#மராட்டிய_சிவாஜியும்_மெட்ராஸ்_சிவாஜியும்1974-ஆம் ஆண்டு, மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜி முடி சூடி முந்நூறு ஆண்டுகள் நிறைவுற்றதை மஹாராஷ்ட்டிர மாநிலமே கொண்டாடி கொண்டிருந்தது.அந்த நிகழ்வை குறிக்கும் விதத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை தயாரிக்க விரும்பிய பம்பாய் தூர்தர்ஷன் அதிகாரிகள், அதில் சத்ரபதி சிவாஜியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் நடிக்க வேண்டும் என்று ஏகமனதாக முடிவு செய்தார்கள். அப்போது பம்பாய் தூர்தர்ஷனில் தயாரிப்பாளராக இருந்த டாக்டர் டி.எஸ். நாராயணசுவாமி அவர்கள் சிவாஜியை நன்கு அறிந்தவர் என்கிற காரணத்தால் அந்த நிகழ்ச்சியை தயாரிக்க அவர் மெட்ராசுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். டாக்டர் நாராயண சுவாமி பின்னாளில் சிவாஜி கணேசனின் வாழ்க்கையை பற்றி புத்தகம் எழுதினார்.சத்ரபதி சிவாஜியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க, முப்பது நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு சிறப்பு நிகழ்ச்சி சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது. அதன் மொத்த தயாரிப்பு செலவையும் சிவாஜி கணேசனே ஏற்றுக் கொண்டார். ஒரு வகையில் பார்த்தால், இது அரசு தொலைக்காட்சிக்கு சிவாஜி கணேசன் அளித்த கொடை என்றும் சொல்லலாம். ஆனால் அந்த காணொளி இன்று காண கிடைப்பதில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.இந்த நிகழ்ச்சி பம்பாய் தூர்தர்ஷனில் ஒளிபரப்பட்ட தேதி ஜூலை 21, 1974. சிவாஜி கணேசன் மறைந்தது ஜூலை 21, 2001.Thanks to Raghunandan--Nadigarthilagam fans--facebook