Results 3,281 to 3,290 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    அன்புள்ள வாசு சார்,

    நண்பர் செந்தில்வேல் அவர்களின் ஆவண வரிசையைத் தொடர்ந்து அந்த காலகட்டத்தில் கடலூர் நகரில் நடிகர்திலகத்தின் படங்கள் ஓடிய விவரங்களை சுவையாக தொகுத்துள்ளீர்கள். சரியாக போகாத படங்களையும் பெருந்தன்மையுடன் குறிப்பிட்டுள்ளீர்கள். அதுதானே நம் ரசிகர்களின் கண்ணியம். அதனால்தானே சிவாஜி ரசிகன் எதை சொன்னாலும் அது சரியாகவே இருக்கும் என்று உலகம் ஏற்கிறது.

    கோபால் அவர்களின் ராஜா மீள்பதிவை தொடர்ந்து உங்கள் அசைபோடல்கள் செம்மை. உங்களைத்தான் கொஞ்சம் தூண்டி விட்டால் போதுமே சதிராட்டம் ஆடிவிடுவீர்களே.

    'கல்யாண பொண்ணு' பாடலுக்கு தலைவர் ஆட்டம் தூள். ஆனால் அதைத் தொடரவிடாமல் இரண்டாவது சரணத்தில் படகில் ஏற்றிவிட்டு அவர்து ஆட்டத்தை கட்டுப்படுத்தி விட்டார் சி.வி.ஆர். இதுபோல ரொம்ப சின்ன சின்ன குறைகளும் உண்டு. உதாரணமாக ஆரம்பத்தில் சிறையிலிருந்து தப்பித்த பின் விஸ்வத்தை ராஜா சந்திக்கவில்லை. கமிஷனர் பிரசாத் லைட்டர் கேமராவை ராஜாவிடம் கொடுத்தபின் கிளைமாக்சில்தான் ராஜா விஸ்வத்தை பார்ப்பார். ஆனால் லைட்டர் கேமராவில் எடுத்ததாக பிரசாத்திடம் ராஜா கொடுக்கும் போட்டோக்களில் விஸ்வம் போட்டோவும் இருக்கும். (இதெல்லாம் 'ராஜாவை நாங்க எவ்வளவு துல்லியமா பார்த்திருக்கோம்' என்று பெருமைப் பட்டுக்கொள்வதற்காக்கும்.. ஹி.. ஹி )

    ஜமாய்ங்க தலைவரே.
    உங்கள் ஆதி.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •