Page 284 of 401 FirstFirst ... 184234274282283284285286294334384 ... LastLast
Results 2,831 to 2,840 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #2831
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vankv View Post
    quote: "என்னுடைய பதிவு கண்டவுடன் ....செல்வி வனஜா மாறி மாறி நகைச்சுவை பதிவுகளை தந்து தப்பிக்க நினைக்கிறார்கள்".


    To be honest, my sense of humour has been enhanced since I watched couple of MGR songs on TV! He was great in that, I tell you. Brilliant!
    adhukku idhu badhil illaye...

    avar ennvo "thappikka ninaikkiraar" enra vaarththaiyaip podukiraar. appadeennaa avaridam vasamaaga maattik kondirukkireergalaa?.

    indha vishayaththai yen ivvalavu lightaaga eduththuk kondulleergal enbathu enakku theriyavillai.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2832
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நெய்வேலி அமராவதி திரையரங்கம்.

    இந்த முறை வாசுதேவனுடன் சுற்றி கொண்டிருந்த போது , நான் மனதுக்குள் அழுதது, அமராவதி திரையரங்கு கல்யாண மண்டபமாய் மாறிவிட்டதை பார்த்த போதுதான். மிக சந்தோஷமடைந்தது, என் தற்போதைய வளர்ச்சிக்கு வித்திட்ட நெய்வேலி பொது நூலகத்தில் நுழைந்த போது . நெய்வேலியில் மிக பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்பேயில்லை. அமராவதி திரையரங்கில் தான் கிட்டத்தட்ட 120 நடிகர்திலகம் படங்களை பார்த்துள்ளேன். எனது 17 வது வயதில், சென்னைக்கு சென்று விட்ட பிறகும், விடுமுறையில் வரும் போது ஏற்கெனெவே பார்த்த படத்தையும் அமராவதியில் ஒரு முறையாவது பார்த்தால்தான் திருப்தி.

    அப்போது, 45 பைசா, 85 பைசா, 1.25 Rs , 1,85 Rs (மாடி ). 45,85 இல் ஆண் ,பெண் தனி தனி. குடும்பத்தோடு என்றால் 1.25,1.85 தான். மேனேஜர் நமது ரசிகர் என்பதால் மாதம் ஒரு பழைய படம், ஒரு புது படம் (3 மாசம் பழசுதான்) என்று 12-13 நாள் நம் ராஜ்யமே. அப்போது நெய்வேலி ரஷ்ய model இல் வீட்டிலிருந்து, பள்ளி, மார்க்கெட்,சினிமா theatre எல்லாமே corporation வசம்.பொதுவுடைமை. பெரியவர்களுக்கு எப்படியோ ,சிறுவர்களுக்கு சொர்க்கம்.10 வீடுகளுக்கு ஒரு foot ball ground , நல்ல stadium ,auditorium ,நூலகம் ,சைக்கிளில் சென்று sight அடிக்க வசதியாக ஆளேயில்லா double roads (ரவுண்டு டாணாவுடன் ). ஆரம்ப காலங்களில் ,85 காசு ladies Que வில் நின்று டிக்கெட் வாங்கி பார்த்து கொண்டிருந்தேன் (சுமார் 13 வயது வரை). ஆண் cue நெரிசல் நம்மளால் மாளாது. அப்பா ,வாரா வாரம் சனி, ஞாயிறுகளில் morning show ஆங்கில பட ரசிகர்.என்னை கெஞ்சி கூப்பிட்டும் போக மாட்டேன். சென்னை வந்த பிறகே, என் cousins என்னை தலித் போல நடத்தியதும், சில பெண் நண்பிகளுடன் பீட்டர் விடவும் ,ஆங்கில பட பரிச்சயம் செய்து கொண்டேன்.(கை ரேகை சாஸ்திரம் வேறு கற்றேன்-கடலைக்காக). பிறகு, ஆனந்த விகடன் பத்திரிகைக்கு agent ஆக நியமிக்க பட்டதும், என் வீட்டார் ஒரு இண்டர்வல் லில் slide போடும் விஷயத்தில் மேனேஜர் உடன் ஏற்பட்ட நல்லுறவில் எங்களுக்கு முன்னுரிமை டிக்கெட்.(Slide -அ -அம்மா,ஆ-ஆனந்த விகடன்.)

    நான், எனது அம்மா, தம்பி,தங்கைகள் நடந்தே theatre போவோம்.நான் சைக்கிள் உருட்டி கொண்டு சில சமயம். எங்கள் வீட்டில் மகாராணியாய் எல்சா (Born Free ) என்ற French Terrior .அதை தவிர படிக்காத மேதை ரங்கன் போல் ஜீனி ,கருப்பன் என்று இரு இலவச இணைப்புகள்(நாட்டு நாய்கள்.). ஜீனி உலக மகா சாது. சோறு போட்டு ஆதரித்த பாவம்-கருப்பந்தான் எங்களுக்கு மகா இம்சை. யார் எங்கே போனாலும் தொற்றி கொண்டு படுத்துவான்.எவ்வளவு ஆக்ரோஷமாய் விரட்டினாலும் விடாமல் அவனும் எங்களுடன் theatre உள்ளேயும் வந்து அத்தனை NT படங்களையும் விடாமல் பார்த்திருக்கிறான்.ஆரம்பத்தில் ஆட்சேபித்த மக்கள், பிறகு வேறு வழியின்றி (மேனேஜர் உள்ளிட்ட) அவனையும் உள்ளே விட்டு விட்டனர்.(அவன் சினிமா ஆசை முற்றி நாங்கள் இல்லாமலே தனியாகவும் சில படங்கள் பார்த்ததாக யாரோ சொல்ல கேள்வி). theatre போகும் வழியில் அந்தோனி போல் இடது கை முரடன் என் கடைசி தம்பிக்கும்,அவனை விட ஒன்றேகால் வயதே மூத்த எனது நடு தம்பிக்கும் அவ்வப்போது புனித போர் தொடங்கி , கல்லெடுத்து எரிந்து கொள்ளும் அளவு மூர்க்கத்தை எட்டும்.போஸ்ட் கம்பத்தில் மறைந்து நின்று ஏதோ துப்பாக்கி duel போல் கல் வீச்சு தாக்குதல் ஆரம்பமாகும்.அம்மா முரடனைதான் control பண்ண வேண்டி வரும்.(அவன் complaint -நான் கத்தினா ஏண்டா கத்தறேன்னு என்னை அடிக்கறாங்க. அவன் கத்தினாலும் ஏண்டா அவனை கத்த விடுறேன்னு என்னையே திருப்பி அடிக்கிறாங்க)

    காலத்தின் கோலம் பாருங்கள்- பூர்வ குடியான நான் vietnam கோபால் என்று பெயரை சுமக்க,முதல் மரியாதை குயில் போல் 90 களில் பஞ்சம் பிழைக்க வந்தோர் என் ஊர் பெயரை சுமக்கிறார்கள்.

    By the Way ,நெய்வேலி அமராவதியில் அதிக நாள் ஓடியவை வியட்நாம் வீடு, தில்லானா மோகனம்பாள். தலா 21 நாட்கள்.
    Last edited by Gopal.s; 20th April 2013 at 10:21 AM.

  4. #2833
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dear Prabhu,
    MANY MANY HAPPY RETURNS OF THE DAY. இன்றும் என்றென்றும் எல்லா வளமும் நலனும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.
    தங்களுக்காக ஒரு இனிய பாடல் ... ஸ்டைல் சக்கரவர்த்தியின் காலத்தால் அழியாத பாடல் காட்சி

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #2834
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கோபால் சார்,
    கர்நாடக இசை மூலம் பாடகர் சந்தான கோபாலன் நெய்வேலிக்குப் புகழ் சேர்த்தைப் போல் இந்த சிவாஜி கோபாலன் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையால் நெய்வேலிக்குப் புகழ் சேர்க்க உள்ளார். அந்த கோபாலனுக்கு சற்றும் சளைத்தவரல்ல இந்த கோபால். தொடருங்கள். தங்கள் நெய்வேலி நினைவுகள் எங்கள் நெஞ்சில் மெய்வேலி போட்டு தங்களை முடக்கி விடும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #2835
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    ok. Ok.
    Last edited by kalnayak; 19th April 2013 at 07:50 PM.

  7. #2836
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    கோபால் சார்,
    கர்நாடக இசை மூலம் பாடகர் சந்தான கோபாலன் நெய்வேலிக்குப் புகழ் சேர்த்தைப் போல் இந்த சிவாஜி கோபாலன் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையால் நெய்வேலிக்குப் புகழ் சேர்க்க உள்ளார். அந்த கோபாலனுக்கு சற்றும் சளைத்தவரல்ல இந்த கோபால். தொடருங்கள். தங்கள் நெய்வேலி நினைவுகள் எங்கள் நெஞ்சில் மெய்வேலி போட்டு தங்களை முடக்கி விடும்.
    நெய்வேலி சந்தானம் எங்களது family friend . அவன் அண்ணன் சந்திரமௌலி எனது classmate .

  8. #2837
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அப்புறம் என்ன ... கேக்கணுமா ... தூள் கிளப்புங்க...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #2838
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அபூர்வ நிழற்படங்கள் .... தொடர்ச்சி ...

    வயது 18 ஜாக்கிரதை... பின்னர் ... காலமெல்லாம் காத்திருப்பேன் ... இறுதியாக ஊட்டி வரை உறவு ...இப்படி வளர்ந்த படத்தைப் பற்றி நம்மில் பலர் அறிந்ததே. இப்படத்தில் முதலில் ஜெயலலிதா அவர்கள் நடித்து சில காட்சிகள் எடுக்கப் பட்டன. அப்போது எடுத்த ஷெட்யூலில் நடிகர் திலகத்தின் காஸ்ட்யூம் அட்டகாசமாக இருக்கும். ஏனோ அவற்றைத் திரையில் பார்க்க முடியாமல் போய் விட்டது. அதிலும் ஒரு கூலிங் கிளாஸுடன் ஒரு போஸ், மற்றும் விளையாட்டில் வெற்றி பெற்று ஒரு கோப்பையுடன் ஒரு போஸ் ... இரண்டும் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு பொக்கிஷங்கள்... இரண்டாவதை பொம்மை பத்திரிகை CENTRE SPREAD ஆக பிரசுரித்தது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் அதைப் பார்ப்போம். இப்போது காலமெல்லாம் காத்திருப்பேன் ஸ்டில்கள் இரண்டு நம் பார்வைக்காக ...

    ஸ்ரீதரின் நெருங்கிய நண்பர் மட்டுமின்றி நடிகர் திலகத்தின் பால் உயிரையே வைத்திருந்த ஷர்மா அவர்களுடன் ...



    பி.கே. சரஸ்வதி என்று பழைய படங்களின் டைட்டில் கார்டுகளில் நடிகையின் பெயரைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் அவர் யாரென்று பலருக்குத் தெரிந்திருக்காது. அவரும் சதனும் நடிகர் திலகத்துடன் ...



    இந்த போஸ் தான் அந்தக் காலத்தில் தனியாக அச்சிடப் பட்டு ரசிகர்களிடம் புழங்கியது. பல ரசிகர்களின் பர்ஸில் இடம் பெற்ற நிழற்படம் நடிகர் திலகம் கூலிங் கிளாஸுடன் தோன்றும் இந்த போஸ் ... அடியேன் மட்டும் விதி விலக்கா ... அது வரை பர்ஸ் வைத்திராத [அதற்கு வேலையில்லை என்பது வேறு விஷயம்] நானும் இந்த ஸ்டில் வைப்பதற்காகவே பர்ஸ் வைத்துக் கொள்ள ஆரம்பித்தேன்.

    காலமெல்லாம் காத்திருப்பேன் படத்திற்காக ஜெயலலிதா மற்றும் கே.ஆர். விஜயா பங்கு பெற்ற காட்சியின் நிழற்படம்

    Last edited by RAGHAVENDRA; 19th April 2013 at 10:22 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #2839
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு பிரபுராம் சார்,



    இன்று பகல் ஷிப்ட் முடித்து இரவு வீட்டிற்கு வந்து திரியைப் பார்த்ததும் தான் இன்று தங்களுக்கு இனிய பிறந்தநாள் என்று தெரிந்தது. தாமதமாக சொன்னாலும் என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தங்களுக்குத் தெரிவித்து மகிழ்கிறேன். தங்களை வாழ்வாங்கு வாழ வாழ்த்தி மகிழும்



    நெய்வேலி வாசுதேவன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #2840
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post

    காலத்தின் கோலம் பாருங்கள்- பூர்வ குடியான நான் vietnam கோபால் என்று பெயரை சுமக்க,முதல் மரியாதை குயில் போல் 90 களில் பஞ்சம் பிழைக்க வந்தோர் என் ஊர் பெயரை சுமக்கிறார்கள்.
    அண்ணாகாரு

    நாங்களாவது பஞ்சம் பொழைக்க உள்ளூரிலேயே நெய்வேலிக்கு வந்தோம். Foreign க்கு ஓடிப்போய் பஞ்சம் பொழைக்கல.வியட் (நாம்) கோபால். அதுவும் நல்லதுக்குதான். (நமக்கு இருக்கும் குணத்திற்கு ஊள்ளூரில இருந்தா நிறைய தர்ம அடி வாங்க வேண்டியிருக்கும் ).நெய்வேலியில வேலை செய்யிற எல்லாருமே ரிடையர்ட் ஆனதும் துண்ட தோள்ல போட்டுகிட்டு ஊரப்பக்கம், நாட்டப்பக்கம் நடையைக் கட்ட வேண்டியதுதான். எங்க தாத்தாவோட சொந்த ஊரே நெய்வேலிதாம்பா. ஊர விட்டுப் போனதுக்கப்புறம் 'கடலூர்' வாசுதேவன் அப்படின்னு ஊர மாத்திக்குவோமில்ல.
    Last edited by vasudevan31355; 19th April 2013 at 11:12 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •