View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Results 881 to 890 of 1587

Thread: new serials/programs

Threaded View

  1. #10
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    `நாடறிந்த நடிகர் நாகேஷ்'


    வசந்த் டிவியில் செவ்வாய்தோறும் இரவு 7.30 மணிக்கு `தமிழ்த்திரையுலகில் நடிகர் நாகேஷ்' என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நகைச்சுவையில் தொடங்கி பின்னாளில் குணசித்ரத்திலும் கொடிகட்டிப் பறந்த நாகேஷின் கலையுலக சாதனை அளப்பரியது. சினிமாவில் பிசியாக இருந்த நாட்களிலும் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பது திரையுலக நட்பு சரித்திரம்.

    நாகேஷ் புகழேணியின் உச்சியில் இருந்த நேரத்தில் அவருடன் இணைந்து நடித்த நட்சத்திரங்கள் காத்தாடி ராமமூர்த்தி, சச்சு, அவருக்கு டைரக்டர் ஸ்ரீதர் படத்தில் காட்சிகள் அமைத்த கதாசிரியர் சித்ராலயா கோபு ஆகியோர் நாகேஷுடன் பழகிய அந்த நாட்களை இந்த நிகழ்ச்சியில் நினைவு கூர்கிறார்கள்.

    நடிகை சச்சு பேசும்போது, "நாகேஷ் டைமிங்காக பேசி சிரிக்கவைப்பதில் வல்லவர். `காதலிக்கநேரமில்லை' படத்தில் அவருடன் நடிக்கும்போது அவர்அடித்த டைமிங் ஜோக்கால் சிரித்துக்கொண்டே இருந்தேன்'' என்றார்.

    சித்ராலயா கோபு கூறும் போது, "நாகேஷ் நடித்து அப்போது `நெஞ்சில் ஓர் ஆலயம்' படம் மட்டுமே வந்திருந்தது. அப்போது ஒரு நிகழ்ச்சிக்காக வெளிïருக்கு நாகேஷுடன் நாங்கள் காரில் போன போது `நாகேஷ்..நாகேஷ்..' என்று உற்சாகத்துடன் கத்தியபடி ரசிகர்கள் காரை நோக்கி ஓடிவந்தனர். அந்தக்காரில் எங்களுடன் நடிகர் தங்கவேலுவும் வந்தார். அவர் ஏற்கனவே `கல்யாணப்பரிசு' போன்ற படங்களில் நகைச்
    சுவையாக நடித்து புகழ் பெற்றவர். நாகேஷுக்கு இருந்த ரசிக ஈர்ப்பை நேரில் பார்த்ததும் அவர் , `ஒரு படத்திலேயே இப்படி ரசிகர்களை கவர்ந்து விட்ட நாகேஷ் பின்னாளில் பெரிய நட்சத்திரமாக வருவார்' என்று அப்போதே வாழ்த்தினார். அவர் வாழ்த்தியபடியே நாகேஷும் வளர்ந்தார்'' என்றார்.

    நிகழ்ச்சியின்போது நாகேஷ் நடித்த படங்களில் இருந்து நகைச்சுவைக்காட்சிகளும் இடம் பெறுகிறது.



    நன்றி: தினதந்தி
    Last edited by aanaa; 15th April 2011 at 04:03 AM.
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •