Page 6 of 9 FirstFirst ... 45678 ... LastLast
Results 51 to 60 of 81

Thread: Kaaviya Thalaivan || Vasanthabalan || Siddharth

  1. #51
    Senior Member Seasoned Hubber Avadi to America's Avatar
    Join Date
    Apr 2008
    Posts
    827
    Post Thanks / Like
    I'm listening kaaviyathalivan song for past two days and completely love it..... My picks are sandi kuthirai, yaarumilla and alli arjuna.... Haricharan did fantastic job in Sandi kuthirai... it remembers me the song "rambam bum" from michel madana kamarajan....I hope the director justifies the quality of songs through the visuals...
    In theory there is no difference between theory and practice; in practice there is

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #52
    Senior Member Diamond Hubber A.ANAND's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    K.L MALAYSIA
    Posts
    4,661
    Post Thanks / Like
    Vasanta Balan
    இசையமைப்பாளர் ரகுமானிடம் பல விசயங்களை பேசிக்கொண்டிருந்தேன்.
    காவியத்தலைவன் / ஐ இரண்டு படங்களிலிலும் ரகுமான் அவர்கள் பாடாததைக்குறிப்பிட்டு
    நீங்கள் ஏன் இந்த இரண்டு படங்களிலிலும் பாடவில்லை என்று கேட்டேன்.
    கண்டிப்பா பாடனுமுனு கட்டாயமா என்ன.
    ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்களே என்று சொன்னேன்.
    என் இசையை ஒழுங்கா பண்ணா போதும் என்று காட்டமாக பதில் சொன்னார்.
    நான் விடவில்லை,
    காவியத்தலைவனில் பாட இடம் இல்லை .
    ஐ திரைப்படத்தில் பாடியிருக்கலாமே என்று கேட்டேன்.
    சிறிது மௌனம்.
    பாடியிருக்கலாம் என்னோடு நீ இருந்தால் பாடலை பாடியிருக்கலாம்.
    ஆனால் பாடகர் சித் ஸ்ரீராம் என்னை விட நன்றாக பாடியுள்ளார். அவருக்கு கடல் திரைப்படத்தில் பாடியபோது
    அந்த அளவு கவனிப்பு கிடைக்கவில்லை.
    இந்த பாடல் ஹிட் ஆனால் அவருக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கும் அதனால் தான் நான் பாடவில்லை.
    அவருக்கு கிடைக்கவேண்டியதை நான் பிடிங்கிக்கொள்ளகூடாதுல்ல பாலன் என்றார்.ஒரு நல்இதயம் எப்படி இயங்குகிறது பாருங்கள்.

  4. #53
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    "என் இசையை ஒழுங்கா பண்ணா போதும் என்று காட்டமாக பதில் சொன்னார்."

    தலைவர் அப்படி எல்லாம் காட்டமாக பதில் சொல்லக்கூடிய ஆள் இல்லையே. ஏதாவது உள்குத்து இருக்கா பாலன்?

  5. #54
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்னொரு திரியில் ஒருவர் காவியத்தலைவன் படம் பற்றி கருத்திட்டிருக்கிறார். அதாவது படம் இசை சம்பத்தப்பட்ட படம். இதற்கு தவறான கலைஞர்களை உபயோகித்திருக்கிறார்களே. இயக்குனர் எந்த அடிப்படையில் நடிகர்களையும் இன்ன பிற தொழில்நுட்பக் கலைஞர்களையும் தேர்ந்தெடுக்கிறார் என்று. அதாவது சூசகமாக ரஹ்மான் இந்த படத்திற்கு தவறான தேர்வு என்று கூறியிருக்கிறார். அதாவது படத்தை இயக்கிய வசந்தபாலன், அவரை இசையமைக்க அழைக்கலாம் என்று யோசனை கூறிய சித்தார்த், இதற்கு மேல் பணம் போட்டு படத்தை தயாரித்தவர் எல்லோரையும் விட அறிவாளியாக தன்னையே கற்பனை செய்து கொண்டிருக்கும் ஒரு வாய்ச்சொல் வீரருக்கு எல்லாம் தெரியுமாம். அபத்தம். இதற்கு ஒத்து ஊதியிருக்கிறார் இளையராஜாவை பெருமைமிக்க நாயன்மார்களில் ஒருவராக சேர்த்த சிவனின் நேரடி ஏஜென்ட்.

    ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இவர்களை நம்பி திரைத்துறை இல்லை. திறமைசாலிகளை என்றுமே ஊக்குவிக்கும் தமிழ்த்திரை ரசிகர்கள் ரஹ்மானுக்கும் வாய்ப்பளித்து இன்று அவர் உலகப்பெருமை அடைந்ததை கண்டு மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். வயிற்றெரிச்சல் பேர்வழிகள் வயிரெரிந்து கொண்டே இருக்கலாம்:-d

  6. #55
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    // இதற்கு ஒத்து ஊதியிருக்கிறார் இளையராஜாவை பெருமைமிக்க நாயன்மார்களில் ஒருவராக சேர்த்த சிவனின் நேரடி ஏஜென்ட். //

    ஆஹா! வாசிக்கிறதுக்கு இதுவும் நல்லா இருக்கே! அங்கே அவரது எந்தக் கருத்திற்கு நான் மறுமொழி சொல்லியிருக்கிறேன் என இன்னொருமுறை வாசித்துதான் பாருங்களேன் தோழர். ஒத்து ஊதியிருக்கிறார் என எதைவைத்து சொல்றிங்கன்னு புரியல. காவியத்தலைவன் படப் பாடல்கள் மீதான எனது அதிருப்தியை (எந்த அடிப்படையில் என்றும்) நான் என்றைக்கோ பதிவு செய்துவிட்டேன் தோழரே. ரஹ்மான் பாடல்கள் எனக்குப் பிடித்திருந்தால் ஓடோடிப் போய் பதிவு செய்துவிடுவேன். என்னை மீண்டும் மீண்டும் நிறுவவேண்டிய அவசியமில்லை எனக் கருதுகிறேன்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. #56
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    // இதற்கு ஒத்து ஊதியிருக்கிறார் இளையராஜாவை பெருமைமிக்க நாயன்மார்களில் ஒருவராக சேர்த்த சிவனின் நேரடி ஏஜென்ட். //

    ஆஹா! வாசிக்கிறதுக்கு இதுவும் நல்லா இருக்கே! அங்கே அவரது எந்தக் கருத்திற்கு நான் மறுமொழி சொல்லியிருக்கிறேன் என இன்னொருமுறை வாசித்துதான் பாருங்களேன் தோழர். ஒத்து ஊதியிருக்கிறார் என எதைவைத்து சொல்றிங்கன்னு புரியல. காவியத்தலைவன் படப் பாடல்கள் மீதான எனது அதிருப்தியை (எந்த அடிப்படையில் என்றும்) நான் என்றைக்கோ பதிவு செய்துவிட்டேன் தோழரே. ரஹ்மான் பாடல்கள் எனக்குப் பிடித்திருந்தால் ஓடோடிப் போய் பதிவு செய்துவிடுவேன். என்னை மீண்டும் மீண்டும் நிறுவவேண்டிய அவசியமில்லை எனக் கருதுகிறேன்.
    பரத்வாஜ் ரங்கன் ராஜாவை விட ரஹ்மானிற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார், எப்போதெல்லாம் ராஜாவின் ரசிகர்கள் அவரது இசை அறிவின் ஆழமின்மையை அம்பலப்படுத்துகின்றனரோ, அப்போதுதான் அவர் தன்னை ராஜா ரசிகர் என்று அறிவிக்கின்றார் என்று தாங்கள் கூறிய கருத்து எனக்கு அந்த* அதிமேதாவியின் கருத்தை ஆமோதிப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கியது. அப்படி நீங்கள் செய்யாத பட்சத்தில் நான் எனது பகிரங்க மன்னிப்பையும் இங்கே பதிவு செய்கிறேன். மன்னியுங்கள்.

    என்னை மீண்டும் மீண்டும் நிறுவவேண்டிய அவசியமில்லை எனக் கருதுகிறேன்.
    அவசியமே இல்லை. அந்த நபரின் கருத்தை பற்றி எனக்கு பெரிதாக அக்கறை இல்லை. ஆனால் நீங்கள் ராஜா ரசிகராக இருந்தாலும் ரஹ்மானின் இசையையும் கேட்பவர். உங்களுக்கு பிடித்திருந்தால் அதையும் பதிவு செய்பவர். தங்களுக்கு காவியத்தலைவன் பாடல்கள் திருப்தி தரவில்லை என்பது உங்கள் தனிப்பட்ட கருத்து. அந்த கருத்தை, எனது கருத்துக்கு மாறுபட்டு இருந்தாலும், நான் மதிக்கிறேன்.

    ஆனால் இளையராஜாவை நாயன்மார்களில் ஒருவராக தாங்கள் கூறியது சைவ மதத்தை ஏற்றிருக்கும் என்னை போன்றோருக்கு வேதனை அளித்திருக்கிறது என்பதும் உண்மை. இளையராஜா மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்பதில் ரஹ்மானின் இந்த ரசிகனுக்கு கருத்து வேறுபாடில்லை. ஆனால் நான் அனு தினமும் உளமாற வணங்கும் தெய்வத்தின் திருத்தொண்டர்கள் பட்டியலில் இளையராஜாவையும் இணைத்தது ஏற்புடையதன்று. ஒரு சிறந்த இசையமைப்பாளர் ஒரு சிறந்த மனிதராகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த பெருமை மிக்க பட்டியலில் சேர சிறந்த இசையமைப்பாளர் என்ற தகுதி மட்டும் போதுமா? நீங்களே உங்கள் மனசாட்சியை கேட்டுப்பாருங்கள். வேறு மதத்தில் கடவுளுக்கு அடுத்ததாக போற்றப்படுவோரின் பட்டியலில் ஒரு திரை இசையமைப்பாளரை சேர்க்க முடியுமா?
    Last edited by thozhar; 29th November 2014 at 10:51 AM.

  8. #57
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    காவியத் தலைவன்

    தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு முயற்சி. ஆனால் மோசமான திரைக்கதை எழுத்தாக்கம், தவறான நடிகர்/நடிகைகள் தேர்வு காரணமாக தடுமாறுகிறது. சித்தார்த், ப்ரித்விராஜ் ஆகியோர் சிறப்பாகவே நடித்திருந்தாலும் நகரத்து freaky கதாபாத்திரங்களிலேயே பார்த்து பழக்கப்பட்ட சித்தார்த்தும் மலையாள வாடையுடன் செந்தமிழ் பேசும் ப்ரித்வியும் அந்த கதாபாத்திரங்களில் இருந்து அன்னியப்பட்டே இருக்கின்றனர்.

    கதாநாயகிகளாக வருபவர்களில் வேதிகா மட்டும் பளிச்சென்று இருக்கிறார். நன்றாக நடித்தும் இருக்கிறார். அனைக்கா சோட்டிக்கு கடைசி படமாக இது அமையாமல் இருக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

    நாசர்,தம்பி ராமையா,பொன்வண்ணன் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை எப்பொழுதும் போல் நன்றாக செய்துள்ளனர்.

    மனதை கனமாக்க வேண்டிய அந்த க்ளைமேக்ஸ் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்து விடுவதே படத்தின் பெரிய தோல்வி. இப்படியே பல காட்சிகள் படத்தில் இருக்கின்றன. படத்தில் இருக்கும் மிகச்சில நல்ல காட்சிகளையும் மிதமிஞ்சி நிற்கும் அறுவை காட்சிகள் மறைத்து விடுகின்றன.

    1930களில் நடைபெறுவதாக இருக்கும் கதையில் வேகமான திரைக்கதையை எதிர்பார்க்கமுடியாதுதான். ஆனால் கிட்டத்தட்ட இதே மாதிரியான கதையை கையாண்ட 'இருவர்' இன்றளவிலும் பேசப்படவில்லையா? அந்த மாதிரியான உருவாக்கம் கா.தலைவனில் இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே..
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  9. #58
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by thozhar View Post
    ஆனால் இளையராஜாவை நாயன்மார்களில் ஒருவராக தாங்கள் கூறியது சைவ மதத்தை ஏற்றிருக்கும் என்னை போன்றோருக்கு வேதனை அளித்திருக்கிறது என்பதும் உண்மை. இளையராஜா மிகச் சிறந்த இசையமைப்பாளர் என்பதில் ரஹ்மானின் இந்த ரசிகனுக்கு கருத்து வேறுபாடில்லை. ஆனால் நான் அனு தினமும் உளமாற வணங்கும் தெய்வத்தின் திருத்தொண்டர்கள் பட்டியலில் இளையராஜாவையும் இணைத்தது ஏற்புடையதன்று. ஒரு சிறந்த இசையமைப்பாளர் ஒரு சிறந்த மனிதராகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த பெருமை மிக்க பட்டியலில் சேர சிறந்த இசையமைப்பாளர் என்ற தகுதி மட்டும் போதுமா? நீங்களே உங்கள் மனசாட்சியை கேட்டுப்பாருங்கள். வேறு மதத்தில் கடவுளுக்கு அடுத்ததாக போற்றப்படுவோரின் பட்டியலில் ஒரு திரை இசையமைப்பாளரை சேர்க்க முடியுமா?
    // சிவனின் நேரடி ஏஜென்ட்// என்னடா நம்மீது இப்படி ஒரு பதிவா இதன் காரணம் எதுவாக இருக்கும் என ஒரளவுக்கு கணித்தது சரிதான் போல. நாயன்மார்கள் வரிசையில் இளையராஜாவை சேர்க்கலாமா வேண்டாமா என்ற எனது அபிப்ராயத்தை உணர்வுப் பூர்வமான தளத்தில் விவாதிக்கப்படவேண்டிய விஷயமாகக் கருதுகிறேன். இன்னொரு அன்பருக்கு அத்திரியிலேயே சொன்னதுபோல கொஞ்சம் கொஞ்சமாக எனது பார்வைகளை அங்கே பதிய வைக்க உள்ளேன். நாயன்மார்கள் ஒவ்வொருவரும் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் நூல்கள் மூலமே வாசித்திருக்கிறோம். தர்க்கத்திற்கு இடம்கொடுக்காமல் அதை அப்படியே பக்திபூர்வமாக ஏற்றுக்கொண்டு உயர்ந்த இடத்தில் வைத்துவிடுகிறோம். அதுபோலவே ராஜாவின் பக்திப் பாடல்கள் என வரும்போது இசை என்ற தளத்தில் மட்டுமே நின்றுகொண்டு மற்ற பிற தர்க்கங்களுக்கு இடம்கொடுக்காமல் உரையாடலாம். நாளைக்கே ( எப்போது எனத் தெரியா!) ரஹ்மானும் தன்னை மிகவும் தொடர்புபடுத்திக் கொள்ளும் இஸ்லாமிய பக்திமார்க்கத்திற்கு பலவித இசைப் பாடல்களை உருவாக்கும்போது அவரையும் இதுபோலவே உயர்ந்த இடத்தில் இன்னொருவர் வைத்து அழகுபார்க்க முடியும். காலமும் ஆக்கங்களும் மலரட்டும். ரஹ்மான் திரியில் ராஜாவைப் பற்றி மேலும் எழுதவேண்டாமென்று நினைக்கிறென்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  10. #59
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    இந்த மாதிரியான படத்தை திரையரங்கிற்கு வந்து ரசிகர்களை பார்க்க வைக்க ஒரு பெயர் தேவைப்பட்டது. அந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே ரஹ்மான் இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்று நினைக்கிறேன். டைட்டில் கார்டில் அவர் பெயர் வரும்போது எழுந்த கரகோஷமே அதற்கு சாட்சி. வேறு யார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தாலும் இந்த படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு இருந்திருக்குமா என்பது சந்தேகமே. அந்த விஷயத்தில் வசந்தபாலன் வெற்றி பெற்றுவிட்டார்.

    படம் முழுக்க ரஹ்மானின் இசைத் தோரணம்தான். ஆமை வேகத்தில் நகர்ந்து செல்லும் படத்தை தூக்கிப் பிடிப்பது அவரின் பாடல்களும், பின்னணி இசையும்தான். எனக்கென்னவோ அவர் மெருகேறிக் கொண்டே இருப்பது மாதிரி ஒரு உணர்வு.

    பரத்வாஜ் ரங்கன் சொல்வது போல் அந்தக் கால இசையை அப்படியே கொடுத்திருந்தால் இப்போதைய ரசிகர்கள் திரையை கிழித்து விட்டிருப்பர். ஆனால் ஜனரஞ்சகமான, அதே நேரத்தில் இலக்கணம் மீறாத இசையை கொடுத்ததன் மூலம் ரஹ்மான் தன் முத்திரையை அழுத்தமாக பதிக்கிறார்.

    காவியத்தலைவன் - காவியம் இல்லை. ஆனால் தலைவன் (ரஹ்மான்) இருக்கிறார்.
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  11. #60
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    // சிவனின் நேரடி ஏஜென்ட்// என்னடா நம்மீது இப்படி ஒரு பதிவா இதன் காரணம் எதுவாக இருக்கும் என ஒரளவுக்கு கணித்தது சரிதான் போல. நாயன்மார்கள் வரிசையில் இளையராஜாவை சேர்க்கலாமா வேண்டாமா என்ற எனது அபிப்ராயத்தை உணர்வுப் பூர்வமான தளத்தில் விவாதிக்கப்படவேண்டிய விஷயமாகக் கருதுகிறேன்.
    திரைப்படங்களுக்கு நன்றாக இசையமைத்து அதற்கு ஊதியமும் பெற்றுக் கொண்டவருக்கு, அதன் மூலம் பேரும் புகழும் பெற்றவருக்கு இந்த ஸ்தானம் உகந்ததல்ல. தமிழில் சரியான சொல் தெரியவில்லை. ஆங்கிலத்தில் இதைத்தான் ப்ளாஸ்ஃபெமி என்பார்கள். நாயன்மார்கள் பலர் மிகவும் எளியவர்கள். இறைவன் மேல் கொண்ட கலப்படமற்ற, எதையும் எதிர்பார்க்காத பக்தியாலேயே அந்த உயர்ந்த இடத்தை அவர்கள் எட்டினர். விடமுண்ட கண்டனின் திருக்கோயில்களிலும் அவர்களுக்கு இடம் கிடைத்தது. ராஜாவிற்கு தகுதி இருக்கிறதா என்பது பிறகு, அவருக்கு அந்த தகுதியை அளிக்க முதலில் நமக்கு தகுதி இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.

    நான் செய்வது தர்க்கமல்ல. ஒரு சிவபக்தனின் வேதனையின் வெளிப்பாடு. நீங்கள் கூறுவது போல் இத்திரி இவ்விவாதத்திற்கு உகந்த இடமல்ல. அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் ஒன்றே ஒன்று. இசையை விடவும் மேலானது அன்பு. ஏனென்றால் அன்பே சிவம். அந்த அன்பை போதிக்காமல் ஒருவருக்கு தனது "மேலான ரசனை"யின் மேல் கர்வத்தை மட்டுமே வரவழைக்கும் இசை ஒரு சிறந்த இசையாக முடியாது. அதை அமைப்பவர் திருத்தொண்டராகவும் முடியாது. புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

  12. Likes rajeshkrv liked this post
Page 6 of 9 FirstFirst ... 45678 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •