For all his self-boasting, sure he deserves a thread...

His full interview from AV..

================================================== ================================
''தம்த தகிட... தம்த தகிட... இது நாட்டுச் சரக்கு. அடுத்ததா வெஸ்டர்ன் வேணுமா? தகஜூம் தும் தும்... த்தாத்தா''- தலைமுடி துள்ள, அறையே அதிரவாயா லேயே வாத்தியம் வாசிக்கிறார் விஜய டி.ஆர். ''சார்... நான் ஓர் இசைக் கலைஞன் சார். தோல் வாத்தியம் தெரியும். எனக்குத் தோளே வாத்தியம் சார்!'' என்றபடி வலது கையால் இடது தோளை 'ரப் ரப்'என்று அறைந்து தாளம் போடுகிறார். மிரட்டலாக ஆரம்பிக்கிறது விஜய டி.ராஜேந்தரின் பேட்டி.

''வந்திருச்சு சார் இடைத் தேர்தல். ஆளுங்கட்சி,எதிர்க் கட்சின்னு அத்தனைக்கும் இது டெஸ்ட்டு சார். இந்த ஆட்சி பற்றி மக்கள் மனதில் பலவிதமான குறைபாடுகள் இருக்குன்னு கலைஞர்கிட்ட சொல்லிட்டுதான், மாநில சிறுசேமிப்புத் துறை துணைத் தலைவர் பதவியை ராஜி னாமா செஞ்சேன். விலையேற்றம், மின்சாரத் தட்டுப் பாடுன்னு மக்கள் சிரமப்படுறாங்க சார். 'இலங்கையில் நிறுத்தப்பட வேண்டும் யுத்தம். தமிழன் சிந்தக் கூடாது ரத்தம். அதற்காக நீங்கள் கொடுக்க வேண்டும் சத்தம்'னு இன்னிக்கு வரைக்கும் சத்தம் போட்டுப் பேசிட்டு இருக்கேன். 'பிரணாப் முகர்ஜி இன்னும் ஏன் இலங்கைக்குப் போகலை?'ன்னு கேட்டா, கலைஞர் பதில் சொல்ல மாட்டேங்குறாரு. தப்பு நடக் கும்போதெல்லாம் தட்டிக் கேட்டுக்கிட்டே இருக்கேன் சார்!''

''திருமங்கலம் இடைத் தேர்தலில் உங்க கட்சியோட நிலை என்ன?''

''இந்த இடைத் தேர்தலை ஏன் இப்ப வெச்சாங்கன்னு கலைஞரே சந்தேகமாக் கேக்குறாரு. 'தேர்தல் முடிவு பாதகமா இருந்துச்சுன்னா, தி.மு.க-வைக் கழட்டிவிட்டு டலாம்'கிறது காங்கிரஸோட கணக்கு. திருமங்கலத்தில் நான் போட்டி போடணும்'னு என் கட்சியினர் எழுதி னாங்க சுவர் எழுத்து. எனக்குத் தெரிஞ்சிருச்சு தேர்த லோட தலையெழுத்து. அதனால, லட்சியத் தி.மு.க. இந்த இடைத் தேர்தலில் போட்டியிடாது. திருமங்கலம் தேர்தல் களமா... ரணகளமா..? அங்கு நடக்கப்போவது ஜனநாயகமா... பண நாயகமான்னு மக்கள்தான் பதில் சொல்லணும். நான் ஆன்மிகவாதி. ஜோதிடம் அறிந்தவன். என் ராசி தனுசுல சூரியனும் செவ்வாயும் சேர்ந்து உட்கார்ந்திருக்காங்க. குரு உச்சத்துல இருக்கான். கூடவே, ராகு இருக்குறான். இந்தக் காலத்தை நான் பார்க்கிறேன். என் கண்ணில் ஒரு ரணகளம் தெரியுது!''

''விஜயகாந்த்தோட அரசியல் அணுகுமுறை எப்படி இருக்கு?''

''தமிழ்நாட்டுல போண்டா மணி ஓட்டு கேட்டுவந்தாக் கூட கூட்டம் வரும். திருமங்கலத்துல நின்னா, திருப்பு முனையை ஏற்படுத்துவேன்னு தெருமுனையில பேசு றாரே, ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வரலை? ஜெயலலிதா, காங்கிரஸ் இவங்களோட கூட்டணிவைக்க ணும்னா, இலங்கைத் தமிழர் பிரச்னையில அடக்கி வாசிக்கணும்னு விவரமா இருக்கார். (பல்லைக் கடித்தபடி விஜயகாந்த் வாய்ஸில் மிமிக்ரி செய்கிறார்.)

விஜயகாந்த்துக்கு முன்னாடியே நான் அரசியல் களம் பார்த்தவன் சார். ஆனா, அவ்வளவா விவரம் இல்லாதவன். நான் வேகமான தமிழன். ஆனா, பிழைக்கத் தெரியாத தமிழன். இதுதான் உண்மை!''

''மாறன் - கலைஞர் குடும்ப இணைப்புபற்றி என்ன நினைக்கிறீங்க?''

''தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டபோது, 'மதுரையை கண்ணகி எரிச்சதையெல்லாம் மக்கள் பார்க்கலை. ஆனா, இவங்க எரிச்சதை இப்பதான் பாக்குறாங்க'னு விஜயகாந்த் அன்னிக்குக் கொடுத்தாரு பேட்டி. இன்னிக்கு அவுந்துடுச்சு பாத்தீங்களா, அவரு வேட்டி. நான் அன்னிக்கு ஏதாவது பேட்டி கொடுத்தேனா? கலைஞர் டிவி. ஆரம்பிச்சப்ப, நான் அங்கே போகாம சன் டி.வி-யிலயே அரட்டை அரங் கம் பண்ணுனேன். எவன் விவரமானவன், எவன் சிந்திக்கத் தெரிஞ்சவன்னு புரியுதா? ராஜேந்தருக்கு இருக்குறது முடி மட்டுமில்ல... மூளை! (தலையைக் கலைக்கிறார்) இவன்கிட்ட இருக்குறது வேகம் மட்டுமில்ல... விவேகம். என்கிட்டே துடிப்பும் இருக்கு, படிப்பும் இருக்கு. எனக்காகப் பிரசுரிங்க சார். கலைஞர் குடும்பமும் மாறன் குடும்பமும் அடிச்சுப்பாங்க... ஒண்ணா கூடிப்பாங்கன்னு எனக்குத் தெரியும். நீரடிச்சு நீர் விலகாது. கலைஞர் கதை, திரைக்கதை, வசனம் எப்படி வேணும்னாலும் எழுதுவார்னு எனக்குத் தெரியும் சார்!''

''சிம்பு மேல மட்டும் இவ்வளவு சர்ச்சைகள் வருதே?''

''காய்ச்ச மரம் கல்லடி படத்தான் சார் செய்யும். 'இந்தப் பையன் இப்படி வளர்றானே!'னு சிம்பு மேல பெரிய பெரிய நட்சத்திரங்களுக்கு எல்லாம் ஆதங்கம் இருக்கு. என் மகனைப் போல ஒரு நல்லவனை நான் இதுவரைக்கும் பார்க்கலை. எவ்வளவோ பெண்களோட பழக வாய்ப்புள்ள சினிமாஉலகத் துல, காதல் குறித்த ஒரு மென்மையான இதயத்தோடஇருக் கான். சினிமாவுல இருந்துட்டு, என்னை மாதிரியே அவனும் நல்லவனா இருக்குறது பெரிய விஷயம் சார். இப்படி ஒரு மகனைப் பெற்றதற்கு நான் பெருமைப்படுறேன் சார்!''

''தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டாரா வர்றதுக்கு யாருக்கு வாய்ப்பிருக்கு?''

''சினிமாவுல திறமைசாலி, புத்திசாலி மட்டும் ஜெயிக்க முடியாது. பொறுமைசாலியாவும் அதிர்ஷ்டசாலியாவும் இருக்கணும். இவ்வளவு நடிகர்கள் இருக்குற தமிழ் சினிமாவுல ரஜினி - கமல், விஜய் - அஜீத், சிம்பு - தனுஷ்னு 6 பேருக்குத் தான் ரசிகர்கள் இடம் கொடுத்திருக்காங்க. அதுல ஒருபையனா வந்து நிக்கிறான் யாரு... அவனைப் பெத்தது இந்த விஜய டி.ஆரு. 'ஐ யம் எ லிட்டில் ஸ்டார். ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்'னு 1989-லயே 'சம்சாரம் சங்கீதம்' படத்தில் நான் ஒரு பாட்டு எழுதிட்டேன் சார். எதிர் காலத்துல என் பையன் எப்படி வளர்ந்து வரு வான்னு வெயிட் பண்ணிப் பாருங்க. நான் தலைக் கனத்தோட சொல்லலை, தன்னம்பிக்கையின் இலக்கணத்தோடு சொல்றேன்!''

'' 'வீராச்சாமி'க்கு அப்புறம் என்ன படம் பண்றீங்க?''

''என்னோட அடுத்த படம் 'ஒருதலைக் காதல்'. 1979-ல் 'ஒருதலை ராகம்' எடுத்தேன். 2009-ல் 'ஒருதலைக் காதல்' எடுக்குறேன். இப்போ உள்ள யூத்து களுக்காக இந்தப் படத்தை எடுத்துக்கிட்டு இருக் கேன். டப்பாங்குத்துப் பாட்டுக்களோட இன்னைய டிரெண்டுக்கு இறங்கி அடிக்கப் போறேன். இதுல ஒரு முரட்டுத்தனமான வாலிபனா வர்றேன். அதுக்காக ஜிம் போய், டயட் இருந்து வெயிட்டைக் குறைச்சுக்கிட்டு இருக்கேன். (படாரென்று தன் வயிற்றில் அறைகிறார்) பாருங்க தொப்பை இல்லாம யூத் மாதிரி இருக்கேன்ல? இப்ப உள்ள ஹீரோக்களை என்னை மாதிரி ஆடிப் பாடச் சொல்லுங்க சார். தம் அடிச்சு யாருக்குமே தம் இல்லை.

'வீராச்சாமி'யில நான் ஆடினா, தியேட்டரே கைதட்டி ரசிக்குறாங்க சார். உங்களை மாதிரி சில பேர்தான் 'ஏன் ஹீரோவா நடிக்கிறீங்க?'ன்னு கேட்குறாங்க. ரஜினி, கமலைவிட நான் வயசு கம்மியானவன் சார். அவங்க நடிக்கலாம். நான் நடிக்கக் கூடாதா? (காலை பக்கவாட்டில் உதைக்கிறார்) ஒரு காலைத் தூக்கி இப்படி அடிச்சேன்னா, இன்னிக்கு நாள் பூரா அடிச்சிட்டே இருப்பேன். நீங்க வேணா கிண்டலுக்காக 'டி.ஆர். சிக்ஸ்பேக் வைக்கப் போறான்'னு எழுதலாம். நான் முகத்தைக் காட்டி ஜெயிக்கிறவன் இல்ல... அகத்தைக் காட்டி ஜெயிக்கிறவன் சார்!''
================================================== ======================================