"இருகுரல்" மற்றும் "பலகுரல்" பாடல்கள்.

Thread started by gingerbeehk on 24th November 2016 09:22 AMஅன்பின் இசை சொந்தங்களுக்கு வணக்கம்.

உங்கள் அன்பான ஆசிர்வாதத்துடன் இந்த புதிய இழையை தொடங்குகிறேன். இந்த இழை தமிழ் திரையில் வந்த "இருகுரல்" மற்றும் "பலகுரல்", அதாவது இரு ஆண்குரல் அல்லது இரு பெண்குரல் மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட குரல்களில் வந்த பாடல்களை எடுத்து வர இருக்கிறது. அதிலும் குறிப்பாக இடைக்கால படங்களின் பாடல்களை பதிவிடலாம் என்று எண்ணி இருக்கிறேன். இந்த இழை உங்கள் ரசனைக்கு விருந்தாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த இழை பற்றிய உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டு அறியத்தாருங்கள். உங்கள் அன்பான ஆதரவினை தொடர்ந்து தாருங்கள். இனி பாடல்களுக்கு போகலாம்.

இந்த இழையின் முதல் பாடலாக "புரட்சி தலைவர்" அவர்களின் படத்திலிருந்து ஒரு "பலகுரல்" பாடலுடன் ஆரம்பிக்கிறேன்.


படம்: இன்று போல் என்றும் வாழ்க
பாடல்: வெல்கம் ஹீரோ..ஹேப்பி மேரேஜ்
பின்னணி: T.M.சௌந்தரராஜன், P.சுசீலா & B.S.சசிரேகா
இசை: M.S.விஸ்வநாதன்

http://www.4shared.com/mp3/hmzCgoMSc...GA_-_Welc.html

இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)