Page 1 of 401 1231151101 ... LastLast
Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #1
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like

    Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

    நடிகர்திலகத்தின் புகழ்பரப்பும் திரி.. பாகம்-15 ஐ துவக்கி வைக்க என்னை அழைத்து கெளரவப்படுத்திய திரு.முரளி சீனிவாஸ் அவர்களுக்கும், திரு.ராகவேந்திரன், திரு.சிவாஜி செந்தில் மற்றும் நண்பர்களுக்கு நன்றி.

    திரு.ராகவேந்திரன் அவர்கள் குறிப்பிட்ட மாதிரி 2005 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இத்திரியில் நான் 2010-ஆம் ஆண்டுதான் இணைந்தேன். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் 2000 பதிவைக் கூடத் தாண்டவில்லை என்றாலும், அனைத்து பதிவுகளையும் படித்து, ரசிக்கும் பார்வையாளனாக என்றுமே தொடர்ந்திருக்கிறேன். சில நேரம் கச்சேரியை ரசிக்க வந்தவரை, குலுக்கலில் தேர்ந்தெடுத்து மேடையேற்றி பாடவைப்பதுண்டு. அதைப்போல், பார்வையாளனாக, ரசிகனாக இருந்த என்னை, 15-ஆம் பாகத்தைத் துவக்கி வைக்க அழைத்தமைக்கு மீண்டும் நன்றி.

    நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் இத்திரி துவக்கப்பட்டதும், நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை என்ற அமைப்பை நான் துவக்கியதும் 2005-ல் தான். அந்த வகையில் இந்த 10-ஆம் ஆண்டில் இந்த மையத்தின் 15-ஆம் பாகத்தை நான் துவக்கி வைக்க நடிகர்திலகத்தின் ஆசிதான் பின்னணியாக இருக்கவேண்டும் என்று நான் நம்புகிறேன்.

    பணி நிமித்தம் வெளியூர் சென்றதால், உடனடியாக பதிவிட்டு திரியை துவக்க ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிக்கவும். திரு.சிவாஜி செந்தில் அவர்களின் பெருந்தன்மைக்கு நன்றி.

    முதல் பதிவில் எனக்கு என்றென்றும் FAVOURITE ஆன் தில்லானா மோகனாம்பாள் சண்முகசுந்தரத்தோடு - பாகம் 15-ல் பதிவிட நண்பர்கள் அனைவரையும் வரவேற்று அழைக்கிறேன்.



    என்றும் நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியில்

    அன்புடன்,
    K .சந்திரசேகரன்.
    Last edited by KCSHEKAR; 11th February 2015 at 11:47 AM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Congratulation Mr KC Sir,

    With all our untiring efforts the glory of NT will be in the hearts of people all over the world forever.

    Now, it is time for all the veteran hubbers bury their difference to contribute as usual as in propagting the

    fame & glory of NT.


    Regards

  4. Thanks KCSHEKAR thanked for this post
    Likes kalnayak, eehaiupehazij liked this post
  5. #3
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வாழ்த்துகள் சந்திரசேகர் சார்!

    எப்போதும் போல் நடிகர் திலகத்தின் பேரில் அமைந்த இந்த பாகம் 15 திரியும் Will lead from the front என்பதில் எனக்கு ஐயமில்லை. நடிகர் திலகம் திரிதான் என்றென்றும் The Thread Of The Hub ஆக விளங்கும் என்பதை மீண்டுமொருமுறை தமிழ் கூறும் இணையதள நல்லுலகிற்கு எடுத்துக் காட்ட அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன்.

    அன்புடன்

  6. Thanks KCSHEKAR, eehaiupehazij thanked for this post
    Likes ifohadroziza, kalnayak liked this post
  7. #4
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Hearty Congratulations KCS Sir.
    Hope under your ace contributions this new thread will flourish well and reach new heights in singing the name and fame of one and only one superb star of this Universe NT
    Continuing to serve in your regime with pride. Veterans Murali Sir and Ragavendhar Sir will fortify your efforts while growing ups like me will continue the role of anil to Ramar, as already so many Bharathans are there with you!!

    regards, senthil
    Last edited by sivajisenthil; 11th February 2015 at 11:50 AM.

  8. Thanks KCSHEKAR thanked for this post
    Likes kalnayak liked this post
  9. #5
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    பரமபதம் : நடிகர்திலகத்தின் புகழேணியில் புதிய நெடுந்தொடர் படிக்கட்டு
    வாழ்க்கைத் திருவிழாவில் சாண் ஏறினால் முழம் சறுக்க வைக்கும் வழுக்குமரம்!
    பரமபதம் 1 : பாசமலர்

    பரமனின் பாதம் அடைவதற்குள் இந்த பாமர மனித வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டே !
    படிப்படியாய் கட்டங்களைக் கடந்து உச்சத்தை அடைய விழைவோம் ஆனால் எதிர்பாராத வண்ணம் நமது அறியாமையாலும் அஜாக்கிரதையாலும்
    விதியென்னும் பாம்பு தீண்டி டக்கென்று கீழே வந்து விடுவோம் முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார் என்ற வாழ்வியல் மறை புரிந்தவர்கள் மீண்டும்
    படிக்கட்டுகளில் ஏறுவர் முயற்சிகளை தொடருவர் வெற்றி மகுடம் தேடிவந்து தலையில் அலங்கரிக்கும்

    இந்த பரமபத விளையாட்டு பெரும்பாலான நடிகர்திலகம் படங்களின் அடிக்கோடு

    துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் மத்தியில் எதிர்நீச்சல் போடுவார் நடிக மன்னன் ஆனால் வஞ்சக வலைகளில் சிக்கி பாதாளத்தில் விழுந்து விடுவார். ஆனாலும் தன் முயற்சியில் தளராத விக்கிரமாதித்தனாக வேதாளத்தை வெட்டி வீழ்த்தி காடாறு மாதம் முடித்து நாடாறு மாதம் ஆண்டிட மேலே வந்துவிடுவார் !! சிலசமயம் மீண்டும் வீழாது உச்சம் தொடுவார்...சிலசமயம் மீண்டும் பாசவலை போன்ற மோசப் பாம்பு கடிபட்டு மீள முடியாத அதல
    பாதாளத்துக்கும் சென்று விடுவார் !!
    பரமபதத்தின் முதல் கட்டமாக என்றும் நமது இதயத்தை விட்டு நீங்கிடாத அமரகாவியமாம் பாசமலர் !

    வாழ்வின் முன்னேற்றக் கட்டங்களைக் கடக்கும் பாசப் பாமரன் !


    முயற்சியில் முன்னேற்றம் கண்ட பணக்கார பாசத் திலகம்







    பொறாமைப் பாம்பு தீண்டும் போது முதல் சறுக்கல்



    பாசவலைப் பாம்பு தீண்டி மீளமுடியாத பாதாளம் செல்லும் பாசநாயகண் !!



    Apparently the end of Part 1

    But....our immortal NT emerges up again in the ladder of Paramapatham to reach another height in the typical Paramapatha vilayaattu movie Thookku Thookki!!
    Last edited by sivajisenthil; 12th February 2015 at 11:19 AM.

  10. Likes Russellmai, KCSHEKAR, kalnayak liked this post
  11. #6
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    Dear kcs sir,
    my heartiest congratulations to you for starting the 15th part of our nt thread
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  12. Thanks KCSHEKAR thanked for this post
  13. #7
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    CONGRATULATIONS KC SHEKAR SIR FOR STARTING THREAD NO 15




  14. Thanks KCSHEKAR thanked for this post
    Likes Russellmai liked this post
  15. #8
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்திலிருந்து புகைப்படத்தை 15-ஆம் பாகத்தின் முதல் பதிவாக பதிவிட்டதால், அத்திரைப்படம் பற்றிய சில தகவல்களைப் பதிவிட விரும்புகிறேன். (பல மீள் பதிவாக இருந்தாலும்)

    தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தைப் பற்றி நான் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். நான் பிறந்து வளர்ந்த கிராமம் (ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், தற்போதைய திருவாரூர் மாவட்டம்) நாதஸ்வர மற்றும் தவில் வித்வான்கள் நிறைந்த ஊர். சிறு வயதில் தில்லானா மோகனாம்பாள் பார்த்துவிட்டு அதன் பின்னர் கோவில் திருவிழாக்களில் வாசிக்கும் நாதஸ்வரக் கலைஞர்களைப் பார்த்து (அவர்கள் பெரிய புகழ்பெற்ற கலைஞர்களாக இருப்பார்கள்) சிவாஜி வாசிப்பதுபோல இவர்களால் வாசிக்க இயலாது என்று ஒரு விவாதமே செய்த நினைவுகள் இன்றும் என் நினைவில் பசுமையாக நிழலாடுகிறது. என்னைப் பொறுத்தவரை First Impression is the best Impression என்பது போல, எனக்குப் பிடித்த திரைப்படங்களை வரிசைப்படுத்தச் சொன்னால் அதில் முதலிடம் பிடிப்பது தில்லானா மோகனாம்பாள் தான்.

    கடந்த 2008 ஆம் வருடம், சிவாஜி - ஒரு வரலாற்றின் வரலாறு என்ற நூலிற்காக மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் அவர்களை சந்தித்தேன். அப்போது அவர் மிருதங்கச் சக்கரவர்த்தி திரைப்படத்தைப் பற்றி குறிப்பிட்டார். மிருதங்கச் சக்கரவர்த்தி திரைப்படத்தில் சிவாஜிக்காக மிருதங்கம் வாசித்தேன். அதற்கு முன்னதாக நான் வாசித்த கச்சேரிக்கு வந்து முன்வரிசையில் வந்திருந்து அமர்ந்து நான் வாசிப்பதை கூர்ந்து கவனித்தார். திரைப்பட ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கும் என்னை வரவழைத்தார். ஒவ்வொரு ஷாட் முடிந்தவுடனும் என்ன வாத்தியார் சரியாக இருக்கிறதா என்று கேட்டுக்கொள்வார். அவருடைய Sincerity ஐ எண்ணி வியந்தேன். மிருதங்கச் சக்கரவர்த்தி திரைப்படம் வெளியான பிறகு கச்சேரிகளில் வாசிக்கும்போது பல பேர் என்னிடம் வந்து என்ன இருந்தாலும் சிவாஜி வாசித்த மாதிரி இல்லை என்று சொல்லுவார்கள். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது அவருடைய சின்சியாரிட்டியின் ரகசியம் என்று உமையாள்புரம் சிவராமன் நடிகர்திலகத்தைப் பற்றி குறிப்பிட்டார்.

    அப்போது புரிந்தது தில்லானா மோகனாம்பாளில் நடிகர்திலகத்தின் நாதஸ்வர வாசிப்பில் நாம் ஏன் ஈர்க்கப்பட்டோம் என்று.
    Last edited by KCSHEKAR; 11th February 2015 at 05:14 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  16. Thanks mappi thanked for this post
    Likes Russellmai, Harrietlgy, eehaiupehazij liked this post
  17. #9
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like

    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  18. Likes Russellmai, eehaiupehazij liked this post
  19. #10
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like



    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  20. Thanks mappi thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
Page 1 of 401 1231151101 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •