Page 25 of 197 FirstFirst ... 1523242526273575125 ... LastLast
Results 241 to 250 of 1967

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 8

  1. #241
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    மன்னவன் வந்தானடி படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு மலைக்க வைக்கிறது. திருவருட்செல்வரை விட, ராஜபார்ட்டை விட அமோக வரவேற்பு. வெள்ளி முதலே ஒவ்வொரு காட்சிக்கும் கணிசமான ஆட்கள் கண்டு களித்திருக்கின்றனர் என்றால், இன்று மாலைக் காட்சிக்கு மிகப் பெரிய அளவில் மக்கள் வந்த காட்சியை மறக்கவே முடியாது. ஆனால் இம்முறை காவல் துறை வாகனம் ஒன்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலிஸாரும் ரசிகர்களின் ஆர்வத்திற்கு தடை போட்டு விட்டார்கள். அதனால் தியேட்டர் வளாகத்திலேயே ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    தவிர்க்க முடியாத சூழ்நிலையால் இடைவேளை வரை மட்டுமே காண முடிந்தது. பல நண்பர்களும் பல்வேறு அலுவல்கள் காரணமாக வர முடியாத சூழல். பார்த்தவரை ரசிகர்கள் அமர்க்களம் இருந்தது என்றாலும் கூட இம்முறை பாடல் காட்சிகளை தவிர மற்ற காட்சிகளில் ரசிகர்களின் அன்பு தொல்லை இல்லை என்பதால் படத்தை ரசித்து பார்க்க வந்தவர்களுக்கும் அது சாத்தியமானது.

    இப்போது பார்க்கும் போது கூட படத்தில் வரும் வசனங்கள் இன்றைய அரசியல் சூழலுக்கும் பொருந்தி வருவது ஆச்சரியமே. பாலமுருகனின் பேனா அரசியல் நையாண்டியை அழகாய் செய்திருக்கிறது. "தப்பை சுட்டிக் காட்டினா உடனே அண்ணாவா", "நீங்க தொழிற்சாலையை மூடினா நான் காஞ்சி தொட்டி திறப்பேன்", வீரத்தின் விளைநிலம் வெற்றியின் பிறப்பிடம் சிவகாமியின் செல்வனின் சிஷ்யனுக்கு பயமா, என் எதிரிகளை நான் எதிர்கொள்கிறேன், "இப்போது போலீஸ் அமைச்சர் யார்? அவர் என் நண்பராயிற்றே" ,"உங்கள் ஊழல் ஆட்சியை ஒழித்துக் கட்டவே நான் வந்துள்ளேன்" என்று பல அரசியல் சரவெடிகள் 1975-ல் நிலவிய காலக்கட்டத்தை மீண்டும் கண் முன்னர் கொண்டு வந்தது. இந்த வசனங்களுக்கெல்லாம் ஏக கைதட்டல்கள்.

    ராஜஸ்தானில் யாரோ ஒருவன் பாடலுக்கு அவர் ஆட்டத்திற்கு அமர்க்களம் என்றால் காதல் ராஜ்ஜியம் எனது பாடலில் நடிகர் திலகத்தின் ஸ்டைலுக்கு அமோக வரவேற்பு. அதிலும் அந்த பாடலின் இறுதியில் மீண்டும் பல்லவி பாடும் போது ஒரு தூணின் பின்னிலிருந்து வெளிப்பட்டு இரண்டாவது வரியான அந்த காவல் ராஜ்ஜியம் உனது என்று வாயைசைத்துக் கொண்டே அந்த முகத்தை லேசாக இடது பக்கம் திருப்பி அந்த கண்ணை மட்டும் மேலேற்றி இறக்குவார். அதிர்ந்தது அரங்கம்.

    இடைவேளைக்கு பின் இன்னும் அதிகமாக நடந்திருக்கும். அதை சுவாமி, ராதா மற்றும் சந்திரசேகர் விவரிப்பார்கள்.

    அன்புடன்

    ps :சந்திரசேகர், உங்களின் தில்லானா பற்றிய பதிவு நன்று.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #242
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் முரளி சார்,
    தவிர்க்க முடியாத காரணத்தால் தங்களால் முழுமையாக அமர முடியாதது எனக்கும் வருத்தமாயுள்ளது. காரணம், நானும் முழுமையாகவே அமரவில்லையே. இருந்தாலும் அரங்கின் வெளியே நடந்த ஆரவாரங்களை ரசித்து விட்டுத் தான் சென்றேன். நிச்சயம் நாளுக்கு நாள் சென்னையில் ரசிகர்களின் ஆதரவு பெருகுவதைப் பார்க்கு்ம் போது மதுரையினை சென்னை விஞ்சி விடும் என்ற ஆவல் உண்டாகிறது. அது நடந்தால் மகிழ்ச்சியே. இன்னும் பைரவர் என்ன பாடாய்ப் படுத்தப் போகிறாரோ... நினைத்தாலே பிரமிப்பாய் இருக்கிறது. அன்று நிச்சயம் அனைத்து சாலைகளும் சாந்தியை நோக்கியே செல்லும் என்பது உறுதி.

    நான் சொன்னது போல் வின்டேஜ் ஹெரிடேஜ் அமைப்பு தன்னுடைய 19வது ஆண்டு நிறைவினை நடிகர் திலகத்தின் பங்களிப்புடன் கொண்டாடியது பாராட்டத் தக்கதாகும். மற்றொரு நாளாய் இருந்தால் அங்கும் அளப்பரை ஆரவாரங்கள் விண்ணை எட்டியிருக்கும். என்றாலும் வந்தவர்கள் அனைவரும் நடிகர் திலகத்தின் பாடல் காட்சிகளில் தம்மை மறந்து லயித்து ரசித்து திருப்தியுடன் சென்றனர். 19.06.2011 மாலை சென்னை திருமயிலை பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி வளாகத்திலுள்ள அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. திரு சுந்தர் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, திரு சர்வேஸ்வரன் அவர்கள் அருமையாக நிகழ்ச்சியை உருவாக்கி யிருந்தார். அவர்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் என் சார்பிலும் நமது நடிகர் திலகம் இணைய தள்ம் சார்பிலும் நன்றியும் பாராட்டும் உரித்தாகட்டும்.

    நிகழ்ச்சியில் இடம் பெற்ற பாடல்கள்
    பணம் - குடும்பத்தின் விளக்கு
    அன்பு - ஆடவரே உலகில், எண்ண எண்ண இன்பமே
    தூக்குத் தூக்கி - சுந்தரி சௌந்தரி
    எதிர்பாராதது - சிற்பி செதுக்காத, வந்தது வசந்தம், சிற்பி செதுக்காத
    கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - மேதாவி போலே, அழகே பெண் வடிவான
    இல்லற ஜோதி - களங்கமில்லா காதலிலே, கேட்பதெல்லாம்
    காவேரி - அன்பே என் ஆருயிரே
    கோடீஸ்வரன் - ஆசைக்கனவு பலிக்காதா, உலாவும் தென்றல்
    பாக்யவதி - ஆசைக் கிளியே
    அமர தீபம் - பச்சைக் கிளி பாடுது, துன்பம் சூழும் நேரம்
    ராஜா ராணி - மணிப்புறா, திரை போட்டு நாமே
    உத்தம புத்திரன் - முல்லை மலர் மேலே, அன்பே அமுதே, உன்னழகை கன்னியர்கள்
    தங்க பதுமை - இன்று நமதுள்ளமே
    மரகதம் - புன்னகை தவழும், கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு
    புனர் ஜென்மம் - உள்ளங்கள் ஒன்றாகி
    மங்கையர் திலகம் - நீ வரவில்லை யெனி்ல்







    நிழற்படங்கள் தொடர்கின்றன
    Last edited by RAGHAVENDRA; 20th June 2011 at 01:23 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #243
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like








    நிழற்படங்கள் தொடர்கின்றன
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #244
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like








    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #245
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    மன்னவன் வந்தானடி : சாந்தி : 19.6.2011 ஞாயிறு மாலை

    மன்னவனுக்கு மலர் அலங்காரம்



    பல டிசைன்களில் போஸ்டர்கள்





    அரங்கில் அலைகடலென கூடிய ரசிகர்கள்


    தொடரும்...

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  7. #246
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Portions of Shabash Meena.

    Funny that they screened this on our TV right after brother Joe recommended it to watch with wife a day before.

    I caught only an hour in between. What a glorious piece of comedy. Sort of pre-cursor to Rajini's Thambikku Entha Ooru, and instead of taking up the challenge, NT runs away .

    Some beautiful songs. Managed to catch Chittiram Peesuthadi, my favourite TMS ever (Don't be mislead by the serene song, but check out the chaos after it). And speaking of chaos, you (those who haven't watched it) thought Kaana Inbam is a relaxed piece walking in the park song? Check this out:



    I am getting the DVD soon
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  8. #247
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    மன்னவன் வந்தானடி : சாந்தி : 19.6.2011 ஞாயிறு மாலை தொடர்கிறது...

    மன்னவனைக் காண வந்த மறவர் கூட்டம்





    நான் நாட்டைத் திருத்தப் போறேன்...



    அரங்கம் நிறைந்த காட்சி


    தொடரும்...

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  9. #248
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    பம்மலார் சார்,

    சாந்தி அரங்கில் நடந்த மன்னவன் வந்தானடி ஞாயிறு மாலை விழாவின் புகைப்படத்தொகுப்பு நன்றாக உள்ளது. நன்றி.

    முரளி சார்,

    ஞாயிறு மாலை நீங்கள் அரங்கில் இருந்தவரை நடந்தவற்றை நிகழ்ச்சித்தொகுப்பாகத் தந்தமைக்கு நன்றி.

    ராகவேந்தர் சார்,

    மயிலை பி.எஸ்.பள்ளி அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர்திலகத்தின் காணக்கிடைக்காத அபூர்வ பாடல் காட்சிகளின் புகைப்படத்தொகுப்பு மிகவும் அருமை. வழங்கிய தங்களுக்கு நன்றி.

  10. #249
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    19.06.11 அன்று மாலை சாந்தியில் நம் Hub நண்பர்களோடு மன்னவன் வந்தாண்டி படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, நான் நாட்ட திருத்தபோறேன் பாடல் காட்சியோடு தோன்றும் NT அவர்களின் முகத்தை பார்த்தவுடன் ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டது, காதல் ராஜ்ஜியம் எனது பாடலுக்கு திரைக்கு வெகு அருகில் ரசிகர்களின் உற்சாக ஆட்டம் தொடர்ந்தது, பின்பு இவர்கள் நமது பங்காளிகள் பாடலுக்கு ரசிகர்களின் உற்சாகம் கட்டுபடுத்த முடியாத அளவுக்கு போனது, பாடலுக்கு முன் NT அவர்கள் ஸ்டைலாக Friends thankyou for accepting my invitation and honoring me with your extreem presents, thankyou
    என்று கூறி பாடலை ஆரம்பித்தபோது அரங்கம் அலறியது.

    இடைவேளை வரை வரும் தர்மராஜாவின் நக்கல் நையாண்டி கலந்த நடிப்பு சூப்பர் என்றால் இடைவேளைக்கு பின் நம்பியாரின் மாப்பிள்ளையாக வரும் NTஇன் நடிப்பு சூப்பேரோ சூப்பர், ஸ்டைலான ஸ்லிம்மான NTயை திரையில் பார்த்து எவ்வளவு நாளாயிற்று?

    மொத்தத்தில் அன்று ஒரு இனிமையான நாள்.
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  11. #250
    Senior Member Seasoned Hubber Sunil_M88's Avatar
    Join Date
    Jul 2010
    Location
    London, UK
    Posts
    1,288
    Post Thanks / Like


    Song : Poo pole un punnagaiyil from Kavari maan
    Music : Ilaiyaraaja
    Singer : SPB
    Last edited by Sunil_M88; 22nd June 2011 at 05:07 PM.

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •