அப்பாவி!

Thread started by @srini on 20th May 2013 06:18 PMநான் ஒரு அழகிய தமிழ் மகன்!
சத்தமாய் பேசுவதும்
சேட்டைகள் புரிவதும்
சத்தியமாய் எனக்கு பழக்கமில்லை!


இதமான தோற்றமே
இதயத்தை கவரும் என்பது
என்னுள்ளே புதைந்துவிட்ட
அசைவில்லா நம்பிக்கை!


என் கூற்றிற்கு காரணம்
“எட்ட நின்றிருக்கும் அவள்!”
இப்படி எண்ணுவத்தால்
நான் ஒருவன் மட்டுமல்ல
வெட்கப்பட!
என்னைப்போல் பலர்
பசுவின் போர்வைக்குள்!


பருவத்தின் பல்லவியால்
தாளம் இட்டேன்!

“மெத்தப்படித்தினால்
மெத்தனம் காட்டவில்லை..
வீரம் மிகுந்தாலும்
வீராப்பு மிக்கவில்லை..
கள்ளி,
உன்னை எட்டப்பார்த்ததிலே
சித்தமும் கலங்கியதே!”


மெல்ல துடிக்கும் இதயம்
காதுக்கு சொல்லியது..
மெல்லிய இடையவள்
என்னை நெருங்குகிறாள் என்று!


“நான் உங்களை விரும்புகிறேன்!”
சற்றும் எதிர்பாராத
Bullet-உ வார்தைகள்
அவள் இதழ்களில் இருந்து..
சத்தியமாய் சொல்லுகிறேன்
என் இதயத்தை அது
ஊடுருவி விட்டது!


வீதியில் வீற்றிருக்கும்
துணிக்கடை க்காரர்கள்
அப்போது பார்த்திருந்தால்..
பொம்மை என நினைத்து
என்னை Showcase-ல் வைத்திருப்பர்!
அவள் வார்த்தைக்கு
நான் கொடுத்த பரிசு!


நன்றாக பேசியவள்
எவனையோ முன் அழைத்தாள்!
எங்கிருந்தான் என தெரியவில்லை..
எதிர் வந்து நின்றான்
ஒரு Camera-காரன்!


நடப்பது என்னவென்று
சுத்தமாய் விளங்குவதற்குள்
அவளே மலர்ந்துவிட்டாள்!
அது ஒரு தொலைக்காட்சி
நிகழ்ச்சியாம்..
என் Reaction-ஐ சோதிக்கும்
ஒரு Surprise Package-ஆம்!


இடி ஒன்று இதயத்தில்
கனமாய் இறங்கியது!
ஒரு நொடிப்பொழுதில் என்னை
Tubelight ஆக்கிவிட்டாளே!


கோபமாய்தான் இருந்தது..
நிற்பது தொலைக்காட்சி முன்பென்று
சற்று அடக்கியே வாசித்தேன்!


முடிவில்,
நிகழ்ச்சியின் பெயர் கேட்டேன்..
“அப்பாவி” என்றாள்!
மனத்திற்குள் கூறிக்கொண்டேன்..
“அடிப்பாவி” என்று!Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)