தரமான தனி நாவல்கள், கதைகள், கட்டுரைகள்,காரசாரமான விவாதங்கள், சுவையான அலசல்கள், பட்டிமன்றங்கள் இவையெல்லாம் எல்லா ஊடகங்களிலும் இணையதளங்களும் அருமையாக, ஆரோக்கியமாக பெருகியுள்ளன. மொழியின் புது பரிமானங்கள் அரங்கேறுகின்றன. ஆனால் வெகுஜன சஞ்சிகைகளின் சில கவர்ச்சியான வார்த்தை பிரயோகங்கள் அழகாயில்லை- என் கருத்தில், நாகரிகத்தின் எல்லைகள் மீறப்படுவதால். திரைப்பட பாடல்கள் இலக்கியமா என்று சந்தெகம் இன்றைய காலகட்டத்தில் எழும்புகிறது-வியக்கத்தக்க கற்பனைகளும், அருவருப்பான,அபத்தமான குப்பைகளும் கலந்து கிடக்கின்றன அவற்றிலே-இவ்வளவு ஆங்கில கலப்பும் அவசியமா என்றும் தோன்றுகிறது.சிறுபிள்ளைதனமாக, கோணங்கிதனமாக எழுத்தப்படுவதெல்லாம், மேடையில் முழங்கப்படுவதெல்லாம் கூட இலக்கியமாக சித்தரிக்கப்படும் அவலமும் காணப்படுகிறது. உமியை பிரித்து ஊதிவிட்டு அவலை மெல்ல வேண்டியுள்ளது.