-
11th February 2008, 08:03 PM
#11
Moderator
Diamond Hubber
மண் மணம் மாறாத மதுரை என்று சொல்லி, விஜய் சேனல் ஒளிபரப்பும் வித்தியாசமான கிராமிய தொடர், 100வது வாரத்தை எட்டி விட்டது. பல திருப்பங்களுடன் இந்த தொடர் விறு விறுப்பாக போகிறது. இரண்டாவது தலைமுறையினருடன் கதை போய்க்கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை மாதம் ஆரம்பித்த இந்த தொடர், வரும் திங்கட்கிழமை 100வது நாளை எட்டுகிறது. ஸ்ரீஜா நடிக்கும் மீனாட்சி, செந்தில் நடிக்கும் சரவணன் கேரக்டர்கள் தான் மையமாக சென்று கொண்டிருக்கின்றன.பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார் மீனாட்சி; மீனாட்சி யை காதலிக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறார் சரவணன். உயிருக்கு போராடும் சரவணன் பிழைப்பாரா? காதலை ஏற்பாரா மீனாட்சி? பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேருமா? திங்கள் வியாழன் இரவு 8.30க்கு பாருங்கள்.
-
11th February 2008 08:03 PM
# ADS
Circuit advertisement
Bookmarks