Page 29 of 400 FirstFirst ... 1927282930313979129 ... LastLast
Results 281 to 290 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #281
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (4)

    நேற்று படகோட்டும் போது தன் கண்ணாளனுக்காக நதியை மெதுவாகப் போகச் சொன்னார் 'வடக்கத்திய இசைக்குயில்' லதா.

    இன்று நம் 'தென்னகத்து இசைக்குயில்' சுசீலா.

    அக்பரின் மகன் சலீமைக் காதலித்த நாட்டிய யௌவன ராணி அனார்கலி இளவரசனைக் காதலித்த பாவக் குற்றத்திற்காக அக்பரால் சிறையடைக்கப்பட்டு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கிடக்கிறாள் அழுக்குத் துணியுடன் அலங்கோலமாக.

    தன் காதல் அரும்பு மலராமல் கருகிப் போகிறதே என்று கண்ணீர் வடிக்கிறாள். தான் கனவு கண்டிருந்த காதல்கதை கண்ணீரில் போய் முடிந்ததே என்று ஆற்றொணாத் துயருற்று கண்ணீர் வடிக்கிறாள்.

    நிலா ஒளி வீசிக் கொண்டிருந்த வானத்தில் மழை மேகங்கள் சூழ ஆரம்பித்து விட்டதே என்று கதறுகிறாள்.

    ஆமாம்!

    இந்தியில் வெளிவந்து நம் உள்ளங்களையெல்லாம் கொள்ளையடித்த 'மொகல்-ஏ.அசாம்' திரைப்படம் தமிழில் அக்பர் ஆக 'டப்' ஆனது.



    மதுபாலா என்ற மனதை மயக்கும் கட்டழகிதான் அனார்கலியாகி பல இந்திய சலீம்களின் மனதில் காதல் சாம்ராஜ்யக் கோட்டை எழுப்பினார்.

    1960-ஆம் ஆண்டு வெளியான இப்படம் பல சிறப்புகளைப் பெற்றது. (அதைப் பற்றி சொல்லி மாளாது)

    நடிகர் திலகத்திற்கு மிகவும் பிடித்த பிருத்விராஜ்கபூர் அக்பராகவும், மது அனாராகவும் வாழ்ந்தனர். சலீம் திலீப்.

    'அக்பர்' தமிழாகி இந்தியில் லதா பாடிய 'மொஹபத் கி ஜூட்டி கஹானி பெ ரோயே' என்ற உலகை உலுக்கிய பாடல் தமிழில் நம் தென்னகத்து இசைக்குயில் இசைக்க அதே அளவுக்கு புகழ் பெற்றது நௌஷாத்தின் மனம் மயக்கும் இசையிலே!



    என்ன பாடல் என்று தெரிகிறதா?


    கனவு கண்ட காதல்
    கதை கண்ணீராச்சே!
    நிலா வீசும் வானில்
    மழை சூழலாச்சே!
    மழை சூழலாச்சே!

    முன்பே எண்ணிப் பாராமல்
    நெஞ்சம் ஏங்கிட்டேனே
    எந்தன் ஆசையே இன்று
    என்னைக் கொல்லலாச்சே!
    உந்தன் காதலின்
    கனவெல்லாம்
    கண்ணீர் ஆச்சே! ஆச்சே!

    கனவு கண்ட காதல்
    கதை கண்ணீராச்சே!

    அகம் வாட்டும் காதல் தீ
    யார்க்கும் சொல்லாதே
    மறைத்தே நாம் வாழ்கின்றோம்
    மார்க்கம் காணாதே
    ஜகம் வாழ்கிறேன்
    வாழ்க்கையே
    கண்ணீர் ஆச்சே!ஆச்சே!

    கனவு கண்ட காதல்
    கதை கண்ணீராச்சே!
    நிலா வீசும் வானில்
    மழை சூழலாச்சே!
    மழை சூழலாச்சே!

    கனவு கண்ட காதல்
    கதை கண்ணீராச்சே!


    மதுபாலாவின் மனதை வாட்டி எடுக்கும் இரும்பையும் இளக வைக்கும் நடிப்பு. அனார்கலியை நம் கண்முன்னே அவள் காதலின் துடிப்பை அப்படியே நம்முள் கொண்டு வந்து செருகும் உணர்வு பூரவமான நடிப்பு மறக்கவே முடியாத ஒன்று. அதை விட அவர் அழகு. சோகத்தில் கூட.

    (பிரபல இந்திப் பின்னணி பாடகர் கிஷோர் குமாரை மது மணம் செய்து கொண்டார். கிஷோர் இந்த விஷயத்தில் நம்மூர் ஜெமினி மாதிரி கில்லாடி. இவர்கள் இணைந்து நடித்த 'சல்திகா நாம் காடி" அங்கு படு சூப்பர் ஹிட்)

    நடிப்புக்கு மது உயிர் கொடுத்ததைவிட சுசீலாம்மா இந்தப் பாடலை சிரத்தை எடுத்துப் பாடி அழியாக் காவியமாகி விட்டார். இதுவும் சிலோன் ரேடியோவில் தினமும் ஒளிபரப்பான பாடல்.


    'கனவு கண்ட காதல்' இன்றைய ஸ்பெஷலாக

    Last edited by vasudevan31355; 16th June 2014 at 08:38 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #282
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் முரளி சார்,

    இத்திரிக்கு தங்கள் வருகையும், வழக்கம்போல தங்கள் கண்ணியமான வார்த்தைகளும் மனதுக்கு தெம்பையும் உற்சாகத்தையும் தருகின்றன. தாங்களும் இத்திரியில் பங்கேற்பதாக சொல்லியிருப்பது உற்சாகத்தைத் தருகிறது. நான் முற்றிலும் காணாமல் போய்விடாமல் இத்திரி போன்ற இடங்களில் உங்களை சந்தித்துக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.

  5. #283
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    'கனவு கண்ட காதல்' பாடல் பதிவு அட்டகாசம். மொகலே ஆஸம் படத்தை ஏற்கெனெவே கருப்பு வெள்ளையில் பார்த்திருந்த நான் அதன் டெக்னிக் கலரில் மாற்றப்பட்ட வடிவத்தையும் கண்டு அசந்து போனேன். என்னவொரு நேர்த்தியான மாற்றம். வண்ணத்தில் பிரமாண்டம் இரட்டிப்பானது. (ஆனால் சோகம் என்னவென்றால், மாற்றப்பட்ட வண்ண வடிவம் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டவில்லை) .

    தங்கள் பதிவில் சின்னத்திருத்தம். 'மொகலே ஆஸம்' தமிழ் டப்பிங் வடிவத்தின் பெயர் 'அனார்கலி' அல்ல, 'அக்பர்'.

  6. #284
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    திருத்தி விட்டேன் கார்த்திக் சார்!

    திருத்தத்திற்கு நன்றி

    காலையிலிருந்து அனார்கலியிலேயே மூழ்கி விட்டதால் அப்படி ஆகி விட்டது.

    நீங்கள் இருக்கையில் என்ன கவலை?
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #285
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    விசு முதலில் இயக்கிய படம் 'மணல் கயிறு'. (இதற்கு முன் அவர் நடித்த அவரது மேடை நாடகமான குடும்பம் ஒரு கதம்பம் படத்தை வேறொருவர் இயக்கியிருந்தார்).

    மணல் கயிறு: மெல்லிசை மன்னரின் மனதை அள்ளும் இசையில் எஸ்.வி.சேகர் - சாந்திகிருஷ்ணா ஜோடிக்கு அருமையான டூயட் பாடல். ஆனால் ஜோடிக்குரல் அல்ல. எஸ்.பி.பாலா மட்டுமே பாடியிருந்தார். சாந்திகிருஷ்ணா எந்தப்படத்திலும் ஒரு நடிகையாக செயற்கைத்தோற்றம் தர மாட்டார். நம் பக்கத்துவீட்டு பெண்போல இருப்பார்.

    எப்போது கேட்டாலும் சுவை தரும் பாடல்....

    மந்திரப்புன்னகை மின்னிடும் மேனகை சந்தனப் பூங்கொடியோ
    இந்திரன் மாளிகை சுந்தரத் தேவதை சிந்திடும் பைங்கிளியோ
    அவள்தானோ இவள்தானோ இளமானோ இசைத்தேனோ
    வண்ணமொழி வார்த்தை திருவாசகம்தானோ

    அதிலும் எனக்கு மிகவும் பிடித்த சரணம்.....

    மாமதுரை வாழ்ந்திருக்கும் அங்கையற்கண்ணி
    தாமரையில் வீற்றிருக்கும் மங்கலச்செல்வி
    கையிரண்டில் இசைவீணை வைத்திருக்கும் கலைவாணி
    மங்கையிவள் யாரோ அந்த மூவரும்தானோ
    Last edited by mr_karthik; 15th June 2014 at 12:52 PM.

  8. #286
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    (சண்டே ஸ்பெஷல்)

    டியர் கார்த்திக் சார்

    உங்கள் மனம் மகிழ,

    அனைத்து பாலாவின் ரசிகர்கள் படித்து மகிழ,

    'பொட்டு வைத்த முகமோ...
    கட்டி வைத்த குழலோ'..

    என்று தன் வசீகரக் குரலால் நம்மைக் கட்டிப் போட்ட

    'பாடும் நிலா' பாலாவின் பேட்டி. (08-10-2008 அன்று வெளிவந்த 'ஆனந்த விகடன்' இதழுடன் இணைப்பு)

    இப்போது உங்கள் பார்வைக்கு.









    Last edited by vasudevan31355; 15th June 2014 at 01:01 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #287
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தந்தையர் தினம்...

    இந்த நாளை ஆண்களை விட பெண்கள் அதிகம் கொண்டாடுவர். மகன் தாயிடமும் மகள் தந்தையிடமும் அளவற்ற பாசம் வைத்திருப்பது இயல்பு, யதார்த்தம், உண்மை. ஆண்களுக்கும் தந்தையிடம் பாசம் இல்லையென்று சொல்ல முடியாது. தாயிடம் எந்த அளவிற்கு பாசம் உண்டோ அதே அளவு தந்தையிடமும் வைத்திருப்பார்கள். ஆனால் தந்தையின் புகழ், கௌரவம், பெருமை போன்ற வற்றைப் பேணிக் காப்பதையே தலையாய கடமையாகக் கொண்டு அதில் ஈடுபடுவார்கள்.

    அதே சமயம் பெண் குழந்தை தந்தையிடம் வைத்திருக்கக் கூடிய பாசம் மிக அதிகமாக இருக்கும். அதை வெளிப்படுத்தவும் தயங்க மாட்டார்கள்.

    தந்தையர் தினமான இன்று அப்படிப்பட்ட ஒரு பாடலை நாம் பகிர்ந்து கொள்வோமா...



    தந்தை மகள் இருவருக்கிடையையான தந்தை மகள் பாசப் பிணைப்பினை நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நதியா இவர்களிருவரும் ஜீவனுடன் சித்தரித்திருப்பார்கள். மறக்க முடியாத திரைக்காவியம் அன்புள்ள அப்பா.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #288
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மேற்கண்ட எஸ்.பி.பி.அவர்கள் பேட்டியின் தொடர்ச்சியாக...

    எஸ்.பி.பி.அவர்கள் பேட்டியில் தான் ஆரம்பத்தில் 'குழந்தை 'உள்ளம்' படத்தில் பாடியதாக கூறியுள்ளார்.

    'முத்துச் சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு
    குடி கொண்டதே இன்பத் தேனுண்டு'

    என்பதுதான் அந்தப் பாடல். உடன் கண்ணியப் பாடகி பாடியிருப்பார். அற்புதமான பாலாவின் இளங்குரல்.

    இப்போது அந்தப் பாடலை பேட்டியின் தொடர்ச்சியாகப் பார்க்கலாம்.

    நடிகர் திலகமே தெய்வம்

  11. #289
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    பொதுவுடைமைக் கொள்கையை வலியுறுத்தும் 'சிவப்பு மல்லி' படத்தில் ஒரு அழகான டூயட். இன்னிசை இரட்டையர் சங்கர்-கணேஷ் இசையில், யேசுதாஸ்-சுசீலா (படத்தில் சந்திரசேகர்-சாந்திகிருஷ்ணா).

    1981- ல் மெல்லிசை மன்னருக்கும், இசைஞானிக்கும் இடையில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருந்த இரட்டையர்களிடமிருந்து அருமையான பாடல்கள் வெளிவந்து மனதைக்கவர்ந்தன. அவற்றில் ஒன்று இது....,

    ரெண்டுகன்னம் சந்தன கிண்ணம்
    தொட்டுக்கொள்ள ஆசைகள் துள்ளும்
    பூவை அள்ளி பூவை கையில் கொடுத்தபின்னும்
    தொட்டு தந்த கையில் மனம் வீசுது இன்னும்

    (கவிஞர் வைரமுத்துவுக்கு சாந்திகிருஷ்ணாவின் கன்னம் சந்தன கிண்ணமா?. அதுசரி, கவிதைக்கு பொய்யழகு. 'அண்ணியின்' உரல் இடையைப்பார்த்து 'இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது' என்று பாடிய கவிஞரின் வழி வந்தவர்கள்தானே)

    சரணங்களில் வைரமுத்துவின் முத்திரை...

    இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே
    இருளே இவளின் துணையே...

  12. #290
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post

    எப்போது கேட்டாலும் சுவை தரும் பாடல்....

    மந்திரப்புன்னகை மின்னிடும் மேனகை சந்தனப் பூங்கொடியோ
    இந்திரன் மாளிகை சுந்தரத் தேவதை சிந்திடும் பைங்கிளியோ
    அவள்தானோ இவள்தானோ இளமானோ இசைத்தேனோ
    வண்ணமொழி வார்த்தை திருவாசகம்தானோ

    அதிலும் எனக்கு மிகவும் பிடித்த சரணம்.....

    மாமதுரை வாழ்ந்திருக்கும் அங்கையற்கண்ணி
    தாமரையில் வீற்றிருக்கும் மங்கலச்செல்வி
    கையிரண்டில் இசைவீணை வைத்திருக்கும் கலைவாணி
    மங்கையிவள் யாரோ அந்த மூவரும்தானோ
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •