Page 9 of 13 FirstFirst ... 7891011 ... LastLast
Results 81 to 90 of 122

Thread: Why I Consider IR Unparalleled

  1. #81
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    அன்றிலிருந்து இன்றுவரை..

    ஒரு படைப்பை அதுவும் வழக்கத்திலிருந்து வேறுபட்ட கதைக்களன் கொண்ட / ஓரளவிற்கு தெளிவான திரைக்கதை கொண்ட படைப்பை தனது இசையால் அலங்கரித்துக் கொண்டெ இருப்பவர். இசைப் படைப்பாக்கக் திறனில் இம்மியளவும் குறையில்லாமல் மேலும் மேலும் தனது தரக் கோடுகளை உயர்த்திக் கொண்டெ செல்பவர். ஒருவரே.. இசைஞானி. மனதில் சட்டெனத் தோன்றிய படங்களை இங்குக் குறிப்பிடுகிறேன். இதில் விட்டுப்போன படங்களும் இருக்கலாம்.

    16 வயதினிலே
    அவள் அப்படித்தான்
    ரோசாப்பூ ரவிக்கைகாரி
    உதிரிப் பூக்கள்
    சிகப்பு ரோஜாக்கள்
    நூறாவது நாள்
    மூன்றாம் பிறை
    சலங்கை ஒலி
    தாய்மூகாம்பிகை
    முதல் மரியாதை
    ஆண் பாவம்
    சிந்து பைரவி
    நாயகன்
    அவதாரம்
    அஞ்சலி
    மை டியர் குட்டிச்சாத்தான்
    அபூர்வ சகோதர்கள்
    மௌன ராகம்
    கரகாட்டக்காரன்
    குணா
    தேவர் மகன்
    வீடு
    சந்தியா ராகம்
    சிறைச்சாலை
    குட்டி
    கருவேலம் பூக்கள்
    மறுபடியும்
    மை.ம.கா.ராஜன்
    மகாநதி
    ஹேராம்
    குரு (மலையாளம்)
    நான் கடவுள்
    பிதாமகன்
    சேது
    பாரதி
    மோகமுள்
    ஸ்ரீ ராகவேந்திரா
    இனிமேல் நாங்கதான்
    பழசி ராஜா
    நந்தலாலா
    காமராஜ்
    அழகர்சாமியின் குதிரை
    ஸ்ரீராமராஜ்யம்
    ஓநாயும் ஆட்டுக்குட்டியும்


    தமிழ்த் திரையுலகில் தனது இசையை பரந்துபட்ட படைப்பு எல்லைகளுக்கு நீட்டித்து வியாபித்தவர் ராஜா ஒருவரே. இசையமைப்பாளர் என்றாலே பாடல்களை உருவாக்குதல் என்ற சட்டகத்தை உடைத்து படமெங்கும் தனக்கே உரிய ஞான ஆளுமையால் விஸ்வரூபம் எடுத்த ஒரு இசைக்கலைஞர் ராஜாதான்.
    Last edited by venkkiram; 25th August 2014 at 10:46 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #82
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    தமிழ்த் திரையிசையில் ராகங்கள் என்ற தலைப்பில் இதுவரை இருபது கட்டுரைகளை சிறப்பாக பதிவிட்டிருக்கும் திரு சௌந்தர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    இருபதாவது அத்தியாயத்தில் கரகரப்பிரியா ராகம். .

    http://inioru.com/?p=41006

    Quote Originally Posted by T.சௌந்தர்
    தானா வந்த சந்தனமே – படம்: ஊரு விட்டு ஊரு வந்து [ 1990 ] – பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி

    செவ்வியல் இசையின் நீண்ட தூர சொந்தக்காரியான நாட்டுப்புற இசையில் தரப்பட்டுள்ள பாடல்.செவ்வியல் தன்மை குறைத்து நாட்டுற வீச்சை காட்டும் பாடல்.நீண்ட ஆராய்ச்சிகள் செய்து காட்ட வேண்டிய விசயங்களை எல்லாம் இசைஞானி இளையராஜா மிக எளிமையாக எல்லோரும் புரியும் படி செய்த மௌனப் புரட்சியின் அசைக்க முடியாத இசைக்கோலங்களில் இந்தப் பாடலும் ஒன்று. இது வெறும் புகழ்ச்சி அல்ல.
    Last edited by venkkiram; 26th August 2014 at 09:28 PM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  4. #83
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ட்விட்டரில் ஒரு அன்பர் இந்தப் பதிவினை சுட்டியிருந்தார். கலக்கலான பதிவு வினவிடமிருந்து.

    http://www.vinavu.com/2010/09/24/ilaiyaraja/


    Quote Originally Posted by வினவு
    இசை இதயத்தின் மொழி; ஆன்மாவின் கவிதை.
    .....
    அப்படி அவர் இசையில் என்னதான் இருக்கிறது? ‘வீட்டுக்கு வீடு வாசப்படி வேணும், தெருக்கூத்துக்கும் பாட்டுக்கும் தாளகதி வேணும்…’ – இயற்கையில் தாளகதி இருக்கிறது; மனித உடலின் உள் இயக்கத்தில் இருக்கிறது; மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவில் இருக்கிறது. மனித உணர்ச்சிகளுடன் ஒட்டிப் பிறந்தும் அதன் ஒரு வெளிப்பாடும் தாளம். ‘காட்டுவழி போற புள்ளே கவலைப்படாதே…’ போன்ற ராஜாவின் பழைய பாடல்களிலும், ‘பண்ணைப்புற ராசாவே, கட்டினமெட்டிது லேசா…’,. ‘நட்டுவச்ச ரோசாச்செடி ஆமா, ஆமா…’ போன்ற பாடல்களிலும் விதவிதமான தாளகதிகள் வருகின்றன. பறையின் தாள ஒலியைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, இமைக்கும் நேரத்தில் ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களின் ஆட்டம் தாளகதியாகக் காதில் பாய்கிறது. வெகு இயல்பாக ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிச் செல்கிறது.
    .....
    நாட்டுப்புற இசையோடு ஹார்மனியை இணைத்து நெய்து கொடுத்திருப்பது ‘அன்னக்கிளி’யின் சிறப்பம்சம். முதல் படத்தில் அடிவைக்கும்போதே ‘அடாஜியோ’ என்ற குறைந்த வேகத்திலமைந்த ‘அன்னக்கிளி உன்னைத் தேடுது…’ என்ற சோகப் பாடலை முயற்சித்து அவரது துணிச்சலான செயல்.”
    .....
    துணிச்சலுக்குக் காரணம் புதிய முறைகளைச் சோதனை செய்து பார்ப்பதில் அவருக்கிருந்த ஆர்வம், தன்னம்பிக்கை. ‘இளமை எனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு…’ என்ற பாடலில் திரையில் பிளாஷ் பேக்கில் கதைக் காட்சிகளாக நகர்ந்து செல்லும்போது அதன் பின்புலத்தில் ஓவர்ச்சர் என்னும் (ஓபரா இசை நாடக முன்னுரைப் பாணி – சிம்பனிக்கு முன்னோடியானதொரு வடிவம்) இசை நகர்ந்து செல்லும். ‘நிழல்கள்’ படத்தில் இந்திய இசை முறைகளைக் கையாண்டும், ‘மூடுபனி’யில் ஏற்கனவே புழக்கத்திலுள்ள ராகங்களுக்குப் பதிலாக காட்சியின் தேவைக்கேற்ப புதிதாக ‘இசை கரு’க்களை (Theme) உருவாக்கியும் காட்டினார். ‘ராஜபார்வை’யில் இந்திய, மேற்கத்திய தாளகதிகளையும், ஹார்மனியையும் சோதனைக் களன்களாக்கினார். நெசவில் டெக்ஸ்ச்சர் (இழை நயம்) என்று கூறுவார்களே, அதை இசையில் காட்டுகிறது ‘பூமாலையே தோள் சேரவா…’ என்ற பாடல். இப்பாடலின் பண்மிசைப் பண்ணாக, ஒன்றின் மீது இன்னொரு பண் உராய்வின்றி மிதந்து செல்லும் அழகைக் காணலாம். ராஜா பெரிதும் போற்றும் இசை மேதை பாக் – கை ‘பண்மிசைப் பண்ணின் (Counter Point)) தந்தை’ என்பார்கள். தந்தைக்கேற்ற தனயன்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. #84
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    திரையிசையில் பல வாத்தியக்கருவிகளின் இசையை அறிமுகப் படுத்தியவர். மேலும் முன்னரே உபயயோகப் பட்டிருந்த வாத்தியக்கருவிகளின் உபயோகத்தை பிரமிப்பூட்டும் அளவிற்கு எல்லைகளை நீட்டித்தவர்.

    லயத்தில் நினைத்தே பார்க்கமுடியாத அளவுக்கு பிரமாதமான தாளக்கட்டுகளை கட்டமைத்தவர். அவற்றை அவர் பரிசோதனை முயற்சியில் மேற்கொண்டு வெற்றிபெற்றது போல வேறு யாருமே இல்லை.

    கவனிக்கத் தக்க ஒன்று.. தாள இசையில் பொதுவாக ராஜா கையாளும் வேகம்.. ஒரு பானை - ஒரு சோறு உதாரணம் - அவரது பலவிதமான சோகப் பாடல்களில் பயன்படுத்தியிருக்கும் வேகமான தாளக் கட்டுகளை கவனுயுங்கள். "என் தாயெனும் கோவிலை.." அனுபவத்தில் மனிதனின் மிகப்பெரிய சோகம் அவனது அம்மா மரணம் தான். அதற்கு ராசைய்யா அமைக்கும் வேகத்தைப் பாருங்கள். வரலாறு ஒன்று நம்மை கடந்துபோவது கூட தெரியாமல் கடந்து செல்லும் விதம் இப்படித்தான் இருக்கும்.



    அசுரனை பலப்பல அவதாரம் எடுத்து கடவுள் அழித்திருக்கிறார் என இதிகாசங்களில் படித்திருக்கிறோம். படிப்பதில் அதன் உக்கிரம் தெரியா. ஆனால் நிஜத்தில் ரத்தமும், ஓலமும் நிறைந்திருக்கும் அந்தக் காட்சி எப்படியிருக்கும்? அதற்கும் இசைகொடுத்திருக்கிறார் ராஜா. வேறு யாராலும் இதுவரை கற்பனை செய்யமுடியாத தளங்களில் ராஜ நடை போடுவதுதான் ராஜாவுக்கான முத்திரை.



    ராஜாவின் இசையில் சொல்லப்படாத வாழ்வியல் அம்சங்களே அல்ல. சைவ மார்க்கத்தின் ஒரு உக்கிரமான பக்திநிலை. இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு சந்ததி இதை ஆராய முனைந்தால் கண்ணாடி போல பிரதிபலிக்க இப்பாடல் ஒன்று போதும்.



    இசைப் புரட்சி என்றால் அது ராஜா தான். எனது நாதஸ்வர நண்பர் சொல்லி சிலாகிப்பார் இப்படி.. "சங்கீதக் காரங்க எதையெல்லாம் மரபென்று நினைத்து வந்தார்களோ அதையெல்லாம் மெனக்கெட்டு ஆனால் போற போக்கில் உடைத்து வெளிவந்தவர் ராஜா. அதனாலேயே சங்கீதக் காரர்களுக்கு, ரசிகர்களுக்கு இவரை முழுசா எற்றுக்கொள்ள மனசு வராது. இந்த ராகம் இப்படிப்பட்ட சூழ்நிலைக்குத்தான் என்ற விதிக்கப்படாத விதியிருந்தால் அதை அந்த சூழ்நிலைக்கு முற்றும் எதிரான சூழ்நிலைக்கும் ரொம்ப அழகா உபயோகப்படுத்திருப்பார். அதுபோல, இந்த வாத்தியக் கருவி இதுபோன்ற சூழ்நிலைக்குத்தான் என்ற விதிக்கப்படாத விதியிருந்தால் அதையும் உடைத்து அம்மணமாக்கியவர். இவ்வாறு ஒருபுறத்தில் அதுவரை கட்டப்பட்டிருந்த மாயமாளிகையில் ஒவ்வொரு செங்கல்லையும் உருவிக்கொண்டே, இன்னொருபுறத்தில் எல்லோருக்கும் பொதுவான புத்தம்புதிய ஒலிகளைக் கொண்டு மந்திர மாளிகையை கட்டிக்கொண்டே இருக்கிறார்"

    இப்போது.. இந்தத் திரியின் பெயரை இன்னொருமுறை வாசித்துப் பாருங்கள். சிலர் ராஜாவின் இசையாக்கத் திறன் தொண்ணூறுகளின் ஆரம்பத்தோடு மழுங்க ஆரம்பித்துவிட்டது என மண்ணைத் தோண்டி முகத்தை புதைத்துக் கொள்கிறார்கள். அறியாமையா? இல்லை அப்படியாவது சிறுமைபடுத்திப் பார்ப்போமே என்ற வரட்டுப் பிடிவாதமா?
    Last edited by venkkiram; 3rd September 2014 at 09:30 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  6. #85
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    இதுபோல ஒரு சூழ்நிலை யாருக்கு அமையக்கூடும்? ஆனால் படைப்பின் நாயகனுக்கு அமைந்தது. வாழ்க்கையில் ஒரு முறை கூட மேடையில் அரங்கேறாத, வறுமை, காதல் தோல்வி போன்ற தாழ்வு மனப்பான்மையிலேயே சுழண்ட நாயகனின் கடைசி கட்ட வாழ்க்கை நோயின் பிடியில்.. ஒரு ஆலமரம் வீழும் நிலையில் முளைத்து வெளிவரத் துடிக்கும் ஒரு சிறு செடிக்கு நீர் ஊற்றும் செயல்.. ஊசலாடும் உயிரையே உருக்கி வாழ்வின் கடைசி நிமிடத்தில் தெறிக்கும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலை. அதற்கும் ஒரு ஆக்கம். திரையிசையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பாடல் இது.



    நிகரேதும் இல்லை இதுவரை..

    இதுபோல ஒரு பாடல் ராஜா அமைத்திருக்கிறாரா, அதுபோல ஒண்ணு ராஜா அமைத்திருக்கிறாரா என சலம்பும் பதிவுகளைப் பார்க்கும்போதெல்லாம் "தம்பிகளா! அப்படியே கண்ணுக்குத் தெரியாத இடத்துக்கு போய் விளையாடுங்க!" என்ற அமைதியாக சொல்லிவிடவேண்டியதுதான்.
    Last edited by venkkiram; 3rd September 2014 at 05:44 PM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. Likes rajaramsgi liked this post
  8. #86
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    புல்லாங்குழல் இசைக்கலைஞர் "ஞயாயமான ஆதங்கம்!!!!!!!!!" என வழிமொழிந்திருக்கும் ஒருவரது கருத்து இது.

    __________________________________________________ ______________________________________________

    People speak about "Bharath Rathna" nominations.... Our Beloved Revered Isaignaani has done an incredible service to the society through his magical scores. Sir has many 'firsts' to his credit. Here are just some of them:-

    1. First Indian to combine every available form of music - fusion - to capture the hearts of laymen..... (Remember, the old fisherman appreciates JKB in Sindhu Bhairavi and Bilahari Maarthaandam Pillai appreciating his son for his "Ashudhdha"dhanyaasi)

    2. First Indian to compose an Oratorio (Thiruvaasakam)

    3. First Indian to use International Orchestra for films - Hey Ram (Hungary), Neethanae En Ponvasantham (UK)

    4. First Asian to compose symphony for the Royal Philharmonic Orchestra

    5. First Musician in the history of World Cinema to compose for 1000 movies

    If Isaignaani is not a Bhaarath Rathnaa, then who else is?? Humbly appeal all bureaucrats and authorities concerned to strongly recommend Isaignaani's name for the highest civilian honour..
    __________________________________________________ ______________________________________________

    என் சார்பில் சிலது..

    6. இந்தியத் திரையிசையில் கோரஸ் என்ற கலையின் நீள அகலங்களை கற்பனைசெய்யமுடியாத அளவுக்கு நீட்டி சாதனை செய்த ஒரே இசைக் கலைஞர்.

    7. இந்தியத் திரையிசையில் பின்னணி இசைக்கு பல புதிய பரிமாணங்களை வழங்கிய ஒரே இசைக் கலைஞர்.

    8. இந்தியத் திரையிசையில் எண்ணிலடங்கா லயக் கூறுகளை (loop) உருவாக்கி அழகுபார்த்த ஒரே இசைக்கலைஞர்.

    இசைத் துறையில் ராஜாவிற்கு பாரதரத்னா என்று கிடைக்கப்பெருகிறதோ அன்றே தமிழர்களின், தமிழிசையின் பொன்னாள்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  9. #87
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ராஜா ஒரு இசையருவி. அருவியில் பெருக்கெடுத்து ஓடும் நீர் அகண்ட, குறுகிய ஆறுகளில், ஓடைகளில், மதகுகளில், வாய்க்காலில் என இறுதியில் கடைமடைப் பகுதி வரை பாய்ந்து பாசனத்திற்கு பயன்படுவது போல ராஜாவின் இசையில் தன்னை சேர்த்துக் கொள்ளும் எந்தவொரு இசைக் கலைஞனும் ஒருவித பூரணத்தை அடைவான். ஏனெனில் ராஜா பயன்படுத்திய வாத்தியக் கருவிகள் , இசைக்குறிப்புக்கள் எல்லாவற்றிலும் ஒரு நிபூணத்துவம் மிகுந்து காணப்படும். ராஜா நிர்ணயிக்கும் வாத்தியக் கருவிகள், சுருதி, மாத்திரை, ஒலியளவு எல்லாமே அவரது இசையை ஒவ்வொரு நாளும் இன்னும் இளைமையாகவே வைத்திருக்கும் ரகசியம்.



    இந்தக் காணொளியை கண்டுகளிக்கவும். ஸ்ரீதர் என்ற ட்ரம்மர் "அட மச்சமுள்ள.." பாடலை சிறப்பாக கையாண்டு உள்ளார். இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த துள்ளல் டூயட் இசையாக்கங்களில் ஒன்று. பாலுவும், ஜானகியும் செதுக்கியிருப்பார்கள். டூயட் என்றாலே பிரசித்தி பெற்ற ஜோடி பாலு-ஜானகிதான். எல்லாவித உணர்வுகளுக்கும் என்னற்ற பாடல்களில் அவர்கள் இருவரும் இணைந்து வெளிப்படுத்தியிருக்கும் ரசவாதம் ஈடு இணையில்லாத ஒன்று. வேறு எந்த ஜோடியிடத்திலும் அப்படி ஒரு பன்முகத் தன்மையை பார்க்கவே முடியாது.

    அசலில் ட்ரம்மை கையாண்டவர் புரு. இரண்டாம் இடையிசையில் அவர் காட்டியிருக்கும் ஜாலம் சொல்லி மாளாது. ஒவ்வொரு வாத்தியக் கலைஞனும் இசையின் முன்னாள் தன்னை அப்படியே அர்ப்பணித்து வாசிக்கும் இசை அது. அதையே நாம் இந்தக் கானொளியில் ஸ்ரீதரிடத்திலும் காணலாம். சிறப்பான முயற்சி.

    https://soundcloud.com/shanmuganagar...olling-violins
    Last edited by venkkiram; 10th September 2014 at 09:51 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  10. Likes K liked this post
  11. #88
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    இதே "அட மச்சமுள்ள." பாடலுக்கு ராஜா ரசிகர் வி.எஸ் இப்படி சிலாகித்து இதே மையத்தில் எழுதியிருக்கிறார். அதை இங்கே பகிர்கிறேன்.

    -------------

    We know there are four paths of yoga; Bhakti, Jnana, Karma and Raja yoga. Similarly there are four goals of life according to Hinduism; Dharma, Artha, Kama and Moksha. Kama which is pleasure is often misunderstood as just sex, but the pleasure is a result of art, music, drama, dance, poetry including sex. Since the composition of interest is related to third goal (Kama), we will see how Maestro attacks every component of Kama Yoga through this composition. The interesting part of this whole composition is while all the above 6 components are tightly integrated, they can also be easily separated as per individual's taste and we can even add our own aesthetics in this composition (except the music part, haha).

    Before going to the composition, first we need to applaud K Bhagyaraj for coming up with some outstanding concept very little known in film industry. We might have seen so many songs using 'Manasatchi' (inner voice of ego) including love songs, but this song is unique as it talks about a person's inner feeling of the desire and pleasure. Actually there is a big risk taken and he has done it quite well nailing down by walking on the rope, but could have picturized better without all those standard p.t. exercises. Also song was not much appreciated at the instrument level, that's where visually it was not engaging!

    Having got the draft from the director, how Maestro works and develops into a full blown art is the topic of interest. We will come to that later.

    Dance and Drama
    Almost at the dawn, dreams galore. Hear how this composition showcases such a feeling with aplomb. Hero imagines being in indra loga with four gandharva kannigal, but his hands are tied. Why? There comes his manasatchi (manmadhan) first. This was another beautiful concept. Manasatchi appearing first than the actual person. Here KBR implies brilliantly that even before we start any physical interaction, our mind already attains/completes that state. புலன் வழி இன்பம் அடையும் முன்னரே மனம் அதனை அடையும். First manasatchi, then the actual person, so his hands were tied. Only thing I don't understand is why he was shown as an old man. May be just because of experience.

    Maestro complements musically by calling Vatsayanar, Adiveeraramapandyar (no idea who he is) and then those gandarva kannigaL; Athini, Sithini, Padmini and Sangini. There starts all the drama and dance. Crash cymbals for introduction of each female. Even there he adds some minuscule sounds from synth alternatively to our each ear, very pleasant to hear. Two trumpets one at lower octaves and another at higher octaves followed by great strings in crescendo, setting up the right tempo with trumpet echoing at last. Such grand opening is required for this big bash in that maaya logam. The trumpets implying the big ones used at those times. Somehow that grandeur was not much captured visually, especially when the trumpets and violins are played.

    How about this one? The two trumpets, the higher one is of the soul and lower one for the body. His manasatchi after introducing each one of those angels, he makes them disappear as the body actually tries to reach them, as he is not yet attained his desire. The high trumpet shows that agility of the soul, while the body is still in the phase of getting activated from the soul. Also manasatchi is not willing to give it to him, so he teases him every time. The time when violins plays in crescendo, he races behind each one of them and when the trumpets echo, they are gone, vanished! Magnificient Pause there (only in video).

    S Janaki and S P Shailaja sings alternatively. When they sing the angels appear again with the magic of soul, but he realizes now that his hands are tied. Maestro understanding this ahead, does not start the vocals with SPB (the body) instead starts with females to again build up the tension to the hero and sarcastically complemented by his manasatchi at the end of every line. As this is a dance song, Maestro brilliantly introduces the 'jathi' at every line and every jathi is different. Please hear the jathi. 1. nakinthinnaa nakinthinna thirana, 2. nakinthinaa thirana, 3. thakathimi tha, 4. thirikidathathom tha, 5. thirikidathom tharikidathom. Some great singing by TVG sir (I think) and it appropriately sets the tone for this extra-ordinary composition.

    Another beauty is how he has used the percussion instruments during the pallavi. For the single beat punches he uses mridangam. For every other beat he uses acoustic drum or hi-hat, if you hear closely. I don't know how he conceived that idea. May be because he wants to convey throughout those two instruments that those two beats are the heart beats of soul and the body and how it sounds when tapped one after another. Soul and body cannot exist independently. Both has to co-exist to attain the desire which they are longing for. But when listened casually we can only hear one instrument. Oh man what an innovation at every note. Colossal talent!

    Not just that, if you observe even closely, the beats coming from hi-hat are more compared to mridangam as he soul is slowly transferring its desire to body thereby the heart beat of the body is pounding faster than the soul. Brilliant! Brilliant!!

    Poetry and Sex
    We have some great lyrics for the situation. Eventhough we have to appreciate the lyricist for conceiving appropriate lyrics for the situation, I am going to first appreciate Maestro for the lyrics. Why and How? The whole soul in the song is this jathi which is aptly sung by TVG sir. You can clearly hear where the jathi is leading to, from where it started.

    nakrithana thiranana na (starts the real fun)
    thana nakrithana thana dhiranana dhirana (improvisation compared to first line)
    nakrithana nakrithana nakrithana (kenjel, seendal, climax)
    nakrithana nakrithana nakrithana dhiranana na.. (salvation!)

    Why have I linked poetry and sex together?.
    Again purely my thoughts. Why Maestro adds more jathi here instead of actual lyrics. Could have been better? May be, but as I interpret, Maestro cleverly stops with sandham and wants us to conceive our own lyrics based on our imaginations for this jathi, so that composition becomes dynamic instead of being static. Instead of what is being given is what we have to listen, as I mentioned ealier, we can add more aesthetics to appreciate it better. Assuming Maestro has given us a small template where we can play with (on the final output, which is truly amazing!). Have we ever witnessed such scenario, I honestly do not remember.

    So, he is also teaching us to code on the template, but strictly there are no rules and syntax, except to match the sandhams.

    Singing these lines gives so much merry. Greatest aural poetry!

    Music
    At every section there is music. The drama, dance, poetry all associated with music. Here we will continue where we left off from previous section.
    The drums after the above jathi is just spellbinding, no one, I repeat no one can ever create this atrocious punch and magic, mavane dhool! He gives that chill and literally gets into our nerves, no one can ever give me! I remember one of my town friend who is elder to me and studied at CIT, Coimbatore during that time (may be 2nd or 3rd year - perfect time to be in college). He used to visit our town for semester holidays. He always calls Maestro as 'Mottai'. He used to always get hyper about this song, especially during this beat. He used to scream "mottai" during this part and used to say 'Mottai mandaikkula ennathaanda irukku'. Even now I am screaming and my wife and kids are in for a rude shock That's a monumental piece!

    I mean the whole rhythm arrangements and syncopation (as KV mentioned), surely cracking and out-of-the-world stuff!!

    While the energetic trumpets, bass guitar, ferocious violins tells the true story, visually KBR does not have a damn clue what needs to be done during this piece, just moves his legs here and there. Truly underwhelming!!

    We can now hear the single trumpet at very high octaves which is of the body as the body is now ready for fun (except he is still in bondage), while at the last we can hear the second trumpet dipping down (of the soul). After the soul has attained its desire, it is now passing it to the body. Now the angels prey for the actual body. SJ and SPS seize this opportunity and comes with some extremely cheerful and erotic singing. Superb tune in charanam, giving the appropriate mood. The highlight is how the tune goes to lazy mode exactly during 'raaghu kaalam pOnathu, yOga nEram Kooduthu', Paarizaatham vaaduthu dhaagasanthi thEduthu', as still the hero is in bondage and they are becoming restless. The last line goes in for a great finish with violins to follow! Experience the "Maestro Roller-Coaster effect"!!

    என்னைக்கும் இல்லாம இன்னைக்கு உன் கிட்ட ஆச (punctuations with synth/guitar?, clearly calling for hero's action!)
    எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யாண பூச
    ஒன்னுக்குள் ஒன்னாக ஒன்றாகி நின்றானே சாமி
    அத கண்ணுக்கு முன்னால என் கிட்ட இப்போது காமி
    ராஹு காலம் போனது யோக நேரம் கூடுது
    பாரிஜாதம் வாடுது தாகசாந்தி தேடுது
    மதில் மேலே வரும் பூனை எதில் பாயுமோ (excellent guitar chord progression there!)

    The crescendo violins after the last line clearly states the body is now out of bondage and the soul has completely transferred what it got, to the body. That's where our hero SPB kicks in with thunder, this time 'Pala macham ULLa' and not 'Ada macham ULLa' except to be let down by some funny dance movements by KBR. No look back from now on musically. During this pallavi we can hear his manasatchi again punctuating with those jathis. When he sings "thirikidathom tharikidathom", we can easily put "nadakattum nadakattum". That's the magic I was talking about the template.

    High energy violins and trumpet in second interlude played only to again discover that KBR used it to some naive dance movements. Wasted opportunity! First time we are hearing flute as well in this interlude.

    எங்கெங்கும் முந்தானை கண்டாலும் உண்டாகும் போத
    சத்தங்கள் இல்லாத முத்தங்களின் என் காதல் கீத
    மெத்தைக்கும் வித்தைக்கும் எப்போதும் பட்டத்து ராசா
    உங்க கட்டுக்குள் வந்தாலே மொட்டுக்கள் தள்ளாடும் லேசா
    நீரில்லாத மேடையில் நீந்த போகும் மீன் இது (hear how he extends the 'Ithu', so elegant!)
    பாயப்போகும் வேங்கையை சாய வைக்கும் மான் இது
    புயல் வீசி வரும் வேகம் கொடி தாங்குமோ (hear how SPB pronouces ThaangumO, what a punch! Only him possible)

    When he finishes the pallavi lines for the last time, for the same lines TVG sings jathi differently. "nakinthinna nakinthinna thiranana na" instead of usual "nakinthinaa thirana", so breathtaking! Maestro demonstrates how much space is there to pack more things in the same span.

    Art
    All the above sections contribute for an excellent art. Maestro here combines all the above pieces to demonstrate Kama Yoga. He also cleverly leaves some portion for us to fill, thus making the composition a dynamic one.

    Explosive trumpets (drama), extravagant rhythm arrangements (dance), high energy jathis and violins (poetry), terrific guitar and some glittering tune and singing (music) all makes it a wonder composition. So, all the above sections, Maestro has done through music alone. Is it not a wonder? Wonderful Keeravani (?) based composition with western pop/jazz arrangements. Maestro has used just 5 main instruments, violin, guitar, drums, trumpets and mridangam to create this grand wizadry of art.

    If an art is an expression of creative skill and imagination in visual form, Maestro does not have a chance there, as the music is not a visual form. On the other hand, if a Maestro can bring visuals in front, to his listeners with his music alone, then there is a 100% chance of being called as art. Maestro does not need a separate visual media to reflect his work. In fact, he is the source for the visuals (as described in the above paragraph). It is then a superior form of art (IMHO). Why it is superior form of art?. In visual art, we can analyze the product in detail, write reviews and even point out the areas we like and dislike it. In music, with Maestro, each listener is taken to another level apart from the areas pointed above. That is the listeners visual imagination about the product of work. I wrote my thoughts above, but another person will come in and pour totally different set of ideas/perspectives on this composition (again I am not talking about reviews here). Third person can come in and paint a different set and so on. Again, if a child listens to this music, he can paint his own visual imagination over this. Only few visual art forms have his boon.

    For example, take the same composition and listen again, completely forget all my above irrelevant thoughts. I am 100% sure, no one can even think about eroticism here. We can just enjoy the tune, singing and the orchestration, that's it. Unless you go by the lyrics or the situation, this composition is absolutely friendly to everyone. It will immediately trigger us to sing/hum the composition along. You are now the visual medium for the listener (may be for your family now). Even if you sing alone, you are still hearing and appreciating it and you are both the singer and the visual. If Visual forms like Dance, Film, Drama, Painting, Sculpting etc invoking visual imagination in us is such a great thing, a non-visual form like Music, especially Maestro's music invoking visual imagination in us is not a superior form of creative art?

    -------------------------------------------

    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  12. Thanks mappi, rajaramsgi thanked for this post
    Likes mappi, rajaramsgi liked this post
  13. #89
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    இதே "அட மச்சமுள்ள." பாடலுக்கு ராஜா ரசிகர் வி.எஸ் இப்படி சிலாகித்து இதே மையத்தில் எழுதியிருக்கிறார். அதை இங்கே பகிர்கிறேன்.
    This is one of the best in-depth analysis of Raja sir's music I ever read next to Dr. Lakshminarayanan's series in about 17 years. (no offence to others). Thank you Venkkiram for sharing VS's post. Machamulla song is one of my all time favorite song, must be for many. I am a big fan of Bhagyaraj (yes, I am 20 years behind current tamil cinema), He is one of those lucky and clever guys who got the best from Raja sir always, although KBR was never loyal with him. I watched Chinna Veedu movie with my father at Thanjavur Shanthi kamala theater, 2nd show back in school days Glorious days. Raja sir used similar modern orchestration techniques in KBR's earlier Dhavani Kanagavugal as well with all the instruments mentioned by VS. நாய் வாலை நிமிர்த்த முடிந்தாலும் பாக்யராஜை வளைக்க முடியாது, அதனாலோ என்னவோ புலியூர் சரோஜா நடன மங்கைகளை வைத்து சரி கட்டுகிறார், சரியான ஆட்டம். Just wanted to mention Puliyor saroja here as she deserves it. Keeping my praises for Raja sir on low profile on this song, as VS/Venkkiram did not leave any words for others.

  14. Likes venkkiram liked this post
  15. #90
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    இப்போதுதான் இந்தக் காணொளியை கண்டேன். நன்றி பாலா கார்த்திக் இதை ட்வீட்டரில் பகிர்ந்ததற்கு. ஒரு படைப்பினை காட்சிப்படுத்தும்போது உணர்வுகளை சரிவர / இன்னும் மேம்படுத்த திரை இசை எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை மிகவும் அழகாகவும், ஆழமாகவும் எடுத்துரைத்த மிஷ்கினுக்கு பாராட்டுக்கள். உரையாடலில் நாசரும் தன பங்கிற்கு அவதாரம் படத்தில் அரிதாரத்தை பூசிக்கொள்ள ஆசை பாடல் பிறந்த கதையை பகிர்ந்த விதம் சிறப்பு. சமீபத்தில் த்வீட்டரில் ஒரு வாசகம் படித்தேன். "இளையராஜாவை இன்னும் முழுமையாகக் கொண்டாடாத தமிழ்ச் சமூகம் தன் அறிவின்மையை முழுமையாக வெளிப்படுத்துகிறது..." பிடித்துப் போனது. ராஜாவை இன்னொரு இந்திய இசையமைப்பாளரோடெல்லாம் ஒப்பீட்டு நேரவிரயம் செய்யத் தேவையில்லை. உணர்வுகளுக்கு ஏற்றவாறு சினிமா என்ற ஊடகத்திற்கு இசை என்ற மொழியை சிறப்பான முறையில் தரவல்ல ஒரே இந்தியர் ராஜாதான். நிகரற்றவர் ராஜா.

    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  16. Thanks mappi thanked for this post
    Likes K liked this post
Page 9 of 13 FirstFirst ... 7891011 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •