Results 1 to 10 of 123

Thread: Jeyamohan

Hybrid View

  1. #1
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by San_K View Post
    அருமை அருமை

    மனம் சோர்வுரும்போதெல்லாம் காந்தியை படிப்பது ஒரு அருமருந்து. அதிலும் ஜெயமோகன் போல் வார்த்தை வித்தகர் எழுதினால் கேட்கவும் வேண்டுமா

    காந்தியின் திமிர்

    One of the best ever articles
    செறிவான பேச்சு. ஆனால் காந்தியை கொந்தர்களோடு இணைத்துப் பார்ப்பது கொஞ்சம் அதீதமா படுது. (என் லேப்டாப்புகளை பழுதடையச் செய்யும் கொந்தர்கள் யாரேனும் என் கையில் கிடைத்தால் செத்தானுங்க! )

    அசல்சிந்தனையாளர்கள் நம்மை எப்போதுமே உடைத்துக் கலைக்கிறார்கள். நம்மை குழப்பமும் கலக்கமும் அடையச்செய்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் எரிச்சலடையச் செய்கிறார்கள். நாம் நம்பி இருப்பவற்றை அவர்கள் உலுக்குவதனால் உருவாகும் மனக்குலைவு அது.

    இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். நம் இளமைப்பருவத்தில் அதிரடியான கருத்துக்கள் மூலம் நம்மைக் கலங்கடிக்கும் பேச்சாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் பலர் உண்டு. அவர்கள் அசல்சிந்தனையாளர்கள் அல்ல. காரணம் அவர்கள் அதுவரையிலான மானுட சிந்தனையை எதிர்கொள்ளவில்லை. நமக்கு மானுடசிந்தனையுடன் பெரிய அறிமுகம் இல்லாத காரணத்தால் சில கருத்துக்கள் மூலம் நம்மை அவர்கள் பாதிக்கிறார்கள், அவ்வளவுதான்.

    அந்தக்கருத்துக்களை அவர்கள் ஏற்கனவே இருந்த மானுட சிந்தனையின் பெருக்கில் இருந்து எடுத்துக்கொண்டிருப்பார்கள். நமக்கு அது தெரிந்திருக்காது, அவ்வளவுதான். அது மனித சிந்தனையின் ஒரு துளி, விவாதத்தில் ஒருபக்கம். அதை மிகைப்படுத்தி ஆணியறைந்து சொன்னால் இளமையில் நாம் நிலைகுலைவோம். நான் சொல்வது அதை அல்ல.

    உதாரணமாக, நமக்குச் சின்ன வயதில் கடவுள் பக்தி இருக்கும்போது ஒரு நாத்திகர் கடவுள் மறுப்பு பேசி நம்மைக் குலைக்கலாம். அது ஒருவேளை நமக்கு முக்கியமானதாகவும் இருக்கலாம். ஆனால் அது அசல்சிந்தனையே அல்ல. ஏனென்றால் நாத்திகம் என்றும் இருந்துகொண்டிருக்கும் சிந்தனை. புதியதல்ல.
    பார்த்தீங்களா! எவனாவது எதிர்கேள்வி கேட்டுரப்போறான்னு ரொம்ப எச்சரிக்கையா பெரியார் கூட்டத்தை விமர்சிக்கிறார் பாருங்க! காந்தி கொந்தார் என்றால் பெரியாரும் கொந்தர்தான்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. Enathu India - Jeyamohan
    By Sanjeevi in forum Miscellaneous Topics
    Replies: 2
    Last Post: 16th October 2008, 11:36 AM
  2. Deconstructing Jeyamohan
    By atomhouse in forum Tamil Literature
    Replies: 4
    Last Post: 30th November 2006, 07:39 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •