.
Quote Originally Posted by bis_mala
Quote Originally Posted by Sudhaama
.

. வலி - வளி - வழி.!

Quote Originally Posted by bis_mala
Quote Originally Posted by jaaze
what's with the H at the end? numerology ah?
ஒரு வேளை "ள்" என்று உச்சரிக்கவேண்டும், "ல்" அன்று என்று தெரிவிக்கவோ? எனக்கும் புரியவில்லையே!
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு... இந்த இழையை நான் துவக்கியபோதே... நீங்கள் கேட்ட இதே கேள்வியை தமிழ் இலக்கிய-அன்பர் திரு ஹரிகிருஷ்ணன் கேட்டிருந்தார்..

அவருக்கு விவரமாக விளக்கம் அளித்திருக்கிறேன். முடிந்தால் புரட்டி பாருங்கள்.

..இருப்பினும் சுருக்கமாக மீண்டும் விளக்குகிறேன்..

தமிழ்ச் சொல்லை ஆங்கில எழுத்தாக்கம் (Transliterate) செய்கையிலே. திருக்குறள்... என்னும் சொல்லில்... "குரலுக்கும்" "குறளுக்கும்" .. வித்தியாசம் காட்டவே இவ்வாறு "H" என்னும் எழுத்தைப்
பயன்படுத்துவது... சுமார் 500 ஆண்டுகளாக... 1940-ஆம் ஆண்டுக்கு முந்தைய கால மதுரை தமிழ்ச்சங்க மரபு....

[ஆனால் வேறு முறைகளும்... ஆங்கிலேயர்களால் புதிதாக உண்டாக்கப்பட்டு புகுத்தப்பட்டன... என்பது தனிச்செய்தி.]

மதுரை தமிழ்ச்சங்கம் வகுத்த முறையில்... தற்காலத்தைய புதிய மரபு போல... ஆங்கில தலைப்பு-எழுத்து வகைகளான R, L, A, E, U, I, O போன்றவை... ஏனைய எழுத்துக்களினின்றும் அதிக
முக்கியத்துவம் கொண்டு கொட்டை கொட்டையாக நம் கண்களை உறுத்தும் வகையில்... பயன்படுத்தப்படுவது 1940-ஆம் ஆண்டுக்கு முன்பு, அக்காலத்தில் இல்லை....

உதாரணமாக ஒரு வாக்கியம்:---.... "ஓடி வந்த கள்ளழகரிடம்... ராஜாராமன் ஏக்கத்துடன் சொன்னார்... "கற்றது கை-மண் அளவே" என்று.

New Style:--- Odi vantha kaLLazakaritam... rAjArAman, Ekkathutan sonnAr... "kaRRathu kai-maN aLavE"... enRu.

Traditional Tamil-Sangam Style:--- Oadi vandha Kalhlhazhaharidam... Raajaaraaman yaekkaththudan sonnaar... "katradhu Kai-manh Alhavae" yenrhu.

வட-இந்திய மொழிகளில்... தலை, தளை, தழை.. போன்ற சொற்கள் கிடையா.. எல்லாம் ஒரே உச்சரிப்பு தான் "தலை" என்று மட்டுமே.

ஆனால் தமிழில்... வலிக்கும், வளிக்கும், வழிக்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது.... மேலும் ... கொல்லை-கொள்ளை,...குளம்பு-குழம்பு... வலம்-வளம்...

எனவே தான்... தமிழ்-மொழிக்கு சிறப்பு- தேவைகளான... "ழ" = "ZHA"... ... "ற" = RHA .... "ள" = LHA.... என்று நெறி வகுக்கப்பட்டது.

ஆகவே தான் ஆங்கிலேயர் காலத்திலேயே... சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மேற்கண்ட தமிழ்ச்சங்க எழுத்தாக்கம் (Transliterate) முறை கடைப்பிடிக்கப்பட்டு... முற்கால தமிழ்

இலக்கியங்கள் யாவும்... திருக்குறள், கம்ப-ராமாயணம், ஐம்பெரும் காப்பியங்கள் போன்றவை ஆங்கில-எழுத்து வடிவில் மூல-நூல்கள் எழுத்தாக்கம் செய்யப்பட்டு உலகு எங்கும் புத்தகங்கள் வெளி

வந்தன.

ஆகவே அவ்வகையிலே... திருக்குறள் = THIRUK-KURHALH.... என எழுத்தாக்கம் (Transliterate)் செய்யப்படுகிறது.

தமிழிலும் ஆங்கில-மொழியிலும் மெத்தவும் புலமை கொண்ட முற்காலத்து வல்லுனர்களான... பேராசிரியர் திரு ரா.பி. சேதுப்பிள்ளை,... பேராசிரியர் திரு. அ. சீனிவாச ராகவன் போன்ற பேரறிஞர்கள்
கையாண்ட முறையும் இதுவே.... நானும் கடைப்பிடிப்பது...

...தற்கால "திருதிரு உறுத்தல்" எழுத்தாக்க முறை உங்களுக்கு மனம் ஒப்புகிறதா.?
..
.
Quote Originally Posted by bis_mala

தலைப்பு THIRUK-KURHALH. என்றில்லாமல், THIRUKKURALH என்றே போடப்பட்டுள்ளது, அதாவது, ரகர றகர வேறுபாடு போற்றப்படவில்லை என்று கூறுவது சரி எனலாமா?

ஆம். நீங்கள் சுட்டிக்காட்டிய பிழை.., எனது தவறு தான்.... ற = r h ... என்று தான் எழுத்தாக்கம் செய்தல் வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தமிழ்ச் சங்க முறையில் ஆங்கில தலைப்பு எழுத்துக்களே பயன் படுத்துவது இல்லை. ஆங்கில-மொழியின் 26 எழுத்துக்களை மேலோட்டமாக 52 எழுத்துக்களாக்கி விட்டதால்...

பிரச்சினை தீர்ந்து-விடுமா.? குழப்பம் அல்லவோ.? எப்படி.?

இந்திய மொழிகளிலும், வேறு எந்த நாட்டு மொழியிலும் இல்லாத வகையில்... ஐரோப்பிய மொழிகளில் மட்டுமே... இவ்வாறு தலைப்பு எழுத்துக்களை (Capital Letters) ஏன் உண்டாக்கினர்.?

(1) ஒவ்வொரு வாக்கிய முடிவையும் காட்டுவது முற்றுப்புள்ளி அல்லவா.?...அல்லது உணர்ச்சிக்-குறிகளான... கேள்விக்-குறி (?)... ஆச்சரியக்-குறி.(!}.. போன்றவையும் வாக்கிய-முடிவைச் சுட்டும்.

உலக மொழிகள் அனைத்தும் தற்காலத்தில் ஏற்றுக்கொண்டுள்ள இத்தகைய குறிகளை உருவாக்கியவர்கள் ஐரோபியர்களே.!

நாளடைவில் நாடக-மொழியில் மக்கள் படிக்கத் துவங்கி விட்டதால்... கேள்விக்குறியோ ஆச்சரியக்குறியோ இல்லாத வாக்கிய முடிவில் முற்றுப்புள்ளி அழுத்தமாக புலப்படவில்லையானால்

அடுத்தடுத்த வாக்கியச்சொற்களையும் கூட்டிப்படித்து குழப்பமே மிஞ்சும் அன்றோ.? எனவே ஒவ்வொரு வாக்கிய துவக்கத்தையும் குறிக்க... முதல் எழுத்தாக ஒரு தலைப்பு-எழுத்தின் தேவையை

விஞ்ஞானம் வளர்ந்த காலத்தில் ஐரொப்பியர்கள் உணர்ந்தனர். எனவே இத்தகைய தலைப்பு-எழுத்துக்கள்... A, B, C... என்ற வகையிலே உண்டாக்கப்பட்டன. .

(2) ஐரோப்பிய கலாச்சாரதில்... woods, stone, grips, shepherd போன்ற சாமான்னிய சொற்களளே... சிலருக்கு பெயர்களாகவும்... ஊர்களுக்கும் நதிகளுக்கும்... நிர்வாக கம்பெனிகளுக்கும்

பெயர்களாகவும் அமைந்தன. எனவே அவற்றுள் வித்தியாசம் காட்ட தனி எழுத்து... Proper-Nown என்ற பெயரிலே தேவைப்பட்டது. இத்தகைய குழப்பம் தமிழ்-மொழியில் இல்லை. எப்படி.?

தமிழர் கலாச்சாரத்ENNUM திலும் கூட... மண்ணாங்கட்டி.... அம்மாவாசை... மலை... பாப்பா... அப்பன்... கள்ளன்... போன்ற பெயர்- மரபு நிலவுகிறது எனினுமே.!

அந்நிலையிலே... சாமான்னிய பொருளுக்கும் மனிதப்பெயருக்கும் வேறுபடுத்தி தமிழில் காட்ட இயலும். எப்படி.?

அம்மாவாசை நேற்று வந்தது... அம்மாவாசை இன்று வந்தான்.... மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டியை தூக்கி வந்தான்./// பாப்பா நேற்று வந்தாள்... அவளது பாப்பா, இன்று வரப்போகிறது...

மலை மலைக்கு போயிருக்கிறான்.... அப்பன் சொன்னார்... நான் அவரது அப்பனிடம் கூறி விட்டேன்.

(3) மேலும் சங்கிலி எழுத்தாய் ஐரோப்பிய மொழிகளை எழுதுகையிலே... சில சொற்களுக்கு அழுத்தம் கொடுக்க அவர்களுக்கு... ஒரு தனி எழுத்து-வகை தேவைப்பட்டது... மேலும் சங்கிலி எழுத்தில்

விளக்க இயலாத சில சொற்களுக்கு அவ்வகை மிக இன்றியமையாததானது... பெயர்களை குறிப்பிட Name in CAPITAL LETTERS Please... என்பது போல

எனவே அவை ஏனைய எழுத்துக்களிடையே உள்ளங்கை நெல்லிக்கனியாய்... துலங்கின.... கண்ணை உறுத்தும் வகையிலே திருதிருவென்று.

அத்தகைய தனித்தன்மை வாய்ந்த தலைப்பு-எழுத்து வகைகளை... நாம் தமிழில் பயன் படுத்தினால்.... ஏனைய எழுத்துக்களை காட்டிலும் ஆ, ஊ, ஈ, ஏ, ஓ, ற, ள போன்ற எழுத்துக்களை மட்டும்

அழுத்தம் காட்டுவது தேவையா.?...

...இம்முறை நம் கண்ணை உறுத்தவில்லையா.?.

இம்முறையிலே மேலும் ஒரு பிரச்சினை எழுகிறது.. தமிழின் தனித்தன்மைக்கு ஒவ்வாத இடையூறு.!... ஏற்கனவே கூறியதை மீண்டும் நினைவு கொள்வோம்.

ஆங்கிலம் தவிர... உலகின் முக்கிய மொழிகளின் உச்சரிப்பு அதன் ஒவ்வொரு எழுத்திலேயே துவங்கி விடுகிறது... Letter-based PRONUJNCIATION and PHONETICS

மாறாக தமிழ்-மொழி மட்டுமே அவ்வந்த இடத்திற்கு ஏற்ப.. ஒரே எழுத்தின் உச்சரிப்பு மாறும்... இந்த நிலை ஆங்கில-மொழிக்கும் உண்டு என்றாலும்... ஆங்கிலத்தில் ஒரு நெறிபட்ட உச்சரிப்பு

(Standard Pronunciation) கிடையாது...

உதாரணமாக.. ...PUT - BUT... ... WAS - GAS.... ... GEORGE - GORGE... ... CITE - SITE... ... CHORUS - CORE... .

ஆனால் தமிழில் குழப்பம்-இல்லா வகையிலே முரண்பாடு ஏதும் இன்றி... ஒரு சிறுவன் கூட எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

தவிர, ஆங்கில மொழி போல... "கேள்விக்கு அப்பாற்பட்ட விதி (Unquestionable Thumb-Rule) ஏதும் கிடையாது.

அதாவது... தமிழிலே ஒரே எழுத்துக்கு பல உச்சரிப்புகள் உண்டு.. ஒரு குறிப்பிட்ட நெறிப்படி.

அதாவது க என்னும் ஒரே எழுத்து... KA, GA, HA என்னும் வகையிலே வேறுபடும்.. இடத்திற்கு தக்கபடி....

எப்படி என்னும் விளக்கம் இங்கு முன்னமேயே கண்டோம்...

உதாரணமாக... கங்ககம் = KANGAHAM என உச்சரிப்பு கொள்கிறது... ஒரே எழுத்து "க"... KA , GA, HA... என்னும் வகையிலே வேறுபடுகிறது.

தமிழுக்கு மட்டுமே உண்டான இத்தகைய தனித்தன்மை இந்த திருதிரு எழுத்தாக்க முறையிலே கருத்தில் கொள்ளப்படவில்லை.. எனவே குழப்பமே மேலிடுகிறது" என்பதே தமிழ்ச்சங்க வல்லுனர்களின்

குற்றச்சாட்டு.

ஆகவே தமிழ்-மொழிக்கு முற்றிலும் ஏற்ற எழுத்தாக்க முறை... மதுரை தமிழ்ச்சங்கத்தார் வகுத்துள்ள மேற்கண்ட நமது முறையே.!

Quote Originally Posted by bis_mala
இம்முறையில், TH=த ; அப்படியானால், ( T = ? t = ?) என்றும் அறிந்துகொள்ளலாமா? ்
tks.
ta = ட..... tha = த.... "T" போன்ற தலைப்பு எழுத்துக்களே... நமது எழுத்தாக்க- முறையிலே பயன்பாட்டில் கிடையாது.

.