Page 23 of 401 FirstFirst ... 1321222324253373123 ... LastLast
Results 221 to 230 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #221
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    தங்கள் அன்பு பாராட்டு மழையில் என்னை நனைய விட்டு திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள். நேற்று நாம் இருவரும் கைபேசியில் உரையாடும் போது 'பாசமலர்' பதிவுகளை நேரிடையாக பாராட்டியதற்கு என் இதயம் மலர்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சொர்க்கத்தை வரவேற்க சிவப்புக் கம்பள விரிப்பு அட்டகாசமாக தயாராகி விட்டதே! ஆர்ப்பாட்டமான வரவேற்பு.

    'தாய்' படம் நெடுந்தகடாக வந்த தகவலை அளித்து எங்களுக்கெல்லாம் தாயாக வயிற்றில் பாலை வார்த்து விட்டீர்கள். அனைவரின் நெடுநாளைய கனவு 'தாய்' நெடுந்தகடு. நன்றி!

    செந்தில் அவர்களின் கருத்திற்கான தங்கள் பதிவு உண்மையிலேயே அருமை. நடிகர் திலகத்தின் நடிப்புத் திறமையில் 'டூரிங்' தியேட்டர் ஆனாலும் சரி, மல்ட்டி காம்ளெக்ஸ் தியட்டர்கள் ஆனாலும் சரி வெற்றியில் வித்தியாசம் ஏது? அருமையான பதிவு.

    கர்ணன் திரைப்படத்தின் மறு வெளியீட்டு 100வது நாள் சுவரொட்டிகள் வெற்றிக் கம்பீரத்தோடு பவனி வருவதை பதிவு செய்தமைக்கு நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #222
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் சந்திர சேகரன் சார்,

    பதிவுகளுக்கான தங்கள் உடனடி அன்புப் பாராட்டுதல்களுக்கு அருமை நன்றிகள்.

    நலத்திட்டங்களுக்கோர் ஒரு நற்பேரவை கண்ட தங்களின் நலத்திட்ட உதவிகள் தொடரட்டும். 20.6.2012 புதனன்று, சுவாமி விவேகானந்தர் வாசகர் வட்டத்துடன் இணைந்து வடசென்னை மாவட்ட சிவாஜி பேரவை மிக விமரிசையாக நடத்தும், மாணவ-மாணவியருக்கு விலையில்லா நோட்டுப் புத்தகம் மற்றும் சீருடை வழங்கும் பெருவிழா ஒரு பெருமைமிகு விழா.

    Deccan Chronicle - 21-06-2012 பதிவிற்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #223
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ஜேயார் சார்,

    தங்கள் அன்புப் பாராட்டிற்கு நன்ற்கள். ஒரு வழியாக 'தாய்' நம்மை வந்து அடைந்து விட்டாளே!
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #224
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கர்ணன் 100வது நாளையொட்டி அடியேன் உருவாக்கிய எளிய டிசைன்


  6. #225
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி செந்தில் சார்,
    உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன். இந்த பிரம்மாண்ட வெற்றி எனக்கு சிறிது பயத்தையும் கொடுக்கிறது. புற்றீசல்களாய் படங்கள் ரிலீஸ் செய்ய பட்டு சரியான பிரிண்ட், எடிட் செய்ய படாமல்,சரியான contamporary appeal உள்ள படம் தேர்வு செய்ய படாமல், போதிய கவனிப்பை பெறாமல் போகும் வாய்ப்புகள் அதிகம். நாம் அந்த காலத்தில் திட்டமிடாமல், marketing துறையில் போதிய கவனம் செலுத்தாமல் இருந்தது போல் இந்த காலத்திலும் இருக்கலாகாது. சொக்கலிங்கம் நமக்கு அருமையான பாதையை ,துவக்கத்தை கொடுத்துள்ளார். வெற்றியின் போதுதான் மிக மிக எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும்.
    இனி நாம் தேர்ந்தெடுக்க கூடிய படங்கள்-
    உத்தம புத்திரன்- வர்ணம்,டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன்.-சரியாக எடிட் செய்ய பட்டு.
    வீர பாண்டிய கட்ட பொம்மன்- இரண்டு மணி நேர படமாக,டிஜிட்டல் உடன்.
    திருவிளையாடல்- அப்படியே-மீனவ காட்சிகளை தூக்கி விட்டு.
    புதிய பறவை- மெருகேற்றி, அசல் இசையை கெடுக்காமல் டால்பி செய்து, ராமசாமி,நாகேஷ் ,எ.கருணாநிதி காட்சிகளை கொளுத்தி விட்டு.
    சிவந்த மண்- அப்படியே.
    வசந்த மாளிகை-
    சொர்க்கம் தவிர்க்க வேண்டிய படம்.எனக்கு சுத்தமாக உடன் பாடில்லை.கர்ணனுக்கு அடுத்து வர அருகதை அற்றது.
    Last edited by Gopal.s; 23rd June 2012 at 11:57 AM.

  7. #226
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பம்மலாரே,
    அழகான பிரம்மாஸ்திரம். முக்கியமான சமயத்தில் மறந்து போனால் மீண்டும் திரியில் பார்த்து விடலாம். ஆனால் கொடுக்க தாமதம் ஆனதால்,மாணவர் கோபித்து சென்று விட்டார் போலும். காணவே இல்லையே!!??

  8. #227
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்,
    உங்களுக்கு குட்டுகளை தாங்கும் வல்லமையை வளர்த்த பெருமை என்னை சாரட்டும். அது என்ன சார், நீங்கள் மன்னவன் வந்தானடி கேசா?இல்லை நான் புலியா?உங்கள் பெரிய பதிவுகளை விட மிக சிறிய பதிவுகள் எங்களை ரொம்ப யோசிக்க வைக்கின்றன.

  9. #228
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் பம்மலார் சார்,
    பிரம்மாஸ்திரத்தை மறக்காத கர்ணன் நீங்கள்.. தங்களுக்கு மட்டும் அது மறக்காது என்ற ஆசீர்வாதம் உண்டு. சமயம் பார்த்து ஏவும் வல்லமை படைத்தவர் நீங்கள். கீப் இட் அப். ராஜா 100 காட்சிகள் அரங்கு நிறைந்த மறுநாள் தியேட்டரில் நண்பர்கள் இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டது இன்றைக்கும் பசுமையாக நினைவில் உள்ளது. தேவி பேரடைஸின் பின் பக்க வாசல் திறந்திருந்தாலும் அந்த வழி தூரம் சற்றுக் குறைவு என்றாலும் அண்ணா சிலையருகில் ராஜா விற்காக வைக்கப் பட்டிருந்த அந்த பிரம்மாண்டமான பேனரைப் பார்ப்பதற்காகவே அந்த வழியே வீட்டுக்கு செல்வோம். மஞ்சள் உடையில் டையுடன் இரு கைகளையும் சவாலுக்கு அழைக்கும் வகையில் வைத்துக் கொண்டு நிற்கும் அந்த போஸ் பிரத்யேகமாக எடுக்கப் பட்டது. அந்த போஸ் படத்தில் இடுப்பு வரையில் தான் வரும். முழு போஸும் பேனரில் மட்டுமே இடம் பெற்றது. அந்த பேனரைப் பார்க்க வேண்டுமானால் பட்டிக்காடா பட்டணமா திரைப்படத்தில் நடிகர் திலகத்தைக் காரில் அழைத்துச் செல்லும் காட்சியில் பார்க்கலாம்.

    வாசு சார் அந்தக் காட்சியிலிருந்து அந்த பேனரின் நிழற்படத்தை எடுத்து இங்கே இடுகை செய்ய முடியுமா.

    அன்புடன்

  10. #229
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    NT eleder son Thalapathy Ramkumar is acting in Director's Shankar's movie IN an important Character. Wishing him all the best

    I too agree with Gopal Sir, the then fans were helpless in making the deserved NT movie 100 days movie not been able to do anything to run for 100 days as other movie might be waiting which must not be done now . All I wish to suggest is select NT 50 movies social, mythological, fantasy may conduct a poll among members of the thread , accept suggestions and then proceed because what shanti Chokalingam has given (momentum) must not be spoiled , if done so we will be back to square.

    BUt Thruvilayadal Fisher man Scene's must not be cut NT unique walk in that portion will be missing. Also calling a movie like sorgam unfit after Karnan is bit too much but it might be a variety for audience

    Gopal sir I too prefer Uthmaputhiran in Colour form as many people might not have seen it
    Last edited by ragulram11; 22nd June 2012 at 08:31 AM.

  11. #230
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜா- 1972
    என்னால் மட்டுமல்ல. எந்த சிவாஜி ரசிகராலும்(மற்றவர் ரசிகர் ஆனாலும்) மறக்க முடியாத படம். ஆனந்த விகடன் விமரிசனம் சொன்னது "ஜேம்ஸ்பேண்ட் " என்றாலே அடி,உதை, குத்து என்று மட்டுமே இருந்ததை மாற்றி ,அதை இவ்வளவு ரசிக்கும் படி ,பார்வைக்கு பார்வை,நடைக்கு நடை, வித்யாசமான சிவாஜி " என்று பாராட்டியது. தங்க சுரங்கம் மிதமான வெற்றியை பெற்றதால் சிறிது ஏமாற்றம் அடைந்திருந்த ரசிகர்களுக்கு உற்சாக பானமாய் ராஜா. உடையில்,நடையில்,பார்வையில் ,பேச்சில் ,இளமையில்,காதலில்,மோதலில் துள்ளோ துள்ளு என்று துள்ளும்.மன்மதனை வெட்கி தலை குனிய வைக்கும் ஆண்மையான அழகு. ராஜான்னா ராஜாதான் என்பது போல் NT னா NT தான். 1972 இன் இமாலய வெற்றி படங்களை துவங்கி வைத்தது ராஜாதான்.(பாபுவிற்கு பிறகு அடுத்த படம் என்றால் எங்கள் சிவாஜியின் நடிப்பின் range புரிந்திருக்க வேண்டுமே??)
    எனக்கு பிடித்த பல பல காட்சிகள் -பட்டியல் இட பக்கங்கள் போதாதையா. உதாரணம் சில- ஆரம்ப அறிமுகம் மனோகர் உடன், டென்னிஸ் பேட் காட்சி,
    ஜெயலலிதாவுடன் அறிமுக அசத்தல், நீ வர வேண்டும், பாலாஜியுடன் விசாரணை காட்சி(வில்லன்களின் விசாரணை), ரந்தாவுடன் அவருடைய மிக சிறந்தது என்று நான் கருதும் சண்டை காட்சி, கல்யாண பொண்ணு,இரண்டில் ஒன்று, உச்ச காட்சி .
    நான் சுமார் 100 முறையாவது பார்த்திருப்பேன்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •