அருமையான, அவசியமான தலைப்பும் கூட. தமிழ் தெரிந்தவர்களிடம் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்று அனைவரும் உறுதி கொள்ள வேண்டும். இலங்கைக்குச் செல்லும் போதெல்லாம் அங்கு பேசுகிற தமிழைக் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எனக்கு மறந்து போன சொற்களையெல்லாம் நினைவு படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்வேன்.
மும்பையில் உள்ள எங்களது உறவினர்கள் தமிழகம் வந்தால் இந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ தான் தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். ஆனால் அமெரிக்காவில் இருந்து வரும் உறவினர்களோ தூய தமிழில் பேசுகிறார்கள். என்ன சொல்வது...??