சொல்ல துடிக்குது மனம் !

Thread started by Muralidharan S on 3rd July 2015 07:25 AM
அலுவலகத்திற்கு இன்றும் மட்டம்
ஆறு நாளாய் அடித்து ஓய்ந்த சுரம்
அன்பு மனைவியோ அங்காடி பக்கம்
அனுவுடன் வீட்டில் நான் மட்டும்

இரண்டு வயது தான் என் அனுவுக்கு
ஆனால் என்ன ஒரு பாங்கு அவளுக்கு
அப்பா டீ வேணுமா: அவள் வெல்லமாய்
ஆஹா குடு பேஷா: நான் செல்லமாய்

சின்ன சொப்பில் கொண்டு வந்தாள்
சூடான தேநீர் என வெறும் நீர் தந்தாள்
எடுத்து குடித்தேன் “அடடா அற்புதம்”
எகிறி குதித்தாள் கிளுக்கியே ஓடினாள்

அனுவின் கேள்வி மீண்டும் மீண்டும்
அப்பா டீ வேணுமா இன்னும் கொஞ்சம் ?
ஆமாம் கொஞ்சினேன் வேண்டும் வேண்டும்
அவள் குப்பியில் டீ கொடுக்க நான் குடிக்க

அதை கெடுக்க அகம் நுழைந்தாள் பத்தினி
என்ன குடிக்கிறீர்கள்? கூத்தடிக்கிறீர்கள்?
அதட்டினாள் அருமை மனைவி சிரித்தேன்
அடியே அனுவின் டீ அபாரம் நீயும் குடி

முறைத்தாள் மனைவி மறுத்தாள் டீயை
அது சரி, அனுவோ குழந்தை! அவளுக்கு
எட்டும் உயரத்தில் டாய்லெட் மட்டும் தான்
அது கூடவா தெரியாது அசட்டு அத்தான் ?

கதவின் பின்னால் அரவம் அனு தலை எட்டி
குசு குசு மழலையில் “ வேணுமா அப்பா டீ ?“
குண்டுஅனு இன்றேனோ அணு குண்டானாள் !
கரிய கண்ணால் எனை கவிழ்த்து விட்டாள்
!

.
.

.

(எப்போதோ வலையில் படித்த ஜோக்கின் தாக்கு
https://encrypted-tbn3.gstatic.com/i...WRhTFJ8tofwTntResponses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)