Page 217 of 401 FirstFirst ... 117167207215216217218219227267317 ... LastLast
Results 2,161 to 2,170 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

  1. #2161
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2162
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like


    பிறந்த நாள் கொண்டாட்டத்தை பற்றி #MGR

    ''ஜனவரி பதினேழு... அவரோட பிறந்த தினம்... 'நம்ம பிறந்த தினத்தை நினைவுவெச்சு மத்தவங்கதான் கொண்டாடணுமே தவிர, நம்மை நாமே வாழ்த்திக்கிறதுல என்ன அர்த்தம் இருக்கு?’னு சொல்லுவார். ஆனாலும் அன்னிக்கு சாப்பாட்டுல அவருக்குப் பிடிச்ச சேமியா பால்பாயசம் வெச்சுக் கொடுப்பேன்''- கலங்கிய கண்களுடன் சொன்னார் ஜானகி ராமச்சந்திரன்.

    எம்.ஜி.ஆர். மறைந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அவர் வாழ்ந்த ராமாவரத்துக்குச் சென்றிருந்தோம். சென்னைப் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ராமாவரத்தில், சுமார் ஏழரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது எம்.ஜி.ஆர். தோட்டம்.

    ''அவர் (எம்.ஜி.ஆர்.) கோடி கோடியாகச் சம்பாதித்தார் என்று என் காதுபடவே சிலர் சொல்லி இருக்கிறார்கள். உண்மையில் அவர் எவ்வளவு சம்பாதிச்சார்னோ, எதுக்காகச் செலவழிச்சார்னோ, எனக்கு மட்டுமில்லே... அவருக்கே தெரியாது.

    அப்பப்போ யாராவது என்கிட்ட, 'அம்மா! ஐயா புண்ணியத்துல என் மக கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது’,

    'ஐயா மட்டும் கைகொடுத்திதிருக்கலேன்னா, நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்’னு சொல்றதைக் கேட்ட பிறகுதான் விஷயம் புரிஞ்சுப்பேன்'' என்று குறிப்பிட்ட ஜானகி அம்மாள். இப்போது யாரையும் எதற்காகவும் சந்திப்பது இல்லை. நம்மிடம் ''யாருகிட்ட என்ன பேசினாலும் அரசியலாக்கிடுவாங்களோனு பயமா இருக்கு. எனக்கு இனி அரசியல் தேவை இல்லை. என்னோட கடைசி நாள் வரைக்கும் அவரோட நினைவுகளுடன் அவர் வாழ்ந்த இந்த வீட்டுக்குள்ளேயே இருக்கணும்... அவ்வளவுதான்!''

    சில நிமிடங்களுக்குப் பிறகு, அவரேதொடர்கிறார்... ''எனக்கு என்னமோ... அவர் ஒரு மாபெரும் அவதாரம்னு தோணும். தோட்டத்துக்கு வெளியேதான் அவர் புரட்சித் தலைவர். வீட்ல அவர் ஒரு குடும்பத் தலைவர் மட்டும்தான்.

    ஜோக் சொல்லிச் சிரிக்கிறதும், நண்பர்களோட கடிதங்களைப் படிச்சு சந்தோஷப்பட்டுப் பேசுறதும், தன்னோட அம்மா பட்ட கஷ்டங்களை அடிக்கடி சொல்லிக் கண் கலங்கறதுமா இருப்பார். ஆனா, ஒரு பிரச்னைனு வந்துட்டா, இரும்பு மாதிரி நிப்பார் "
    17 - 1 - 1993 ஆனந்த விகடன் இதழில்
    ஜானகி எம்.ஜி.ஆர் . பேட்டியிலிருந்து.


    நன்றி வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி முகநூல்

  4. #2163
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like


    பொதுவாக சினிமாவில் நடிக்கும் ஒப்பனையுடன் எம்ஜிஆர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. சத்யா ஸ்டூடியோ போன்ற இடத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது வேறு அரசியல் தலைவர்களோ அல்லது பிரபலங்களோ தலைவரை சந்திக்கவந்தால் மட்டுமே சினிமா ஒப்பனையுடன் காண இயலும். அபூர்வமாக ஒரு திருமண நிகழ்ச்சியில் தலைவர் படப்பிடிப்பின் இடையே மேக்கப்புடன் கலந்துகொண்ட புகைப்படமே இது! மாப்பிள்ளை சைதை ரகுபதி. கலப்பு திருமணம். நரிக்குறவர் பெண்ணை மணந்து சரித்திரம் படைத்தவர் n right end is N.V. Natarajan.

    நன்றி சந்தானம் ஏடிஎம்கே முகநூல்

  5. #2164
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MASTHAAN SAHEB View Post
    திரைஉலகிலும் அரசியல் உலகிலும் புரட்சித் தலைவர் பெற்ற வெற்றிகளை யாரும் நினைத்துப்பார்க்க முடியாது. எதிரிகள் என்னதான் வெறிநாயாக ஓலமிட்டாலும் புரட்சித் தலைவரின் புகழை யாரும் அசைக்க முடியாது.

    இன்றும் தமிழகத்தின் பல ஊர்களில் புரட்சித் தலைவர் படங்களே மறுவெளியீட்டு படங்களில் அதிகமாக ஓடுகின்றன. தொலைக்காட்சிகளில் அவரது படங்கள் மீண்டும் மீண்டும் திரையிடப்படுகின்றன. விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் நன்றாக கல்லா கட்டுகின்றனர். இன்றும் பட உலகத்தினரை புரட்சித் தலைவர் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.

    புரட்சித் தலைவர் வெறும் சினிமா நடிகர் மட்டுமே அல்ல. மக்களின் மனம் கவர்ந்த செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர். அதனால்தான் அவரை மூன்று முறை முதல்வராக்கி மக்கள் அழகு பார்த்தனர். 9-6-1980 புரட்சித் தலைவர் 2 வது முறையாக முதல்வராக பதவியேற்ற நாள்.

    நன்றி தேவசேனாபதி ராஜராஜன் முகநூல்

    நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களே,
    தங்களின் ஆழமான, அழுத்தமான கருத்தை நான் ஆமோதிக்கிறேன். இந்த வார
    நக்கீரன் இதழில் இதை எதிரொலிக்கும் வகையில் அகம்-புறம் பகுதியில் செய்தி
    பிரசுரம் ஆகியுள்ளது .அதை பதிவிடுகிறேன் . அதை படித்தும், பார்த்தும் விமர்சனம்
    செய்பவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்ப்பது நமது தவறு .

    சில வசனங்கள் தங்களின் நினைவிற்கு
    ------------------------------------------------------------------

    பிறரை தாழ்த்தி , நம்மை உயர்த்தி கொள்ளும் நிலையில் நாமில்லை .-மன்னாதி மன்னன் .

    என் எதிரி கூட எனக்கு சமமா இல்லேனா அலட்சிய படுத்துறவன் நான் - சந்திரோதயம் .

  6. #2165
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நக்கீரன் வார இதழ் -10/06/2017

  7. #2166
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  8. #2167
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. #2168
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தற்போது கோவை சண்முகாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வாரம் வெற்றி நடை போடுகிறது .

  10. #2169
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  11. #2170
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •