Page 138 of 401 FirstFirst ... 3888128136137138139140148188238 ... LastLast
Results 1,371 to 1,380 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1371
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ceekay sir

    கௌரி மனோஹரி வெரி rare சாங்

    some of the Songs that have made an emotional impact on us
    gkrishna

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1372
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தாங்க்ஸ் க்ருஷ்ணா ஜி..யாதோன் கி பாராத்.. பற்றிய எழுத்தோவியத்திற்கு.. யாதோன்கி பாராத்..தங்கத்தில் ஒரு வாரமோ இருவாரமோ போட்டுவிட்டு பின் பரமேஸ்வரியில் ஆறு மாதத்திற்கு மேல் ஓடிய படம்..ஐ திங்க் அண்ணா தான் கூட்டிக்கிட்டுப் போனார்னு நினைக்கிறேன்..ஓமேரி சோனி ரொம்ப்பப் பிடிக்கும்..

  5. #1373
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //some of the Songs that have made an emotional impact on// அந்த த்ரெட்ல எழுதியிருக்கா /எழுதியிருக்கேனா என்ன. நினைவில்லையே. க்ருஷ்ணா ஜி..

    ராகமாலிகா வா.. நன்றி..எனக்குத் தெரியாது இதுவரை..

  6. #1374
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    dear ceekay sir

    கௌரி மனோஹரி படம் இனியவன் னு ஒரு மியூசிக் டைரக்டர்
    புதிதாக வந்தார் னு நினைவு
    வலையில் தேடினேன்
    எனக்கு கிடைத்த தகவல்
    2 படங்கள் மியூசிக் செய்தார் னு போட்டு இருக்கு

    திருட்டு சிறுக்கி ( 2010 )
    சிரித்தால் ரசிப்பேன் ( 2009 )
    gkrishna

  7. Likes chinnakkannan liked this post
  8. #1375
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    டியர் சி கே சார்

    என்னை விட்டால் யாருமில்லை
    கண்மணியே உன்னை கை அணைக்க
    என்னை விட்டால் யாருமில்லை
    கண்மணியே உன்னை கை அணைக்க
    உன்னை விட்டால் வேறொருத்தி
    எண்ணமில்லை நான் காதலிக்க
    முத்து முத்தாய் நீரேதற்கு
    நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு
    என்னை விட்டால் யாருமில்லை
    கண்மணியே உன்னை கை அணைக்க

    யானையின் தந்தம் கடைந்தேடுத்தார்ப் போல்
    அங்கமெல்லாம் ஓர் மினுமினுப்பு
    அறுத்த மரத்தின் இலைகளில் ஒன்று
    வந்து நின்றார் போல் ஒரு நினைப்பு
    (என்னை விட்டால் )

    காலழகெல்லாம் காட்டிய வண்ணம்
    கலை அழகே நீ நடந்தாயோ
    மேலழகெல்லாம் மூடியதென்ன
    கண் படும் என்றே நினைத்தாயோ
    (என்னை விட்டால் )

    ராத்திரி நேரம் ரகசிய கடிதம்
    எழுதிட வேண்டும் இடையோடு
    பூத்திரி குறைத்து ஏற்றிய தீபம்
    பொன்னொளி சிந்தும் இரவோடு
    (என்னை விட்டால் )

    நாளை நமதே படத்தில் இந்த பாட்டு நினைவில் இருக்கா சி கே சார்

    யாதோன் கி பாராத் படத்தில் இந்த பாட்டிற்கு உள்ள சீன் என்ன சி கே சார்

    gkrishna

  9. Likes chinnakkannan liked this post
  10. #1376
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஓ மேரி சோனியாங்க..எனக்கு நினைவில்லை..ஆனா தமிழ்ல்ல கொஞ்ச்சம் கூடுதல் கவர்ச்சியாக இருக்கும் என நினைவு கிருஷ்ணா சார்

  11. #1377
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஐ திங்க் இது படத்தில அடிஷனல் பாட்டு தானே..

    ஆராதானாவும் தொடர்ந்தாற்போல நினைவுக்கு வருதே ஜி.. ( நான் பார்த்த முதல் ஹிந்திப் படம்..! மதுரை மீனாட்சி வித் அக்காக்கள்! ஆனா புரிலைன்னு தூங்கிட்டேன் ஃபர்ஸ்ட் டயம்!)

    கோராகா கஸ்கா யே மன் மேரா
    குங்குனாரே
    சந்தா ஹை து
    அப்புறம் ஃப்ரீதா ஜலால் ஒரு பாட்டு.. அந்தக்கால..(அப்புறம் ஒருசீரியலில் பார்த்து பயந்து விட்டேன்)

    நாளை நமதே மாதிரி சிவகாமியின் செல்வனும் - ஹிந்தி ப் படத்தைத் தழுவினாலும் ஒரிஜினலாகப் பாடல்கள் போட்டிருப்பார்கள்..(கோபால் சி.செ பற்றி ஒரு ரிஸர்ச்சே ப்ண்ணியிருக்கிறார்)

  12. #1378
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    பட்டிகாட்டு பொன்னையா 1973

    நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து மக்கள் திலகம்,கலைச்செல்வி,ராஜஸ்ரீ நடித்து வந்த மாமா திரை இசை திலகம் இசை அமைப்பில் வெளி வந்த படம்

    பாலா ஜானகி குரல்களில் படத்தில் மக்கள் திலகமும்,ராஜஸ்ரீ யும் நடித்துருப்பார்கள்

    பாடல் வரிகளை கவனித்தால் கண்ணதாசனா ? வாலியா னு ஒரு குழப்பம் இருக்கும்


    இரவுகளை பார்த்ததுண்டு உறவுகளை பார்த்ததில்லை
    துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்
    சொல்லத்தான் வார்த்தையில்லை
    இரவுகளை பார்த்ததுண்டு உறவுகளை பார்த்ததில்லை
    துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்
    சொல்லத்தான் வார்த்தையில்லை


    செவ்விதழ் கிண்ணம் சிந்திடும் முத்தம் முத்தம்
    அள்ளி இரைத்தால் என் பசி தீரும் தீரும்
    உள்ளவை எல்லாம் உனக்கே சொந்தம்
    அழைத்தால் வருவேன் ஆனந்த மஞ்சம்
    ஆஹா ஹ லாலா ரரர இம்ம்ம்ம்ம்
    இரவுகளை பார்த்ததுண்டு உறவுகளை பார்த்ததில்லை
    துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்
    சொல்லத்தான் வார்த்தையில்லை


    கண் படும்போது கதைகளை கேட்டேன்
    கை படும்போது கலைகளை பார்த்தேன்
    கண் படும்போது கதைகளை கேட்டேன்
    கைபடும்போது கலைகளை பார்த்தேன்
    மனதிலிருந்து மடியினில் விழுந்தால்
    சுகமோ சுகமென சொர்க்கத்தை காண்பேன்
    ஆராரோ அறிவோமே தீராதோ தெரியோமே
    இரவுகளை பார்த்ததுண்டு உறவுகளை பார்த்ததில்லை
    துடித்தேன் தவித்தேன் உனைத்தான் நினைத்தேன்
    சொல்லத்தான் வார்த்தையில்லை

    கிட்ட தட்ட சிவகாமியின் செல்வன் 'எதனை அழகு கொட்டி கிடக்குது எப்படி மனது தட்டி பறிக்குது ' பாடலை போன்ற ஸ்ரிங்கார பாடல்


    ஆடியோ அல்லது விடியோ கிடைக்குமா எஸ்வி சார் /மது ஜி

    gkrishna

  13. Thanks Richardsof thanked for this post
  14. #1379
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஐ திங்க் இது படத்தில அடிஷனல் பாட்டு தானே..

    ஆராதானாவும் தொடர்ந்தாற்போல நினைவுக்கு வருதே ஜி.. ( நான் பார்த்த முதல் ஹிந்திப் படம்..! மதுரை மீனாட்சி வித் அக்காக்கள்! ஆனா புரிலைன்னு தூங்கிட்டேன் ஃபர்ஸ்ட் டயம்!)

    கோராகா கஸ்கா யே மன் மேரா
    குங்குனாரே
    சந்தா ஹை து
    அப்புறம் ஃப்ரீதா ஜலால் ஒரு பாட்டு.. அந்தக்கால..(அப்புறம் ஒருசீரியலில் பார்த்து பயந்து விட்டேன்)

    நாளை நமதே மாதிரி சிவகாமியின் செல்வனும் - ஹிந்தி ப் படத்தைத் தழுவினாலும் ஒரிஜினலாகப் பாடல்கள் போட்டிருப்பார்கள்..(கோபால் சி.செ பற்றி ஒரு ரிஸர்ச்சே ப்ண்ணியிருக்கிறார்)
    கரெக்ட் சி கே சார்
    இந்த பாட்டு ஹிந்தியில் கிடையாது

    ஆராதனா சான்ஸ் ஏ இல்லை சி கே சார்

    gkrishna

  15. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai, Richardsof, chinnakkannan liked this post
  16. #1380
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    படம் - சிவகாமியின் செல்வன். -26 ஜனவரி 1974.
    பாடல்- எத்தனை அழகு கொட்டி கிடக்குது.
    பாடலாசிரியர்- புதுமை பித்தன்
    இசையமைப்பு- மெல்லிசை மன்னர்.
    நடிப்பு- சிவாஜி-வாணிஸ்ரீ.
    இயக்கம்- சீ .வீ.ராஜேந்திரன்.

    நான் பதினைந்து வயது வயதுக்கு வந்த விடலையாய் ,மீசை முளைக்கும் பருவத்தில், இனம் பிரியா குழப்ப இன்ப உணர்வுகள் வாட்டி வதைத்த போது ,நான் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்த படம் (குடந்தை நூர்மஹாலில் வரிசையாய் ஐந்து நாட்கள்,பிறகு விரல்கள் போதாது)

    அதிலும், என் விருப்பமான ஜோடியின் எத்தனை அழகு பாடலுக்காக மட்டும்(amatory மூட்,erotic arousal எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்)இத்தனை முறை!!!!????

    ஆனால் அதே பாடலை, உலகத்தில் இன்பங்கள் பாக்கி உண்டா என்ற பருவத்தில் பார்க்கும் போதும், ஒரு உருது கவிதை, ஒரு erotic சிற்பம் (அ )சித்திரம் பார்க்கும் புத்துணர்வை தருகிறது என்றால் எழத பட வேண்டியதே.

    பொதுவாக சிவாஜி,பெண்களை விட ,பெண்களின் அம்மாக்களையே குறி வைத்தவைத்த முதல் அறுபதுகளில் இருந்து விடு பட்டு, பெண்களையும்,வாலிபர்களையும் ஈர்க்க தொடங்கி ,வசந்த மாளிகையில் ராஜாவாய் சுமதி சுந்தரியுடன் , இளைய மன்மதனாக ஜொலித்த கால கட்டம். வேறெந்த நடிகையுடன் நடித்ததை விட, வாணிஸ்ரீ.யுடன் அவர் நெருக்கம் உயர்ந்த மனிதனில் தொடங்கி நல்லதொரு குடும்பம் வரை தொடர்ந்தது.

    காதல் காட்சி என்ற போதும் பொத்தாம் பொதுவாக நடிக்காமல், பாத்திர இயல்பு படி,வித்தியாசம் காட்டி ,சூழ்நிலை, கதையமைப்பு புரிந்து நடிக்கும் சுவை ஆஹா!! அதிலும் எத்தனை variety !!!எவன் எவனையோ காதல் மன்னன் என்று அழைக்கிறோமே?இவனல்லவோ காதல் பேரரசன் என்று தோன்றும்.

    பொதுவாக erotism என்பது நமது கோவில்கள்,மத நூல்களில் கொண்டாட பட்ட போதும் ,british inhibitions காரணமாய் ,sexual slavery and deprivation இல் அகப்பட்டு, நல்ல hightened aesthetics என்று சொல்ல படும் erotic sensual intense romance என்று சொல்ல படும் காட்சிகளே எந்த இந்திய படங்களிலும் இல்லை.(அப்படியே ஒன்றிரண்டு வந்தாலும், காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் புகுந்த case தான்). எனக்கு தெரிந்த வரை இந்த Erotic genre இலும் முழு மதிப்பெண் நம் நடிகர் திலகத்துக்கே.நெஞ்சத்திலே நீ-சாந்தி, மெல்ல நட-புதிய பறவை,பலூன் காட்சி-சுமதி என் சுந்தரி, plum கடிக்கும் வசந்த மாளிகை என்று ஆயிரம் இருந்தாலும் ,இந்த குறிப்பிட்ட பாடல் erotic திலகம்.

    எத்தனை அழகு பாடலில்(ஒரே டேக்கில் படமாக்க பட்டதாம்.hats off ! ஒரு சப்பை முத்த காட்சியை 20 டேக் எடுக்கும் கலிகாலம்) முதலில் களம். தங்களுக்குள் மண பந்த ஒப்பந்தம் புரிந்த(மற்றவர்கள் அறியாமல்) ஒரு ஜோடி ஒரு மழை நிறைந்த குளிர் இரவில்,ஒரு அறைக்குள் மாட்டி, தங்களை இழக்கும் காட்சி. அவனுக்கோ இன்பத்தை சோதிக்கும் ஆர்வமும், சுவைக்க துடிக்கும் அவசரமும்,தன்னை மறந்த நிலை. அவளுக்கோ, தயக்கம் கலந்த சம்மதம், தவிக்க விடும் நாணம்,உரிமையரியா உறவின் அறியா அச்சம் என இந்த ஜோடியின் தவிப்பை, சிவாஜியும் ,வாணிஸ்ரீ யும் அற்புதமாய் expressions ,body language ,suggestive movements என்று பின்னியிருப்பார்கள்.

    முதலில் இந்த பாடலில் சி.வீ.ஆரின் colour sense and psychology யை பாராட்டியே ஆக வேண்டும்.(இதை அவர் சுமதி என் சுந்தரியிலேயே அற்புதமாக கையாண்டிருப்பார்) வாணிஸ்ரீ முதலில் ஒரு பிங்க் நிற புடவை அணிந்து அறைக்குள் வருவார். பிங்க் ஒரு வளர் சிறுமியின் பெண்மை குறியீடு. பிறகு சிவப்பு வண்ண அவசர ஆடைக்கும் மாறுவார்.சிவப்பு feeling of intense excitement ,romantic warmth ஐ enhance பண்ணும் நிறம்.ஆணுடையது வெளிர் பச்சை நிறம்.fertility ,bodily functional assurance குறிப்பது. இந்த இரண்டு நிறங்களின் இணைப்பே பாதி mood elater ஆக காரணியாகும்.

    இதை விட hero -heroine physical ஆன எவ்வளவோ சிவாஜி பாடல்கள் கூட உண்டு. ஆனால், இந்த காட்சி தந்த intensity எந்த காட்சியும் தந்ததில்லை.

    ஒரு இள விமானியை, ஒரு target நோக்கி படையெடுக்கும் adventurism ,experimentation முதலிய உணர்ச்சிகளுடன்,ஒரு அவசரம் கலந்த காம விழைவை அற்புதமாய் பிரதிபலிப்பார் NT .வாணிஸ்ரீ (AVM ராஜன் சொல்வது போல சிவாஜிக்காக பிரம்மா ஸ்பெஷல் ஆய் படைத்த கருப்பழகி) சிவாஜியுடன் இழைந்தும், தயங்கியும், உணர்ச்சி வசபட்டும், சூழ்நிலையறிந்து விலகுவதும், இறுதியில் தொடர் தூண்டுதலால் இணங்குவதும் என அற்புதமாய் NT க்கு ஈடு கொடுத்திருப்பார்.

    தன இடத்திலிருந்து எழுந்த உடன் சிவாஜி தன pant அய் suggestive ஆக கையால் சிறிதே உயர்த்தும் காட்சி(ஆண்டவன் கட்டளை அழகே வாவிலும் இது உண்டு) , பிறகு ஒரு இலக்கில்லாமல் விலகும் வாணிஸ்ரீயை ஒரு குறிப்பின்றி ,ஒரு இலக்கில்லா passionate முத்தங்கள்(ஒரு awkward அவசரம் தெரியும்),பிறகு குறிப்பை உணர்த்தும் coat -stand காட்சி, திரை காட்சி என அவசர தூண்டல் ,ஓரு அனுபவமின்மையின் awkward desperation ஐ மிக அழகாக உணர்த்துவார். இதில், வாணிஸ்ரீயின் திரையை இறுக்கும் கைகள்,என்று எல்லாமே suggestive erotism .physical ஆக மிக குறைவான ,தேவையான அணைப்புகள் மட்டுமே இருக்கும்.

    பிறகு மஞ்சத்தில் ஓரளவு தயார் நிலைக்கு ஆளானாலும் ,பிறகு அரை மனதுடன் தயங்கி விலகி, தலையணையை மார்புடன் வைத்து காத்து கொள்ள எண்ணும் வாணிஸ்ரீயை ,ஒரு இரையை குறி வைக்கும் இறுதி ஆவேசத்துடன் சிவாஜி அணைத்து இணங்க வைப்பார்.

    ஆபாசம், கவர்ச்சிக்கு விடை தெரியாமல் இன்றும் முழிக்கும், நம் தமிழ் நாட்டு தாய்,தந்தை குலங்களுக்கு, இந்த காட்சியின் அழகும்,அமைப்பும், erotic hightened emotional aesthetics புரியாமல்,இந்த படத்தை கை விட்டனர்.இந்த காட்சியில்,மற்ற காதல் காட்சிகளில் இல்லாத, எந்த மிகையும் இருக்காது. சம்பத்த பட்டவர்களின் உணர்வு மிகு நடிப்பாற்றல்,அழகுணர்ச்சி மிகுந்த suggestive shots &gestures தவிர.,

    Last edited by Gopal.s; 28th August 2014 at 03:26 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  17. Thanks Russellmai, gkrishna thanked for this post
    Likes Richardsof liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •