'கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும்' என்று கூறுவார்கள். அதனை மெய்ப்பிக்கின்ற வகையில், நமது திரியின் பதிவாளர்களான பார்த்தசாரதி சார் 'நலந்தானா'வையும், முரளி சார் 'பட்டத்து ராணி'யையும், சகோதரி சாரதா 'மெழுகுவர்த்தி எரிகின்றது' பாடலையும் ஒரு சேர அளித்து நம்மை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி விட்டார்கள். அவர்களுக்கு நமது பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

ஒன்றுக்கொன்று மிக மிக வித்தியாசப்படும் இந்த மூன்று பாத்திரங்களிலும் அவர் வெளிப்படுத்திய performance levelஐ வேறொருவர் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

'கண்ணன்', 'பாரத்' ரோல்களையெல்லாம் வேறொருவர் நினைத்துப் பார்த்தால் கூட 'சிக்கல்' தான்.

அவர் தொட்டுத் துலக்கிய எந்தவொரு பாத்திரத்தையும் வேறு எவரும் தொடக்கூட முடியாது என்பது உலகறிந்ததே !

'நலந்தானா' பாடல் வரிகளின் மூலம் கவியரசர், உடல்நலம் குன்றியிருந்த அன்றைய தமிழக முதல்வரான பேரறிஞர் அண்ணாதுரை அவர்களை இலைமறைவு காய்மறைவாக நலம் விசாரித்திருப்பார். திரைக்காட்சிக்கும், நிஜக்காட்சிக்கும் ஒரு சேர பொருந்தக்கூடிய உயிரோட்டமான வரிகளை எழுதுவதில் கவிஞர் கிங் ஆயிற்றே !

'பட்டத்து ராணி' பாடலில் மேடையின் மேல் சுழலும் வட்டத்தில் அந்த சுழற்சிக்கு எதிராக நடிகர் திலகம் போடும் Fast Walk ஒரு நடை பிரம்மாண்டம். ஆனால் அந்த Fast Walk அவருக்கோ Cake Walk !

'மெழுகுவர்த்தி எரிகின்றது' பாடல் காட்சியை நாம் எப்பொழுது பார்த்தாலும் அதன் இதம் நூறு சதம் நம் மனதைத் தொடும் !

வீடியோ வேந்தரே, கலக்குங்கள் !

அன்புடன்,
பம்மலார்.