தூக்கி எறியப்பட்ட செருப்பு நான்

Thread started by Karpora Sundara Pandyen on 16th March 2013 11:42 PMநண்பா...
நீ பெற வேண்டிய அடிகளை
உனக்காகப் பெற்றுக்கொண்டேன் நான்..

உன்னை ஏதும்
காயப் படுத்திவிடக் கூடாதென்று
நான் கிழிந்து போன உண்மை
என்றேனும் நீ அறிவாயோ???

உனக்காக நான் சுமந்த
கிழிசல்களைக் காரணம் காட்டி
நான் கந்தல் ஆகினேன் என்று
என்னையும் தூக்கி எறிந்தாயே
பிய்ந்து போன செருப்பைப் போல...

உனது
புத்தம்புது செருப்பேனும்
உன்னைக் கடிக்காமல் இருப்பின்
அதுவே எனக்கு
என்றும் நிம்மதி நண்பா...Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)