Page 1 of 2 12 LastLast
Results 1 to 10 of 20

Thread: GnAnakoothan

 1. #1
  Moderator Platinum Hubber P_R's Avatar
  Join Date
  Nov 2004
  Posts
  10,036
  Post Thanks / Like

  GnAnakoothan

  எனக்கு மிக விருப்பமான தமிழ்க்கவிஞர் ஞானக்கூத்தன். அவரது படைப்புகளைப் பற்றிப் பேச இந்தத் திரியை பயன்படுத்துவோம்.

  ஞானக்கூத்தன் கவிதைகள் இந்த வலைத்தளத்தில் படிக்கக் கிடைக்கின்றன.
  மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   
 3. #2
  Moderator Platinum Hubber P_R's Avatar
  Join Date
  Nov 2004
  Posts
  10,036
  Post Thanks / Like
  அவருடைய முதல் (?) கவிதையே பிரமாதம்

  யோசனை
  உனக்கென்ன தோன்றுது
  கருத்துக்கு மாறாகப் போலீஸார்கள்
  கட்டிவைத்துக் கையெழுத்து வாங்கலாமா

  எனக்கென்ன தோன்றுது
  வருத்தத்துக் காளானான் புலவன் என்றால்
  யாப்பிலொரு கவிபாடச் சொன்னால்
  போச்சு
  மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

 4. #3
  Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
  Join Date
  May 2009
  Location
  Vagabond
  Posts
  2,357
  Post Thanks / Like
  Such situations persist everyday in every issue very subtly hinted I should say

 5. #4
  Moderator Platinum Hubber P_R's Avatar
  Join Date
  Nov 2004
  Posts
  10,036
  Post Thanks / Like
  Quote Originally Posted by Shakthiprabha
  Such situations persist everyday in every issue very subtly hinted I should say
  In one sweep he has passed a comment on Tamil literature itself.

  கை அது கடன் நிறை யாழே
  மெய் அது புரவலர் இன்மையின் பசியே

  என்று புறநானூற்றில் ஒரு வரி வரும்.

  Even Bertrand Russel writes something like :" In these days of democracy one if apt to forget the debt art owes aristocracy".

  That bounded feeling of indebtedness is brought out with its searing painfulness in this poem.
  மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

 6. #5
  Senior Member Seasoned Hubber geno's Avatar
  Join Date
  Oct 2004
  Posts
  601
  Post Thanks / Like
  ஞானக்கூத்தனின் அரசியல் இயங்குதளம் புரிய அவருடைய தமிழ் என்னும் கவிதை உதவும்:

  தமிழ் (1973)
  ----------

  "எனக்கும் தமிழ்தான் மூச்சு
  ஆனால்
  பிறர்மேல் அதைவிட மாட்டேன்"

  திராவிட இயக்க/தமிழ் அடையாள அரசியல் மறுப்பும், பகடியும் தொனிக்கும் எழுத்துக்குச் சொந்தகாரர்; ஆனால் அதை மீறியும் கவர்கிறவர்.

  எனக்கு அவருடைய "மேசை நடராசர்" கவிதையின் இயல்பான தொனியும், ஓட்டமும் மிகப் பிடிக்கும்.

  மற்றபடி தமிழ் / திராவிட அரசியல் எதிர்ப்புணர்வு - அவருடைய "நாய் குரைக்கும்" கவிதை ஒன்று எண்பதுகளில் இந்தியா டுடேயில் வந்தபோது படித்தேன் - திராவிட இயக்க/ இட ஒதுக்கீட்டுக்கு எதிரான, அந்தக் கவிதை எழுதப்பட்டது 1969இல் என்று நினைவு - இந்தியா டுடே வில் வெளியிட்டபோது மிக கனத்த எதிர்ப்பை / விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தது நினைவுக்கு வருகிறது!

  1960-களில் அவர் எழுதிய அரசியல் (உள்ளீட்டுக்) கவிதைகள் அவர் வலையில் உள்ளன - ஆனால் 1975 முதல் 1978 வரையிலான எமர்ஜென்சி காலத்தில் அவர் - எதுவும் " இந்திய அரச பயங்கரவாத அங்கதக் கவிதை" எழுதினாரா என்பது காணக் கிடைக்கவில்லை; அப்படி இருப்பது ஒரு கவிஞனின் அக நேர்மைக்குச் சான்றாக அமையும் - அவர் எழுதியிருக்காவிட்டாலும் யாரும் அவரது இலக்கியப் பங்களிப்பை மறுத்துவிடப்போவதில்லை..ஒரு பதிவாக சொல்லத் தோன்றியது.

  1970-கள் வரைக்குமான அவரது அரசியல் உள்ளீட்டுக் கவிதைகள் அனைத்தும் தமிழ் அடையாள/திராவிட பண்பாட்டு அரசியலுக்கு எதிரான பகடிகள், எள்ளல்களே என்பதைப் புரிந்து கொள்வதற்கு 'உரை'கள் எதுவும் தேவையில்லை!

  "நந்தா எந்தன் நிலா' என்றொரு எஸ்பிபி பாடல் உண்டு; அந்தப் பாட்டின் உள்ளீடாக வரும் உவமைகள் / அலங்காரங்கள் எதுவும் என் கருத்துக்கு ஏற்புடையவை அல்ல (அகத்தியன் செய்த அருந்தமிழ் நீயே) - ஆனால் என்னுடைய மிகப் பிடித்த பத்து பாடல்களில் அதுவும் ஒன்று. கலைக்கும், கவிதைக்கும் உள்ளடக்கத்தை மீறி ஆட்கொள்ளும் தன்மை உண்டு!
  Last edited by geno; 10th February 2013 at 02:28 AM.
  M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

  இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
  இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

  டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

  "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

 7. #6
  Senior Member Seasoned Hubber geno's Avatar
  Join Date
  Oct 2004
  Posts
  601
  Post Thanks / Like
  ஞானக்கூத்தனின் 'புகழ்' பெற்ற நாய் கவிதை:

  நாய் (1969)

  காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
  எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
  ஆள் நடவாத தெருவில் இரண்டு
  நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
  ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
  அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
  நகர நாய்கள் குரைப்பது கருதிச்
  சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
  நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
  கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு
  வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
  சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
  கடைசி நாயை மறித்துக்
  காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?  இதற்குப் பின்னால் தெரிகிற 'வர்ணக்' கடுப்பு! ..
  Last edited by geno; 10th February 2013 at 01:26 AM.
  M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

  இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
  இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

  டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

  "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

 8. #7
  Senior Member Seasoned Hubber geno's Avatar
  Join Date
  Oct 2004
  Posts
  601
  Post Thanks / Like
  ஞானக்கூத்தனின் அரசியல் வட்டிலில் இன்னொரு சோற்றுப் பதம்:

  தோழர் மோசிகீரனார் (1970)  மோசிகீரா
  மகிழ்ச்சியினால்
  மரியாதையை நான்
  குறைத்ததற்கு
  மன்னித்தருள வேண்டும் நீ

  சொந்தமாக உனக்கிருக்கும்
  சங்கக்கவிதை யாதொன்றும்
  படித்ததில்லை நான் இன்னும்
  ஆனால் உன்மேல் அளவிறந்த
  அன்பு தோன்றிற்று
  இன்றெனக்கு
  அரசாங்கத்துக் கட்டிடத்தில்
  தூக்கம் போட்ட முதல்மனிதன்
  நீதான் என்னும் காரணத்தால்.

  முரசுக் கட்டிலில் களைப்பால் தூங்கிய கவிஞனுக்கு அரசன் சாமரம் வீசியதாக வரும் சங்கப் பாடல், கலைஞர்களும், புலவர்களும் கொண்டாடப் பட்டதை பதிவு செய்கின்றன.

  தமிழர்களின் பண்பாட்டுப் பதிவாக உள்ள இந்த உண்மையின் மீது ஞானக்கூத்தன் வீசுவது புளியங்கொட்டை அல்ல - அங்கதப் போர்வையில் மிகுந்த வன்மத்துடன் வீசப்பட்ட எறிகுண்டு! (நமத்துப் போன, வெடிக்காத, பிசிபிசுத்த சொறிகுண்டு! )
  Last edited by geno; 10th February 2013 at 01:42 AM.
  M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

  இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
  இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

  டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

  "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

 9. #8
  Senior Member Seasoned Hubber geno's Avatar
  Join Date
  Oct 2004
  Posts
  601
  Post Thanks / Like
  ஞானக்கூத்தனின் சைவ சமய நக்கலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு! (irir & kalyan எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!)

  விட்டுப்போன நரி (1969)

  குதிரையாகாமல்
  விட்டுப்
  போனதில் ஒருவன் சாமீ
  குதிரையாகாமல்
  விட்டுப்
  போனதில் ஒருவன் சாமீ

  மேற்படிக்
  குரலைக் கேட்டார்
  மாதொரு
  பாகர். குற்றம்
  ஏற்பட
  வியந்தார். தேவி
  ஏளனம்
  செய்தாள் சற்று

  “வாதவூரடிகட்காக
  நரிகளைத் தேர்ந்த போது
  நீதியோ என்னை மட்டும்
  விலக்கிய செய்கை சாமீ!”

  திருவருட்
  திட்டம் பொய்த்த
  தற்கொரு
  ஊளைச் சான்றாம்
  நரி எதிர்
  உதித்துக் கீற்று
  நிலாத் திகழ்
  ஈசர் சொன்னார்:

  நரிகளைப் பரிகளாக்கும்
  திருவிளையாடல் முற்றும்
  விடுபட்ட பேரை நாங்கள்
  கவனிக்க மாட்டோம் போய்வா.  அடப்பாவி! இந்தாளு உண்மையிலேயே ரங்கராஜ நம்பியின் தொண்டரடிப் பொடியாழ்வார் வம்சமா இருப்பாரோ?!
  M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

  இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
  இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

  டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

  "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

 10. #9
  Senior Member Diamond Hubber venkkiram's Avatar
  Join Date
  Jan 2009
  Posts
  3,178
  Post Thanks / Like
  சொல் - 1981

  எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல்
  வெளியில் சொல்லும் பழக்கம் எனக்கு
  நண்பன் ஒருவனோ நேரெதிர் இதற்கு

  ஒன்றையும் சொல்ல மாட்டான் எதற்கும்
  மௌனமாய் இருப்பதே அவன் வழியாகும்
  பலரும் சொன்னோம்
  சொல்லப்படுதலே என்றும் சிறந்தது
  அதற்குப் பிறகும் அவன் சொல்லவில்லை.
  நாங்கள் வியந்தோம்.

  இறக்கும் பொழுதும் சொல்ல மாட்டானா
  ஒருநாள் அவனும் இறந்தான்
  கட்டைப் புகையிலை போல அவன்
  எரிந்ததைப் பார்த்துத்

  திரும்பும் பொழுது தெருவில் வெயிலில்
  சேவல் கூவிற்று ஒருமுறை விறைத்து.
  வழக்கம் போல நான் சொன்னேன்.
  புலர்ந்தற் கப்புறமும் கோழிகள் கூவும்

  ** நான் ஒரு மக்கு பிளாஸ்திரி. கடைசி வரியின் அர்த்தம் இந்த சூழலுக்கு என்ன சம்பந்தம் என கொஞ்சம் புரிய வைக்கிறீங்களா?
  சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

 11. #10
  Moderator Platinum Hubber P_R's Avatar
  Join Date
  Nov 2004
  Posts
  10,036
  Post Thanks / Like
  சுத்தம்!

  மிகக் குறுகலான readings
  மத்தியானமா வரேன்.
  Last edited by P_R; 10th February 2013 at 07:47 AM.
  மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

Page 1 of 2 12 LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •