காத்திருந்த நேரங்கள்!

Thread started by @srini on 28th March 2013 07:43 PMஉந்தன் நினைவுகளில்
கண் மூடி அமர்ந்திருக்கிறேன்..
என் கன்னத்தில்
கை வைத்தவாரே,
ஒரு பேருந்து நிறுத்தத்தில்!

என் முகம் ஒளிர்வதும்
தெரியவில்லை!
உதடுகள் மலர்வதும்
தெரியவில்லை!
சுற்றி இயங்கும் உலகமும்
தெரியவில்லை!

......

இதயத்தில் இதமாய்
ஊடல்
புரிகின்றேன் உன்னோடு..
உனது கண்களை
மறைக்கும் கேசத்தை
ஒதுக்கி விடவில்லை என
என்றோ ஒரு நாள்
நீ கோபித்து கொண்டதற்கு..

ஒரு முறை..,
நீயே எனக்கு
சமைத்து வருகிறாய்
என்று சொன்ன பொழுது,
எலுமிச்சை சாதம்
பிடிக்காது என நான் உளறிவிட..
அதையே செய்து வந்து
இம்சித்த உன்னை
என்ன சொல்லுவேன்!

அதெப்படி..
என் கோபத்தை
ஒரு கண் சிமிட்டலுக்குள்
அடக்கி விடுகிறாய்!
பிடிக்காத விசயங்களும்
பிடிக்க வைக்கும் தந்திரத்தை
எப்படித்தான் செய்கிறாயோ..

நானும் தான் முயற்சித்து
பார்த்தேன்..
உனக்கு மிகவும் பிடித்த
ஒரு மேல் அங்கியை
கிழித்து வைத்து!
அதற்கு எப்படி எல்லாம் வசைந்தாய்..
ஓரமாய் ஒருதுளி
கிழிந்ததற்கு,
என்னை இழுத்து சென்று
எத்தனை துணிகளை
வாங்க வைத்தாய்..
கிராதகி!

என்னுடைய பைக்
எனக்கு மிகவும் பிடிக்கும் என்று
பல முறை சொல்லி இருக்கின்றேன்!
அதை நீ
ஒட்டி பார்த்தே ஆக வேண்டும் என
அத்தனை அடம் பிடித்து..,
கடைசியில்
சாததித்தே விட்டாய்..!
நன்றாகத்தான் ஓட்டினாய்..
இறங்கும் பொழுது
மகிழ்ச்சியில் ஸ்டாண்ட் போடாமல்
விட்டு விட்டாயே

அப்பொழுது ஒரு தவறு செய்தேன்!
விழுந்த வண்டியை
பார்க்கும் முன்
உன் முகத்தை பார்த்து விட்டேன்..
வெளிர் வானத்தை மறைத்து நிற்கும்
காரிருள் மேகமாய் காட்சி தந்து,
உன்னை கொஞ்சவே வைத்து விட்டாய்!

வாகனத்தை அரை மணியில்
சரி பார்த்தேன்!
உன்னை...
அரை மாதம்
சமாதானம் செய்தேன்!
யாரிடமடி கற்றுக்கொண்டாய்
இந்த
வசியம் செய்யும் மந்திரத்தை..

...

சற்று மெதுவாகக் கிளம்பி வந்த
என் தாரகை,
அதோ..
வருகிறாள்..
அசைந்தவாரே!

நான் எங்கோ பார்த்து
சிரிப்பது கண்டு..
என்ன நினைத்தாள் என தெரியவில்லை!
என் போதாத காலம்..
நான் கண்டு சிரிக்கும் தூரத்தில்,
மகளிர் கல்லூரியின் வாசல்!

வேகமாக வந்தவள்,
"பட்" என கன்னத்தில் அடியைவைத்து,
"எத்தனை நேரமாய்
நீ இந்த வேலை பார்க்கிறாய்" என்கிறாள்..
"வந்ததில் இருந்து" என
கன்னத்தை தேய்த்து கொண்டே
பாவமாய் (முயற்சிசெய்து)
சொல்லி வைத்தேன்!

அவளுக்கும் தெரியும்
நான் கனவாடி கொண்டிருப்பது..
எத்தனை முறை
நான் சொல்ல கேட்டிருப்பாள்!
எல்லாம் கொழுப்பு..

இப்பொழுது சிரித்து கொண்டே
என் கேசத்தை தட்டி விட்டு
"போகலாமா" என்கிறாள்!

இன்னும் என் முகத்தை
சோகமாய் வைத்திருந்தேன்
அவள் கொஞ்சலை எதிர்பார்த்து..
கூல்-ஆக, "சகிகல.. போகலாம் வா.. " என்கிறாள்!
நான் எங்கு போய் முட்டுவது..

போகும் பொழுது..
எத்தனை நேரம்
அங்கு அமர்ந்திருந்தேன் என
அவள் கேட்ட
நான் "காத்திருந்த நேரங்கள்"..
தெரியவில்லை..
காதலில்..
Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)