போட்டிக்குப் போட்டி:- இப்போதுதான் வசந்த மாளிகை வெளிவந்து ஒரு மாதம் கடந்து ஓடிக் கொண்டு இருக்கிறது... அதற்குள் திருவிளையாடல் வெளிவந்து மதுரையை கலக்கி விட்டது.. இந்தவாரம் ராஜாவும் ரிலீஸ் ஆகி விட்டது.. இது போதாது என்று அண்ணன் ஒரு கோயிலும் ரெடியாகிக் கொண்டு இருக்கிறதாம்.. இன்று எங்கள் ஊரில் கர்ணன் படம் போட்டு விட்டார்கள்.. வளைத்து வளைத்து பரவலாக தமிழகம் முழுக்க சிவாஜி சினிமாக்கள் ரசிகர்களை தட்டி எழுப்பி வருகிறது.. 50 வயதுக்கு மேற்ப்பட்ட "சிவாஜியவாதி"களெல்லாம் இளவட்டக்கல்லை தூக்கி...க் கொண்டு ஓடுகிறார்கள்.. சிவாஜி சுழலில் சிக்குண்டு பல புதிய படங்கள் வாஷ்அவுட் ஆகிப் போகிறது... நாளுக்கு நாள் இளம் ரசிகர்களும் சிவாஜியவாதிகளாக ஆகிக் கொண்டு இருக்கிறார்கள்.. இந்த ஊடகங்களும் தினமும் ஏதேனும் ஒரு சேனல்களில் சிவாஜி சினிமாக்களை ஔிபரப்பி நினைவு கொள்கிறார்கள்... நடிகர் திலகத்தின் நினைவு தினங்கள் ஆண்டு முழுதும் இருந்து கொண்டே இருக்கும் போல.. வாழ்க சிவாஜி.. வளர்க அவரது மங்கா புகழ்...




நன்றி Jahir Hussain