Results 1,181 to 1,190 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like

    Jiaa Mohamed Sulthan


    #நடிகர்திலகத்தின்
    #நன்றி_மறவாமை!நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் நாடகத்துறையில் நடித்து கொண்டிருந்தபோது சில காலம் திருச்சியில் தங்கி நாடகத்திலும் சினிமாவிலும் நடி...க்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.அப்போது திருச்சியில் தங்குவதற்கு கூட இடம் இல்லாத சூழ்நிலையில் அவரது திறமையை உணர்ந்து சிவாஜியை தன் வீட்டில் தங்கவைத்து அவருக்கு ஆதரவு கொடுத்தவர் திருச்சியை சேர்ந்த நடுத்தர வணிகரான பெரியண்ணா அவர்கள். மளிகை வியாபாரியான யாதவரான பெரியண்ணாவின் வீடு திருச்சி நகரத்தில் காஜாபேட்டை அருகில் எடத்தெருவில் இருந்தது. நடிக்கும் ஆர்வத்தில் திருச்சிக்கு வந்த சிவாஜியை அரவணைத்து தன்வீட்டின் ஒருபகுதியில் தங்கவைத்து ஆதரவு கொடுத்தவர் பெரியண்ணா
    காலம் கடந்தது! சிவாஜி சென்னைக்கு சென்று பராசக்தி படத்தில் நடித்து மக்கள் போற்றும் மிகப்பிரபலமான நடிகராகி விட்டார். அவர் பிரலமான நடிகராகி விட்டாலும் சிலகாலம் திருச்சியில் தன்னை தங்கவைத்து ஆதரித்த பெரிண்ணாவை மறக்கவில்லை.
    தன்னுடைய மகள் சாந்தியின் பெயரால் சாந்திபிலிம்ஸ் என்ற படகம்பெனியை துவக்கி அதில் பெரியண்ணாவை தயாரிப்பாளராக்கி சில படங்களை நடித்து கொடுத்தார் நடிகர்திலகம். அப்படி பெரியண்ணாவின் தயாரிப்பில் நடிகர்திலகம் நடித்து கொடுத்தபடங்களில் குறிப்பிடதக்கவை தெய்வமகன் திருவருட்செல்வர் தர்மம்எங்கே ஆகும்!
    அதுமட்டுமல்ல திருச்சி பாலக்கரையில் பிரபலமான இஸ்லாமிய குடும்பமான ந.மு குடும்பத்தாரின் பில்டிங் தான் N.M. பில்டிங். பிரபாத் தியேட்டர் என்றழைக்கபட்ட இந்த தியேட்டரை ந.மு. குடும்பத்தாரிடம் நடிகர் திலகமே நேரடியாக பேசி பெரியண்ணாவிற்காக நீண்ட கால குத்தகைக்கு எடுத்து கொடுத்தார்.
    சென்னையில் எப்படி சாந்திதியேட்டர் சிவாஜி ரசிகர்களுக்கு சொர்க்கமாக இருந்ததோ. அதைப்போல தான் திருச்சி பிரபாத் தியேட்டரும் சிவாஜி ரசிகர்கள் ஒன்று கூடும் இடமாக அமைந்தது.தன் மகன் பிரபுவை நடிகர்திலகம் பெங்களூரில் படிக்கவைத்தபோது பெரியண்ணணாவின் மகன் பரணியையும் பிரபுவுடன் படிக்கவைக்கும் பொறுப்பையும் நடிகர் திலகம ஏற்றுக்கொண்டார்.
    நடிகர்திலகம் நடித்த உத்தமன் திரைப்படத்தில் வரும் காஷ்மீர் ஸ்கேட்டிங் காட்சியில் பிரபுவும் வருவார் என்பது சிவாஜி ரசிகர்கள் அறிந்த செய்தி!
    அக்காட்சியில் பிரபுவுடன் பரணியும் இருப்பார்.
    தன் வீட்டில் தங்கவைத்த அக்குடும்பத்திற்கு பல உதவிகளை செய்த சிவாஜி 1983 என நினைக்கிறேன் பெரியண்ணா அவர்கள் மறைந்தபோது தன்னுடைய அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்துவிட்டு உடனடியாக திருச்சி விரைந்தார்.
    முதல்நாள் இரவு 11.00மணியிலிருந்து மறுநாள் மதியம் வரை பெரியண்ணாவின் உடல் அருகிலேயே இருந்து தன்கையாலயே அவரது அவர் உடம்பை தூக்கி தன் சொந்த சகோதரனை போல் இறுதி கடமைகளை நிறைவேற்றினார் சிவாஜி!
    அப்போது சிவாஜியுடன் G.k.மூப்பனார் அவர்களும் பிற்காலத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அடைக்கலராஜ் அவர்களும் உடன் இருந்தார்கள்
    (அரசியலில் வேறு இடத்தில் இருந்தாலும் இளம்பிராயத்தில் இருந்து மிகத்தீவிரமான சிவாஜி ரசிகரான நான்அப்போது பிரபாத் தியேட்டர் அருகே புத்தககடை வைத்திருந்து அந்த துக்க நிகழ்வுக்கு சென்றிருந்ததால் இவை நேரடியாக நான் கண்ட சம்பவங்களாகும்)
    பெரியண்ணா இறந்த பிறகும் அக்குடும்பத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்தார் நடிகர்திலகம்!
    பெரியண்ணாவின் மருமகன் T.சீனிவாசன் தான் திருச்சி மாவட்ட சிவாஜி மன்றதலைவராக நீண்ட காலம் இருந்தார்.
    1989ல் சிவாஜி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற தனிகட்சியை துவங்கியபோது திருச்சி 1வது தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் கொடுத்தார்.
    ஏறிவந்த ஏணியை எட்டிஉதைக்கும் கலையுலகில் தன்னை ஆதரித்த ஒருவரின் குடும்பத்திற்கு நன்றி செலுத்திய நடிகர்திலகம் பற்றிய இச்செய்தியினை அவரது பிறந்தநாளான இன்று பதிவிடுவதில் பெருமையடைகிறேன்!
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •