Results 1,781 to 1,790 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1957ல் ஒரு முக்கியமானவரிடம் மக்கள் திலகம் அவர்கள் சொன்ன விஷயம்
    மக்கள் திலகம் அவர்களிடம் உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழிகாட்டி உங்களுக்கு அறிவுரைகளை சொன்னது யார், யார், என்பதை தயவுடன் சொல்லுங்கள் என்று ஒரு முக்கியமானவர் கேட்டார். உடனே திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் சற்றும் யோசிக்காமல் அந்த விஷயத்தை சொன்னார் சுருக்கமாக.
    1. எனது தாயுடைய அறிவுரைகள், கண்டிப்பான வளர்ப்பும் தான்.
    2. அடுத்து நான் நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த பிறகு எனக்கு நாடகத்தில் நடிக்க சொல்லி தந்த வாத்தியார்.
    3. கம்பெனி முதலாளி
    4. நடனம், சண்டை பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தவரும் எனக்கு நல்ல முறையில் மிகவும் கண்டிப்பான விதத்தில் சொல்லிக் கொடுத்தார்கள். நானும் அவர்களுடைய கண்டிப்பு, அடி, இவைகளையெல்லாம் சமாளித்து கொண்டு எல்லாவற்றிலும் கண்ணும் கருத்துமாக கற்றுக்கொண்டேன். எல்லாவற்றிலும் நல்ல பையன் சுறுசுறுப்பானவன் நல்ல அறிவுள்ளவன் என்று அவர்களால் புகழப்பட்டேன். நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது கூட திரை மறைவில் நின்று கொண்டு பிரம்பால் அடிப்பார்கள் அதை எல்லாம் அன்றைக்கு சமாளித்ததால் தான் சினிமாவில் நல்லா நடிக்க முடிந்தது என்றார் மக்கள் திலகம். அன்றைக்கு குருவாக இருந்தவர்கள் மதுரை பாய்ஸ் கம்பெனி முதலாளி சச்சிதானந்தம் பிள்ளை அவர்களும், ஆசிரியர் கிருஷ்ணசாமி அவர்களும் திரு. கந்தசாமி, காளி. என். ரத்தினம் அவர்களும் சண்டைப் பயிற்சியாளர் இவர்கள் தான் இதற்கு மேல், பி.யு. சின்னப்பா, கிட்டப்பா, எம்.கே. ராதா இவர்களை விட தன் உடன் பிறந்த தம்பிபோல் பாவித்து என் மனம் கவலைபடாத அளவிற்கு குடும்ப விஷயத்திலிருந்து அதாவது குடும்ப விஷயத்தை பற்றி கூட அறிவுரைகளை சொல்லக்கூடியவர் திரு. என்.எஸ்.கே அவர்கள் தான்.எனக்கு மனதில் சஞ்சலம் ஏற்பட்ட போதெல்லாம் அவரிடம் போய்விடுவேன். அவரிடம் ஒரு மணி நேரம் பேசிக்கிட்டு இருந்தால் போதும், அவர் ஒரு காலகட்டத்தில் வெள்ளைக்கார ஆட்சியில் ஜெயிலுக்கு போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதாவது என்.எஸ்.கே. தியாகராஜபாகவதர் இவர்கள் மீது ஒரு பத்திரிகை ஆசிரியர் கொலை சம்பந்தமாக 1944ல் ஜெயிலில் போட்டு விட்டார்கள். அது சமயம் நான் மிக மிக வேதனை அடைந்தேன். பிறகு, அவர்கள் ஜெயில் தண்டனை, முடிந்து விடுதலை ஆகி 1947க்க வீட்டுக்கு வந்த பிறகு, எல்லோரையும் பார்த்து நடந்த சம்பவத்தை பற்றி ஆறுதல் செய்திகள் சொன்னேன். பிறகு, என்.எஸ்.கே. அவர்களுக்கு என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்து கொண்டு இருந்தேன். அவர் கேட்காமலேயே நானும் அந்த சமயம் கொஞ்சம் வசதி உள்ளவன் ஆகிவிட்டேன். அப்படி நான் செய்யும் உதவிகளை நினைத்து மிகவும் சந்தோஷப்படுவார்கள். கடவுள் தான் ராமச்சந்திரன் உருவத்தில் வந்து இருக்கிறாரோ என்று கலைவாணர் நினைப்பாராம். இதை என்னிடம் சொல்லுவார்கள்....... Thanks wa Friends...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •