Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Hybrid View

  1. #1
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோ,

    அடடா!



    'இரும்புத்திரை' இரண்டாம் கட்ட காவியக் காதல் காட்சியை எதிர்பாராமல் எழுதி ஏடாகூடம் பண்ணி விட்டீர்களே! என் மனத்தில் இந்தக் காட்சி பற்றி எப்போதும் ஓடும் எண்ணங்களோடு ஒத்துப் போகின்றன உங்கள் பொன்னான இந்தப் பதிவின் எழுத்துக்கள். அதற்கு முதலில் உங்கள் சக ரசனையாளனின் நன்றி!

    இந்த மாதிரிக் காட்சிகளையெல்லாம் நாம் பொதுவாக கவனிப்பதே இல்லை என்பது ஒரு குறைதான். சும்மா தேவர் மகனும், தில்லானாவுமே பேசப்பட்டுவிட்டன. இந்தக் காட்சி அற்புதத்திலும் அற்புதம்.

    முதல் காதல் காட்சி படுகிளாஸிக். இந்தியத் திரைவானில் இதுவரை அப்படி ஒரு காதல் காட்சி வந்ததில்லை. இதில் என்ன வியப்பு தெரியுமா? இரண்டாவதாக காதலர்கள் சந்திக்கும் அந்தக் காட்சியும் முதல் காட்சிக்கு கொஞ்சமும் இளைத்ததோ சளைத்ததோ இல்லை.

    ஆக இரண்டுமே உச்சியில் தூக்கி வைத்து கொண்டாடப்படவேண்டியவை.

    முதல் சந்திப்பின் போது மெலிதான அச்சம், கூச்சம், யார் பேசுவது முதலில் என்ற தயக்கம், இடையில் சிக்கிய இடையனை வைத்து காதல் கலாய்ப்பு, புல்லாங்குழல் இசை அரங்கம் என்று காதல் பாடங்களுக்கெல்லாம் குருக்களாக விளங்கும் இந்த இரண்டு அழகு ப்ளஸ் அன்பு உள்ளங்களும்.

    இரண்டாவது தனிமை சந்திப்பில் முதல் சந்திப்பின் போது இருந்த பயம், தயக்கம், கூச்சம் எல்லாம் கொஞ்சம் விடுபட்டு ஒரு அந்நியோன்ய நெருக்கம் ஆரம்பித்திருப்பது புலப்படும். உரிமையும் சற்று அதிகமாக எடுத்துக் கொள்ளப்படும். முன்னேற்றம் அதில் புலப்படும். மெலிதான உண்மை கலந்த பொய்க்கோபங்கள், தாபங்கள், சந்தேகங்கள், சீண்டல்கள் என்று இந்த சீன் காதலின் அடுத்த கட்ட அஸ்திவாரத்தை மிக பலமாக கட்ட ஆரம்பிக்கும். அப்படியே நம் மனதிலும் கூட.

    'நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நான் இருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா?' என்ற கேள்வி கேட்ட காதலியுடன் அந்த நிலா வேளையில், யாருமற்ற நிம்மதி சூழலில், இன்னும் தயக்கம் கலையாத நிலையில் இருவரும் சற்றே விலகி அமர்ந்து (காதலன் சாய்ந்து) இருக்க, அந்த அழகுப் பொன் மயில் கையில் கிடைத்த இலைக்குச்சியை வைத்து மணலில் கோலக்கோடுகள் போட, (என்ன செய்வதென்று அறியாமல்) நாயகனோ அதே போன்ற குச்சியின் இலைகளால் அந்தக் கோலமயிலின் மேலேயே கோலம் போட்டு ஸ்பரிசம் படாமல் மென்மையாக வருட, காதலர்களின் ஆரம்ப அமெச்சூர் உண்மை மனநிலை அந்த சூழலில் வெகு இயல்பாக உணர்த்தப்படும்.

    இளமைச் சிங்கம் சிரித்துக் கொண்டே இருக்க, பதிலுக்கு இளமானும் நகைக்க, காரணம் அவர்களுக்குப் புரியாது. கள்ளம்கபடமற்ற சந்தோஷ உணர்வுகளின் சங்கமிப்பு சிரிப்பல்லவோ அது!

    'இப்படியே சிரித்துக் கொண்டிருந்தால்... யாரவது பார்த்தால் நம்மை பைத்தியம் என்று நினைக்க மாட்டாங்க?'

    என்று இளம் ஏந்திழை வினா எழுப்ப,

    பதிலுக்கு,

    'நினைச்சா நினைச்சுட்டு போறாங்க பைத்தியக்கார(வு)ங்க'

    என்று பார்க்க முற்படுபவர்களையே பைத்தியங்களாகப் பார்க்கும் பக்குவ புத்திசாலி நாயகன். சமூகத்தின் சகலங்களையும் சல்லடையாய் அலசி ஆராய்ந்து உணர்ந்த அறிவார்ந்த ஆணழகன்.

    காதலின் ஆரம்பக் காதலிக்கு எல்லாக் காதலிக்கும் வரும் சந்தேகம்தான். கேட்டு விட்டால் என்ன என்று அவள் கேட்டே விட்டாள்.

    'இந்த மாதிரி எப்பவாவது இன்னொரு பெண்ணோடு பழகியிருக்கீங்களா?'

    நான்தான் முன்னமேயே சொன்னேனே அவன் மகா புத்திசாலியென்று. கொஞ்சமும் தாமதியாமல் முடிவெடுத்துவிட்டான் 'மதுமதி'யாளை சீண்டி முனக வைப்பது என்று.

    ரிக்ஷா ஓட்டும் தொழிலும் புரிவதால் 'என் ரிக்ஷாவில் ஏறாத பெண்களே கிடையாது' என்று அவளிடம் குறும்பு பண்ண ஆரம்பிப்பான். காதலி தப்பித்தாள் அந்த முதல் பதிலைக் கேட்டு.

    'அப்படி இல்லை... இப்படி'

    என்று தனக்கும், அவனுக்கும் உள்ள இடைவெளி நெருக்கத்தை கைஜாடையால் காட்டி ('இந்த அளவிற்கு பழகியிருக்கிறாயா!?' என்று கேட்க, அதை உணர்ந்து கொண்டது போல அவன்,

    'சே! சே! அப்படியெல்லாம் இல்லை' என்று நாணம் கலந்த ஆதர்ஷ சிரிப்புடன் அதை மறுப்பது போல் மறுத்து, அவள் வயிற்றில் ஒரு வினாடி பாலை வார்ப்பது போல வார்த்து, அதைக் கேட்டு சந்தோஷப்படுமுன் அவள் வயிற்றில் உடன் புளி கரைப்பான்.

    'ஒரே ஒரு தடவை' என்று அவளை வெறுப்பேற்ற ஜம்பமாய் வேறு சம்மனமிட்டு அமர்ந்து விஷ(ம) ரீல் சுத்த ஆரம்பிப்பான். மலர்ந்திருந்த அவளின் மதிவதன முகம் மந்தகாசப் புன்னகை இழந்து அதில் கலவரக் கோடுகள் கலக்க ஆரம்பிக்கும். உள்ளுக்குள் உதைப்பு. 'என்ன சொல்லப் போறானோ' பதைபதைப்பு.

    யாருமில்லாத களத்து மேட்டு அரச மரத்தில் தான் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருக்கும் போது அங்குள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த பெண் ஒருத்தி பற்றி சொல்லி அவன் ஜோராய் சீண்டல் தீ பற்ற வைக்கும் போது அவளுக்குத்தான் எத்துணை அவசரம் கலந்த ஆர்வம் அந்தப் பெண்ணைப் பற்றி தெரிந்து கொள்ள. 'யார்...எந்தப் பெண்?' என்ற பொறாமைக் கேள்வியில் அவள் முகம் அமைதியற்றதாய் அல்லலுறுகிறதே! அதை அவளால் மறைக்க இயலாதோ?

    'அவ.....அவ பேரு கூட மறந்து போச்சே' என்று யோசிக்கும் பொய்த்தலைச் சொரியல் செய்கையை இந்த மகா (காதல்) நடிகன் செய்ய, அவளுக்கு இருப்புக் கொள்ளாத அவசரம். இப்போது அதுவா முக்கியம்?...மேலே..மேலே...

    அவன் தொடர்கிறான் கலாய்ப்புக் கற்பனைக் கதையை வெகு இலகுவாக.

    காற்று வேகமாய் அடித்ததாகவும், புத்தகத்தில் ஒரு பக்கம் கிழிந்து, பறந்து போய் கிணற்றுக்குள்ளே விழுந்ததாகவும் அவன் கூற, அந்த அவசர மடந்தை 'கிணற்றுக்குள்ளே விழுந்ததா? என்று கேட்க, அவன் அதை அப்படியே மாற்றி 'இல்லே! அந்தப் பெண்ணோட தண்ணீர் பக்கெட்ல போய் விழுந்துடுச்சி' என்று பொய்யுரைக்க, அவள் அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் நெருக்குலைந்து ஒரு 'ஓ' வை வெறுமனே 'தேமே' என்று போட்டு வைக்க,

    அவன்,

    'அந்த பேப்பேரை எடுத்து முந்தானையால் துடைத்து (காதலன் ரொம்ப குசும்பு பிடித்தவன். அது 'முந்தானை' என்பது கூடத் தெரியாதவாறு நடித்து, காதலியின் முந்தானையைத் தொட்டு 'இது என்ன?' என்று அவளிடமே கேட்பது போல் கேட்டுத் தெரிந்து கொண்டு, அந்த வார்த்தையாலேயே அவளை அழகாக அச்சுறுத்துவான்) அதை எடுத்துக்கிட்டு என் பக்கத்துல வந்து நின்னு என்கிட்டே கொடுத்தா'

    இப்போது காதலியின் நிலைமை இன்னும் கவலைக்கிடம். பொறாமை பிடுங்கித் தின்ன அவனிடம்,

    'உங்க பக்கத்திலேயா?'

    அவள் நெஞ்சடைப்பது காதலன் உணராததா? அதுதான் வார்த்தைகளின் அடைப்பிலேயே தெரிகிறதே! இருந்தாலும் இனியவளை இன்னும் சீண்ட வேண்டுமே! பொறாமையால் பொச்சரித்துப் போகும் அவள் முகத்தின் விதவிதமான அழகுக் கோணங்களை அள்ளி ரசிக்க வேண்டுமே!

    விடுவானோ! தீண்டும் இன்பத்தைவிட சீண்டும் இன்பமும் ஒரு தனி சுகம்தான்! எதுவுமே நடக்காதது போல எந்தப் பாதிப்பும் அவளுக்கு இந்தக் கதையால் இல்லை என்பது போல சுவாரஸ்யமாக சுவை கூட்டி தன் சுகக்கதை தொடர்வான்.

    கிணற்றுப் பெண் இவனிடம் என்னன்னவோ பேசியதாக இன்னும் இவன் எடுத்துவிட, மருண்ட மான் போல அதன் விழியாள் விழி பிதுங்க, அவன் ராஜ்ஜியம் தொடரும்.

    'இந்தா புள்ள! என் முன்னால நிக்காதே! இந்த இடத்தை விட்டுப் போயிடு' என்று அந்த கற்பனை பெண்ணிடம் இவன் கறாராகச் சொன்னதாகக் கதைவிட, கலவரக் காதலி முகத்தில் கொஞ்சம் சந்தோஷ மறுமலர்ச்சி.

    'அப்படின்னு சொன்னீங்களா?' என்று அவன் சொல்லுமுன் இவளே ஆர்வத்தில் அவசரமாய் தலை நீட்ட, அவன் அதை வேகமாக மறுத்து,

    'சொல்ல நினச்சேன்...அவசரத்துல வாய் குழறி பக்கத்துல உட்காருன்னு சொல்லிட்டேன்' என்று தீர்க்கமான குறும்பு கொப்பளிக்கும் பார்வையுடன் தன்னுடையவளை ஆழம் பார்க்க, அவன் எதிர்பார்த்தது நடக்கிறது.

    பரிதாபத் காதலி,

    'போன்னு சொல்ல நெனச்சீங்க...ஆனா பக்கத்துல உட்காருன்னு சொல்லிட்டீங்க... அவளும் உட்கார்ந்துட்டாளா?' என்று மனம் புழுங்கி பொறாமை வினா எழுப்ப,

    வில்ல, வில்லங்க, நாயகக் காதலனோ ஒன்றும் அறியாதவன் போல் (தர்ம)சங்கட நடிப்புடன் 'ஆங்' என்று அவள் அதிர்ச்சியை இன்னும் அதிகப்படுத்த,

    அதைத் தாங்கமாட்டாமல் தாங்கிய பேதை இன்னும் தாங்கமாட்டாமல்,

    'கிட்ட?' என்ற கிலியான கேள்வியை வேறு கேட்டாள்.

    அதற்கும் காதலன் 'ஆங்' தான்.

    'எவ்வளவு கிட்டே?'

    அந்தப் பெண்ணுடனான இவனின் அமரும் நெருக்கத்தை அது துன்பமாயினும் கூட அறிந்து கொள்ள இவள் துடிக்கும் துடிப்பென்ன? அது வேதனையான பதிலையே தரும் என்ற நம்பிக்கை தளர்ந்த நிலையிலும் இந்தக் கேள்வி ஏன்?

    'இப்படி' என்று காதலன் அவர்களுக்குண்டான நெருக்கத்தை பயந்தவன் போல் பேசாமல் சைகையால் காட்டிட,

    அவள்,

    'மேலே என்ன நடந்தது?' என மேலும் கேட்க, அவனோ அந்தப் பெண்ணின் அருகாமையால் தன் உடல் வியர்த்து விறுவிறுத்ததையும், ஐஸ் போல சில்லிட்டுப் போனதையும் கற்பனையாகக் கூற,

    இவளோ இன்னும் ஆர்வமாய்...

    'அவள் பேர் என்ன?..அவள் ரொம்ப அழகா இருந்தாளா?'

    என்று பொஸசிவ் கேள்விகளை அடுக்க,

    அவன் சளையாமல்,

    'அப்படி ஒன்னும் அழகில்லை' என்று அவளை அமைதிப்படுத்துவது போல் காட்டி, பின் பார்த்தவளின் மூக்கு, கண், முடி பற்றி முடிவில்லாமல் வர்ணிக்க,

    இப்போது முழுமதியாள் முற்றிலும் தாங்க மாட்டாதவளாய்,

    'ஆமாம்! கண்ணு, மூக்கு, வாய் எல்லாம் ஞாபகம் இருக்கு' என்று 'வெடுக்'க ,

    இவன் பரிதாபப் பருந்தாய்,

    'பார்த்தது எப்படி மனசை விட்டு மறந்து போகும்? என்று பயந்த சுபாவம் காட்ட,

    இவள்,

    'ஓ' என ஓல ஓங்காரமிட்டு,

    'மறக்கவே முடியல.... இல்ல?' என்று உள்ளேயும்,வெளியேயும் எரிய,

    அவன் அவள் உச்ச நிலைக்கு போய் விட்டாள் (இந்த உச்ச நிலை வேறு கோபால்) என்று தெரிந்து சமாதானப்படுத்த, அதுவரை கட்டுப்பாடு கொண்டிருந்தவள் அதை உடைத்து உடைந்து விட,

    'நல்லா புரிஞ்சி போச்சு...வந்தாளாம்...உக்காந்தாளாம்...பேசினாளா ம்' என்று வெளிப்படையாய், வெகுளியாய் தாளிப்பு வார்த்தைகள் கொண்டு வெகுண்டு எழ, முத்தாய்ப்பாக முடிவில் அவன் தன் வேடிக்கை முடித்து காதலியின் கவலைக்கும் முடிவு கட்டுவான்.

    'அப்போ எனக்கு வயசு 10
    அந்தப் பொண்ணுக்கு எட்டு'.

    என்று.

    'ஏன் இந்த நாடகத்தை நிறுத்தினான்? என்று நமக்கு கவலையைத் தரத் தொடங்குவான்.



    இயல்பு...இயல்பு...இயல்பு....உண்மைக் காதலின் மகத்துவம்... நடிப்பே அல்ல. நிஜம்...காதலர்கள் ஒருத்தரை ஒருத்தர் பேச விடாமல் இறுதியில் இனிமையாய் எதிர்வாதங்கள் புரிவது... அந்த வாதங்கள் நமக்கு ஒன்று விடாமல் தெளிவாகக் கேட்பது....உண்மைக் காதலை நடித்துக் காட்ட பலர் இருக்கிறார்கள். ஆனால் நடிப்பையே உண்மைக்காதல் என்று உணரவைக்க இந்தக் காதலர்கள் மட்டுமே இருப்பார்கள். அப்படியே இது நடிப்பு என்று வைத்துக்கொண்டாலும் அதிலும் இருவருக்கும் பலமான போட்டியே. அவனும் அவளும் அதில் மாறி மாறி வென்று கொண்டே இருப்பார்கள். இந்தக் காதல் நடிகனுக்கு கிடைத்த உன்னதமான இணை அழகி அப்போது
    இவள் மட்டுமே. இவளுக்கென்று 'இருவர்' சாம்ராஜ்யத்தில் என்றும் தனி இடம் உண்டு. 'வேந்த'ரும் சேர்ந்தால் மூவர்

    ஊடல் என்ற வார்த்தைக்கு உண்மையான விளக்கம்....அது கூடலில் முடியும் குதூகலம். தத்ரூபக் காதலர்களே கற்றுக் கொள்ள வேண்டிய குருகுலப் பாடம்.

    காலம் உள்ளவரை காதல் அழியாது....அது அழிந்தாலும் இந்தக் காதல் ரசம் கொட்டும் காட்சி அழியவே அழியாது. அதுவே அழிந்தாலும் நாயகனும், நாயகியும் கோபால் சொன்னது போல அழிவில்லாமல் 'இரும்புத்திரை' போட்டு நம் இதயத் திரைக்குள் இல்லறம் நடத்துவார்கள்.

    கோ,

    உங்களுக்காகவும், நம் நண்பர்களுக்காகவும் இன்று தரவேற்றிய 'இரும்புத் திரையின்' இனிமையான காதல் காட்சி.



    Last edited by vasudevan31355; 30th November 2016 at 01:41 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks Gopal.s thanked for this post
    Likes Harrietlgy, Gopal.s liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    'இரும்புத்திரை'
    வாசு சார்,
    "இரும்புத்திரை". - பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. உங்கள் பதிவிற்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தைப் பார்த்தால்தான் சுவாரசியாமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அருமையான பதிவு. நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •