-
4th September 2013, 05:52 PM
#1
Junior Member
Veteran Hubber
Makkal Thilagam M.G.R. - Part 6
தரணிபுகழ் ராமனுக்கு அணில் போல
பரணிபாட வந்தேன் என் தலைவனுக்கு!
மக்கள் திலகத்தின் நல்லாசியோடு, அவர் பெயரால் அமைந்த இந்த மக்கள் திலகம் எம்ஜியார் -பாகம்-6 என்ற திரியை எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் ஆதரவோடு துவக்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
உண்மை, உழைப்பு, உயர்வு என்னும் தாரக மந்திரத்தை உள்ளடக்கி இந்த உலகத்தார் வியக்க, திரையுலகையும், தமிழுலகையும் ஆட்சி செய்த புரட்சித்தலைவர் புகழ் பாடுவது ஒன்றே குறிக்கோளாக இத்திரியை எடுத்துசெல்வேன் என உறுதி கூறுகிறேன்

மக்கள் திலகத்தின் பல அரிய ஆவணங்கள், அபூர்வ புகைப்படங்கள் மற்றும் அவரின் பெருமைகளை இந்த திரியில் பதிவிடவிருக்கும் திரு. வினோத் சார், பேராசிரியர் செல்வகுமார், திரு. திருப்பூர் ரவிச்சந்திரன், திரு. எம்.ஜி.சி. பிரதீப், திரு. வேலூர் ராமமூர்த்தி, திரு. ஜெய்ஷங்கர், திரு. ரூப், திரு. சைலேஷ் பாசு, திரு. மகேந்திர ராஜ், திரு. சுகராம் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கு இந்த வாய்ப்பு நல்கிய மையம் திரியின் நிறுவனர்களுக்கும் , மக்கள் திலகம் திரியின் பாகம்-3, பாகம் -4 துவக்கிய திரு வினோத் சார் , திருப்பூர் ரவிச்சந்திரன் சார் மற்றும் பாகம்-5 திரியை சிறப்புடன் எடுத்து சென்ற திரு. ஜெய்ஷங்கர் அவர்களுக்கும், வேலூர் திரு. ராமமூர்த்தி ஆகியோருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை மக்கள் திலகம் திரியின் அனைத்து பாகங்களிலும் பங்கு பெற்ற எல்லா நண்பர்களும் தொடர்ந்து இந்த திரியிலும் பங்கு பெற்று 'தலைவன் புகழ் பாடுவது ஒன்றே நோக்கம்' என தங்களின் மேலான பதிவினைத் தந்து சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
என்றும் எம்ஜிஆர் பக்தன்
வி. கலியபெருமாள்
Last edited by kaliaperumal vinayagam; 5th September 2013 at 07:03 PM.
-
4th September 2013 05:52 PM
# ADS
Circuit advertisement
-
4th September 2013, 06:26 PM
#2
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் -6 இன்று துவங்கி இருக்கும் உங்களுக்கு என்னுடைய இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் - 5 துவக்கிய இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்களின் இனிய பயணம் 10.4.2013 அன்று ஆரம்பித்து 4.9.2013 , இன்று 148 நாட்களில் 1,34,000 பார்வையாளர்களுடன்
இனிதே நிறைவுற்றது . நன்றி ஜெய் சங்கர் .
மக்கள் திலகம் திரியில் பதிவிட்ட அனைவருக்கும் நன்றி .
மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் -6 வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் திலகம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .
நட்பு ரீதியில் , புரிதலுடன் நாம் எல்லோரும் இந்த திரியை சிறப்பாக திரு கலிய பெருமாள்
அவர்கள் தலைமையில் மக்கள் திலகத்தை பற்றிய செய்திகள் - நிழற் படங்கள் - விளம்பரங்கள் -
வீடியோ என்று பதிவிட்டு அவருடைய புகழுக்கு பெருமை சேர்ப்போம் .
Last edited by esvee; 4th September 2013 at 06:30 PM.
-
4th September 2013, 06:32 PM
#3
Junior Member
Platinum Hubber
-
4th September 2013, 06:58 PM
#4
Senior Member
Veteran Hubber
வெற்றிகரமாக ஆறாவது பாகத்தை துவக்கியிருக்கும் மக்கள் திலகம் திரி வெற்றிநடை போட நல்வாழ்த்துக்கள்....
-
4th September 2013, 07:02 PM
#5
Junior Member
Veteran Hubber
முதல்வர்கள் விரும்பிய முதல்வர்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உலகத்தமிழர்களால் விரும்பப்படும் மாபெரும் தலைவர் என்பது நாமறிந்தது. தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் மட்டுமல்லாது, இந்தியாவின் பிற மாநிலங்களிலும், இன்னும் உலக நாடுகளில் உள்ளவர்களாலும் விரும்பப்பட்ட முதல்வராக இருந்தார் என்ற சிறப்பு யாரும் பெறாதது. தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள், திரு. ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, கர்ம வீரர் காமராஜர், திரு. பக்தவத்சலம், திரு. மு. கருணாநிதி, திருமதி, ஜானகி ராமச்சந்திரன், செல்வி ஜெயலலிதா ஆகியோரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். ஆந்திர முதல்வர் என்.டி.ஆர், கர்நாடக முதல்வர்கள் குண்டுராவ் (எம்ஜிஆரின் ரசிகர் மன்றத்தலைவர்), ஹெக்டே போன்ற முதல்வர்களாலும் மிகவும் விரும்பப்பட்டவர். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் அன்பிற்கு பெரிதும் பாத்திரமானவர். அதேபோல் புதுச்சேரி முதல்வர் திரு.ரங்கசாமி அவர்களும் மக்கள் திலகத்தை மிகவும் நேசிப்பவர். எம்ஜிஆர் அவர்களின் விழாக்களில் தவறாமல் கலந்துகொண்டு அவர் பெருமைகளைப் பேசுபவர். சமீபத்தில் அவரது பிறந்த நாளில் அவரது என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் வைத்த பேனர்.

இன்னும் முதல்வர்கள், பிரதமர் இவர்களுடன் எம்ஜிஆர் அவர்களுக்கு இருந்த நட்பு, திரியின் நண்பர்கள் அறிந்திருந்தால் இங்கே பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
Last edited by kaliaperumal vinayagam; 4th September 2013 at 07:04 PM.
-
4th September 2013, 07:10 PM
#6
Junior Member
Veteran Hubber

Originally Posted by
mr_karthik
வெற்றிகரமாக ஆறாவது பாகத்தை துவக்கியிருக்கும் மக்கள் திலகம் திரி வெற்றிநடை போட நல்வாழ்த்துக்கள்....
மக்கள் திலகம் 6-ம் பாகம் வெற்றி பெற வாழ்த்துகள் தெரிவித்த அன்பு நண்பர்கள் திரு. வினோத் அவர்களுக்கும், பேராசிரியர் திரு.செல்வகுமார், திருப்பூர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கும், திரு. வேலூர் ராமமூர்த்தி, திரு. ஜெய்ஷங்கர் அவர்களுக்கும், இனிய நண்பர் திரு. கார்த்திக் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Last edited by kaliaperumal vinayagam; 4th September 2013 at 07:28 PM.
-
4th September 2013, 07:30 PM
#7
Senior Member
Diamond Hubber
1969- ல் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது முகையூர் இடைத்தேர்தல் செலவு தொடர்பாக முதல்வர் கலைஞர் கழக பொருளாளர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதம்
MGRMK.jpg
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
4th September 2013, 07:36 PM
#8
Senior Member
Diamond Hubber
மக்கள் திலகத்தின் திரியின் 6-வது பாகத்துக்கு என் வாழ்த்துகள்.
இப்போது வண்டுகள் போல வந்து மொய்க்கும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் இங்கே வந்து சேர்வதற்கு முன் மக்கள் திலகத்தின் தொடக்க திரிகளை தொடங்கி வைக்கும் வாய்ப்பு பெற்றவன் என்ற முறையில் இன்று அதன் வண்ணமிகு நிலையை கண்டு பெருமைப்படுகிறேன்.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
4th September 2013, 07:41 PM
#9
Junior Member
Regular Hubber
Esvee, thanks for pointing out that it is a still from 'Thayin Madiyil' and not 'Kalangarai Vilakkam' as mentioned by my earlier. I thought 'Thayin Madiyil' was released in 1965.
Esvee, the lift-off stills from the duet songs from 'Puthiya Bhoomi' were unique in the sense that even the English subtitles at the bottom are clearly visible. By the way, ever noticed how cleverly Kaviarasu Kannadhasan weaved in the word 'chinnavalai'?. That was a subtle reference to JJ vis-a-vis MGR's popular endearment 'chinnavar'!
-
4th September 2013, 07:42 PM
#10
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு ஜோ
இது வரை பார்க்காத ஆவணம் . மிகவும் அருமை .
நன்றி .
மக்கள் திலகம் திரிக்கு வாழ்த்து தெரிவித்த இனிய நண்பர் திரு கார்த்திக் அவர்களுக்கு நன்றி
Bookmarks