விமான பணிப்பெண் ஆகிறார் நட்சத்திரா


புகழ்பெற்ற ராமானுஜர் தொடரில் ராமானுஜரின் மனைவியாக நடித்திருந்தவர் நட்சத்திரா. சரித்திர தொடரில் நடித்தவர் தற்போது தெய்வம் தந்த வீடு தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். நடிப்புக்கு இடையில் விமான பணிப்பெண் வேலைக்கான பயிற்சியையும் எடுத்து வருகிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:


எனக்கு பூர்வீகம் தெலுங்கானா. ராமானுஜர் தொடர் ஆடிசன் போன போது நான் ராமானுஜரின் மனைவியின் சாயலில் இருந்ததால் அதில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சீரியல் பார்த்தவர்கள் என்னை பக்தியுடன் பார்த்தார்கள். இப்போது தெய்வம் தந்த வீடு தொடரில் கலகலப்பான கேரக்டரில் நடிக்கிறேன்.


நடிப்பது போலவே எனக்கு விமானத்தில் பறப்பதும் உலகத்தை சுற்றி பார்ப்பதும் பிடித்தமான விஷயங்கள். அதற்கு பெரிய தொழில் அதிபாராக இருக்கணும். இல்லாவிட்டால் விமான பணிப்பெண்ணாக இருக்க வேண்டும் என்றார்கள். நான் விமான பணிப்பெண்ணாக மாற விரும்பினேன். அதற்காக படித்து வருகிறேன். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், மலையாளம், பிரெஞ்சு என 6 மொழிகள் தெரியும் என்பது கூடுதல் பலம். ஒருபுறம் நடித்தாலும் இன்னொருபுறம் பறந்து கொண்டே இருக்க வேண்டும் என்கிற ஆசை என்கிறார் நட்சத்திரா.




நன்றி: தினதந்தி