ராஜ் டி.வி.யில் சனிக்கிழமை தோறும் இரவு 8.01க்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி அசத்தல் மாமியார்-கலக்கல் மருமகள்.

இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் மாமியார்களாக ஒரு பக்கமும், மருமகள்களாக மற்றொரு பக்கமும் இருந்து பல போட்டிகளை சந்திக் கின் றனர்.

பிரபல நடிகை காயத்ரி ஜெயராம் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பான வித்தியாசமான நான்கு சுற்றுகள் உள்ளன.

ஒவ்வொரு சுற்றிலும் மாமியார்- மருமகள் ஆகியோருக்கு நடத்தப்படும் போட்டிகள் நகைச்சுவை துள்ளலுடன் ரொம் பவே ரசிக்க வைக்கிறது.

இந்த வாரம் மாமியார்களாக பசி சத்யா மற்றும் எஸ்.எஸ்.பார்வதி மருமகள்களாக ரிந்தியா மற்றும் ராணி பங்கேற்கும் நிகழ்ச்சி விறுவிறுப்புடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.