இருமுகன் - Chiyaan Vikram | Anand Shankar

Thread started by balaajee on 14th June 2016 10:00 AMhttp://tamil.thehindu.com/multimedia...n_2892993f.jpg பாங்காக் படப்பிடிப்பில் விக்ரம் மற்றும் நயன்தாரா

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இருமுகன்'. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மலேசியா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. ஷிபு தமீன்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
விக்ரம் முதலில் தாடி வைத்து 'ரா' உளவுப் பிரிவு அதிகாரி பாத்திரத்தில் நடித்தார். அப்பாத்திரத்தின் காட்சிகள் படப்பிடிப்பு முடித்தவுடன் மற்றொரு பாத்திரத்துக்காக தன்னை தயார் செய்ய ஆரம்பித்தார் விக்ரம். தற்போது அப்பாத்திரத்துக்கான படப்பிடிப்பு பாங்காக்கில் தொடங்கப்பட்டுள்ளது.

அதோடு 'இருமுகன்' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுபெற இருக்கிறது. இதில் ஒரு சண்டைக்காட்சி மற்றும் ஒரு பாடலை படமாக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
படப்பிடிப்பு முடிந்தவுடன், இறுதிகட்ட பணிகளை முடித்து ஜூலை இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இப்படத்தின் தமிழக உரிமையை பெரும் விலைக்கு ஆரோ சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)