கே.வி.மகாதேவனின் இசை ஆக்கத்தில் என்றுமே பிரமிப்பைத் தரும் பாடல்களில் ஒன்று "மயக்கம் என்ன". டி.எம்.எஸ், சுசிலா கூட்டணியில் சுவையான மெலடி. உறவினர் திருமண நிகழ்ச்சியில் ஒரு இசைக்கச்சேரி. எழுபது வயது பெண்மணி ஒருவர் இந்தப் பாடலை பாடும்படி ஒரு துண்டுச்சீட்டு கொடுத்திருந்தார். பாடிய ஐந்து நிமிடங்களும் அவரின் முகம் அடைந்த பரவச நிலை இன்னும் கண்களிலேயே இருக்கிறது.

இசை, குரல்கள், கண்ணதாசனின் வரிகள், சிவாஜி-வாணிஸ்ரீ எல்லாமே பொருத்தமாக.