Results 3,191 to 3,200 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உலகம் இவ்வளவுதான்(1969) என்று ஒரு படம். செம நாட் . ஒரு வரி கதை சொன்னால் துள்ளியெழ வைக்கும். ஒருவன் பெரியப்பாவுக்கு
    (கெட்டவர்) கொடுத்த வாக்கு படி நல்லவனாகவும், அப்பாவுக்கு (நல்லவர்)கொடுத்த வாக்கு படி கெட்டவனாகவும் இருக்க வேண்டிய நிர்பந்தம். கிட்டத்தட்ட எங்கள் தங்க ராஜா, அந்நியன் அளவு வர வேண்டிய நாட் . குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் நாகேஷ்(ஹீரோ),சுப்பு ஆறுமுகம் (கதை-வசனம்),வேதாந்தம் ராகவையா (இயக்குனர்) கையில் மாட்டி சீரழிஞ்சு சிரிப்பாய் சிரித்தது.
    சர்வர் சுந்தரம்,நீர்க்குமிழி,எதிர்நீச்சல் ,பனமாபாசமா படங்களின் வெற்றி நாகேஷை போட்டு ஹீரோவாக்கும் அசட்டு துணிச்சலை வேதாந்தம் ராகவையா, திருமலை மகாலிங்கம் ஆகியோருக்கு தந்ததால் , உலகம் இவ்வளவுதான்,சோப்பு சீப்பு கண்ணாடி போன்ற படங்கள். நடிகர்திலகத்தின் பாடும் குரலாய் உச்சத்தில் மிளிர்ந்த டி.எம் .எஸ், ங்கே என்று குரலை மாற்றி நாகேஷுக்கு பாட வேண்டிய கேவலம்.அவலம்.

    உலகம் இவ்வளவுதான் படத்தின் கூட்டல் அம்சங்கள் ராஜஸ்ரீ,விஜயஸ்ரீ (வீணடிக்க படுவார்கள்), வேதாவின் இசை. ஒரு தத்துவ பாடல்(காலம் போற), ஒரு இரட்டை அர்த்த பாடல்(மாம்பழம் வாங்குங்க )இலந்தை பயம்,ஏழு வயசிலே இளநி பாணி. சென்சார் இருப்பது ரெண்டுதானுங்கவை படத்தில் நாலாக்கி , ராஜஸ்ரீயின் மாம்பழத்தை மாட்டின் மாம்பழம் ஆக்கினர். ,ஒரு படு ஜாலி வெஸ்டர்ன் (இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்), ஒரு குத்து (ஊத்தி கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு).அப்போதெல்லாம் சோவுக்கும் பாடல் கொடுத்து விடுவார்கள். சோவும் வீணாக்கி தொலைவார்.(வானும் நிலமும் வீடு,ஊத்தி கொடுத்தாண்டி) வா வாத்யாரே விதி விலக்கு.

    பாருங்களேன் எவ்வளவு ஜாலி இந்த உலகம் இவ்வளவுதான்.

    Last edited by Gopal.s; 11th August 2016 at 10:07 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •