கலைவாணரைப்போலவே முற்போக்கு சமுதாய கருத்துக்களை தருவதிலும், மூடநம்பிக்கை சாடல்களிலும் கைதேர்ந்தவர் எம்.ஆர்.ராதா.

எம்.ஜி.ஆருடன் அவர் நடித்த 'மாடப்புறா' படத்தில் ஒரு காட்சி. தெருவில் ஒருவன் தாயத்து விற்றுக்கொண்டிருப்பான். அங்கு எம்.ஆர்.ராதா வருவார்.

தாயத்து விற்பவன்: "அய்யாமார்களே அம்மாமார்களே, இது சாதாரண தாயத்து இல்லே. இதை வாங்கி கட்டினீங்கன்னா உங்க தரித்திரம், வறுமை எல்லாம் உங்களைவிட்டு ஓடிப்போயிடும். நீங்க லட்சாதிபதியா கோடீஸ்வரர்களா ஆயிடலாம்"

எம்.ஆர்.ராதா: "ஏண்டா, உங்கிட்டே ரெண்டு ரூபாய்க்கு தாயத்து வாங்கி கட்டினா லட்சாதிபதியா, கோடீஸ்வரனா ஆகலாம்னு சொல்றியே. நீயே ஒரு தாயத்தை எடுத்து கட்டிகிட்டு கோடீஸ்வரனா ஆக வேண்டியதுதானே. ஏண்டா தெருவுல* தாயத்து வித்துக்கிட்டு அலையிறே".

(இதை எம்.ஆர்.ராதா பாணியில் படிக்கவும்).