நீங்க அவரோட நிறைய நிகழ்ச்சிகளை பார்க்கல எனத் தெரிகிறது. முக்கிய விஷயங்களை வைத்து (அதாவது சாலமன் பாப்பையா பங்கெடுக்கிற பட்டிமன்றங்களின் தரத்தை ஒப்பிடுகையில்) லியோனியோட தலைமையில் நிறைய பட்டி மன்றங்கள்/ நகைச்சுவை மன்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. லியோனியின் பெரிய பலமே அவருக்கு சரி நிகராக உரையாடும் அவரது குழு நண்பர்கள்தான். நகைச்சுவை அட்சய பாத்திரமாக வழிந்தோடும். சாலமன் பாப்பையா கூட்டத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ராஜா மட்டுமே. ராஜா நீங்கலாக பார்த்தால் வெறும் டாகுமெண்டரி படம் போல இருக்கும். பார்க்கும் கிழவர்/கிழவிகளை கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைக்க சாலமர் ரொம்ப பிரயத்தனம் எடுத்து மாடுலேஷன் கொடுத்தெல்லாம் முயல்வார். அவர்களும் ஏப்பங்களுக்கு/கொட்டாவிகளுக்கு இடையே சிரித்து வைப்பர். மாறாக லியோனி மக்களோடு மக்களாக ..அவர் எந்தப் பொழுதிலும் தனித்து தெரியவே மாட்டார். அவரின் பேச்சுத் தொனி அப்படி. ஒவ்வொரு மனிதரையும் வசியப்படுத்தும் அலை நீளத்தில் ஆரம்பிக்கும் முதல் கணத்திலிருந்தே உதயமாகிவிடுவார்.