உயிருக்கும் மேலான உடன் பிறந்த உறவை காப்ப

Thread started by xlntbarani on 11th May 2011 04:13 PMஅனைவருக்கும் வணக்கம்

சுருக்கமாக!..

எனது சின்ன தம்பி மலேசியாவில், வேலைக்கு வந்த ஒரு மாதத்தில் பாஸ்போர்ட் பிடுங்கபட்டு.. பிரச்சனையில் சிக்கி தவித்து, இன்று ஒரு பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக சொல்லபடுகிறது.

அவனுடன் தினமும் பேசிக்கொண்டிருப்பதால்.. உயிரோடு்த்தான் இருக்கிறான் என்பது மட்டுமே இங்கே என் அன்னைக்கும் எனக்குமான ஒரே நிம்மதி..

ஆயினும் அவனது குரலில் தெரியும் வலி, அவன் பாதுகாப்பாக இருப்பதாக சொல்லபட்டாலும், நிம்மதியாக இல்லை என்பதை என் மனம் உணர்கிறது.

ஹப்பில் மலேசியாவில் வாழும் நண்பர்கள் யாராவது இருக்கின்றீரா? .. என் தம்பியை ஊருக்கு பத்திரமாக திருப்பி அனுப்ப உதவி வேண்டி


நட்பன்புடன்
பரணீதரன்Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)