Page 147 of 397 FirstFirst ... 4797137145146147148149157197247 ... LastLast
Results 1,461 to 1,470 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #1461
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அன்புள்ள வாசு தேவன் சார்
    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1462
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு - பைரவியின் பாடல் அலசல் மிகவும் அருமை - அந்த படத்தில் வரும் இந்த பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும் - TMS , ரஜினிக்கு பாடிய முதல் பாடல் என்று நினைக்கிறேன் - ஒருவர் மறைந்த்தால்தான் அவருடைய அருமை தெரியும் என்று மிகவும் அழகாக உணர்த்தும் பாடல் . T.M.S has infused life into the song which no other contemporary singer of Kollywood could have done. ரஜினியின் முத்தான படங்களில் இதுவும் ஒன்று . ஸ்ரீகாந்த் வில்லனாக வரும் படம் - ஆனால் நாளைடவில் அவரால் ரஜினியின் வீச்சை தாங்க முடியவில்லை - சற்றே ஒதுங்க வேண்டியதாகி விட்டது

    பைரவியை அசை போட வைத்ததற்கு மிகவும் நன்றி



  4. Likes Russellmai liked this post
  5. #1463
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    வாசு - பைரவியின் பாடல் அலசல் மிகவும் அருமை - அந்த படத்தில் வரும் இந்த பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும் - TMS , ரஜினிக்கு பாடிய முதல் பாடல் என்று நினைக்கிறேன் - ஒருவர் மறைந்த்தால்தான் அவருடைய அருமை தெரியும் என்று மிகவும் அழகாக உணர்த்தும் பாடல் . T.M.S has infused life into the song which no other contemporary singer of Kollywood could have done. ரஜினியின் முத்தான படங்களில் இதுவும் ஒன்று . ஸ்ரீகாந்த் வில்லனாக வரும் படம் - ஆனால் நாளைடவில் அவரால் ரஜினியின் வீச்சை தாங்க முடியவில்லை - சற்றே ஒதுங்க வேண்டியதாகி விட்டது

    பைரவியை அசை போட வைத்ததற்கு மிகவும் நன்றி

    வாசு

    காலை வணக்கம்

    பைரவி படத்தின் பாடல்களை நினைவு கூர்ந்து பகிர்ந்ததற்கு நன்றி .இந்த படத்தை ஆரம்பிக்க கலைஞானம் (அவர்களின் முதல் தயாரிப்பு) தன அனுபவங்களை நக்கீரன் வார இதழ் வெளியிடும் சினிமா secret தொடரின் கூறி இருந்தார். நாமும் இரண்டாவது பாகத்தில் குறிப்பிட்டு இருந்தோம். இந்த படத்தில் தான் ரஜினி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் விளம்பரபடுதபடுகிறார். (உபயம் கலைபுலி தாணு )
    இதே கால கட்டம் துரையின் சதுரங்கம் படம் ரஜினி, ஸ்ரீகாந்த் இருவரின் நடிப்பில் வெளி வந்த நேரம் . இது சம்பந்தமாக (பைரவி,சதுரங்கம் படபிடிப்பு தளத்தில் ) ஸ்ரீகாந்த்,ரஜினி காந்த் இருவரும் கலந்து உரையாடிய ஒரு கட்டுரை மற்றும் சில புகைப்படங்கள் பிலிமாலயா இதழில் வெளிவந்த நினைவு இருக்கிறது .ரஜினி ஸ்ரீகாந்த்க்கு சிகரட் பற்ற வைப்பது போலவும் ,ஸ்ரீகாந்த் ரஜினியின் கழுத்தை கட்டி கொண்டு இருப்பது போலவும் சில புகைப்படங்கள் .

    நண்பர் ரவி சார் ஸ்ரீகாந்த் பற்றி குறிப்பிட்ட உடன் இது நினைவிற்கு வந்தது. நன்றி ரவி சார் .'நண்டூருது நரியூருது ' பாடல் டி எம் எஸ் அவர்களின் பின்னாளைய பாடல்களில் பிரபலமான பாடல் .இதே போல் அன்னை ஒரு ஆலயம் திரை படத்தில் 'அம்மா நீ சுமந்த பிள்ளை ' பாடலும் உள்ளம் கவர்ந்த பாடல் .

    Rgds

    Gk
    gkrishna

  6. #1464
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ரவி சார்

    1982 அல்லது 1983 கால கட்டம் என்று நினைவு. எம் என் நம்பியார் அவர்கள் தலைமையில் நடிகர்கள் பலர் மாலை அணிந்து சபரி மலைக்கு விஜயம் செய்து இருந்தார்கள். சபரி மலையில் இருந்து திரும்பும் வழியில் புனலூர் செங்கோட்டை வழியாக நெல்லைக்கு எல்லோரும் விஜயம் செய்தார்கள். ரஜினி மிகவும் பிரசித்தம் ஆகி விட்ட நேரம். ஆனால் ஒரு சாதாரண ஐயப்ப பக்தர் போல் பேருந்து ஒன்றில் பயணம் செய்து நெல்லை வந்தார். அப்போது நான் நெல்லையில் ஐயப்ப சேவா சங்கம் என்ற அமைப்பில் கௌரவ ஊழியர் ஆக இயங்கி கொண்டு இருந்தேன். இப்போது போல் அந்நாட்களில் சாலை இணைப்பு வசதிகள் கிடையாது.கம்பம் குமிளி பாதை அடிகடி மலைச்சரிவால் பாதிக்கப்பட்டு வந்ததால் வடக்கில் இருந்து வருபவர்கள் (மிக அதிக தூரத்தில் இருந்து வரும் (சென்னை,ஆந்த்ரா மற்றும் கர்நாடகா,குஜராத் பக்தர்கள்) பெரும்பாலும் மதுரை,திருநெல்வேலி,செங்கோட்டை,புனலூர் மார்கமாகவே பயணிப்பார்கள் .அது போல் அம்முறை எம் என் நம்பியார் குழு நெல்லை வந்தது . அவர்களை எல்லாம் உபசரிக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டு இருந்தது . ஏற்கனவே நான் சிவாஜி ரசிகன் அதனால் ஸ்ரீகாந்த் மீது சற்று அபிமானம் கொண்டவன் என்ற முறையில் அது போக ஸ்ரீகாந்த் அப்போது எம் என் நம்பியார் அவர்கள் குழுவில் மூத்த ஐயப்ப பக்தர் என்பதால் அவருக்கு மரியாதை ஜாஸ்தி கொடுத்து உபசரித்தேன்.பொதுவாக ஐயப்ப பக்தர் குழுவில் ஒரு ஐயப்ப பக்தர் அவரை விட மூத்த பகதர்களுக்கு கொஞ்சம் மரியாதை ஜாஸ்தி கொடுப்பார்கள். ஆகையால் அவரை நான் கொஞ்சம் அதிகமாக உபசரித்தேன். என் நண்பர்கள் எல்லோரும் ரஜினி அவர்களையே சுற்றி சுற்றி வந்தார்கள் அப்போது இதை கவனித்த திரு ரஜினி அவர்கள் எல்லோரிடமும் என்னை காண்பித்து 'இந்த சாமி பாருங்க என்னை விட ஸ்ரீகாந்த் (சத்குருசாமி என்ற அடைமொழியுடன்) அவர்களை நன்றாக கவனித்து கொள்கிறார் .அது போல நீங்களும் நடந்து கொள்ளுங்கள் ' என்று கூறினார். அப்போது ஸ்ரீகாந்த் சொன்ன பதில் எனக்கு நல்ல நினைவு ரவி சார் "இந்த கவனிப்பு இருக்கட்டும் ரஜினி.நீங்க இப்ப உச்சத்தில் இருக்கிறீர்கள். உங்க படங்களில் எங்களை போன்ற மூத்த நடிகர்களையும் சேர்த்து கொள்ள வேண்டும் ." என்று சொன்னார். ரஜினி உடனே தன உதவியாளர் இடம் (அவர் பெயர் ஜெயராமன் என்று நினைவு) இப்ப நாம் கமிட் ஆகி இருக்கும் படத்தில் சத்குருசாமிக்கு படம் முழுதும் வருகிற மாதிரி நல்ல ரோல் கொடுக்கிறோம் .டைரக்டர் கிட்ட சொல்லுங்க ' என்றார். பிறகு எல்லோரும் இதை மறந்து விட்டோம். 6 அல்லது 7 மாதம் கழித்து வந்த 'தம்பிக்கு எந்த ஊரு ' திரைபடத்தில் ஸ்ரீகாந்த்க்கு நல்ல ரோல் கொடுத்து இருந்தார்கள்.அதே போன்று ஸ்ரீ ராகவேந்தர்,வேலைக்காரன் திரைப்படத்திலும் ஸ்ரீகாந்த் உண்டு . ஏனோ தெரியவில்லை .பின்னாளைய ரஜினி படங்களில் ஸ்ரீகாந்தை காணவில்லை .

    நினைவலைகளில் நீந்த வைத்த திரு ரவி அவர்களுக்கு மீண்டும் நன்றி

    gkrishna

  7. Likes Russellmai, sss liked this post
  8. #1465
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    நன்றி தமிழ் ஹிந்து நாளிதழ்

    இயக்குநர் ருத்ரய்யாவின் முதல் படத்தில் நடித்ததோடு, அப்படம் உருவாக உறுதுணையாக இருந்த நடிகர் கமல்ஹாசன், 'அவள் அப்படித்தான்' குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

    "சினிமாவில் எனது வழிகாட்டிகளில் ஒருவரான அனந்து தான் முதன்முதலில் ருத்ரய்யா குறித்து என்னிடம் பேசியது. 'திரைப்படக் கல்லூரியிலிருந்து புத்திசாலி மாணவர்' என குறிப்பிட்டார். ருத்ரய்யாவின் இயற்பெயர் ஆறுமுகம். அவரை அப்படித்தான் நாங்கள் முதலில் அறிந்திருந்தோம்.

    சென்னை திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற துடிப்புள்ள இளைஞர். அங்கு மாணவர்கள் யூனியனுக்குத் தலைவராக இருந்து தீவிரமாக செயல்படும் போராளியாகவே பெயர் பெற்றிருந்தார். தமிழ் சினிமாவை உருமாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நான், ஆர்.சி. சக்தி, அனந்து ஆகியோர் அடங்கிய எங்கள் குழுவிற்கு சீக்கிரத்திலேயே நெருக்கமானார்.

    நாங்கள் சந்தித்தால் மணிக்கணக்கில் எங்கள் பேச்சு நீளும் என்பதால் எங்களது சந்திப்பு குறித்து அச்சப்பட்டவர்களும் இருந்தனர். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் பிரசன்னா என்ற பாத்திரத்தில் ஒன்றி நடிப்பதற்கு ருத்ரய்யா எனக்கு உதவினார். அந்தப் பாத்திரத்தைப் போலவே ருத்ரய்யாவும் இடதுசாரி கொள்கை உடையவர் என்பதால், அவரால் எனக்கு சிறப்பாக வழிகாட்ட முடிந்தது. முதன்முதலில் ஆறுமுகத்துடன் எனது நினைவுகள் இதுவே.

    எங்களது உரையாடல்கள் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. கோடார்ட், போலன்ஸ்கி, ரோஸெலினி, பிரெஸ்ஸான் ஆகிய இயக்குநர்களது படங்கள் எங்கள் பேச்சில் அடிக்கடி வந்து போகும். சென்னை திரைப்படக் கல்லூரியில் அவருக்கு இருந்த செல்வாக்கை வைத்து, வெளிநாட்டுத் திரைப்படங்களை வரவழைத்து, பார்த்து, அதை ஒரு நாள் தாமதமாக பூனே திரைப்படக் கல்லூரிக்கு அனுப்புவோம். எல்டாம்ஸ் சாலையில் ஒரு சிறிய திரைப்பட விழாவைப் போலவே இருக்கும்.

    நாங்கள் பெருமைபட்டுக் கொள்ளுமாறு, தமிழ் சினிமாவை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்லுமாறு ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்தோம். அதன் விளைவே 'அவள் அப்படித்தான்'.

    கோபத்தால் உந்தப்பட்ட ஆளாக ஆறுமுகம் எனக்குத் தோன்றினார். ஒருவேளை அதனால்தான் தன் பெயரை ருத்ரய்யா என்று மாற்றிக் கொண்டார் என நினைக்கிறேன். அவரது முதல் படம் எங்கள் குழுவின் செல்லப் படமாக இருந்தது. அதனால் வெறும் பேச்சு மட்டுமல்ல, செய்தும் காட்டுவோம் என மற்றவர்களிடமிருந்து நாங்கள் வித்தியாசப்பட்டு நின்றோம். ஒரு வருடத்திற்கு 20 படங்கள் வரை நான் நடித்த காலகட்டம் அது. எனவே, என் ஓய்வு நேரத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. அப்படி இருந்தும் படத்திற்கு எங்களால் சிறப்பான வடிவத்தைத் தர முடிந்தது.

    அவள் அப்படித்தான் படத்தின் முதல் காட்சியில், நான் கேமராவைப் பார்த்து "கொஞ்சம் லெஃப்ட்ல உட்காருங்க" என்று கூறுவது, இடதுசாரி சிந்தனையை ரசிகர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என ஊக்குவிக்கும் குறியீடுதான். அப்போதைய தமிழ் சினிமாவின் மீது இருந்த கோபத்தின் விளைவாகவே அவள் அப்படித்தான் துவங்கப்பட்டது. சலிப்பை ஏற்படுத்தும் படமாக அது மாற வாய்ப்பிருந்தது ஆனால் அப்படி ஆகவில்லை.

    பணத் தட்டுப்பாடு இருந்ததால் தொழில்நுட்ப ரீதியில் படத்துக்கு சிறப்பு சேர்க்க முடியாமல் போனது. அப்போது, இளையராஜா பிஸியாக இருந்தார். ஆனாலும் எங்களுக்காக அவரை வலுக்கட்டயமாக இசையமைக்க வைக்க முடிந்தது.

    கையில் கிடைத்த கேமராவைக் கொண்டு, எங்களை வைத்து ருத்ரய்யா நடத்திய படப்பிடிப்பு ஆச்சரியமானதாக இருந்தது. எங்கள் நோக்கம் ஒழுங்காக இருந்ததால், சிறிய பட்ஜெட்டாக இருந்தாலும் அனந்து, ரஜினி, ஸ்ரீப்ரியா போன்றோர் படத்தில் இணைய ஒப்புக் கொண்டனர். பெண் விடுதலையைப் பற்றி அனந்து அப்போதே எழுதினார்.

    படப்பிடிப்பு சமயத்திலும் நாங்கள் வெளிநாட்டுத் திரைப்படங்கள் குறித்து நிறையப் பேசுவோம். ஒவ்வொரு காட்சிக்கு முன்பும், இதை கோடார்ட் எடுத்தால் எப்படி எடுப்பார், கேமராவின் கோணம் எப்படி இருக்கும் என பேசிக் கொண்டிருப்போம். ஐந்து மாதங்கள், இரண்டு இரண்டு மணி நேரங்களாக எங்கள் படப்பிடிப்பு நடந்தது. படத்தைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது.

    'ராஜா என்னை மன்னித்துவிடு' என்ற ருத்ரய்யாவின் இரண்டாவது படத்திலும் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தப் படத்தை எங்களால் தொடங்க முடியவில்லை. அந்தப் படத்தின் கதை சிறப்பாக இருந்தது. ஆனால் 'சகலகலா வல்லவன்' போன்ற படங்களின் வெற்றி, எங்கள் கூட்டணியை தடுத்தது. தமிழ் சினிமாவில் ராஜபார்வைக்குப் பிறகு என் மீதான நம்பிக்கை மிகுந்தது. அதே வேளையில், 'சகலகலா வல்லவன்' திரைப்படத்தில் நான் நடித்தது ருத்ரய்யாவுக்கு பிடிக்கவில்லை.

    வணிகரீதியிலான படங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டுதான் நாம் நினைக்கும் சிறந்த படங்களை எடுக்க முடியும் என்று அவரை சமாதனப்படுத்தியது என் நினைவில் உள்ளது. அப்போது அவர் 'கிராமத்து அத்தியாயம்' திரைப்படம் எடுத்தார். அதில் எங்களுக்குள் சில கருத்து வேறுபாடு நிலவியது. அந்தக் கரு எனக்குப் பிடித்திந்ருதாலும், அவள் அப்படித்தானில் இருந்த அடர்த்தி அதில் இல்லை.

    ருத்ரய்யா வித்தியாசமான மனிதர். சிறந்த விமர்சனங்களைவிட, வணிகரீதியிலான வெற்றியையே நாம் நினைவில் வைத்துக் கொண்டாடுவது பரிதாபகரமானது. ருத்ரய்யாவிடம் பல படங்களுக்கான கதைகள் இருந்தன. ஆனால், அவரால் இரண்டு படங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இப்படிப்பட்ட கலைஞர்கள் விரக்தியடைக் கூடாது என்றுதான் மேற்கத்திய நாடுகளில் 'சன்டான்ஸ்' போன்ற திரைப்பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. அவள் அப்படித்தான் படத்தை நினைவுகூர்வதன் மூலம் மாற்று சினிமாவுக்கான தளத்தை அமைக்க சிலர் முயற்சிக்கலாம்.

    தனது படைப்பின் மீது அதீதமான பெருமை கொண்டவராக ருத்ரய்யா இருந்தார். வேறு யாரிடமும் பணியாற்ற அவர் விரும்பவில்லை. சினிமாவைப் பற்றி நிறைய தெரிந்துவைத்திருந்ததால், தன்னை யாரும் கட்டுப்படுத்துவதை அவர் விரும்பவில்லை. தான் கட்டுப்படுத்துவதையே அவர் விரும்பினார். அவள் அப்படித்தான் திரைப்பட தயாரிப்பில் இருந்த தோழமை, மற்ற படங்களிலும் இருக்கும் என்று அவர் நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை.

    ஒரு வருடத்திற்கு முன்னால் அவரை சந்தித்தேன். அப்போதும்கூட, அடுத்த படம் எடுப்பதற்கான நம்பிக்கையை அவர் விட்டுவிடவில்லை. உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். படம் எடுப்பது போதையைப் போல. சிலர் விலகினாலும், சிலர் தொடர்ந்து முயற்ச்சித்திக் கொண்டே இருப்பார்கள். ருத்ரய்யா இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். அதற்காக அவரை நான் மதிக்கிறேன். துறையிலிருந்து அவருக்கும் இன்னும் உதவிகள் செய்யப்பட்டிருக்கலாம். பாரதியின் கவிதைகளுக்காக அவரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது போல, ருத்ரய்யாவும் அவர் எடுத்த 'அவள் அப்படித்தான்' சிறந்த படத்திற்காக நினைவில் நிற்பார்.

    தமிழ் சினிமாவின் அடித்தளத்தையே உலுக்கிய 'அவள் அப்படித்தான்' எடுத்ததற்காக இந்த உலகம் அவரை என்றும் நினைவுகூரும். இன்றும் கல்லூரி மாணவர்கள் பலர், படத்தைப் பார்த்து, இது எப்படி இவர்களால் சாத்தியமானது என்று யோசிக்கின்றனர். சினிமாவின் மீது காதல் கொண்ட ஒருவராக ருத்ரய்யா என் நினைவில் நிற்கிறார். ஒரு காட்சி சிறப்பாக வரவேண்டும் என்றால், தெர்மகோலை தூக்கிப் பிடிக்கும் வேலை செய்யவும் தயங்கமாட்டார் ருத்ரய்யா.

    தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

    gkrishna

  9. Likes Russellmai liked this post
  10. #1466
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    ருத்ரய்யா | கோப்புப் படம்: அருண் மோ

    கடலில் கலந்த புதுப்புனல் - நன்றி தமிழ் ஹிந்து நாளிதழ்

    ருத்ரய்யாவின் சொந்த ஊர் சேலம் அருகில் உள்ள ஆத்தூர். அவர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தார். சென்னை தரமணியில் உள்ள திரைப்படக் கல்லூரியில் திரைக்கதை எழுத்து மற்றும் இயக்கம் படித்தார்.

    1976-ல் அவரை நான் முதலில் சந்தித்தேன். ராயப்பேட்டையில் உள்ள கௌடியா மடம் தெருவில் உள்ள ப்ரிவ்யூ திரையரங்கில் கன்னடத் திரைப்பட இயக்குநர் பி.வி. காரந்தின் ‘சோமனதுடி’படத்தைத் திரையிட்டார்கள். அதைப் பார்க்க அவரும் வந்திருந்தார். நானும் இயக்குநர் ஜெயபாரதியும் அப்படத்தைப் பார்க்க அங்கே போயிருந்தோம். ஜெயபாரதிதான் என்னை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். அந்த நாள் முதல் நாங்கள் நெருங்கிய நண்பர்களாக ஆனோம். 1977-ல் அவர் திரைப்படக் கல்லூரியிலிருந்து வெளியே வந்தார். சினிமா எடுக்கும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினார். லாயிட்ஸ் ரோடு காலனியில் இருந்த அவரது அறையில் சகாவாகத் தங்கத் தொடங்கினேன். வேலை தேடுவதற்கு எளிதாக இருக்கும் என்று அவர்தான் தன்னுடன் என்னைத் தங்கச் சொன்னார். ருத்ரய்யா அருமையான படிப்பாளி. பிரான்ஸில் 1960-களில் எடுக்கப்பட்ட புதிய அலை திரைப்படங்களால் அவர் ஈர்க்கப்பட்டிருந்தார்.

    தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலைத்தான் ருத்ரய்யா தனது முதல் படமாக எடுக்க எண்ணியிருந்தார். அதற்கு நாயகனாக கமல்ஹாசனை மனதில் வைத்திருந்தார். அதற்கான திரைக்கதையை நான்தான் முழுவதும் எழுதினேன். திரைக்கதைக்கு தி. ஜானகிராமனிடம் ஒப்புதல் வாங்குவதற்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் என்னை டெல்லி அனுப்பிவைத்தார். ஜானகி ராமனுக்கு முன்பணமாகக் கொடுக்க 10 ஆயிரம் ரூபாயை என்னிடம் கொடுத் திருந்தார். 10 நாட்கள் டெல்லியிலேயே இருந்தேன்.

    தி. ஜானகிராமன் தனக்குத் திரைக்கதைபற்றிப் பெரிதாகத் தெரியாது என்று சொல்லி, அவரது நண்பரும் இந்திப் பட இயக்குநருமான ரிஷிகேஷ் முகர்ஜியிடம் கொடுத்துக் கருத்துக் கேட்க வேண்டும் என்றார். திரைக்கதைப் பிரதியைக் கொடுத்துவிட்டு சென்னைக்குத் திரும்பிவந்தேன். அந்தப் படம் வெளி வரவே இல்லை. தி. ஜானகிராமன் டெல்லியிலிருந்து ஓய்வுபெற்று சென்னை திரும்பிவந்த பிறகு, அந்தப் பணத்தைத் திரும்பத் தந்துவிட்டார். அதற்குள் பத்துப் பதினைந்து ஆண்டுகள் போயிருக்கும்.

    தன்னுடைய பட வேலைகளில் ருத்ரய்யா தனது சக மாணவர்களையே ஈடுபடுத்தினார். ஒளிப்பதிவாளராக சக மாணவர் நல்லுசாமியை வைத்துக் கொண்டார். அவருக்கு உதவியாக அருண்மொழி, ஞானசேகரன் ஆகியோர் இருந்தனர். திரைக்கதைக்கு உதவியாக பாபு ராமசாமியையும் உடன் அழைத்துக் கொண்டார். அந்தப் படத்தின் ‘ஒன்லைனை’ முழுமையாக எழுதிக்கொடுத்தவர் சோமசுந்தரேஸ்வரர். அவர்தான் பின்பு இயக்குநர் ராஜேஸ்வர் ஆனார். அனந்து, திரைக்கதையிலும் வசனங்களிலும் பங்குபெற்றார். நான் அதில் ஒரு 20 சீன்களை எழுதியிருப்பேன். இளையராஜாவின் இசையில் அருமையான பாடல்கள் அந்தப் படத்தில் இருந்தன. முதல் வெளியீட்டில் படத்துக்கு அவ்வளவு பெயர் கிடைக்கவில்லை. இரண்டாவது முறை வெளியிடப்பட்டது. அப்போதுதான் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    ருத்ரய்யா எடுத்த அடுத்த படம் ‘கிராமத்து அத்தியாயம்’. ‘அவள் அப்படித்தான்’ போன அளவுக்குக்கூடப் போகவில்லை. ருத்ரய்யாவின் மனதில் கதைகள் ஓடிக்கொண்டே இருக்கும். முயற்சிகளையும் தொடர்ந்துகொண்டே இருந்தார். ஆனால், எந்த முயற்சியும் கைகூடவில்லை. சமீபத்தில் கூட, கமல்ஹாசனை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டபடி இருந்தார்.

    ருத்ரய்யா நண்பர்கள் சூழ இருந்தவர். ஒரு கம்யூன் லிவிங் சூழ்நிலையில்தான் ‘அவள் அப்படித்தான்’ படப்பிடிப்பு நாட்கள் இருந்தன. எல்லா நண்பர்களும் சேர்ந்து கூடிக் களிக்கும் இடமாக அவரது வீடு திகழ்ந்தது. படம் எடுத்துப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றெல்லாம் பெரிய ஈடுபாடு அவருக்கு இருந்த தில்லை. சம்பளம் என்று யாருக்கும் பேசவில்லை. தேவையான பணத்தை வாங்கிக்கொள்வார்கள். அந்த மாதிரியாகத்தான் தனது படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருந்தார்.

    ஆனால், அவர் நினைத்த சினிமாக்களைச் செய்ய கடைசிவரை முடியவில்லை. அவரது கனவு பொய்த்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

    - வண்ணநிலவன், ‘கடல்புரத்தில்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர், ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தின் வசனகர்த்தாக்களில் ஒருவர்.

    gkrishna

  11. Likes Russellmai liked this post
  12. #1467
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    நன்றி தமிழ் ஹிந்து நாளிதழ்



    கே. ராஜேஸ்வர்

    சென்னை தரமணி திரைப்படக் கல்லூரி யில் எனக்கு சீனியராக இருந்தவர் ருத்ரய்யா. 1974-75-ல் அவரை நான் சந்தித்தேன். இடதுசாரி சிந்தனைகளும், சர்வதேச சினிமாக்கள் மீதான பிரியமும் எங்களை இணைத்தன. அந்தக் காலகட்டத்து சினிமா மாணவர்கள் எல்லோரையும் பிரெஞ்சு புதிய அலை சினிமா ஈர்த்திருந்தது. திரைப்படக் கல்லூரி என்பது வெறுமனே வணிகப் படங்களை உருவாக்குபவர்களுக்கான இடம் அல்ல. அது மாற்று சினிமாவுக்கான உத்வேகத்தைக் கொடுக்கும் தளம் என்ற அபிப்ராயம் எங்கள் இரண்டு பேருக்கும் இருந்தது.

    ருத்ரய்யாவுக்கு அதற்கான வாய்ப்புகளும் அமைந்தன. இயக்குநர் அனந்து அவருக்குப் பக்கபலமாக இருந்தார். வணிக சினிமாவில் பணியாற்றினாலும், அனந்து சினிமா களஞ்சியமாக இருந்தார். திரைப்பட விழாக்களுக்குச் சென்று ஆர்வத்தோடு படங்களைப் பார்த்துவந்தவர் அவர். வெறுமனே ஒரு திரைக்கதையை விவாதிப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கும் மேலான நிறைய உதவிகளைச் செய்பவராக இருந்தார். அதனால்தான், அவள் அப்படித்தான் படத்தையே ருத்ரய்யா அனந்துவுக்குச் சமர்ப்பணம் செய்தார்.

    ருத்ரய்யாவுக்கு முதலில் கதைகள் அமையவில்லை. நான் ஆவணப்பட, விளம்பரப்பட உலகில் இருந்தேன். அதன் பின்னணியிலிருந்து அவள் அப்படித்தான்கதைச் சுருக்கத்தை இரண்டு பக்கத்தில் எழுதிக்கொடுத்தேன். அனந்துவுக்கு எனது கதைச்சுருக்கம் பிடித்திருந்தது. ரஜினி என்ற நட்சத்திர பலத்துக்காகச் சில மாற்றங்களைச் செய்தார் அனந்து. கதாநாயகியின் ஃப்ளாஷ்பேக்கை வண்ணநிலவன் எழுதினார். அவள் அப்படித்தான் டைட்டிலையும் அனந்துதான் வைத்தார்.

    தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவலைத் தான் ருத்ரய்யா முதலில் படமாக எடுக்கத் தீர்மானித்திருந்தார். கமல்ஹாசனும் அந்தக் கதையில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். முதலில் ஒரு கமர்ஷியல் படத்தை எடுத்துவிட்டு, இரண்டாவதாக அம்மா வந்தாள் படம் என்று முடிவுசெய்தோம். அவள் அப்படித்தான்அறிவிப்புடன் சேர்ந்தே அம்மா வந்தாள் படத்துக்கும் அறிவிப்பு கொடுத்தோம்.

    கலைஞர்களின் ஒத்துழைப்பு

    அவள் அப்படித்தான் படத்தில் நடிகராக மட்டும் அல்ல, தொழில்நுட்பக் கலைஞராகவும் கமல் எல்லாவிதமாகவும் ஒத்துழைப்பு கொடுத்தார். காஸ்டியூம் வரை கவனித்துக்கொண்டார். ரஜினியும் மிகவும் குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு நடித் தார். வித்தியாசமான ஒரு அணி படம் எடுப்பதற்காக வந்திருக்கிறார்கள்; அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எல்லோரும் ஒத்துழைத்தார்கள். நல்லுசாமி-ஞானசேகரன் ஒளிப்பதிவும் மிகவும் துணிச்சலானது. நிழலுருவக் காட்சிகளை (சில்ஹவுட்) குறைவான வெளிச்சத்தில் நிறையப் பரிட்சார்த்தம் செய்து எடுத்திருப்பார்கள். அந்த வருடத்தில் வெளியான படங்களில் பெரும்பாலானவை வண்ணப் படங்களே. பொருளாதாரச் சிக்கனத்துக்காகவே கருப்பு-வெள்ளையில் படம்பிடித்தோம். ஆனால், அதுவே அப்படத்தின் சிறப்பம்சமாக இப்போது உணரப்படுகிறது.

    படத்தின் வசனங்களையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். யதார்த்தத்துக்கும் நாடகத் தன்மைக்கும் இடையில் தர்க்கவாதம்போல வசனங்கள் கூர்மையாக இருக்கும். அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பட வெளியீட்டின்போது மிகப் பெரிய சோதனையை அவள் அப்படித்தான் சந்தித்தது. வெளியான ஒரு வாரத்தில் அனைத்துத் திரையரங்குகளிலிருந்தும் படப் பிரதி திரும்பி வந்துவிட்டது. ஆறு மாதம் கழித்து அந்தப் படத்தை சென்னை சஃபையரில் காலைக் காட்சியாக மட்டும் நான் வெளியிட்டேன். மிருணாள் சென் அந்தப் படத்தைப் பாராட்டியிருந்தார். தமிழில் இப்படியான படம் வந்தது ஆச்சரியம் என்று சொல்லியிருந்தார். பாரதிராஜாவும் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். எந்த மாதிரியான வேட்கைகளுடன் தேடலுடன் நான் சினிமாவுக்கு வந்தேனோ அதைத் திரும்பிப் பார்க்க வைத்தது அவள் அப்படித்தான் என்றார் அவர். பாரதிராஜா, மிருணாள் சென் இருவரது பேச்சையும் விளம்பரப்படுத்திப் படத்தை வெளியிட்டோம். நிறையப் பேர் வரத் தொடங்கினார்கள்.

    உடலைச் சுட்ட படைப்பு

    இந்தப் படத்தை எடுத்ததில் ருத்ரய்யா பொருளாதார விஷயத்தில் நிறையப் பாதிக்கப்பட்டார். ஒரு பத்திரிகை நேர்காணலில் அவரிடம் அவள் அப்படித்தான் படத்தின் மூலம் கையைச் சுட்டுக் கொண்டீர்களா? என்ற கேள்விக்கு, உடலையே சுட்டுக்கொண்டேன் என்று பதில் சொல்லியிருப்பார். ஆனாலும், அவள் அப்படித்தான் படம் மூலம் அவருக்குத் திரையுலகில் ஆதரவுகளும் குவிந்தன. ஒரு படைப்பு உடனடியாக மக்களைக் கவரா விட்டாலும், பொருளாதாரரீதியாகப் படைப்பாளிக்கு லாபத்தைத் தராவிட்டாலும், அது நல்ல படைப்பாக இருந்தால், காலம் கடந்து ஏற்றுக்கொள்ளப்படும் என்பதற்கு உதாரணம் அவள் அப்படித்தான்.



    சுஜாதாவின் 24 ரூபாய் தீவு கதையில் நடிக்க கமல்ஹாசன் உடனடியாக கால்ஷீட் கொடுத்தார். ஒரு பாட்டுடன் நின்றுபோனது. அடுத்து ராஜா என்னை மன்னித்துவிடு. அதற்கும் நாயகன் கமல்ஹாசன்தான். அறிவிப்போடு நின்றுவிட்டது. அதற்குப் பிறகுதான் கிராமத்து அத்தியாயம். இளையராஜா, பஞ்சு அருணாச்சலம் போன்றோரின் முழு ஒத்துழைப்பு இருந்தாலும், ருத்ரய்யாவிடம் எதிர்பார்க்கப்பட்ட தரத்தில் அந்தப் படம் வரவில்லை.

    அதற்குப் பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து 1983-84-ல் திரும்பவும் படம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு, ரஜினியைக் கதாநாயகனாக மனதில் கொண்டு, கடலோரக் கிராமத்தை மையமாக வைத்து ஒரு கதையை எழுதினேன். ருத்ரய்யா நினைத்ததுபோல நட்சத்திரங்கள் கிடைக்கவில்லை. அந்தக் கதைதான் பின்னர் பாரதிராஜா இயக்கத்தில் கடலோரக் கவிதைகள் படமாக வந்தது.

    சிவாஜி கணேசனை பீஷ்மர் கதாபாத்திரமாக்கி 3-டி தொழில்நுட்பத்தில் மகாபாரதக் கதையை எடுக்க விரும்பினார். அதுவும் சாத்தியமாகவில்லை. ரகுவரனை வைத்து டிஎஸ்பி 7, சுஜாதா கதை - திரைக்கதை. அதுவும் பூஜையோடு நின்றுவிட்டது.

    தோல்வி அடைந்த முயற்சிகள்

    நீண்ட இடைவெளிக்குப்பின், ஷேக்ஸ்பியரின் ரோமியோ-ஜூலியட் கதையைத் தற்காலச் சூழலில் மியூஸிக்கலான ஒரு திரைப்படமாக எடுக்கலாம் என்று முடிவுசெய்தோம். ஏ.ஆர். ரஹ்மான்தான் இசை என்று முடிவுசெய்தோம். வைரமுத்துவிடமும் பேசினோம். ஒளிப்பதிவாளராக பி.சி. ஸ்ரீராமை முடிவுசெய்து, அவரைத் தொடர்புகொண்டோம். அவர் 6 மாதம் கழித்துச் செய்யலாம் என்றார். நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால், வணிகரீதியில் சிலரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அதை ருத்ரய்யா விரும்பவில்லை. அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. சினிமாவின் வணிகரீதியான நடைமுறைகளில் அவர் தொடர்ந்து முரண்பாடுடையவராக இருந்தார். அதனாலேயே நிறைய வாய்ப்புகளைத் தவறவிட்டார். ஒரு இடதுசாரி சினிமாக்காரராக சினிமாவை ஆயுதம் என்று நம்பியவர் அவர். அபூர்வமான மனிதர். தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டிய, நிறைய நல்ல படைப்புகளைத் தந்திருக்க வேண்டிய இயக்குநர் ருத்ரய்யா. அந்த வாய்ப்பைத் தமிழ் சினிமாவும் இழந்துவிட்டது; அவரும் இழந்துவிட்டார்.

    - கே. ராஜேஸ்வர், அவள் அப்படித்தான், பன்னீர்புஷ்பங்கள், கடலோரக் கவிதைகள் போன்ற படங்களின் கதாசிரியர்; அமரன், கோவில்பட்டி வீரலட்சுமிஉள்ளிட்ட படங்களின் இயக்குநர்.

    தொகுப்பு: ஷங்கர் | படம் உதவி: ஞானம் | ஓவியம்: சீனிவாசன் நடராஜன்
    gkrishna

  13. Likes Russellmai liked this post
  14. #1468
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Dear Mr. Vasudevan (Neyveli),

    Wish you many more happy returns of the day.

    Regards,

    R. Parthasarathy

  15. #1469
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    வாசு சார்

    இந்த ஸ்டில் எந்த திரைப்படம் -
    gkrishna

  16. #1470
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    அது 'ஆயிரத்தில் ஒருத்தி' பட ஸ்டில். கமலும், ஜெயசுதாவும்.

    ஏன்... பாட்டாக வீடியோவையே பார்த்து விடுங்களேன். பால்லாவும் இசையரசியும் பின்னிய இன்னொரு பாடல்.

    நினைத்ததை முடிப்பது
    கிடைத்ததை ரசிப்பது
    என்றும் ஆனந்தம்

    நெருக்கத்தில் மயக்கத்தில்
    அணைப்பது சுவைப்பது
    இன்பம் பேரின்பம்

    வாழ்க்கை வாழ்வே
    வாழ்நாள் வளர்கவே

    நினைத்ததை முடித்து கிடைத்ததை ரசித்து விட்டீர்கள் கிருஷ்ணா.

    Last edited by vasudevan31355; 21st November 2014 at 09:43 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  17. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •