Page 189 of 401 FirstFirst ... 89139179187188189190191199239289 ... LastLast
Results 1,881 to 1,890 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1881
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நெஞ்சில் ஆடும் பூ ஒன்று என்ற திரைப்படம் 1978-79 கால கட்டத்தில் சிலோன் வானொலி நிலையத்தில் கேட்ட பாடல்
    இந்த படம் விஜயகுமார் ராதா சலுஜா என்று நெட் இல் போட்டு உள்ளது இது சரியா தவறா என்று தெரியவில்லை
    மேலும் இந்த படம் வெளியானதா என்று தெரியவில்லை இளைய ராஜா இசை


    கர்நாடக சங்கீத ராகங்களில் அமைக்கப்பட்ட ராஜாவின் பாடல்அமிர்தவர்ஷிணி ராகத்தில் அமைக்கப்பட்டு, ஜானகி - ஜெயச்சந்திரன் பாடிய பாடல்.

    மீண்டும் மீண்டும் கேட்க, அப்படி என்ன விசேஷம்?

    சில பாடல்களில் மட்டுமே மிக மென்மையான நிதானம் கூடும். 'வானம் எங்கே மேகம் எங்கே' அப்படியொரு பாடல்.

    பல்லவி, இரு சரணங்கள் மற்றும் இரு இடையீடு இசைக்கோர்வைகள் அனைத்தும் மிக மென்மையாக, மிக நளினமாக மிதக்கின்றன. ஆரம்பம் பேஸ் கிடாரோடு ஆரம்பித்து ஒவ்வொரு இசைக்கருவியாக சேர்ந்து வேறொரு தளத்திற்கு போக ஆரம்பிக்கும் போது, குழுவின் கோரஸ் சேர்க்கிறது.

    கவுன்ட்டர் பாயிண்ட் உத்தியில் இசைக்கப்பட்டது என்று தோன்றும் வண்ணம் அந்த கோரசுடன் ஜானகி லீடில் சேர்ந்து பாட, பாடல் மெதுவே எடை குறைந்து லேசாகிறது. நம் மனமும்.

    பல்லவி முடிந்து முதல் இடையீடு இசையில் ஆரம்பிக்கும் ஒரு பிரமாத வயலின் பிட் முடிந்ததும் மீண்டும் கோரஸ். இந்தப் பாடலின் அற்புதத் தன்மைக்கு முக்கிய காரணிகளில் ஒன்று கோரஸ். ராஜா கோரசை வயலின் ஆர்கெஸ்ட்ரா போன்றே உபயோகித்திருக்கிறார்.

    அவரது பாடல்களில் வரும் விரிவான வயலின் ஆர்கெஸ்ட்ரா இசையை ஏறக்குறைய கோரசுக்கும் ஜானகிக்கும் பிரித்து பின்னணி-லீட் என்று அமைத்திருக்கிறார்.

    முதல் இடையீடு இசை முடிந்து ஜெயச்சந்திரன் 'விண்மீன்கள் தாலாட்ட' என்று ஆரம்பிக்கும்முன்னால் வரும் குழல் இசை வழக்கம் போல் ஒரு பாரில் முடியாமல் இரண்டு பார் வரை நீள்கிறது.

    இரண்டாம் இடையீடு இசையில் காம்போ ஆர்கனை அடுத்து வரும் ஓர் வயலின் ஆர்கெஸ்ட்ரா மனதை தடவ, கோரஸ், அடுத்து ஜானகியின் ஹம்மிங் உருக்குகிறது. மிக மிக எளிமையான ரிதம்.

    ஆளரவமற்ற இரவின் தனிமையில் கேட்டுப் பாருங்கள் - விழிகளின் அடைப்பில் மனம் திறப்பதை உணர்வீர்கள்.

    http://Vaanam Enge Megam Enge TamilWire.com.mp3

    இந்த படத்தில் மேலும் நல்ல பல பாடல்கள் உள்ளன

    மலேசிய வாசுதேவன் குரலில் 'ஒரு மூடன் கதை சொன்னான் '



    மேலும் ஜானகி பாலா குரல்களில்

    லா ஆ லலலல் லா ஆ லலல்ல லலலாலல்லலலலலல
    கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
    கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
    ப்ரீத்தி என்று பேரைச் சொன்னால்
    ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
    ஏதேதோ எண்ணம் வந்ததோ
    கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

    இந்த சுகம் சொல்ல மொழி ஏது
    இன்ப ரசம் பொங்கி வரும்போது
    உந்தன் வசம்தானே இளமாது

    தேனில் ஊரும் பூச்செண்டு
    தென்றல் கொஞ்சும் நாள் கண்டு
    ஆனந்தம் தானாக என்னை தேடி வந்ததோ
    கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
    ப்ரீத்தி என்று பேரை சொன்னால்
    ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
    ஏதேதோ எண்ணம் வந்ததோ
    கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

    கன்னம் என்னும் கிண்ணம் அழகாக
    கொண்டு வரும் வண்ணம் எதற்காக
    ஓவியங்கள் தீட்டும் எனக்காக

    கண்ணில் ரெண்டு மீன் ஆட
    காதல் ஓடை நீர் ஆட
    தூங்காமல் போராட
    உந்தன் ஆசை வந்ததோ
    லாலாலலல் லா லலல லாஆ

    கங்கை நதி வந்து கடல் சேரும்
    மங்கை நதி மன்னன் மடி சேரும்
    மஞ்சள் நதி எங்கும் வழிந்தோடும்

    நெஞ்சில் ஆடும் பூ ஒன்று
    நானும் சூடும் நாள் இன்று
    பாசத்தில் நேசத்தில் இந்த உள்ளம் துள்ளுதோ
    கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

    ப்ரீத்தி என்று பேரைச் சொன்னால்
    ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
    ஏதேதோ எண்ணம் வந்ததோ
    கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
    லா ஆ லலலல் லாஆ லலல்ல ல்ல்லாலல்லலல்லலல
    ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

    http://www.divshare.com/download/15865598-804
    gkrishna

  2. Likes Russellmai, madhu liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1882
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    கிருஷ்ணாஜி

    எனக்கு இன்னும் தென் சென்னை மட்டும்தான் ஓரளவு பழக்கம். ஆதம்பாக்கம் ஜெயலக்ஷ்மி தியேட்டர் அறுபதுகளில் லலிதா டாக்கீஸ் என்ற பெயரில் டெண்ட் கொட்டகையாக இருந்து (கல்யாணியின் கணவன், அல்லி படங்கள் ரிலீஸ் ஆச்சு) பின் கட்டிடமாக எழுந்தது. இன்னமும் இருக்கு...( சவாலே சமாளி இரண்டாவது வாரம் இங்கே வந்தது. இதய வீணை வெள்ளியன்று ரிலீஸ் ஆகி ஞாயிறு முதல் இங்கேயும் ஓட ஆரம்பித்தது), பரங்கிம்லை ஸ்டேஷன் பக்கத்தில் பல நாள் கட்டடமாக எழுந்த மதி தியேட்டர், ஆலந்தூர் விக்டோரியா ( மத்தியான ஷோ மலையாளப் பட ஸ்பெஷல் ),நங்க நல்லூர் ரங்கா, மூவரசம்பட்டு காமாட்சி, வேளச்சேரி ராஜலட்சுமி முதல்... பல்லாவரம் ஜனதா ( அப்புறமா தேவி) , லக்ஷ்மி ( உலகம் சுற்றும் வாலிபன் முதல் மலையாள தச்சோளி அம்பு வரை எந்தப் படம் ஓடுது என்பதை எல்லா புற நகர் ரயில் நிலையத்து கேண்டீன் பக்கத்து தூணில் இருக்கும் போஸ்டரைப் பார்த்தாலும் தெரிந்து கொள்ளலாம் ), குரோம்பேட்டை வெற்றி, தாம்பரம் எம்.ஆர்., வித்யா, நேஷனல் ( திருவிளையாடல், எங்க வீட்டுப் பிள்ளை ரெண்டுமே பிச்சுகிட்டு ஓடியதாக நினைவு )...

    அப்போதெல்லாம் இரும்புலியூர் லெவல் கிராசிங் பக்கத்தில் ஒரு தியேட்டர் உண்டு. ( இப்போது தாம்பரம் தாண்டி பைபாஸ் ரோடு மேம்பாலம் இருக்கும் இடம் ). அதில் புதுப் படங்கள் ரிலீசாகி ரெண்டு மூணு வாரத்தில் வந்து விடும். டிக்கெட் சுலபமாக கிடைக்கும். சோஃபா Rs.1.25-தான். நோ மூட்டைப் பூச்சி. மீனம்பாக்கம் ஜெயின், தாம்ப்ரம் கிறிஸ்துவக் கல்லூரி மாணவர்கள் கூடும் இடம்...

    அது ஒரு கனாக்காலம்..

  5. Likes gkrishna liked this post
  6. #1883
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அருமை மது ஜி
    இரும்புலியூர் திரை அரங்கு அனு என்று நினைவு
    gkrishna

  7. #1884
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like




    பாலா வாணி குரல்களில் இடையில் மெஹ்பூப இசை எல்லாம் வரும் .மெல்லிசை மன்னர் இசை கோர்வை பல ட்யுன்கள் உள்ளடக்கிய பாடல்

    என் யோக ஜாதகம் நான் உன்னை சேர்ந்தது
    இன்ப லோக நாடகம் உன் உறவில் காண்பது
    உன் அழகு அல்லவோ என்னை அடிமை கொண்டது
    தேன் அமுதம் அல்லவோ நான் அள்ளி உண்டது

    பொன் வண்ண புஷ்பங்கள் உன் ஆடை ஆக
    அதில் தென்றல் நீந்தட்டும் குளிர் ஓடையாக !
    மை சிந்தும் கண்ணுக்குள் உந்தன் மேனி ஆட
    இந்த சொர்க்க தீவுக்குள் சுகம் கொடி தேட !


    கடல் நீலம் கொண்டு ஜாலம் காட்டும் கருவிழிகள்
    எந்த காலம்தோறும் பாலம் போடும் உன் விழிகள்


    என் பத்து விரல் தழுவ தழுவ
    உன் முத்து உடல் துவழ துவழ இதமோ
    என் கட்டழகன் குலவ குலவ
    கை தொட்ட இடம் குளிர குளிர
    சுகமோ சுகமோ சுகமோ


    தத்தைக்கொரு மெத்தை என்று தோளிரண்டும் ஆட
    வித்தைகளின் அர்த்தங்களை நீ எடுத்து கூற
    இரவோ பகலோ மடி மேலே
    வருவேன் விழுவேன் கொடி போலே
    இதழோ இடையோ பரிமாறு
    இதுவோ அதுவோ விளையாடு


    இரவெல்லாம் இன்பம் என்னும்
    பொய்கை இங்கே பொங்கும்
    நம் அங்கம் நீராட்ட
    எண்ணம் எல்லாம் உன் வண்ணம் பாராட்ட
    தங்கத்தை வைரம் சந்திக்கும் நேரம் ஆசைகள் ஆயிரம்

    உலகெல்லாம் உன்னை சுற்றி கண்டேன்
    கண்ணா மன்னா என் உள்ளம் தள்ளாட
    மங்கை என் கை உன் மாலை என்றாட
    Last edited by gkrishna; 5th September 2014 at 11:37 AM.
    gkrishna

  8. #1885
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கண்ணே பாப்பா எஸ்வி சார் அவர்களின் விளம்பரம் சில நினைவலைகள் - http://sivamgss.blogspot.in/


    தற்செயலாக இந்தப் படம் வசந்த் தொலைக்காட்சியில் மத்தியானமாப் போட்டாங்க. கறுப்பு வெள்ளைப்படம் தான். ஆரம்பம் கொஞ்சம் சொதப்பல் தான். கே.ஆர். விஜயா குற்றாலத்தில் ஊர் சுற்றி (?) பார்க்க வரும் முத்துராமனின் பின்னணியே தெரியாமல் அவரிடம் தன்னை இழந்ததாகக் காட்டி இருப்பது அபத்தத்தின் உச்சகட்டம். என்ன இருந்தாலும் இளம் வயதுப் பெண் இப்படியா ஏமாறுவாங்க? ஆனால் இம்மாதிரிப் பெண்களை அந்தக் காலங்களில் (படம் அறுபதுகளில் வந்திருக்கணும்) "அபலை" என்ற பட்டம் சூட்டி இரக்கம் காட்டி மகிழ்வார்கள். அப்படியே இதிலும் நடக்கிறது. பகவதிபுரம் தான் தன்னோட ஊர்னு கே.ஆர். விஜயாவை ஏமாத்திப் பாதியிலேயே விட்டுட்டுப் போறார். அந்த ஊரிலேயே ஸ்டேஷன் மாஸ்டர் வி.எஸ்.ராகவன் உதவியுடன் தங்கி இருந்த விஜயா வர ஒவ்வொரு ரயிலிலும் முத்துராமனைத் தேடிக் கடைசியில் தனக்குக் குழந்தை பிறந்து ஐந்து வருடங்களுக்குப் பின்னர் தற்செயலாக ஒரு ரயிலில் காண்கிறார். ஆனால் முத்துராமன் அவரைத் தெரியாது எனச் சொல்லி விடுகிறார்.

    தன் தந்தையிடம் குழந்தையைச் சேர்ப்பிக்கச் சொல்லி விஜயா கடிதம் எழுதி வைத்துவிட்டுச் செத்து விடுகிறார். உறவினர் அனைவரும் குழந்தையை ஏற்க மறுக்க அது எப்படியோ ரயிலில் ஏறிச் சென்னை வருகிறது பெற்றோரைத் தேடி. வந்த குழந்தை எப்படியோ பிச்சை எடுத்துப் பிழைக்கும் கும்பலிடம் சேர்ந்து கொள்கிறது. குழந்தையை ஆதரிக்கும் சந்திரபாபு அதன் பெயரில் வாங்கிய லாட்டரிச் சீட்டிற்கு லக்ஷ ரூபாய்ப் பரிசு விழ ஆரம்பம் ஆகிறது விறுவிறுப்பு.

    குழந்தையாக நடித்திருப்பது பேபி ராணியாம். நல்லா இயல்பா நடிக்கிறது. அதை விட நல்லா "ஓ" னு அழுகிறது. அழுகை வெகு இயல்பு. அதிலும் லாட்டரிச் சீட்டைக் களவாட வருபவர்களைச் சரியாகக் கணித்து அவர்களிடமிருந்து தப்பிப்பது; வழியில் சந்திக்கும் நடிகை மனோரமா, உபந்நியாசகர் வேடத்தில் இருப்பவர் வி.கே.ராமசாமி, ரிக்க்ஷாக்காரர், குப்பத்துக்காரர்கள் இத்தனை பேரையும் சமாளிக்கும் விதம் நன்றாகவே படமாக்கப்பட்டுள்ளது. நம்பியாரை முதலில் நம்பி அவருடன் செல்ல நினைக்கும் குழந்தை பின்னர் தப்பி விடுகிறது. கடைசியில் ஒரு வழியாக போலீஸ் கமிஷனர் சுந்தரராஜனிடம் வந்து சேர்ந்து உண்மையைச் சொல்கிறது.

    குழந்தையை நம்பியாரிடம் போய் இருக்கச் சொல்லும் சுந்தரராஜனிடம் மாட்டேன்னு சொல்லுகிறது. பின்னர் நம்பியார் நல்லவர் தான் எனத் தெரிந்து கொண்டு அவரிடம் போகிறது. அவர் மனைவியாக வரும் விஜயகுமாரிக்குக் குழந்தை இல்லாததால் இந்தக் குழந்தையிடம் பாசமழை பொழிகிறார். முத்துராமன் பெண்களை ஏமாற்றிப் பிழைக்கும் கும்பலில் வேலை செய்கிறார். (அந்தக் காலத்திலேயே ஆன்டி ஹீரோவாக நடிச்சிருக்கார் முத்துராமன். )மனோகர் தான் தலைவர். குழந்தைக்குப் பரிசு கிடைத்திருப்பதும், அதன் பெற்றோர் படமும் தினசரிகளில் வரக் குழந்தையிடமிருந்து பணத்தைப் பிடுங்கத் தயாராகின்றனர் வில்லன் மனோகர் குழுவினர். அதற்காக டி.கே.பகவதியின் மகளான கல்பனா (இதுவும் கே.ஆர்.விஜயா)வை குழந்தைக்குத் தாயாக நடிக்கச் சொல்ல பின்னர் நடப்பது தான் க்ளைமாக்ஸ். பி.மாதவன் இயக்கம். கதை கோர்வையாகச் சொல்லப்பட்டிருப்பதோடு சம்பவங்களும் முன்னுக்குப் பின் முரண் இல்லாமல் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

    நம்ம வாசு சார் பாகம் ஒன்றில் சுசீலாவின் அருமையான பாடல் 'தென்றலில் ஆடை பின்ன ' இன்றைய ஸ்பெஷல் பதிவில் இட்டு இருந்தார் .தொடர்ந்து கார்த்திக் சார் சில மலரும் நினைவுகள் இட்டு இருந்தார் .

    சுசீலாவின் ' சத்திய முத்திரை கட்டளை இட்டவன் நாயகன் ஏசுவின் வேதம்' , 'கண்ணே பாப்பா கனி முத்து பாப்பா ' பாடல்கள் மிகவும் பிரபலம் . விஜயகுமாரி யின் ஒப்பனை யார் என்று தெரியவில்லை சின்ன பொண்ணா காண்பிக கோண வகிடு எடுத்தா போதும் னு இயக்கனுர் மாதவன் கட்டளை போல இருக்கு

    சூப்பர் ஊ ஊ ஊ



    இந்த குழந்தை பேபி ராணி பேசும் தெய்வம்,திருடன் போன்ற படங்களில் கொள்ளை அழக்காக இருக்கும் . ஆனால் ஒன்று அழுதால் ஒ ஒ வென்றே அழும்


    ராஜநாயகம் அவர்கள் தன்னுடைய கட்டுரையில் கண்ணே பாப்பா சந்திர பாபு பற்றி இவ்வாறு சொல்லுகிறார்

    'கண்ணே பாப்பா ' சந்திர பாபு நடிக்கும் போது கேசுவலா ஒரு சின்ன ஹம்மிங் செய்கிறார் .
    ஹிந்துஸ்தானி ! ஹிந்துஸ்தானி க்ளாசிகல் !
    பண்டிட் ஜஸ்ராஜ் ஜோக் ராக ஆலாபனை ஆரம்பிப்பது போலிருந்தது .

    மெஹ்தி ஹசன் கஜல் பாடல் “ZINDAGI MERE SAFI PYAARU KIYAA KARUTHEGU..

    ”என்ன ஒரு சௌஜென்யம் . என்ன ஒரு அற்புத குரல் .

    மெஹ்தி ஹசனின் இந்த பாடலை கேட்கும்போது ஏனோ எப்போதும் சந்திரபாபு ஞாபகம் வரும் .
    சரியான சூழல் மட்டும் இருந்திருந்தால் பாபு பெரிய கஜல் பாடகர் ஆகி இருப்பார் .

    அசோகமித்திரன் என்னிடம் ஒரு முறை சொன்னார் . "சந்திர பாபுவுக்கு ஆன்மீக தேடல் இருந்தது . அதற்கான வழி காட்ட, அவரை நெறிப்படுத்த சரியான குருநாதர் கிடைக்கவில்லை "
    Last edited by gkrishna; 5th September 2014 at 12:57 PM.
    gkrishna

  9. #1886
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    படித்ததில் பிடித்தது



    அமரர் கே.எஸ்.ராஜா பற்றிய ஒரு ரசிகனின் நினைவலைகள்.- யாழ் சுதாகர்

    'தூங்க வைப்பதல்ல வானொலி அறிவிப்பு
    உற்சாகம் பொங்க வைப்பது தான்
    உயிர்த்துடிப்பான அறிவிப்பு' என்று...

    எழுபதுகளில் எழுந்து வந்த
    மின்சாரத் தமிழே... வணக்கம் ! ...

    வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்
    ஆவலுடன் கூடியிருக்கும் எங்கள்
    வானுயர்ந்த ரசனைகள் வற்றாத வரை...

    உங்களை
    மறக்க முடியுமா அய்யா ?

    சென்னைக்குச் சுற்றுலா சென்று திரும்பிய
    எங்கள் ஊர் ரசிக முகங்களிடம்...
    எம்.ஜி.ஆர்., சிவாஜியைப் பார்த்தீர்களா ? என்று
    என் விசில் வயதுகளில் நான் விசாரித்ததுண்டு.

    பத்து வருடங்கள் கழித்து நான் இந்தியாவுக்கு வந்திருந்தபோது...
    இந்திய நண்பர்கள் என்னிடம் கேட்ட கேள்விகளில்
    எனக்கு இமய வியப்பைக் கொடுத்தது எது தெரியுமா ?

    நீங்கள் கே.எஸ். ராஜாவைப் பார்த்திருக்கிறீர்களா ?
    அவர் எப்படி இருப்பார் ?

    ------------------

    மின்னல் வேகம்...

    ஆனாலும் வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொள்ளும்படியான
    தெளிவான உச்சரிப்பு...

    இந்த இரண்டும் இணைந்து ஜொலித்த ஒரு பிறவி அறிவிப்பாளர்
    உங்களைப்போல்... இனி பிறக்க முடியுமா?...

    உங்கள் அருமையை சுருங்கச் சொல்லி...
    விரிய விளங்க வைக்க இப்படியும் சொல்லலாம்.

    ஒரு எம்.ஜி.ஆர்....
    ஒரு கண்ணதாசன்...
    ஒரு சிவாஜி...
    ஒரு டி.எம். சௌந்தரராஜன்...
    ஒரு கே.எஸ்.ராஜா...

    தனித்துவமாக நடிக்கும் திறமை இருந்தாலும் புது முகங்கள்
    சில காட்சிகளிலாவது...சிவாஜியின் பாதிப்பில் சிக்கிக் கொள்வதைப் போல
    முதன் முதலாக ஒலிவாங்கிக்கு முன்னே நிற்கும் அறிவிப்பாளர் பலரை...
    தொப்பி அணிந்து வரும் உங்கள் தோழமைக்குரல்
    அப்பிப் பிடித்து ஆட்சி செய்வதை அவதானித்திருக்கிறன்.

    பேசாதவர்களைப் பேச வைத்த..
    பார்க்காதவர்களைப் பார்க்க வைத்த...
    நடக்காதவர்களை நடக்க வைத்த...
    சித்தர்களைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ஆனால்... ஓடாததை எல்லாம் ஓடவைத்த சித்தரை
    நேரில் பார்த்தேன்.

    உங்களைத் தான் சொல்கிறேன் !

    இந்தியாவில் ஓடாத படங்கள் இலங்கையில்
    உங்கள் மந்திர உச்சாடனம் கேட்டதால்
    100 நாள்.. வெள்ளி விழா... என வெற்றி நடை போட்டனவே...
    அதைத் தான் சொல்கிறேன்...

    இந்தியாவிலும் கூட பின்னணியில் இருந்த பல படங்கள்...
    திரை விருந்து நிகழ்ச்சிகளில்
    உங்கள் 'தங்கக் குரல் 'கட்டி விட்ட 'தாயத்து' மகிமையால்
    சிங்க நடை போட்டு
    விநியோகஸ்தர்களை வசூல் மழையில் நனைத்ததைப் பற்றிய
    வியப்புச் செய்திகளையும்
    பத்திரிகைச் செய்திகளில் படித்திருக்கிறேன்.

    உங்கள் உற்சாக குரலுக்காக மட்டுமன்றி அந்த வார நிகழ்ச்சியில்
    புதிதாக நீங்கள் செய்யப்போகும் ஒட்டு வேலைகளையும்,
    விளம்பர சாதுர்யங்களையும் தவறாது ரசிப்பதற்காக
    சலிக்காத ரசிக வேட்கையுடன்
    வானொலிப் பெட்டிக்கு அருகில் காத்துக் கிடந்தேன் என்பதை
    அறிவீர்களா ராஜா ?

    நடிகர் திலகத்தின் 'எங்கள தங்க ராஜா' படத்துக்கு
    நீங்கள் விளம்பரம் வாசித்தபோது

    எங்கள் என்று குதூகலமாக ஆரம்பித்து...

    தங்க என்ற இடத்துக்கு வரும்போது
    குரலில் குழைவு கூட்டி அவசரமாக நெகிழ்ந்து..

    ராஜா என்று கம்பீரமாக முடிப்பீர்களே...

    அன்று கேட்ட அந்த 'தங்க'
    இன்றும் என் செவியோரங்களில் மங்காமல் தங்கி விட்டது.

    'நான் ஏன் பிறந்தேன்' படத்தில்
    கே.ஆர்.விஜயாவிடம் எம்.ஜி.ஆர் பேசுவதாக வரும்

    'அழறவங்களை சிரிக்க வைக்கிறதும், சிரிக்கிறவங்களை சிந்திக்க
    வைக்கறதும் தான் என்னோட லட்சியம்...'
    என்ற வசனத்தை மட்டும் தனியே பிரித்தெடுத்து...

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களே உங்கள் இலட்சியம் என்ன ?
    என்று நீங்கள் பேசிவிட்டு
    அந்த இடத்தில் கொண்டு வந்து
    லிங்க் கொடுப்பீர்களே... அடடா !

    நீயா, குரு, நிறம் மாறாத பூக்கள். பட்டாக்கத்தி பைரவன், மீனவநண்பன், என்று பல படங்களுக்கு... நீங்கள் செய்து காட்டிய
    இது போன்ற ரேடியோ கிராபிக்ஸை எல்லாம்
    இன்றும் கூட என் செவிகள் அசை மீட்டு ரசிப்பதுண்டு.

    ஈர்ப்புத் தமிழே... எனக்கு மட்டும்
    இந்த ரகசியம் சொல்வீர்களா ?

    'சந்திர வதனன் 'எம்.ஜி.ஆரின்
    காந்தச் சிரிப்பைக் கண்டதும் வந்திடும் உற்சாகம்...
    உங்கள் சுந்தரக் குரலால்
    எம்.ஜி.ஆர் என்று சொன்னதைக் கேட்டதும் வந்ததே எப்படி ?

    ஈர்ப்புத் தமிழே எனக்கு மட்டும்..
    இந்த ரகசியம் சொல்வீர்களா ?

    கவியரசர் கண்ணதாசன் காலமானார் என்ற சேதி அறிந்தவுடன்
    மூச்சிரைக்க ஓடி வந்து...
    இலங்கை வானொலி இசைத்தட்டுக் களஞ்சியத்துக்குள் பார்வை பதித்து...

    உங்களுக்கே இயல்பான தேர்ந்த அவசரத்துடன்
    கண்ணதாசன் எழுதிய முதல் இசைத் தட்டைத் தேடிப்பிடித்து...

    இன்னும்... இன்னும்... அவர் கவிப்புலமைக்கு
    மகுடம் சூட்டிய இசைத் தட்டுக்களை எல்லாம் அள்ளிக்கொண்டு

    அவசர அவசரமாக அன்றைய திரை விருந்து நிகழ்ச்சியை
    அரசவைக் கவிஞருக்கு கண்ணீர் அஞ்சலியாக்கி...

    அயல்நாட்டு வானொலிகளையும் முந்தி நின்றீர்களே...!

    அறிவிப்பு பாணியில் மட்டுமன்றி
    உழைப்பிலும்...
    கடமையிலும்...
    தமிழன் என்ற துடிப்பிலும்...
    உங்களுக்கு இருந்த வேகத்தை
    அன்றைய நிகழ்ச்சியில் உணர்ந்து நெகிழ்ந்தேன்.

    யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில்
    யாழ்தேவிக்காக காத்திருந்த பயணிகள் மத்தியில்
    எதிர்பாராதவிதமாக உங்களை இனங்கண்டு...

    இன்ப அதிர்ச்சிக்குத் திரைபோடத் தெரியாத பாமரன் போல்
    உங்கள் பக்கம் பாய்ந்து வந்து...
    ரசிகன் என்ற அடைமொழியுடன் அறிமுகம் செய்து கொள்கிறேன்.

    புன்னகையுடன் அங்கீகாரம் தருகிறீர்கள்.

    அந்த அங்கீகாரமும், உங்கள் எளிமையும் தந்த தைரியத்தில்
    அதிக உரிமை எடுத்துக் கொண்டு அளவளாவுகிறேன்.

    தகரம் வேய்ந்த திரைஅரங்குகளின் பெயர்களையும்
    ஸ்டைலோடு சொல்லி அவற்றிற்கு
    சிகரகம்பீரம் கொடுக்கும் உங்கள் சிறப்புக் குரல் பற்றி -
    (இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்குமோ என்ற அங்கலாய்ப்புடன்) பட்டியல் போட்டுப் பாராட்டுகிறேன்.

    நீங்கள்... நெகிழ்வது தெரிகிறது...

    அதற்குப் பிறகு நிறையவே பேசினீர்கள்.
    எண் ஜோதிடம் பற்றியும் பேசினோம்.
    உங்கள் பிறந்த தேதி கேட்டேன்
    சொன்னீர்கள்.

    (அடடா நீங்களும் எட்டா? இந்த விஷயத்தில் உங்களை ஒத்திருப்பதை உள்ளுக்குள் உரத்து மகிழ்கிறேன்.)

    புகையிரத நிலைய பூபால சிங்கம் புத்தகக் கடை...

    சிவராசா எழுதிய எண் ஜோதிட நூலை
    என்னிடம் வாங்கிய நீங்கள்...
    முகவரி தந்து கடிதம் போடச் சொல்கிறீர்கள்..

    யாழ்தேவி புறப்படுகிறது...

    அன்றைக்கு மட்டும் யாழ்தேவியின் கம்பீரம்
    சற்று கூடியிருப்பதாகவே எனக்குத் தெரிகிறது.

    உள்ளே... நீங்கள் அல்லவா ?

    அதற்குப் பிறகு... ஓரிரு வருடங்கள் கழித்து...
    ஈச்சமோட்டை சனசமூக நிலையம் நடத்தப்போகும்
    பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை நீங்கள்
    தொகுத்து வழங்க இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.

    இதற்கு முன்பு ஒரு முறை வீர சிங்கம் மண்டபத்தில்
    உங்கள் போட்டி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள முயன்று
    முடியாமல் போனது நினைவுக்கு வந்தது.

    இருந்தாலும் நம்பிக்கையுடன்
    நடுவர்களிடம் பெயர் கொடுத்தேன்.

    போட்டியில் பங்கேற்கும் நூற்றுக்கணக்கான
    நேயர்களில் என்னையும் ஒருவனாக தேர்ந்தெடுத்தார்கள்.

    மேடையில் எனது முறை வருகிறது...

    போட்டியின் ஆரம்பத்தில் என்னைப் பற்றிய மேடை அறிமுகத்துக்காக
    என்னிடம் சில கேள்விகள் கேட்கிறீர்கள்.

    ராஜாவுடன் ஒலிவாங்கி பிடித்துப் பேசுகிறோம் என்ற
    உயர மிதப்பில் உற்சாகமாக பதில்களை சொல்லுகிறேன்...

    சுதாகர்... உங்கள் பொழுது போக்கு என்ன ? என்று கேட்கிறீர்கள்.

    எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்து ரசிப்பது என்கிறேன்.

    கரகோஷத்தில் ஈச்சமோட்டை அதிர்கிறது.

    கரகோஷத்திற்காகத் தானே எம்.ஜி.ஆர் பெயரைச் சொன்னீர்கள் சுதாகர் ?
    மறுபடியும் என்னைப் பேச வைக்க விரும்புகிறீர்கள்.

    கரகோஷத்திற்காக நான் அவர் பெயரைச் சொல்லவில்லை. வானொலி உலகில் எப்படி ஒரே ஒரு கே.எஸ்.ராஜா இருக்க முடியுமோ அது போல மக்கள் திலகமாக திரை உலகில் ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் இருக்க முடியும்... என்று துவங்கிய என் எம்.ஜி.ஆர் புராணத்தில் சாமர்த்தியமாக உங்கள் பெயரையும் நுழைத்த பெருமிதத்துடன் பேச்சை முடிக்கிறேன்.

    இரண்டு மடங்கானது கரகோஷம்!.

    நெல்லியடி மகாத்மா திரையரங்கில்...
    'உலகம் சுற்றும் வாலிபன்' வெளிவருவதற்கு சில தினங்கள் முன்பு...
    அப்படம் நகரங்களில் ஓடும்போது நீங்கள் வழங்கிய வானொலி விளம்பரத்தை ஒலிநாடாவில் பிடித்து வைத்திருந்து,
    வேறொரு படத்தின் இடைவேளை சமயத்தில் அதை ஒலிக்கச் செய்ததை எதிர்பாராதவிதமாக கேட்டபோது உங்கள் ரசிகனாக துள்ளி குதித்ததையும்,

    சுமார் 15 ஆண்டுகள் கழித்து சென்னை கமலா திரையரங்கில் ஏதோ ஒரு படத்தின் இடைவேளையில்... ஆடியோ விளம்பரங்களின் நடுவில் எதிர்பாராதவிதமாக உங்கள் மின்னல் தமிழைக் கேட்டு அந்த 20 நொடிகளும் எங்கள் கந்தர் மடம் வீட்டுக்குள் நான் கால் பதித்ததையும் -

    சீனி மாமாவிடம் வாங்கிய அவர் உயரத்தில் பாதி நீளம் கொண்ட பழங்காலத்து ரேடியோ பெட்டியின் பேசும் முகத்தை முத்தமிட்டதையும் -

    உங்கள் குரல் நின்றுபோனதும் மீண்டும் வெறுமைக்குள் வந்து விழுந்ததையும் இங்கு சொல்லாவிட்டால்....

    வேறு எங்கு சொல்வது ஐயா ?

    அதற்குப் பிறகு....
    1986 என்று நினைக் கிறேன்.

    நீங்கள் சென்னை விவித்பாரதியில் இசை மலர் நிகழ்ச்சியை வழங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.

    சென்னையில் திரைப்படப் பத்திரிகையாளனாக நான் பணியாற்றி கொண்டிருக்கின்றேன்.

    டி.எம். சௌந்தரராஜன், சிவகுமார், கமல்ஹாசன் என்று கலையுலக சாதனையாளர்களை செவ்வி கண்டு எழுதிய நான்...

    அந்த வரிசையில் எங்கள் மண்ணைச் சேர்ந்த உங்களைப் பற்றியும் எழுதிக் குளிர ஆசைப்பட்டு -

    எங்கெல்லாமோ தேடி அலைந்து...

    கடைசியில் தங்கக் குரலின் தங்குமிடம் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ளமாடி வீடு என்கின்ற தகவல் அறிந்து உங்களை நாடி வந்து செவ்வி கண்டேன்.

    இசை மலர் நிகழ்ச்சியில்
    உங்கள் ஊஞ்சல் தமிழை ரசித்தவர்கள் இதயம் கனிந்து அனுப்பிய ஆயிரக்கணக்கான பாராட்டு மடல்களையெல்லாம் உங்கள் இல்லத்தில் ஆசையோடு அடுக்கி வைத்திருந்தீர்கள்.

    எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வானொலியில் ஒலித்த உங்கள் வர்த்தக விளம்பரங்களையெல்லாம் ஒலிநாடாவில் பதிவு செய்த வைத்திருந்து...

    நீங்கள் இந்தியாவில் இருப்பதை அறிந்ததும் அந்த ஒலிநாடாவை உங்களுக்கு அனுப்பி வைத்த தமிழ்நாட்டு ரசிகர் ஒருவரைப் பற்றி என்னிடம் பெருமிதத்தோடு சொல்லி நெகிழ்ந்தீர்கள்.

    ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அந்த ஒலிநாடாவை எனக்காக ஒலிக்கச் செய்து என்னையும் பத்து வருடங்கள் பின்னோக்கி அழைத்து சென்று பரவசப்படுத்தினீர்கள்.

    1987, ஜூலை 27ம் தேதி, மாலை 6.30 மணி.

    சென்னை மியூசிக் அகாடமியில் என் இசைத் தோழன் உதயா வழங்கும் இன்னிசை மழை நிகழ்ச்சி.

    அரங்கு வழிந்த கூட்டம்.

    வணக்கம் என்று சொல்லி உங்கள் பாணியில் கரங்களை உயர அசைத்தவாறே மேடையில் தோன்றுகின்றீர்கள்.

    நீங்கள் மேடைக்கு வந்ததும் சொல்லி வைத்தது போல அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று கரகோஷம் செய்து உங்களுக்கு மரியாதை செய்கிறார்கள்.

    நீங்கள் உணர்ச்சிப் பெருக்குடன் உங்கள் கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றி... 'எனக்கு போடப்பட்ட மாலை.... உங்களுக்கு போடப்படவேண்டிய மாலை'... என்று சொல்லி ஆடியன்ஸ் மத்தியில் தூக்கிப் போடுகிறீர்கள்...

    அந்த நிகழ்ச்சியின் இடைவேளையில் - மேடையின் பின்புற வாயிலில் நின்று கொண்டிருந்த உதயாவை ஒரு ரசிகர் நெருங்குகிறார்.

    நீங்கள் தானே இந்த இசை நிகழ்ச்சியின் பொறுப்பாளர் ?

    ஆமாம்.... உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்கிறார் உதயா.

    கலைந்து போய் வாரப்படாத தலையுடனும், கசங்கிப் போன ஆடையுடனும், கலையாத ஆர்வத்துடனும் காணப்பட்ட அந்த ரசிகர் உடனே உதயாவின் கரங்களைப் பற்றுகிறார்.

    'கே.எஸ் . ராஜாவை நேரில் பார்க்கணும்னு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு வந்திருக்கிறேன். அவரோட சில நிமிஷங்களாவது பேச ஆசைப்படும்றேன். தயவு செய்து ராஜாகிட்டே என்னை கூட்டிட்டுப் போய் அறிமுகப்படுத்திவைங்க...' என்று கக்கத்தில் இருக்கும் மஞ்சள் பை நழுவுவது தெரியாமல் உதயாவை கெஞ்சுகிறார் அந்த ரசிகர்.

    உடனே அந்த ரசிகரை கே.எஸ். ராஜா இருக்குமிடத்திற்கு அழைத்துச் செல்கிறார் உதயா.

    திரை நட்சத்திரங்களின் நடுவில் நின்று கொண்டிருந்த ராஜாவை நெருங்கி அந்த ரசிகரைப் பற்றி சொல்லி அறிமுகப்படுத்துகிறார் உதயா.

    உடனே... ராஜா அந்த ரசிகரை சேர்த்து அணைத்துக் கொள்கிறார்.

    ' நம் இருவரையும் ஒரு போட்டோ எடுங்கள்' என்று அருகில் நின்ற புகைப்படக் கலைஞரிடம் கட்டளையிடுகிறார்.

    தோழமையுடன் அந்த ரசிகருடன் அளவளாவுகிறார்.

    அறிவிப்பு தீபத்தை தரிசித்த திருப்தியுடன் திருவண்ணாமலை திரும்புகிறது.

    இந்த செய்திகளையெல்லாம் பின்பு உதயா என்னிடம் சொன்ன போது இலங்கைத் தமிழனாக என்னுள் பெருமிதம் பெருக்கெடுத்தது.

    வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்
    ஆவலுடன் கூடியிருக்கும் எங்கள்
    வானுயர்ந்த ரசனைகள் வற்றாத வரை...

    உங்களை
    மறக்க முடியுமா அய்யா ?

    -யாழ் சுதாகர்
    gkrishna

  10. Thanks Russellmai thanked for this post
  11. #1887
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    படித்த தகவல்

    நடிகர் திலகம் பாடுவதாக வரும் அந்தப் பாடலை வழக்கம் போல டி.எம் எஸ்ஸைப் பாட வைக்காமல் வேறொரு பாடகரைப் பாட வைத்தார்
    மெல்லிசை மன்னர் எம். எஸ்.வி.

    மிகவும் உணர்வு பூர்வமான ஒரு சோகப்பாடல் அது. ஆனாலும் அந்தப் பாடகர் மிகவும் சிறப்பாகப் பாடியதால் மெல்லிசைமன்னருக்கு திருப்தி.
    சிவாஜியும் அந்த குரலை ஏற்றுக் கொன்டார்.சிவாஜி வாயசைத்து நடிக்க அந்தப் பாடல் காட்சி படமானது.
    ஆனால் அந்தப்பாடல் காட்சியை திரையில் போட்டுப் பார்த்த போது பாடகரின்குரல்,சிவாஜியின் நடிப்பு எல்லாமே நன்றாக இருந்தும் ,
    ஏதோஒன்று குறைவது போலத் தோன்றியது.மெல்லிசைமன்னருக்கும் அந்தக் காட்சி போட்டுக் காட்டப்பட்டது.

    ஆமாம் சிவாஜியின் செழுமையான நடிப்போடு அந்தக்குரல் ஒட்டவில்லை என்றார்எம்.எஸ்.வி.
    பாடல் காட்சியை படமாக்கி முடித்து விட்டோமே இனி என்ன செய்வது ?என்று எல்லோருக்குமே குழப்பம்.

    அந்தக் காலத்தில் இன்றைக்கு இருப்பதைப் போன்ற அதி நவீனதொழில் நுட்பவசதிகள் இல்லை.
    எனினும்,எம்.எஸ்.வி. யோசித்துப் பார்த்தார்.திடீரென ஒரு எண்ணம் அவர் மூளையில் மின்னலிட்டது.
    உடனே டி.எம்.எஸ் அவர்களை ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்தார்.அந்தப்பாடலுக்கு சிவாஜி நடித்த காட்சியை திரையில் ஓட விடும்படி சொன்னார்.

    அதில் சிவாஜியின் வாய் அசைவைப் பார்த்து...அதற்கு ஏற்ற படி அந்தப்பாடலைப் பாடும்படி டி.எம்.எஸ்ஸிடம் வேண்டுகோள் விடுத்தார்.
    மிகவும் சவாலான ஒரு வேலை தான்.
    ஆனால் டி.எம்.எஸ், சிவாஜியின் வாய் அசைவையும் முக பாவங்களையும் நன்கு கவனித்துக் கொண்டே அந்தப்பாடலைப் பாடிமுடித்தார்.
    மெல்லிசைமன்னர் ஓடி வந்து டி.எம்.எஸ்ஸை கை கொடுத்துப் பாராட்டினார்.

    இந்தப்பாடல் எம்.எஸ்.வி, டி.எம்.எஸ் இருவருக்கும் ஒருசவாலான அனுபவம் மட்டுமல்ல.... வித்தியாசமான அனுபவமும்கூட.

    வழக்கமாக டி.எம்.எஸ் பாடிய பாடலைக் கேட்டு அந்தப் பாடலுக்கு ஏற்ப சிவாஜி வாய் அசைப்பார்.

    ஆனால் இந்தப் பாடலைப்பொறுத்தவரை சிவாஜியின் வாய் அசைவைப் பார்த்து அதற்கு ஏற்ப டி.எம்.எஸ் பாடினார்.

    டிஜிட்டல்,ஸ்டீரியோ, நவீன டிராக் சிஸ்டம் போன்ற அதி நவீனவசதிகள் இல்லாத எழுபதுகளில்
    கருவிகளை நம்பாமல் திறமையையும் தன்னம்பிக்கையையும் மட்டும் நம்பி

    இந்த சாதனையைப் படைத்த இருவரும் தமிழ்த் திரை இசையின் அதிசயங்கள்!

    இந்த இசை அதிசயங்களின் கூட்டணியில் பதிவான அந்தய பாடல் எது?என்று கேட்கின்றீர்களா?

    'கௌரவம்' படத்தில் இடம் பெற்ற 'பாலூட்டி வளர்த்த கிளி'என்ற பாடல் தான் அது.


    ஆனால் இதே செய்தியை ஜெயா டிவி தேன் கிண்ணம் நிகழ்ச்சியில்
    நிகழ்ச்சியை வழங்கிய ஜாக்கி 'முதலில் இந்த பாடலை முதலில் திரு டி எம் எஸ் அவர்கள் சிங்கப்பூர் பயணம் சென்றதால் மெல்லிசை மன்னரே பாடினார் என்றும் சிவாஜி அவர்களுக்கு இந்த பாடலுக்கு மெல்லிசை மன்னரின் குரல் அவ்வளவாக எடுபடவில்லை என்றும் எனவே மீண்டும் திரு டி எம் எஸ் அவர்களே பாடி ரெகார்ட் செய்தார்கள் என்றும் கூறினார்





    டீ.எம்.எஸ் பற்றி மெல்லிசை மன்னர் இப்படிச் சொன்னார் "கோடி ரூபா குடுத்தாலும் அபசுரமாப் பாடத் தெரியாது அவருக்கு"

    பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
    பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
    நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
    நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
    செல்லம்மா எந்தன் செல்லம்மா செல்லம்மா எந்தன் செல்லம்மா

    சட்டமும் நானுறைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்
    சட்டமும் நானுறைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்
    பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பாக்குதடி
    பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பாக்குதடி
    செல்லம்மா எந்தன் செல்லம்மா
    பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
    நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
    செல்லம்மா எந்தன் செல்லம்மா

    நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்
    நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்
    வேதனைக்கு ஒரு மகனை வீட்டினிலே வளர்த்து வந்தேன்
    வேதனைக்கு ஒரு மகனை வீட்டினிலே வளர்த்து வந்தேன்
    செல்லம்மா என்தன் செல்லம்மா செல்லம்மா எந்தன் செல்லம்மா
    பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
    நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
    செல்லம்மா எந்தன் செல்லம்மா

    ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ
    ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ
    தீயினிலே இறங்கி விட்டான் திரும்ப வந்து தாழ்பணிவான்
    தீயினிலே இறங்கி விட்டான் திரும்ப வந்து தாழ்பணிவான்
    சத்தியம் இது சத்தியம் செல்லம்மா எந்தன் செல்லம்மா
    பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
    நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
    செல்லம்மா எந்தன் செல்லம்மா செல்லம்மா எந்தன் செல்லம்மா
    gkrishna

  12. Likes Russellmai liked this post
  13. #1888
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    காயத்ரி திரை படத்தில் இடம் பெற்ற காட்சி
    ரஜினி ,ராஜசுலோச்சனா,அசோகன் இவர்களுடன் இருக்கும் இன்னொரு நடிகை ராஜி அவர்கள் . இவர்கள் பற்றி மேலான தகவல்கள் இருந்தால் பதிவிடுமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன்
    gkrishna

  14. #1889
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் ஆல் குட் ஆஃப்டர் நூன்.. கொஞ்சம்பிஸி எனில் வரவில்லை..வ்ரவில்லை எனில் “ஒன்றும் தெரியாத” பையனாக இருப்பேன் என நினைக்கவேண்டாம் ராதாசலூஜா கொஞ்சம் வித்யாச அழகு.. நடிப்பு என்று பார்த்தால் கொஞ்சம் கஷ்டம் தான்..கிருஷ்ணா ஜி..உங்க்ள் பதிவுகள், அனைவரின் பதிவுகளையும் ஒவ்வொன்றாக படித்துக்கொண்டிருக்கிறேன்.ஈவ்னிங்க் வர்றேன்.. அந்த ராஜி தெரியலை..

  15. #1890
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ந.தியின் பாலூட்டி வளர்த்த கிளி பாட்டுக்கு தாங்க்ஸ்..க்ருஷ்ணா ஜி.. நான் அறியாத தகவல் அந்தப்பாடகர் யார்..

    நான் இல்லாத போது சு.எ.சு டிஸ்கஸ் செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்பதை...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •