ஆடுகளம் என்பதாலோ
ஆடுமந்தை ஒத்து 11
முட்டாள் ஆடுகின்றான்
முட்டி நோகாது 11000
அறிவிலி நோக்குகின்றானென
அறிவிக்கின்றான் பிறன்?

இலை, பலரிரப்பையில்
இலையுண்டி இதின்றி!
ஆடுவோன்,அம்பயன்,
ஆடுகளம் அமைப்போன்,
கோலா விற்பவன்,
கோல் ஏந்தியகாவலோன்,

எனப்பலர் ஆர்வலர்.
இனந்தாண்டி,மொழிதாண்டி
பாரதப்பெருமை போற்றி
பாரதிக்கனவு மெய்ப்பித்து,
அகிலக்கோப்பை பறிக்க
அகிழ்புகையூட்டப்படும் யாழ்போல்!