Results 11 to 20 of 140

Thread: Tamils should speak in "Tamil" with much pride

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R
    Quote Originally Posted by joe
    ஒருவர் தமிழர் என தெரிந்தால் நான் தமிழில் தான் பேசுவேன் .
    அதுவும் சரளமாக, பிறமொழிக்கலப்பு மிகக்குறைவாக, ஆனால் இயல்பாகப் பேசுவார் ஜோ.
    நன்றி PR

    ஒரேயடியாக தனித்தமிழிலோ செந்தமிழிலோ பேச வேண்டும் என்பது எனக்கும் உடன்பாடு அல்ல .வலிந்து கொண்டு வார்த்தைகளை தேடிப் பேச வேண்டுமென்பதில்லை .ஆனால் தெரிந்த வார்த்தைகளை முடிந்த அளவு பயன்படுத்தினாலே போதும் என்பது என் கருத்து .

    இன்னொன்று தமிழில் சில வார்த்தைகளை பேசுவதற்கு கூச்சம் .எனக்கு தெரிந்து ஆங்கிலம் வழியாக பேசிக்கொள்ளும் பிற மொழிக்காரர்கள் கூட ‘நன்றி’ எனும் போது தம் மொழியிலேயே சொல்கிறார்கள் ..ஆனால் நம் மக்களுக்கோ ‘நன்றி’ என்று சொல்வதற்கே பெரும் கூச்சம் .

    தமிழராக இருந்தால் நான் கட்டாயம் ‘நன்றி’ என்று சொல்லுவேன் .இந்த ‘நன்றி’ என்ற ஒரு சொல்லுக்கே நான் ‘தமிழ் பற்றாளன்’ என்றும் ‘தமிழ் வெறியன்’ என்னும் பொருள்பட சிலர் கூறும் போது எனக்கு எரிச்சல் தான் வரும் ..ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ‘நன்றி’ என சொல்லுவதற்கு என்ன பெரிய வெங்காய மொழிப்பற்று தேவைப்படுகிறது? தமிழர்களுக்குள் ‘நன்றி’ என சொல்லுவது இயல்பானதாக இருக்க வேண்டாமா?

    சிலர் mummy ,daddy -க்கு பதில் அம்மா ,அப்பா எனறோ , ‘நன்றி’ என்றோ சொல்லி விட்டால் தமிழ் வளர்ந்து விடுமா என கேட்கும் குதர்க்கக் கேள்விகளை நான் மதிப்பதே இல்லை .. அம்மா ,அப்பா ,நன்றி போன்ற அடிப்படை வார்த்தைகளையே பேச கூச்சமும் தயக்கமும் கொள்பவர்கள் அதைத் தாண்டி போக முடியாது என்பது என் கருத்து.

    என் மகன் என்னை தப்பித்தவறி daddy என சொல்லும் போது ‘இல்லை .அப்பா என சொல்ல வேண்டும் ‘ என நான் சொல்லும் போது நண்பர்கள் ,உறவினர்கள் சிலர் “பரவாயில்லையே ..நல்ல தமிழ் பற்று’ என சொல்லும் போது எனக்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருக்கும் ..எந்த மொழிக்காரனும் தன் பிள்ளைகள் தம்மை அம்மா ,அப்பா என தம் மொழியில் கூப்பிடுவதை பெரிய மொழிப்பற்றாக கருதுவதில்லை ..சொல்லப்போனால் அப்படி கூப்பிடாமல் வேறு மொழியில் கூப்பிட்டால் தான் ஏதோ கோளாறு என அர்த்தம்.

    எனவே இத்தகைய சின்ன விடயங்களில் நொண்டிச் சாக்குகளை சொல்லாமல் நம் மனத்தடைகளை தூக்கி வீசுவோம். படிப்படியாக இயன்ற வரை இனிய தமிழில் பேசுவோம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. "Padmashri" "Isaimani" Dr. Sirkali Govin
    By pulavar in forum Memories of Yesteryears
    Replies: 1
    Last Post: 5th February 2010, 03:19 PM
  2. "Ariyar" in the Ancient Tamil Literature- K. V. R
    By devapriya in forum Indian History & Culture
    Replies: 3
    Last Post: 14th February 2009, 05:49 PM
  3. "thanner ilaatha tamil" - source of quote
    By podalangai in forum Tamil Literature
    Replies: 1
    Last Post: 29th November 2006, 09:18 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •