-
9th March 2008, 01:54 PM
#1
Senior Member
Diamond Hubber
sumai - +++
ஒரு மங்கலான பிற்பகல்.. !!
பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டு ஏழெட்டு மலைக் கிராமங்களை இணைக்கும் அந்த பஸ்.... !!
"இந்தாம்மா... அந்த பையைக் கொஞ்சம் காலுக்குக் கீழே இறக்கி வச்சுக்கிட்டா என்னவாம் ? பக்கத்துல ஆளுங்க உக்காரத் தேவல ?"
கேட்ட பெண்மணி தன் நெற்றி முழுவதும் சந்தனம் பூசி அதன் நடுவில் ஒரு அபாய அறிவிப்பு செய்வது போன்ற சைஸில் குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டு, அதனால் தனக்கு ஒரு தெய்வீகக் களை இருப்பதாகவும், எல்லோரும் பயபக்தியுடன் தன்னைப் பார்ப்பதாகவும் நினைத்துக் கொண்டு பஸ்ஸில் இருந்த மற்றவர்களைப் பார்த்தார்.
அவருடைய கேள்விக்கு விடையாக ஒரு வினாடி தன் முகத்தைத் திருப்பிப் பார்த்து விட்டு தன் மடியில் இருந்த பெரிய பையை மீண்டும் கைகளால் சுற்றிப் பிடித்தபடி மேகலை ஜன்னலுக்கு வெளியே பார்க்க ஆரம்பித்தாள்.
"என்ன திமிரடியம்மா இந்தக் காலத்துப் பெண்களுக்கு ? பெரியவங்க, பெருந்தலைங்கன்னு ஒரு மருவாதி கொடுக்கத் தாவல ? அந்தக் காலத்துல நாங்க பெரியவங்க வந்தா எம்புட்டு கவுரதை தருவோம். இப்போ என்னடியின்னா மடியில இருக்குற பையை எறக்கி வையடியம்மா அப்படின்னு சொன்னாக் கூட கேப்பாரில்ல"
அவளுக்கு அடுத்து இருந்த கண்ணாடி போட்ட மனிதர் " பெரியம்மா.. அவங்க மடியிலே அவங்க வச்சுகிட்டு போறாங்க.. நீங்க வுட்டுத் தள்ளுங்க" என்றார்.
"இப்படி காத்து வர வழிய மறைச்சுகிட்டா நான் எப்படிங்க மூச்சு விட முடியும்?" பெரியம்மா மார்பில் கையை வைத்துக் கொண்டு மாரடைப்பு வந்தவள் போல பெருமூச்சு விட்டுக் காண்பிக்க பஸ்ஸில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்தனர்.
தன்னை விளையாட்டுப் பொருளாக ஆக்கி விடுவார்கள் என்ற பயத்தில் பெரியம்மா கையிலிருந்த ஆரஞ்சுப் பழத்தை உரிக்க ஆரம்பித்தார்.
தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் தன்னைப் பற்றி நடப்பது கூட தெரியாமல் மேகலை ஜன்னலுக்கு வெளியே ஓடிக் கொண்டிருந்த காட்சிகளில் லயித்திருந்தாள்.
மேகலை...
"என்பு தோல் போர்த்த உடம்பு" என்று ஒரு செய்யுளில் வருமே.. அது போல
ஒரு எலும்புக் கூட்டுக்கு மேல் தோல் போர்த்தி இருப்பது போலத்தான் இருந்தாள். கழுத்தில் இருந்த கறுப்புக் கயிறு உண்மையில் மஞ்சள் கயிறு என்று சத்தியம் செய்தாலும் யாரும் நம்பப் போவதில்லை.
-
9th March 2008 01:54 PM
# ADS
Circuit advertisement
-
9th March 2008, 02:06 PM
#2
Senior Member
Veteran Hubber
then.......
thodarkathaiyO?
hmmmm.....waitin....
muthal episode innumkonjam neelama irunthirukalam!
-
9th March 2008, 02:14 PM
#3
Senior Member
Diamond Hubber
venki..
not thodarkadhai.. short story-than reNdu mooNu episode-la mudinjudum.
mudhal episode type seyyaradhukuLLa innoru work vandhuchu..
tamil fonts sariya type aagala.. adhAn
complete aana varaikkum post senjuttEn
-
9th March 2008, 03:32 PM
#4
Senior Member
Diamond Hubber
then......
Anbe Sivam

-
9th March 2008, 03:42 PM
#5
Senior Member
Platinum Hubber
hmm.. apram
-
9th March 2008, 04:22 PM
#6
Senior Member
Platinum Hubber
mmm...appuRam?
(Yes, typing in unicode is not as smooth as TSCI in ekalappai!)
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
9th March 2008, 04:22 PM
#7
Senior Member
Diamond Hubber
மதிவாணன் நல்ல மனிதன்தான். கோயம்புத்தூரில் இருந்து லாரியில் லோடு ஏற்றிக் கொண்டு
ஊர் ஊராகச் சுற்றிவிட்டு வாரம் ஒரு முறை வந்து போய்க்கொண்டு இருந்தாலும் எந்த
கெட்ட பழக்கத்தையும் கற்றுக் கொள்ளவில்லை.
மேகலையைக் கல்யாணம் செய்து கொண்டபோது அவள் கழுத்தில் ஒரு பவுன் தாலி வாங்கிக்
கட்டினான். கீரையன்பாளையத்திலே அவன் சொந்த நிலத்திலே ஒரு ஓட்டு வீடு இருந்தது.
அவர்கள் சொர்க்கம் அங்கே இருந்ததாக மேகலை நினைத்தாள்.
அது கேரளத்தில் எல்லை என்பதால் மழையின் தாக்கம் எப்போதுமே அதிகமாக இருக்கும்.
கீரையன்பாளையம் ஆனைமலைக்கு போகும் வழியில் மலையின் மேலேயே ஒரு மேட்டுப்
பிரதேசத்தில் இருந்தது.
எப்போதும் மேகக் கூட்டங்கள் திரண்டு திரையிட்டுக் கொண்டிருக்கும். மேகலை பிறந்து
வளர்ந்தது எல்லாமே காரைக்குடி பக்கம் ஒரு வறண்ட பூமியில்.. அதனால் அவளுடைய
உலகம் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு உச்சியில் நிலையாகிப் போனது.
எல்லாமே ஒரு மழைக்கால ராத்திரியில் மாறிப்போனது.
அந்த வருஷம் நல்ல மழை. விடாமல் பெய்து கொண்டே இருந்தது.
மேகலைக்கு உதவி செய்ய வந்திருந்த சின்னம்மா ஊருக்குப் போய்விட்டதால் நிறைமாத
கர்ப்பிணியான அவள் யாரும் இல்லாமல் தனியாக இருந்தாள்.
வாசலில் மழையின் ஆரவாரத்தோடு வேறு மனிதர்களின் குரல்களும் கேட்டன.
மெதுவாக எழுந்து வாசலுக்கு வந்தவளுக்கு அடிவயிறு கலங்குவது போல நாலைந்து
பேர்களாக மதியைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.
"கடவுளே ! அவருக்கு என்னங்க ஆச்சு ?"
"பதறாதேம்மா.. உயிருக்கு ஆபத்தில்ல.. நாலு நாள் முன்னால ஒரு விபத்து நடந்து
போச்சு. காலிலே நல்ல அடி. எலும்பு முறிஞ்சு போச்சு. கட்டு போட்டு அழைச்சுகிட்டு
வந்துட்டோம்" என்று ஒருவர் சொல்ல
"பயப்படாதே மேகலை.. எனக்கு ஒண்ணும் இல்ல" என்று மதி சிரிக்க முயற்சி செய்தான்.
ஆனால் அந்த சிகிச்சைக்கு எல்லாம் எந்த பலனும் இல்லாமல் அவள் பிரசவத்தின்போதே
அவனுக்குப் புரையோடிய காலை எடுத்து விட வேண்டிய நிலைமை வந்தது.
லாரி ஓனர் நல்லவர்தான். ஆனாலும் அவரால் எவ்வளவு பணம் தர முடியும் ? கையில்
கழுத்தில் இருந்த சொற்ப நகைகளும் போனபிறகு அவர் கொடுத்தது மருந்துக்கும்,
ஆஸ்பத்திரிக்கும் சரியாய்ப் போனது.
கையில் கம்புடன் தடுமாறி நடக்க மதிவாணன் பழகிக் கொள்ள ஆரம்பித்தான்.
மேகலை சுமக்க ஆரம்பித்தாள்.
வீட்டைச் சுற்றி காய்கறி செடி வளர்த்து அதைப் பறித்து சந்தைக்குக் கொண்டு போய்
விற்று வந்தாள்.
தினமும் அவர்களுக்கு இருந்த ஒரே சந்தோஷம் அந்த சின்ன மழலையின் ஓசைதான்.
ஆனால்.. அன்று மேகலை வீட்டுக்கு வந்தபோது..
"மேகலை.. குழந்தைக்கு உடம்பு அனலாக் கொதிக்குது. வூட்டுல எந்த மருந்தும் இல்ல.
வைத்தியர் கிட்ட போயிட்டு வர்ரேன்." என்று சொன்னபடி மதி கம்பை ஊன்றி எழுந்தான்
"நீங்க உக்காருங்க. நான் கொழந்தைய எடுத்துக்கிட்டு போயிட்டு வர்ரேன். உங்களால
அந்த கல்லுப் பாதையில நடக்க ஏலாது" என்றபடி மேகலை கிளம்பினாள்.,
வானம் கருக்க ஆரம்பித்தது.
-
9th March 2008, 04:32 PM
#8
Senior Member
Platinum Hubber
பிழியப் பிழிய அழவைக்க போகிறீர்களா, மது?
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
9th March 2008, 04:32 PM
#9
Senior Member
Platinum Hubber
-
9th March 2008, 04:34 PM
#10
Senior Member
Diamond Hubber
....................
Anbe Sivam

Bookmarks