்சாரங்கள்,நமது மொழியின் seperation &peculiar nuiances (தமிழ் மொழியின் வினோதமான பேச்சு வழக்கு/எழுது முறை வேறுபாடுகள்மற்றும் அதன் நூற்று கணக்கான வட்டார வழக்கு,தூய தமிழ் பேச்சு ETC ), நமது பிரத்யேக வியாபார நிர்பந்தங்கள்(இதிலும் தமிழ் வினோதம்), ஒரே நேரத்தில் பல தர பட்ட படங்களில் shift முறையில் ஓயாது உழைத்த நடிகர்திலத்தின் பிரத்யேக சிரமங்கள் ,Focus இல்லாத நமது படங்களின் செக்கு மாட்டு கதை-காட்சியமைப்புகள், இவற்றை பற்றிய ,இவை சார்ந்தவற்றை முற்றாக ஒதுக்கி, நடிகர் திலகம் என்ற மேதை தான் அறியாமலேயே எப்படி அத்தனை பொருட்படுத்த தக்க உலக நடிப்பு பள்ளிகளின் அனைத்து பாணியையும் , தன்னிடையே கொண்டு விளங்கி தனக்கு பிறகு ஆயிரம் இடங்கள் காலியாகவே இருக்கும் படி செய்த விந்தையை எனக்கு தெரிந்த வரையில் சுலபமாக ,அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் புரியும் வண்ணம் விளக்க முயல்கிறேன்.
முதலில், ஏன் உலக பள்ளிகளோடு ஒப்பீடு என்ற கேள்விக்கு பதில் திரை படம் என்பதே மேல் நாட்டார் நமக்கு அறிமுக படுத்தி,அவர்களாலேயே வளர்த்தெடுக்க பட்ட கலை. இன்றும் கூட தர நிர்ணயம்,பரிசுகள் எல்லாமே அவர்கள் போட்ட பாதையில்தான் பயணிக்கின்றன(விமரிசனங்கள் உட்பட). முதலில் அவர்களின் முக்கிய நடிப்பு பள்ளிகள்(Different schools of Acting) என்ன, அதன் சாரங்கள் என்ன, அதில் பயின்ற முக்கியமானவர்கள் யார் யார் என்று சுருக்கமாக பார்த்து விட்டு தொடருவோம் .மேலை நாடுகளில் நடிப்பு துறைக்கு வர விரும்பும் அனைத்து நடிகர்களுமே, ஏதோ ஒரு நடிப்பு பயிற்சி பள்ளியில் படித்து தேர்ந்து, ஒரு school of acting இல் முறையாக சிறப்பு பயிற்சி பெறுவது நடைமுறை. அதனால் சில வெளிநாட்டு நடிகர்களை அந்தந்த பள்ளிகளில் உதாரணம் காட்டி உள்ளேன்.
இதில் நான் இன்னொன்றையும் குறிப்பிட்டு சொல்ல விழைகிறேன். நான் தேர்ந்தெடுத்த படங்களில் பிரதானமான நடிப்பு முறையை பிரித்தெடுத்தாலும்,அந்த மேதையை கூண்டுக்குள் அடைப்பது சிரமம் என்பதால்,பிற பள்ளிகளின் தாக்கமும் சிறிதளவு இருக்கும்.
அதே போல ஒரே படத்திலேயே மூன்று விதமான நடிப்பு பள்ளிகளின் கூறுகள் உண்டு. தெய்வ மகன் அப்பா (method Acting ),கண்ணன் (Chechov பாணி),விஜய்(Oscar Wilde பாணி).நான் தவற வாய்ப்புள்ளதால் அங்கங்கே திருத்துமாறு வேண்டுகிறேன்.
சக்கரத்தை திரும்ப திரும்ப கண்டு பிடித்தல் என்ற சொற்றொடர் (reinventing the wheel ) ஆங்கிலத்தில் உண்டு. NT இடம் நமக்கு மிக பரிச்சயமான, முயற்சி,பயிற்சி,கடின உழைப்பு,கூரிய பார்வையுடன் கவனிப்பு திறன்,உடல்-மனம் சார்ந்த ஆளுமை,அங்க ஒத்திசைவு,கற்பனை திறன், கிரகிப்பு,ஒருங்கிணைப்புடன் கூடிய சிந்தனை திறன், concentration,aptitude,improvisation இவை எல்லா பள்ளிகளுக்கும் பொருந்தும், அவருக்கு பிறவியிலேயே கை வந்த விஷயங்கள். இதற்குள்ளும், மிக நுழையாமல், ஒவ்வொரு பள்ளிகளின் கோட்பாடு, வித்யாசங்கள்,நிறை-குறைகள், சில படங்கள் (NT ) உதாரணங்கள், அவற்றில் நடிகர்த்திலத்தின் நிறை பங்குகள். இவ்வளவுதான் ஆய்வின் scope .
இந்த தொடர் முடிந்ததும்,நமது இலக்கியங்களில்(சிலப்பதிகாரம் போன்ற) நடிப்பு பற்றிய பார்வை,கோட்பாடு போன்றவற்றுடன் நடிகர் திலகத்தை முன் வைத்து இன்னொரு தொடர் வரையும் எண்ணமும் உள்ளது. பார்ப்போம்.
-----to be continued .
Last edited by Gopal.s; 1st April 2013 at 08:31 AM.
-
28th March 2013, 08:40 PM
#2350
Junior Member
Devoted Hubber
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-1,2
நண்பர் கோபால் அவர்களுக்கு,
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற பாசறையில் பயின்று வந்த நான்,நமக்குள் ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளி ,உங்கள் புதிய பதிவிற்கு என் கருத்தினை இயம்பிட விழைகிறேன்.
முதல் முறை படித்திடும் போது சற்றே கடினமாக காணப்படினும் இரண்டாவது மூன்றாவது முறை படித்திடுங்கால் இதன் முழு அர்த்தம் புலப்படுகிறது
நம் தமிழ் மண்ணிலே ஒரு தமிழனாக பிறப்பெடுத்து,தமிழனாக வாழ்ந்து தமிழின் சிறப்பை அவனி எங்கும் தன சீரிய நடிப்பால் கொண்டு சென்ற அந்த மாபெரும் கலைஞனின் புகழ் பாடும் உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
மற்ற நண்பர்களும் இதை படித்து மகிழ்வர் என நம்புகிறேன்.
அன்பன்,
Ganpat
Bookmarks